வரலாற்று நாயகர் நடை மன்னன் மீரான்

விளையாட்டுப் போட்டிகள் (Sport or sports) என்பவை உடல் வலுவையும் மனத்திண்மையையும் அடிப்படையாகக் கொண்டு ஆடப்படும் அனைத்து வகையான உடல் திறன் விளையாட்டுப் போட்டிகளையும் குறிக்கும்.
விளையாட்டுப் போட்டிகள் போட்டிகளில் வெற்றி பெற்ற முன்னணியாளர்களுக்கு அரசு வேலைகள் கிடைக்கும். மேலப்பாளையத்தைச் சார்ந்த அப்துல்காதர்  அவர்கள் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு ஆணழகன் பெயரும்  பரிசும் பெற்றார். அதற்காக அவருக்கு அரசு வேலை கிடைத்தது. 

அது போல்  நடை மன்னன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று நடை மன்னன்  பெயரும்  பரிசும் பெற்றார்.  அரசு பதவி பெற்று மேலப்பாளையம் வரலாற்று நாயகர்  பட்டியலில் இடம் பெற்றார் நண்பர். மஸா மீரான் மைதீன் அவர்கள். 

அவரது தந்தை மஸா பூகோயா அவர்கள். 1970ல் ரஹ்மான் டெக்ஸ்டைல் கார்ப்பரேன் (RTC)  என்ற கம்பெனியின் கல்கத்தா கிளையில் பணி புரிந்தார்.  

மறைந்த ரப்பானி”  பத்திரிக்கை ஆசிரியரான நண்பர் தீன்பிரஸ் காஜா மைதீன் அவர்களின் தாய் மாமா தான்  மஸா கோயா அவர்கள். 

அவரது மகனாரான நடை மன்னன் மீரான் மைதீன் அவர்கள் அவரது மச்சான் தீன் காஜா மைதீன் “ரப்பானி” பத்திரிக்கை நடத்திய போது  ஒத்துழைப்பு செய்த முக்கியமானவர்களில் ஒருவர்.

தீன்பிரஸ் காஜா மைதீன்  அவர்கள் பெயரின் முன் இருந்த பிரஸ் நீக்கப்பட்டு தீன்காஜா மைதீன் என்று அழைக்கப்பட்டார். அது போல். நடை மன்னன் மீரான் மைதீன் அவர்கள் நடை  நீக்கப்பட்டு மன்னன் மீரான் என்று அழைக்கப்பட்டார்.

மேலப்பாளையம் பசார் திடல் அருகில்  இன்று தன்ஸீத்  டீ கடை இருக்கும் இடத்தில் மன்னன் அன்கோ என்ற கடை வைத்து இருந்தார். 

மன்னன் மீரான் என்று அழைக்கப்பட்டவர் வயதை கருத்தில் கொண்டு பின்னாளில்  மன்னர் மீரான் என்று அழைக்கப்பட்டார்.

மேலப்பாளையம்ஆஷுரா மேலத் தெரு, அபுல் கலாம் ஆஸாத் ரோடு சந்திப்பின் தெற்கு பக்க முனை (முதல்) வீட்டில் வசித்து வந்தார்.  அவர் நேற்று (13-07-2020)  இறந்து விட்டார். இன்றும் தற்போது இறந்து விட்டார் என்றே பார்வேடு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அல்லாஹ் நண்பர் நடை மன்னன் மீரான் அவர்களை மன்னிப்பானாக! அவரை இழப்பை ஈடு செய்வானாக! அவரை இழந்து வாடுபவர்களுக்கு அழகிய பொறுமையைக்  கொடுப்பானாக!











Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.