நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? பீஜே அன்றும்-இன்றும்!

நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு அந்நஜாத் செப்டம்பர் 1986 இதழில் அறிஞர் பீஜே அவர்கள் அளித்த பதில்;
 
கேள்வி: நபி(ஸல்) அவர்களுக்கே சூனியம் செய்யப்பட்டதாக ஒரு ஆலிம் சொன்னாரே! அது உண்மையா? உண்மை என்றால் மன உறுதி உள்ளவர்களையும் அது பாதிக்குமா?
M. சேகு இஸ்மாயில் , தொண்டி.
 
பதில்: நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். நபி(ஸல்) அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுத்தியதன் மூலம் நாம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சூனியம் என்று சொல்லிக் கொண்டு கப்ருகளுக்கு செல்பவர்கள், "அங்கே சூனியம் நீக்கப்படும்" என்று கூறுவது பொய் என்பதை இதன் மூலம் புரியலாம். நபி(ஸல்) அவர்களே தனக்கு வைக்கப்பட்ட சூனியத்திலிருந்து தானே தப்பித்துக் கொள்ள முடியவில்லை எனும் போது மற்ற நல்லடியார்களால் என்ன செய்ய இயலும்? பலக், நாஸ் ஆகிய இரு சூராக்களும் போதிக்கின்ற அடிப்படையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருங்கள்! அது தான் நாம் செய்ய வேண்டியது.
 
நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது உண்மைதான் என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே, இன்று நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்படவில்லை என்று மறுக்கிறார். பார்க்க; http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/357/
 
நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதற்கு ஆதாரமாக அன்று அவர் ஏற்றுக்கொண்ட புகாரி உள்ளிட்ட ஹதீஸ்கள் இன்று பலவீனமாகி விட்டதால் மறுக்கிறாரா என்றால் இல்லை. அந்த  ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரப் பூர்வமனவைதான் என்று இன்றும் சொல்கிறார். பிறகு மறுப்பதற்கான முகாந்திரம் என்ன? இந்த ஹதீஸ்கள்  எல்லாம் குர்'ஆனோடு மோதுகிறது என்கிறார். 1986 ல் குர்'ஆனோடு மோதாத ஹதீஸ்கள், 2002 ல் 'பிரேக்' பிடிக்காமல் குர்'ஆனோடு மோதி விட்டதா?  மேலும் குர்'ஆனோடு நபிமொழி ஒரு காலத்திலும் மோதாது என்று இவரே வழங்கியுள்ள ஃபத்வாவை படிக்க;
 
இப்படி மார்க்கத்தை இஷ்டத்திற்கு வளைக்கும் இவரது செயலுக்கு ஒரே ஆதாரம் வழக்கம் போல மனோஇச்சை தானே. சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.
நன்றி -முகவை அப்பாஸ் 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு