அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தானா? அமர்ந்தானா? பீஜே அன்றும்-..இன்றும்
அந்நஜாத்தில் இடம்பெற்ற திருக்குர்'ஆன் விளக்கம் தொடரில், காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள், 'அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தான் என்று திருக்குர்'ஆன் வசனத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். இது தவறு அர்ஷின் மீது 'அமர்ந்தான்' என்பதுதான் சரியாகும் என்று தவ்ஹீத் மூத்த அறிஞர் மவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ அவர்கள் சுட்டிக் காட்டியபோது அதை ஏற்க மறுத்து அறிஞர் பீஜே அளித்துள்ள பதில் பாரீர்; கேள்வி; இஸ்லாமியக் கொள்கை விளக்கம் என்ற பகுதியில் அர்ஷின் மீது ஒழுங்குற அமைந்தான் என்று போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அமர்ந்தான் என்றே எழுதி இருக்க வேண்டும்.மவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ, துபை. ஜஹாங்கீர் சுல்தான், துபை. பதில்; 'இஸ்தவா' என்று திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள சொல்லுக்கு P.S. அலாவுதீன் அவர்கள் 'அமைந்தான்' என்று மொழி பெயர்த்துள்ளனர். அந்த வார்த்தைக்கு 'அமர்ந்தான்' என்றும் மொழி பெயர்த்துள்ளனர். அந்த வார்த்தைக்கு 'அமர்ந்தான்' என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது உங்கள் கருத்து. 'இஸ்தவா' என்ற சொல்லுக்கு 'உட்காருதல்' என்று நேரடியாகப் பொருளில்லை. விரிவான பொருளைக் கொண்ட ஒரு வார்த்தை அது. உட்காருதல், நிலைபெறுதல், ஆதிக்கம் செலுத்தல் போன்ற பல பொருள்களுக்கு இடம் தரக் கூடிய ஒரு வார்த்தை. அதற்கு 'அமர்ந்தான்' என்று பொருள் கொள்ளும் போது, அதன் விரிவான பொருள் சிதைக்கப்பட்டு, சுருங்கிய ஒரு பொருளைத் தரக் கூடியதாக அது ஆகின்றது. அதனால் தான், அதற்கு நிகரான விரிந்த பொருள் கொண்ட அமைந்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. P.S. அவர்கள் உயிருடன் இருக்கும் போதே இது பற்றி நானும், அவர்களும் விவாதித்த பின்னர் தான் 'அமைந்தான்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. 'இஸ்தவா' என்பதற்கு நேரடியாக 'அமர்ந்தான்' என்று பொருள் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. 'இஸ்தவல் மாவு' என்று அரபியர்கள் பயன்படுத்தும் சொல்லுக்கு 'தண்ணீர் அமர்ந்தது' என்று பொருள் கொள்ளப்படுவதில்லை. 'இஸ்தவத் அலல்ஜுதிய்யி என்ற குர்ஆன் வசனத்திற்கு, அமர்ந்தது என்று அங்கே பொருள் கொள்ளப்படுவதில்லை. இந்த இடங்களிலும்…. மற்றும் ஏனைய இடங்களிலும் 'அமைந்தான்' என்றெ பொருள் கொள்ளப்பட வேண்டும்' என்பதற்குரிய ஆதாரங்களை எடுத்துச் சொன்னால் நாம் ஏற்கிறோம். 'அமைந்தான்' என்பது. 'அமர்ந்தான்' என்ற பொருள் உட்பட வேறு பல பொருள்களையும் உள்ளடக்கிய அதே தரத்தில் உள்ள சொல் தான். எனவே 'அமைந்தான்' என்பது சரியான மொழி பெயர்ப்பு என்றே நாம் கருதுகிறோம்.[அந்நஜாத்: டிசம்பர், 1986 ] மேற்கண்ட பதிலில் பீஜே, 'அமர்ந்தான்' என்று மொழியாக்கம் செய்தால் அது விரிவான பொருளை சிதைக்கிறது. எனவே 'அமைந்தான்' என்று மொழிபெயர்ப்பதுதான் சரி என்று சொல்லி, அன்று தனது அண்ணனின் கூற்றுக்கு வக்காலத்து வாங்கிய பீஜே, இன்றைக்கு 'அமர்ந்தான்' என்று கூறுவதுதான் சரி என்று அந்தர் பல்டியடித்து ஃபத்வா வழங்கியுள்ளதை இணைப்பை கிளிக் செய்து படியுங்கள்; http://onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/arshil_amarnthan_enbathu_sariya/ இந்த புதிய ஃபத்வாவில் 'இஸ்தவா' என்ற வார்த்தை இடம்பெறும் வசனங்கள் அனைத்திற்கும் 'அமர்ந்தான்' என்றும் 'அமர்தல்' என்றும் மொழிபெயர்த்துள்ள பீஜே, இறுதியாக 'இவ்வாறு அர்த்தம் செய்யக்கூடாது என்பவர்கள் இவ்வார்த்தைகளுக்கு வேறு விளக்கங்களைத் தருகிறார்கள். அந்த விளக்கங்கள் அனைத்தும் அரபு இலக்கணப்படியும், குர்'ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றன' என்கிறார். அதாவது 'இஸ்தவா' என்ற சொல்லுக்கு 'அமர்ந்தான்' என்ற அர்த்தம் தவிர்த்து வேறு விளக்கங்கள் சரியல்ல என்று அழுத்தமாக பதிவு செய்கிறார்.இதன் மூலம் காலஞ்சென்ற தனது அண்ணன் விளக்கம் தவறு என்பதையும், அண்ணனுக்கு வக்காலத்து வாங்கி அன்று அந்நஜாத்தில் 'அமைந்தான்' என்பதுதான் சரி என்று தான் கூறியதும் குர்'ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தவறானது என்று ஒப்புக் கொள்கிறார். இதை இங்கே முன் வைப்பதற்கு காரணம் இவரது ஒரு மஸாயில் தவறு என்று பிறரால் சுட்டிக் காட்டப்பட்டால் ஏற்க மறுக்கும் இவரது மன முரண்டை மக்கள் விளங்கிக் கொள்ளவும், இவரது கூற்றுக்கு தகுந்த ஆதாரமின்றி இவரே முரண்படுவதையும் மக்கள் விளங்கிக் கொள்ளத்தான். நேரத்துக்கு நேரம் இவருக்கு இவரே முரண்படும் இந்த மனோஇச்சை வாதியை பின்பற்றுபவர்கள் சிந்திப்பார்களா?
நன்றி -முகவை
அப்பாஸ்
Comments