தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிப்பது சரியா? பீஜே அன்றும்-இன்றும்.

மேகத்தை கண்டவுடன் மகிழ்ச்சியில் தோகை விரித்தாடும் மயிலைப் போல, தேர்தல் நெருங்கிவிட்டால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் அறிஞர் பீஜே, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் என் விரலசைப்பின் கீழ்தான் உள்ளார்கள்; எனவே நான் யாரை கை காட்டுகிறேனோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அரசியல் கட்சிகளைஏமாற்றுவதற்காக, மாநாடு-முற்றுகை என்றெல்லாம் கூத்து நடத்துவதும், தேர்தலில் கருணாநிதி அல்லது ஜெயலலிதாவின் கொள்கைப் பரப்பு செயலாளராக மாறி பக்க அரசியல்வாதியாக வலம் வருவதும் பீஜேயின் இன்றைய குர்ஆன்-ஹதீஸ் ஆய்வு கண்டுபிடிப்பாகும். ஆனால் தேர்தல் குறித்த அன்றைய பீஜேயின் நிலை என்ன கொஞ்சம் கீழே படியுங்கள்; இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? -பி.ஜெய்னுல் ஆபிதீன் 1989இல் எழுதியது. உங்கள் பொன்னான வாக்குகள்! இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் (?) எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது! செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுபர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்! மின்னல் வேக சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்! இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது! எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்! வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்ன தான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கரை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்! யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை! அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிர்ப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது? இதோ அல்லாஹ் சொல்கிறான். யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்த தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். (அல் குர்ஆன் 4:85) நல்ல காரியத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டாம். (அல் குர்ஆன் 5:2) வட்டியும், மதுவும், சூதும், லஞ்சமும், ஊழலும், ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை. நன்றி:அல் ஜன்னத், நுழைவாயில், ஜனவரி 1989, 1989-ல் தேர்தலில் வாக்களிப்பதே அல்லாஹ்விடம் பதில் சொல்லும் அளவுக்கு பாவகாரியம் என்றவர், 2004ல் தேர்தல் களப்பணி ஆற்றினால் அது ஈமானுக்கே பங்கம் விளைவிக்கும் என்று எக்கச்சக்கமாக எழுதியவர்களின் இன்றைய நிலை என்ன? தோளில் கிடக்கும் துண்டை மாற்றுவது போல, கொள்கையை மாற்றும் அறிஞர் பீஜேவை சமுதாயம் புரிந்து புறக்கணிக்கவேண்டும்.

நன்றி -முகவை அப்பாஸ்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு