நோன்பு திறக்கும் போது துவா கேட்பது கூடாது! என அண்ணன் ஃபத்வா

கடந்த முறை குடும்ப லேகியம் விற்ற அண்ணன்  இந்த ஆண்டு குடும்பத்தில் பிரச்சனையா? மனதில் குழப்பமா? என்று மாந்திரிகர் ரேஞ்சில் தாயத்து விற்க ஆரம்பித்த முதல் நாளில் பிறைக் குழப்பத்தால் அவரே மனக் குழப்பமாகி ரமலானைப் பற்றி சொல்கிறேன்  என ஆரம்பித்து ஏகத்துவ வாதிகளை ஏகத்துக்கும் குழப்ப ஆரம்பித்தார்.

ஏற்கனவே நோன்பு திறக்கும் துவா  'அல்லாஹும்ம லகசும்து'  இல்லை என்று 'தஹபள்ளமவு' துவா கேட்க வேண்டும் என்றார். பின்னர் அது இல்லை 'பிஸ்மில்லாஹ்' சொன்னால் போதும் என்றார். தற்போது நோன்பு திறப்பதற்கு முன்னாலும் துவா கேட்கக் கூடாது என்கிறார்.சரி அப்படியானால்  துவா ஏற்கப்படக் கூடிய நேரங்களில் ஒன்று நோன்பு திறக்கும் முன் கேட்கப்படும் துவா!  என இத்தனை காலம் நாம் கேட்டது எல்லாம்  என்ன ஆனது? அந்த ஹதிஸ் என்ன பலவீனமானதா? அல்லது தொடர்பு  அறுந்ததா? இப்படி ஏதாவது சொல்வார் என்று பார்த்தால் அண்ணனின் அறிவுக்கு பொருந்த வில்லையாம்! 

ஏன் என்றால் நபி ஸல் சொல்லியிருக்கிறார்கள்  இரவு உணவு முன்னால்  இருக்கையில் நீங்கள் இஷாவைத் தொழ வேண்டாம்! என நபி ஸல் சொல்லியிருக்கிறார்கள்! ஆகையால் பசியோடு  இருக்கும் போது   தொழுகையே கூடாது என்பதால் துவா கேட்பது எப்படி அறிவுக்கு பொருத்தமாக இருக்குமா? கஞ்சிக்கு முன்னால உட்கார்ந்து துவா கேட்டால் அது நடிககிறதாதான் இருக்கும்! என தன்னுடைய அறிவைக் கொண்டு மார்க்கத்தை அளந்தார். 

ஒரு காலத்தில் 'வேலையை முடிச்சுட்டு கூலியை கேட்கற நேரம்மா' என்று சொன்னவர் தன்னுடைய 'இறைவனிடம் கை ஏந்துவோம்' எனும் புத்தகத்தின் 22 ம பக்கத்தில்  ஏற்கப்படக்  கூடிய துவாக்களில்   ஒன்றாக 'நோன்பாளியின் துவாவை' குறிப்பிட்டு 'இந்த வாய்ப்புகளை பயன் படுத்திக் கொண்டால் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப் படுவதில் எந்த சந்தேகமும் இல்லை'   என்று எழுதியவர்    இன்று பசியோடு இருக்கும் போது கேட்கும் துவா பாசாங்காகத்தான் இருக்கும் என கூறியுள்ளார்.   

முதலாவதாக அது சாதாரண காலங்களில்  இரவு உணவுக்கு சொன்ன விஷயத்தை எப்போதும் பசியோடு இருக்கும் ரமளானுக்கு பொருத்தலாமா?  இரண்டாவதாக  அப்படி பொருத்தினால் பசியோடு இருக்கும் போது துவா கேட்பது அறிவுக்கு பொருத்தமில்லை என்றால் ரமலானில் லுஹர் அசர் தொழுகைகளும் கூடாதே?  ஏன் எனில் அப்பவும் பசிக்குமே ?    அது மட்டுமில்லாமல் 'பிஸ்மில்லாஹ்' என்பதும துவா தானே! அது உங்களுடைய துவாக்களின்  தொகுப்பு மற்றும் எம்.ஐ.சுலைமானுடைய துவாக்கள்   புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதே! உங்கள் வாதப்படி அதையும் சொல்லக் கூடாதா?  என நாம் கேட்க வேண்டியுள்ளது! 

இப்படி    அண்ணன் பத்வா கொடுத்ததுமே அதை அப்படியே ஏற்று நடக்கும் தக்ளிதுகள்  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள இவர்களின் இப்தாருக்கு  சென்ற   நசிர் எனும் சகோதரை துவா கேட்க தூக்கிய கையை இறக்கி விட்டு துவா கேட்க கூடாது என சொல்ல, இவர் ஏன் இவ்வளவு நாளும் கேட்டோமே என கேட்க, அண்ணன் சொல்லிட்டார் உங்களுக்கு தெரியாதா? எனக் கேட்க, அந்த சகோதரர் நம்மிடம் வந்து கொதித்து போய் சொன்னார்.  இவர்கள் பின்பற்றுவது அண்ணல் நபி வழியா? அண்ணன் வழியா என்பது தெரியவில்லை! 

நபி [ஸல்] அவர்களின் வாக்கு, அதை அறிவித்த நபித்தோழர்கள், மிகப் பெரிய தியாகங்களை செய்து ஹதிஸ்களை சேகரித்து, இந்த ஹதிஸ்களின் தரத்தை ஆய்வு செய்த ஹதிஸ் கலை வல்லுனர்கள், இதை ஸஹிஹ் ஆன கிரந்தங்களில் பதிவு செய்த இமாம்கள் எல்லோருடைய அறிவையும் புறந்தள்ளி விட்டு    அண்ணனின் அறிவைக் கொண்டு மார்க்கத்தை அளக்க ஆரம்பித்தால் அது மிகப் பெரிய வழி கேட்டை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.அல்லாஹ்வே அறிந்தவன்

நன்றி மங்கோலியன் பதில் : 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு