மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடலாமா? பீஜே அன்றும்-இன்றும்!


திருக்குர்'ஆன் மொழிபெயர்ப்புகளில் பீஜே மொழிபெயர்ப்பு நீங்கலாக மற்ற எல்லா மொழிபெயர்ப்புகளிலும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறு குறிப்பிடப்படுவது சரியா? என்ற கேள்விக்கு அந்நஜாத் இதழில் அறிஞர் பீஜே அன்று சொன்ன பதில் உங்கள் பார்வைக்கு; ‘யாராக இருந்தாலும் ஆதாரம் கேளுங்கள்’ என்று எழுதி இருந்தீர்கள்! குர்ஆனில் மக்கீ, மதனீ என்று கூறுவதற்கு ஆதாரம் உண்டா? -மவ்லவி A.R. முஹம்மது அஸ்அது, அம்மாபட்டினம். இதில் என்ன ஆதாரம் கேட்கிறீர்கள்? மக்கீ என்றால் மக்காவில் இறங்கியது என்று பொருள் மதனீ என்றால் மதீனா வாழ்வில் இறங்கியது என்று பொருள். மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்? பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் ‘பார்ஸீ’ என்று சொல்லவில்லையா? அவை எங்கே இறங்கின என்ற சரித்திரக் குறிப்பை உணர்த்துவதற்கு அப்படிக் கூறுகிறோம்.[1987 மே,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!  அந்நஜாத்] மேற்கண்ட அறிஞர் பீஜேயின்  பதிலை நிதானமாக  படித்தால், ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடுவது தவறு அல்ல என்றும், அதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றும் கூறியதோடு,  மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்? பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் ‘பார்ஸீ’ என்று சொல்லவில்லையா? என்று அறிவுப்பூர்வமாக வாதம் வைத்த அறிஞர் பீஜே, இன்று 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடுவது தவறு என்கிறார். ''எனவே ஒரு அத்தியாயம் முழுவதும் மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதீனாவில் அருளப்பட்டது என்று குறிப்பிடுவதாக இருந்தால் அதற்கு தெளிவான ஆதாரங்கள்  இருக்க வேண்டும். இத்தகைய ஆதாரங்கள்  எதுவுமின்றியே மக்காவில் அருளப்பட்டவை  மதீனாவில் அருளப்பட்டவை  என்று அத்தியாயங்களின் துவக்கத்தில் அச்சிடுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது' என்கிறார். நன்றாக கவனிக்க வேண்டும் 'மக்கீ' அல்லது 'மதனீ'  என்று குறிப்பிடுவதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றவர், இன்று தெளிவான ஆதாரம்  வேண்டும் என்கிறார். அன்று சரியாக தெரிந்ததை  மாற்ற இன்று இவர் எந்த ஆதாரத்தை கண்டு விட்டார்? ஏனிந்த முரண்பாடு? எல்லாம் மனோ இச்சையின் வெளிப்பாடு. 


நன்றி -முகவை அப்பாஸ்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு