அண்ணனைப்பற்றி அறியாதவர்களுக்காக அண்ணனின் வாக்குமூலம் #தவ்ஹீத்_ஜமாஅத்_டிரஸ்ட்_ஆக_மாறப்போகிறதா?
இன்றல்ல (20-09-2004) அன்றேஎழுதியது த.த.ஜ.வில் பி.ஜே.க்கு அறங்காவலர் என்ற பதவி என்பதை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்
நன்பரின் பதவியிலிருந்து
நன்பரின் பதவியிலிருந்து
தவ்ஹீத்_ஜமாஅத்_டிரஸ்ட்_ஆக_மாறப்போகிறதா? இந்தக் கேள்வி கடந்த சில நாட்களாக பலராலும் பலவாறு பரப்பப்பட்டு வருகின்றது. இதற்கான பதிலை இந்த வார உணர்வு பத்திரிகையில் சகோ.பீ.ஜைனுல் ஆபிதீன் பதில்கள் பகுதியில் எழுதியுள்ளார். அதனுடைய கருத்துச் சுருக்கத்தை இங்கே காணலாம்.
சங்கப்பதிவில் இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை டிரஸ்ட்டாக மாற்றி அதில் பீஜேவை ஆயுட்கால சேர்மனாக்கி சிலரை ஆயுட்கால உறுப்பினராக்க இருப்பதாகவும், இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சொத்துக்கள் இனி இந்த டிரஸ்டிகளுக்கு மட்டுமே சொந்தம் என்றும் செய்திகள் வருகின்றது. இதன் உண்மைத்தன்மையை விளக்கவும்.
-அப்துல் ரஹ்மான், கோட்டைப்பட்டினம். http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_20.html
பதில்: சகோ.பீ.ஜைனுல் ஆபிதீன்
நான் (பீஜே) அங்கம் வகிக்காத முந்தைய நிர்வாகத்தில் இது குறித்து ஒரு ஆலோசனை நடத்தப்பட்டது. அதாவது சங்கமாக செயல்பட்டால் அதற்கு வருமான வரி உண்டு. டிரஸ்டாக செயல்பட்டால் அதற்கு வருமான வரியில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று ஆடிட்டர்கள் மூலம் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அது குறித்துதான் ஆலோசனை நடத்தப்பட்டது.
தவ்ஹீத் ஜமாஅத்தை டிரஸ்ட் ஆக்கினால் வருமான வரியில் இருந்து சலுகை கிடைக்கும் என்றால் அதனால் கிடைக்கும் ஆதாயத்தின் மூலம் அதிகமான நற்காரியங்கள் செய்யலாமே என்று ஆலோசிக்கப்பட்டது. வருமான வரிச்சலுகை கிடக்கும் என்பது உண்மையாக இருந்தாலும் யாரை டிரஸ்டிகளாக அமைக்கிறோமோ அவர்களின் பிடியில் மொத்த சொத்தும் போய்விடுமே? அவை ஜமாஅத்தின் சொத்துக்களாகவோ, ஜமாஅத்தின் வருமானமாகவோ இல்லாமல் போய்விடுமே என்று ஆட்சேபணையும் தெரிவிக்கப்பட்டது.
டிரஸ்டின் உறுப்பினர்களாக அனைத்து மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளையும் ஆக்குவது. சுமார் நாலாயிரம் பேர் கொண்ட டிரஸ்ட்டாக ஆக்குவது.. ஒரு நிர்வாகி அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டால் அவரை டிரஸ்டில் இருந்து நீக்கிவிட்டு புதிய நிர்வாகியை அந்த இடத்தில் நியமிப்பது என முடிவு செய்யப்பட்டு இதை செய்து ஈரோட்டில் நடந்த மாநில செயற்குழுவில் முன்வைக்கப்பட்டது.
வரிச்சலுகைகள் பெறும் வகையில் டிரஸ்ட் அமைப்பதாக இருந்தால் தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையிலும் கோட்பாடுகளிலும் கோட்பாடுகளிலும் மாற்றங்கள் செய்தால்தான் வருமான வரிச்சலுகைக்காக கொள்கையை விட்டு விட முடியாது என்பதால் அது கைவிடப்பட்டது. வரிச்சலுகை இல்லாவிட்டாலும் பராவயில்லை சங்கமாகவே செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டு விட்டது.
இதனால்தான் ஏற்கனவே டிரஸ்டாக செயல்பட்டு வந்த மஸ்ஜிதுர் ரஹ்மான், அல் இர்ஷாத் ஆகியன ஜமாஅத்தில் சொத்துக்களை (தவ்ஹீத் ஜமாஅத்தில்) ஒப்படைத்து விட்டனர். இதெல்லாம் முந்தைய நிர்வாகத்தின் ஆலோசனைதான். எனவே என்னை (பீஜே) ஆயுட்கால சேர்மனாக்கும் பேச்சு எழவே இல்லை. நான் பொறுப்பில் இருந்து விடுபட்டது முதல் எந்த பொதுக்குழுவுக்கும் செயற்குழுவிற்கும் சென்றதில்லை. ஆனால் இதுகுறித்து மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துச் சொல்லுமாறு முந்தைய நிர்வாகிகள் என்னிடம் கேட்டார்கள். நான் வரமுடியாது என்று மறுத்து விட்டு இந்த விசயங்களை விளக்கி பேசி வீடியோவாகப் பதிவு செய்து அதை பொதுக்குழுவில் போட்டுக் காட்டினார்கள்.
இதைத்தான் நம்மைவிட்டுப்போய்விட்ட சில உள்நோக்கத்துடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தவ்ஹீத் ஜமாஅத் இன்ஷா அல்லாஹ் எப்போதும் சங்கமாகவே இருக்கும். அதன் சொத்துக்கள், வரவு செலவுகள் அனைத்தும் சங்கத்தின் பெயரில்தான் இருக்கும். அதனால் சிரமங்கள் ஏற்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் சங்கமாகவே செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அடுத்து பீ.ஜைனுல் ஆபிதீன் ஆகிய நான் ஆயுட்கால சேர்மனாக ஆக்கிக் கொள்ளப் போகிறேன் என்ற கேள்விக்கு விளக்கமாக சில விஷயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் நிரந்தரமாக பொறுப்பிலும் இருப்பதை விரும்பக் கூடியவனாக இருந்தால் இரு தடவைக்கு மேல் தலைவராக தொடர முடியாது என்ற விதியை உருவாக்கி இருப்போமா?
இந்தச் சட்டவிதியின் படி முன்னர் ஒருதடவை நான் பொறுப்பிற்கு வராமல் இருந்துள்ளேன். அப்போது எம்.ஐ.சுலைமான் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதுபோல் சென்ற முறையும் அந்தச் சட்டவிதிப்படி நான் தலைமைப் பொறுப்பிற்கு வரவில்லை. அல்தாபி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அந்த நிர்வாகத்தில் நான் எள்ளளவும் தலையிட்டது இல்லை. மேலாண்மைக் குழு, தணிக்கை குழு ஆகியவற்றில் அங்கம் வகித்தால் அதுவும் தலையீடு என்று கருதப்படுமோ என்று கருதி அதில் அங்கம் வகிக்கவில்லை. நான் கலந்து கொள்ளாத செயற்குழுவில் என்னை மேலாண்மைக்குழுவில் ஏகமனதாக சேர்க்க முடிவு செய்தும் அதை நான் அதை ஏற்கவில்லை.
அல்தாபி தலைவரான பின் அவர் மீது குற்றச்சாட்டு வந்து நிரூபணமாகாவிட்டால் அவர் பொறுப்பில் நீடித்து இருப்பார். அடுத்த முறையும் அவரே தேர்வு செய்யப்பட்டும் இருப்பார். அவருக்குப் பின் இன்னும் பலர் அந்தப் பொறுப்பை சுமக்க தகுதியானவர்கள் பலர் உள்ளனர் என்பதால் நான் எனது முழுநேரத்தையும் வியாபாரத்தில் செலவிடலானேன். அது குறித்தே எனது கவனத்தை திருப்பிக் கொண்டேன்.
அல்தாபி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பொறுப்பில் இருந்து அவரை நீக்கும் நிலை நீக்கும் நிலை ஏற்பட்ட பின் அடுத்த தலைவரைக் கண்டறிந்து பொதுக்குழுவில் பரிந்துரைப்பதற்காக உயர்நிலைக்குழு கூடியது.
சில நிர்வாகிகள் இரண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்து விட்டதால் அவர்கள் மீண்டும் பொறுப்பிற்கு வர முடியாது. எனவே அவர்களை கழித்து விட்டு மற்றவர்களைப் பரிசீலனை செய்தோம். சிறப்பு அழைப்பாளராக நானும் கலந்து கொண்டேன்.
ரஹ்மத்துல்லாஹ் ஏற்கத்தக்க சொந்தக் காரணத்தை சொல்லி மறுத்து விட்டார். என்னையும் வற்புறுத்தினார்கள். நானும் தக்க காரணங்களைச் சொல்லி மறுத்து விட்டேன். எம்.எஸ். சுலைமான் அவர்கள் மறுத்தாலும் நெருக்கடியான நேரத்தில் யாராவது சுமக்க வேண்டும் என்பதற்காக அவரை வற்புறுத்தி ஏற்க வைத்து உயர்நிலைக்குழு முடிவு செய்தது. ஆனால் ஒப்புக் கொண்டு ஊர் சென்ற பின் இது தனக்கு முடியாது என்று கூறி அவர் மறுத்து விட்டார். அவரி நேரில் (நெல்லையிலோ அல்லது மதுரையிலோ) சந்தித்து பல மணி நேரங்கள் வறுபுறுத்தி சம்மதிக்க வைத்தேன். ஆனால் மறுபடியும் ஊர் சென்ற பின்னால் தனக்கு முடியாது என்றார்.
மீண்டும் உயர்நிலைக்குழுக் கூடியது. அடுத்து அப்துல் கரீம் அவர்களை வற்புறுத்தினாலும் அவரும் ஏற்க மறுத்தார். இறுதியில் வலுக்கட்டாயமாகத்தான் என் மீது திணித்தார்கள். ஒருவரும் ஏற்காவிட்டால் கலைத்து விடப் போகிறீர்களா? என்ற அளவிற்கு வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்ட பின் நான் வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டேன்.
ஆனால் அதன்பின்னர் அப்துல்கரீமிடம் பல மணிநேரங்கள் பேசி நான் எல்லா ஒத்துழைப்பும் தருகிறேன் எப்படியாவது ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். நாசர் மூலமும் கலீல் ரசூல் மூலமும் அவரை ஏற்கச் செய்ய பலவித முயற்சிகளை மேற்கொண்டேன். சிரமப்பட்டு அவரை நான் ஒப்புக் கொள்ளச் செய்த பின்னர் கடைசி நேரத்தில் தன்னால் முடியாது என்று மறுத்து விட்டார். வேறு வழி இல்லாத நிலையை எனக்கு ஏற்படுத்தியதால்தான் நான் ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
நான் தொழிலில் முழுமையாக கவனம் செலுத்தும் அவசியம் உள்ளதாலும் இன்னொரு நிறுவனத்தை துவக்கும் பணிகளில் இறங்கியுள்ளதாலும் நடுத்தர வயதுள்ளவர்கள் போல் அதிக வயதுள்ளவர்களால் துடிப்பாக செயல்பட முடியாது என்பதாலும் பீஜேயை விட்டால் ஆளில்லை என்பதை மாற்றியாக வேண்டும் என்பதற்காகவும் நான் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை., நெருக்கடியான இந்த நேரத்தில் வேறு வழியில்லாமல் இதை நான் ஏற்றுக் கொண்டேன்.
இந்தப் பதவிக்காலம் கூட முழுமையாக இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதற்கு முன்பே கூட மற்றவர்களை தாயர்படுத்தி விடமுடியும் என்று நம்புகிறேன். துணைப்பொறுப்பில் உள்ளவர்கள் அல்லாஹ்வின் அருளால் அதற்குரிய தகுதிகளை வளர்த்து வருகின்றார்கள்.
இயல்பாகவே நான் பதவியை விரும்புவதில்லை. தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டாலும் நிகழ்ச்சிகளில் தலைவர் என்று விளம்பரம் செய்யக் கூடாது; என் பெயருடன் எந்த அடைமொழியும் போடக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றேன்.
AQH என்ற இயக்கத்தை உருவாக்கி அதன் தலைமைப் பொறுப்பில் நான்தான் இருந்தேன். பின்னர் அது JAQH என்று மாற்றப்பட்டது. எனக்கு தலைவர் பொறுப்பு வேண்டாம் என்று கூறி விலகிவிட்டு அந்த இயக்கத்தில் பல்லாண்டுகள் நான் வெறும் பிரச்சாரகராக பணியாற்றினேன்.
அதன்பின்னர் தமுமுக உருவாக்கப்பட்ட போது அதன் அமைப்பாளராக நான்தான் தேர்வு செய்யப்பட்டேன். அதுதான் தலைவர் பதவியை விட முதன்மையானது. அந்த இயக்கம் காலூன்றும் வரை உழைத்து தானாக நிலைபெற்று விடும் என்ற நிலையில் அமைப்பாளர் பொறுப்பில் இருந்து விலகினேன். அதன்பின்னர் பல ஆண்டுகள் அந்த இயக்கத்தில்தான் பணியாற்றினேன்.
எனக்கு தலைமைப் பொறுப்பு வெறுப்பான ஒன்றாகவே இருக்கிறது. தூக்கி நிறுத்தும் நெருக்கடி இருந்தால் தவிர நான் ஏற்றுக் கொண்டதில்லை. அதன்பின்னர் நான்தான் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற நிலை மாறியவுடன் ஒதுங்கிக் கொள்வேன். இப்படி இருக்கையில் நான் எப்படி ஆயுட்கால சேர்மன் ஆவேன்? அதை எப்படி நான் ஒப்புக் கொள்வேன்?
எனவே இது போன்ற பொய்களைப் பரப்பி அல்லாஹ்விடம் பாவிகளாக ஆக வேண்டாம் என்று முன்னால் தோழர்களை கேட்டுக் கொள்கிறேன்.
என்று வந்துள்ளது.
Comments