Posts

Showing posts from October, 2019

2:13 அறிந்து ஆய்ந்து எல்லா மொழி பெயர்ப்புகளையும் படியுங்கள்

Image
2:13.     வசனத்திற்கு   அன்வாறுல் குர்ஆன்- ஜான் டிரஸ்ட்-  K.S.R, மலிவு பதிப்பு ஆகிய 3 தமிழாக்கங்களும் வார்த்தைக்கு வார்த்தை ஒன்றுபோல் உள்ளன. K.S.R இம்தாதி மட்டும்  (மற்ற)  என்று அடைப்புக் குறிக்குள் உள்ளதில் மட்டும் மாற்றமாக வெளியில்  இந்த  என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்கள்.  மலிவு பதிப்பில்  ( மற்ற) என்பதுடன்  மேலும் என்பதை சேர்த்து உள்ளார்கள்.  ஈமான் என்ற இடத்தில்  நம்பிக்கை என்ற மொழி பெயர்ப்பை இடம் பெறச் செய்துள்ளார்கள்.  போல் /  போல  ( அப்படியல்ல)  /  அறிந்து கொள்ளுங்கள் .   இவர்கள்  அறிவதில்லை /  அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இவைதான் மேலே உள்ள  3 தமிழாக்கங்களுக்கும்  மலிவு பதிப்பிற்கும்  உள்ள வார்த்தை வித்தியாசங்கள். இதனை அறிந்து ஆய்ந்து எல்லா மொழி பெயர்ப்புகளையும் படியுங்கள் வித்தியாசங்களை அறிவதற்காக ஆங்காங்கே ஹை லைட் செய்துள்ளோம். அதை ( ஹை லைட்டை  )  பிளாக்கரில் தான் காண முடியும்  https://mdfazlulilahi.blogspot.com/2019/10/213.h...

உங்கள் வீட்டு ராஜா ராணி யார்? நீங்களா? உங்கள் பெற்றோரா? ஊருக்கு ஒத்தது உதுமான் லெப்பைக்கும் என்று உங்களால் இருக்க முடிகிறதா?

Image
இதய நாட்டு இளவரசி என்று மனைவியை கணவனும் இதய நாட்டு இளவரசன் என்று கணவனை மனைவியும் புகழ்வார்கள் . ராஜா ராணி என்பது இளவரசன், இளவரசி என்பதைவிட உயர்ந்த பதவி தான். இருந்தாலும் வயது மூப்பைக் காட்டும் என்பதால் இளவரசி இளவரசன் என்றே ஒருவரை ஒருவர் ஏமாற்றி காரியம் சாதித்துக் கொள்வார்கள் . https://mdfazlulilahi.blogspot.com/2019/10/blog-post_30.html ராஜா ராணி ஆட்சி இருந்த இடத்தில் இன்று அமைச்சர்கள் இருக்கிறார்கள் . முதல்வரோ பிரதமரோ வருகிறார் என்றால் . இதோ வருகிறார் இன்ன இடத்தில்   வருகிறார் சாப்பிடுகிறார் . துாங்குகிறார் என்று ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்கள் மேலிடத்துக்கு   லைவு பண்ணிக் கொண்டே இருப்பார்கள் .   ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டு ராஜா ராணி பற்றி லைவு செய்து கொண்டேதான் இருக்கிறீர்கள் . முதல்வர் பிரதமர்களை விட அதிகமாக . லைவு செய்கிறீர்கள் . அமைச்சர்கள் பாத் ரூம் போனது பற்றியெல்லாம் லைவு செய்ய மாட்டார்கள் . உங்கள் வீட்டு ராஜா ராணி பற்றிய லைவு   எந்த அளவுக்கு இருக்கிறது? நம்ம...