வாழ்க என்று சொல்லலாமா? பீஜே அன்றும்-இன்றும்!
தேர்தல் நேரத்தில் கலைஞர் டிவி நிகழ்ச்சி ஒன்றில், அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் 'வணக்கம் சார்' என்று சொல்ல, பீஜே சொன்ன பதில் என்ன என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவின. ஒரு சாரார் பீஜே பதிலுக்கு வணக்கம் சொன்னார் என்றனர். ஆனால் பீஜேயும் அவரது தரப்பும் 'வாழ்க சார்' என்று தான் சொன்னோம் என்று அடித்துச் சொனார்கள். உங்களால் முடியுமென்றால் இந்த வீடியோவை பார்த்து பீஜே என்ன சொன்னார் என்று கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்;
இப்ப நாம் பிரச்சினையில் சம்மந்தப்பட்ட பீஜேயின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 'வாழ்க சார்' என்றே சொன்னார் என்று வைத்துக் கொள்வோம். இதன் மூலம் பீஜே சொன்ன 'வாழ்க சார்' என்ற வார்த்தையை சொல்வதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று பீஜே காட்டுகிறார். இந்த வாழ்க சார் என்ற வார்த்தைக்கு, '' நன்றாக வாழுங்கள்' என்று ஆசி வழங்குவது என்பதுதான் இதன் பொருள். இந்த வார்த்தையை சொல்லலாம் என்பது பீஜேயின் நிலை அன்று.
இன்று என்ன நிலை? இதோ பீஜேயின் வார்த்தையில் படியுங்கள்;
''வாழ்த்து என்ற சொல் இரண்டு அர்த்தங்கள் கொள்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. நீங்கள் நன்றாக வாழுங்கள் என்று ஆசி வழங்குவது ஒரு அர்த்தம். நீங்கள் நன்றாக வாழ இறைவனை வேண்டுகிறேன் என்பது இன்னொரு அர்த்தம்.
நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்ற பொருளில் இதைக் கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆ செய்யும் பொது அனுமதியில் இது அடங்கும்.
ஆசி வழங்குதல் என்ற பொருள் கொள்பவர்கள் வாழ்த்துகிறேன் என்ற சொல்லை கூற முடியாது. வாழ்த்துகிறேன் என்று ஒருவர் கூறுவதால் அவர் வாழ்ந்து விடுவார் என்று கருதுவதை ஏற்க முடியாது. அப்படி நம்ப முடியாது. நம்பக் கூடாது'' என்கிறார் பீஜே.
பீஜேயின் மேற்கண்ட விளக்கத்தின் படி, சண்முக சுந்தரத்தின் நலம்-மகிழ்வுக்காகவும், கவலைகள் நீங்கவும் அல்லாஹ்விடம் துஆ செய்யும் அடிப்படையில் 'வாழ்க சார்' என்று பீஜே கூறியிருக்க முடியாது. ஏனெனில் அது முஸ்லிம் சகோதரர்களுக்கானது என்று அவரே சொல்லி விட்டார்.
பீஜேயின் மற்றொரு விளக்கபடி ஆசி வழங்கும் வகையில் தான் 'வாழ்க சார்' என்று பீஜே சொல்லியுள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும் வாழ்க என்று ஒருவரை வாழ்த்தினால் அவர் வாழ்ந்து விடுவார் என்று நம்பக் கூடாது என்று சொல்லும் பீஜே, அப்படி ஒரு ஆசியை ஏன் சண்முக சுந்தரத்திற்கு வழங்க வேண்டும்? பெருநாள் அன்று வாழ்த்துக்கள் சொல்வது ஃபித்அத் என்றால் இவர் சண்முக சுந்தரத்திற்கு 'வாழ்க சார்' என்று கூறி ஏன் அந்த ஃபித்அத்தை செய்தார்?
இப்ப பீஜே இப்படி பல்டியடிக்கலாம். அதாவது முஸ்லிம்கள் பெருநாள் அன்று வாழ்த்து சொல்வதை நன்மையான காரியம் என்று கருதி செய்கிறார்கள். அதனால் அது ஃபித்அத். அனால் நான் 'வாழ்க சார்' என்று சொன்னது சம்பிரதாயத்திற்காக. எனவே இது பித்அத்தில் சேராது என கூற கூடும். முஸ்லிம்கள் யாரும் பெருநாள் வாழ்த்து சொன்னால் இத்தனை நன்மை கிடைக்கும்; அதனால் சொல்கிறோம் என்று இவரிடம் சொன்னார்களா? இவர் எப்படி சம்பிரதாயத்திற்காக வாழ்க சார் போட்டாரோ அதே மாதிரித்தான் முஸ்லிம்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்த பெருநாள் வாழ்த்துக்கள் என்று சொல்கிறார்கள். இவருக்கு மட்டும் கூடுமான ஒன்று ஏனைய முஸ்லிம்களுக்கு மட்டும் ஃபித்அத்ஆக மாறிவிடுகிறது.
இவர் சண்முக சுந்தரத்திற்கு ஆசி வழங்கும் போது வாழ்த்து சொல்வது கூடும். ஆனால் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான பெருநாளில் வாழ்த்து சொல்வது அர்த்தமற்றது; கூடாதது. இன்னும் இந்த வாழ்த்து விவகாரம் இவரால் எத்தனை பரிமானம் எடுக்குமோ?
நன்றி -முகவை
அப்பாஸ்
Comments