7. அகங்காரம் (இதை படிப்பவர்களில் தமிழ் அறிஞர்களுக்கு ஒரு சவால்)

அல்லாஹ்வின் பேரருளால்  இதுவரை நான்கு தலைப்புகளில் 6 பாகங்களாக குர்ஆன் இண்டக்ஸ்  தந்துள்ளோம்.  இது 7வது பாகம். 85 வசனங்களிலிருந்து தந்துள்ளோம்.   ஃஇZஸ்ஸது என்பதற்கு  கண்ணியம் என்பது நேரடி பொருள் ஆகும்.  2:206.  வது வசனத்தின் இந்த இடத்தில்  ஃஇZஸ்ஸது  என்பதற்கு  ஆணவம் – பெருமை - வறட்டு கௌரவம் – அகந்தை - அதிகார போதை என்று அறிஞர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள். இதே மாதிரி இஸ்தக்பர

استكبر 

என்ற சொல்லுக்கு பெருமையடித்தல் என்பது தான் நேரடிப் பொருளாகும்.  நேரடிப் பொருள் செய்தால் எதிர்மறையான அர்த்தம் வரும் இடங்களில் புறக்கணித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும்.‎ இது பற்றிய விரிவான விபரம்  6:93. வசனத்தின் கீழ் உள்ளது பார்த்து கொள்ளுங்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/01/7.html
தலைப்பில் உள்ள இந்த இண்டக்ஸ் காப்பி பேஸ்ட் அல்ல. தமிழில்  அகங்காரம் என்பதற்கு  அகந்தை- அகம்பாவம் - அதிகார போதை  -ஆணவம் -– கர்வம் - கவுரவம்- பெருமிதம் - பெருமை-  தற்பெருமை – செருக்கு - இறுமாப்பு என்று பல வார்த்தைகள் உள்ளதோ அது போல் அரபியிலும் அஸ்தக்பர, ஃஇஸ்ஸத், முஃதாலன், Fபஃகூர், தகப்பர், பதரன்,  கிபர், மரஃஹா,  ஃஉலுவ்வன், ஃஅலா, Fப்ரஃஹ், Fப்ரஹுன, தம்ரஹஹுன, அஷி(ருன்)ர், வதFபாஃகுருன் என்று வார்த்தைகள் உள்ளன.

அஃரழ ஜப்பாரன், யுழில்ல, ஃஆலீ(ன)ன், Fபாரிஹீ(ன)ன், தஃலுா, மஜீது(ன்) என்ற வார்த்தைகளுக்கும் சில மொழி பெயர்ப்பாளர்கள் பெருமை போன்ற வார்த்தைகளுக்கு  பயன்படுத்தி உள்ளனர்.
பல மொழி பெயர்ப்புகளை பார்க்கும் போது اقعنسس  இஃக்ஃஅன்ஸஸ  ஞாபகம் வந்தது. உதாரணமாக 

பெரிய அட்டூழியமாக அட்டூழியம் செய்கிறார்கள்.

பெரும் அகந்தையாகவும் அகந்தை கொண்டனர்

பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள். 


அகப்பெருமைக்காரரான பெருமைக்காரர் ஒவ்வொருவரையும் நேசிக்க மாட்டான்.

இந்த மாதிரி மொழி பெயர்ப்புகள் தான் மேற் சொன்னதை ஞாபகம் ஊட்டின. அதாவது  இஃக்ஃஅன்ஸஸ - முன் தள்ளி பின் நடந்தான்.  

இஃக்ஃஅன்ஸஸ என்றால் முன் தள்ளி பின் நடந்தான் என்று அர்த்தம். இப்படித்தான் அரபி கல்லுாரிகளில் பாடம் நடத்தும் பேரறிஞர்கள் என அறியப்பட்டவர்கள மாணவர்களுக்கு சொல்லி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். 


இதை படிப்பவர்களில் தமிழ் அறிஞர்களுக்கு ஒரு சவால். முன் தள்ளி பின் நடந்தான் என்றால் என்ன அர்த்தம்?  அடிப்பதாக அடித்தான், நடப்பதாக நடந்தான் இப்படி நிறைய கேள்விகள் இருக்கிறது. முன் தள்ளி பின் நடந்தான் என்பதற்கு மட்டும் என்ன அர்த்தம்? புரியும் தமிழில் பதில் சொல்லுங்கள். 

நமது  பிளாக்கரில்  வந்து புரியும் தமிழில் பதில் சொல்லுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு.

நீ மகிழ்ச்சியடைய வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் மகிழ்பவர்களை நேசிக்க மாட்டான். என்றெல்லாம்  மொழி பெயர்ப்புகள்  உள்ளன. அவற்றையும் ஆதாரத்துடன் இடம் பெறச் செய்து சரியானதையும் இடம் பெறச் செய்துள்ளோம். இனி இன்டக்ஸ்




 1. "ஆதமுக்குப் பணியுங்கள்!''11 என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத்509 தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் வஸ்தக்பர 

 وَاسْتَكْبَرَ

(ஆணவமும் கொண்டான்  பெருமை கொண்டு)  பெருமையடித்தான்   (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான். 2:34.

2. 2.மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருக்குப் பின் பல தூதர்களைத் தொடரச் செய்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ்444 மூலம் அவரைப் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் அஸ்தக்பர்த்தும்


اسْتَكْبَرْتُمْ‌ۚ

அகந்தை(  கர்வம் – ஆணவம்- பெருமை) கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள். 2:87. 



3."அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!'' என்று அவனிடம் கூறப்பட்டால் அவனது ஃஇஸ்ஸது 

 الْعِزَّةُ 

ஆணவம் பெருமை- வறட்டு கௌரவம்  அகந்தை- அதிகார போதை  அவனைப் பாவத்தில் ஆழ்த்துகிறது. அவனுக்கு நரகமே போதுமானது. அது மிகக் கெட்ட தங்குமிடம். 2:206.   



4.அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும்உறவினர்களுக்கும்அனாதைகளுக்கும்ஏழைகளுக்கும்நெருங்கிய அண்டை வீட்டாருக்கும்தூரமான அண்டை வீட்டாருக்கும்பயணத் தோழருக்கும்நாடோடிகளுக்கும்,206 உங்கள் அடிமைகளுக்கும்107 நன்மை செய்யுங்கள்! முஃதாலன் Fபஃகூர 

مُخْتَالًا فَخُوْرَا ۙ‏

பெருமையடித்துகர்வம் (வீராப்பபாக பெருமிதம் -கர்வமுடையோராகவீண் பெருமை உடையோராக - கர்வம் கொண்டு பெருமையாக- வீண் பெருமையிலும்கர்வத்திலும்  உழல்பவர்களை - கர்வங்கொண்டவனாகபெருமையாளனாக கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். 4:36. 



5. நம்பிக்கை கொண்டுநல்லறங்கள் செய்வோரின் கூலிகளை அவர்களுக்கு (இறைவன்) முழுமையாக வழங்குவான். தனது அருளை அதிகமாக அளிப்பான். (அடிமைத் தனத்திலிருந்து) விலகிப் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி  வஸ்தக்பரூ

وَاسْتَكْبَرُوْ

பெருமையடிப்போரைத் (கர்வமும் கொள்கிறார்களோகர்வம் கொண்டு- தற்பெருமையும் - கர்வமும் கொண்டார்களே)  துன்புறுத்தும் வகையில் தண்டிப்பான். அல்லாஹ்வையன்றி தங்களுக்கு உதவுபவனையோபொறுப்பாளனையோ அவர்கள் காணமாட்டார்கள். 4:173. 




6. 6:93. அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன்தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் 'எனக்கு அறிவிக்கப்படுகிறதுஎனக் கூறுபவன், 'அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும்போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள்165 அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். "உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும்அவனது வசனங்களை ஃஅன் ஆயாதிஹி ஸ்தக்பிரூன

عَنْ اٰيٰتِهٖ تَسْتَكْبِرُوْنَ

நீங்கள் நிராகரித்ததாலும் இன்று166 இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்!'' (எனக் கூறுவார்கள்).  6:93. 



இந்த வசனத்தில் இறுதியாக உள்ள  இஸ்தக்பர

استكبر 

என்ற சொல்லுக்கு பெருமையடித்தல் என்பது தான் நேரடிப் பொருளாகும்.  நேரடிப் பொருள் செய்தால் எதிர்மறையான அர்த்தம் வரும் இடங்களில் புறக்கணித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் வசனங்களில் பெருமையடித்தல் என்று பொருள் கொண்டால் அது நல்ல செயல் தான். அல்லாஹ்வின் வசனங்களில் பெருமை அடிக்கலாம். ஆனால் இது கெட்ட செயலாக இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக வினைச் சொல்லுக்குப் பின் ஃஅன்

عن‏

என்ற இடைச் சொல் சேரும் போது இந்த நிலை ஏற்படும்.‎ உதாரணமாக ரஃகப
 
رغب 

என்ற சொல்லை எடுத்துக் கொண்டால் அதை ஒட்டி Fபீ என்ற சொல் வந்தால்  ரஃகப Fபீ


 ‎رغب  فيه


என்றால் விரும்பினான் என்று பொருள் வரும் ஆனால் இச்சொல்லுடன் ஃஅன் என்ற சொல் இணைந்தால் 

‎رغب عنه


ரஃகப ஃஅன் என்பதற்க புறக்கணித்தான் வெறுத்தான் என்று பொருள் வரும். ஒரே சொல் தான் விரும்பினான் என்றும் வெறுத்தான் என்றும் பொருள் தருகிறது.

அது போல் தான் இவ்வசனத்தில் இஸ்தக்ஃபர என்ற சொல்லை ஒட்டி அன் வந்துள்ளது. 

அல்லாஹ்வின் வசனத்தில் பெருமையடித்தான் என்று சொன்னால் அது கண்டிக்கப்படும் செயல் அல்ல.

அல்லாஹ்வின் வசனத்தை புறக்கணித்தான் என்றால் அது கண்டிக்கும் செயலாக ஆகும்.

இதனால் தான் பெருமையடித்தல் என்று விபரமுள்ளவர்கள் இவ்வசனத்தில் பொருள் கொள்ளவில்லை.

மற்றவர்கள் செய்த தமிழாக்கம் பாருங்கள்

இன்னும் அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்து) பெருமையடித்துக் கொண்டு இருந்தீர்கள் என்று மொழிபெயர்த்துள்ளனர்.



நம்பாது நிராகரித்து என்பதை பிராக்கெட்டில் - அடைப்புக் குறிக்குள் போட்டுள்ளார்கள். அடைப்புக் குறிக்குள் உள்ளதை நீக்கி விட்டுப் படித்தால் அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு பெருமையடித்தீர்கள் என்று வரும். இது விபரீதமான அர்த்தம் என்பதால் தான் நிராகரித்து நம்பாமல் என்றெல்லாம் பிட்ராக்கெட்டில் சேர்த்துள்ளனர். 

அதாவது இந்த இடத்தில் நிராகரித்தல் என்பது தான் சரி என்று அவர்களும் கருதியதால் பிராக்கெட்டில் போட்டு சரி பண்ணியுள்ளனர்
அவனது வசனங்களை நிராகரித்ததாலும் என்று விபரமுள்ளவர்கள் நேரடியாகவே மொழி பெயர்த்துள்ளார்கள். 
நன்றி : P.J.

இன்னும் சிலர்  பெருமை - ஆணவம் என்ற நேரடி பொருளுடன் புறக்கணித்து - ஏற்க மறுத்து - நம்புவதை விட்டும் - ஏற்பதை விட்டும் என்றும் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.

பெருமை கொண்டு புறக்கணித்ததுவே (பாகவி6:93)

புறக்கணித்து நீங்கள் ஆணவங் கொண்டிருந்ததாலும் (IFT6:93)

(அவற்றை ஏற்க மறுத்து) நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தாலும் (சவூதி6:93)

(நம்புவதை) விட்டும் பெருமையடித்துக் கொண்டிருந்தாலும் (பஷாரத்6:94 )

(ஏற்பதை) விட்டும் நீங்கள் பெருமையடித்துக் கொண்டும் இருந்த காரணத்தால்( மலிவு பதிப்பு 6:94)



7. "இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ ததகப்பர

 تَتَكَبَّرَ

பெருமையடிப்பது தகாது.  – (பெருமையடிக்க - பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை)  எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான். 7:13. 



8. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிவஸ்தக்பர ஃஅன்ஹாா

وَاسْتَكْبَرُوْا عَنْهَاۤ


அதைப் புறக்கணிப்போரே (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்களோ- -புறக்கணித்து கர்வம் கொள்கிறார்களோ - ஏற்காமல் ஆணவம் கொண்டார்களோ-(ஏற்பதை) விட்டும் கர்வமும் கொண்டார்களே அவர்கள்)  நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். 7:36. 



9. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிஅதை வஸ்தக்பர ஃஅன்ஹாா


وَاسْتَكْبَرُوْا عَنْهَا


புறக்கணிப்போருக்கு ((அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ- அதனைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ - அவற்றைப் புறக்கணித்து ஆணவம் கொண்டார்களோ- அவற்றைப் புறக்கணித்து ஆணவம் கொண்டார்களோ) வானத்தின்507 வாசல்கள் திறக்கப்பட மாட்டாது.177 ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம். 7:40. 


10. தடுப்புச் சுவர் மேல் இருப்போர், (நரகிலுள்ள) சிலரை அழைப்பார்கள். அவர்களது அடையாளத்தைக் கொண்டு அவர்களை அ4றிந்து கொள்வார்கள். "உங்களுடைய ஆள் பலமும்நீங்கள் ஸ்தக்பிரூன

تَسْتَكْبِرُوْنَ

பெருமையடித்துக் கொண்டிருந்ததும்  (பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், - எவைகளைக் கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களோ- பெரிதாகக் கருதி வந்த சாதனங்களும்) உங்களைக் காப்பாற்றவில்லை7:48,. 


11. "ஸாலிஹ் தமது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் தான் என்பதை அறிவீர்களா?'' என்று அவரது சமுதாயத்தில் னஸ்தக்பரூ

نَ اسْتَكْبَرُوْا 

கர்வம் பிடித்த (பெருமையடித்துக் கொண்டிருந்த -கர்வம் கொண்டிருந்த- ஆணவம் மிகுந்த தலைவர்கள் - கர்வங்கொண்டிருந்த பிரதானிகள்) பிரமுகர்கள் அவர்களில் நம்பிக்கை கொண்ட பலவீனர்களிடம் (கிண்டலாக) கேட்டனர். அதற்கு, (பலவீனர்கள்) "அவரிடம் கொடுத்து அனுப்பப்பட்ட செய்தியை நாங்கள் நம்புகிறோம்'' என்று கூறினர். 7:75. 



12. "நீங்கள் நம்புவதை நாங்கள் மறுக்கிறோம்'' என்று னஸ்தக்பரூ

نَ اسْتَكْبَرُوْۤا


கர்வம் பிடித்தவர்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள்: கர்வம்கொண்ட அவர்கள்- ஆணவக்காரர்கள், - கர்வங்கொண்டிருந்தார்களே அவர்கள்)  கூறினர். 7:76. 


13. "ஷுஐபே! உம்மையும்உம்முடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்துக்குத் திரும்ப வேண்டும்'' என்று அவரது சமுதாயத்தில் னஸ்தக்பரூ
نَ اسْتَكْبَرُوْا



கர்வம் கொண்ட (பெருமை அடித்துக் கொண்டிருந்த – கர்வம்கொண்ட - ஆணவம் மிகுந்த தலைவர்கள் - கர்வங் கொண்டிருந்தார்களே அந்தப்பிரதானிகள்,பிரமுகர்கள் கூறினர். (அதற்கு ஷுஐப்) "நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுத்தாலுமா?'' என்று கேட்டார். 7:88



14. எனவே அவர்களுக்கு எதிராக வெள்ளப்பெருக்குவெட்டுக்கிளிபேன்தவளைகள்இரத்தம் ஆகிய தெளிவான சான்றுகளை அனுப்பினோம். அவர்கள் Fபஸ்தக்பரூ

فَاسْتَكْبَرُوْا

ஆணவம் கொண்டனர். (பெருமையடித்து கர்வம்கொண்டு -ஆணவம் கொண்டு) குற்றம் புரிந்த கூட்டமாகவே இருந்தனர். 7:133. 



15. நியாயமின்றி பூமியில் யதகப்பரூன

يَتَكَبَّرُوْنَ

கர்வம் கொண்டிருப்பவர்களை (பெருமையடித்து நடப்பவர்களை,- கர்வம் கொண்டலைபவர்கள்- பெருமை கொள்பவர்(களின்-கர்வங்கொண்டிருப்போரை,)  எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழிகேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும்அவற்றை அலட்சியப்படுத்தியதும் இதற்குக் காரணம். 7:146. 


16. உமது இறைவனிடம் இருப்போர் (வானவர்கள்) அவனுக்கு அடிமைத்தனம் செய்வதை லாயஸ்தக்பரூன


 لَا يَسْتَكْبِرُوْنَ


புறக்கணிக்க மாட்டார்கள். (பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. - இறுமாப்பு கொண்டு அவனை வணங்காதிருப்பதில்லை. வணங்காமல் புறக்கணித்துத் தற்பெருமை கொள்வதில்லை. -இறுமாப்புக் கொள்ள மாட்டார்கள்,) அவனைத் துதிக்கின்றனர். அவனுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர்.396. 7:206. 



17. தமது இல்லங்களிலிருந்து பதரன் 
 بَطَرًا

பெருமைக்காகவும், (திமிராகவும் –இறுமாப்புடனும்)  மக்களுக்குக் காட்டவும் புறப்பட்டோரைப் போன்றும்அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்தவர்களைப் போன்றும் ஆகி விடாதீர்கள்! அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் முழுமையாக அறிபவன். 8:47. 



18.அவர்களுக்குப் பின்னர் மூஸாவையும்ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும்அவனது சபையோரிடமும் நமது சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்கள் Fபஸ்தக்பரூ 

 فَاسْتَكْبَرُوْا


ஆணவம் கொண்டனர். (கர்வம்கொண்டு -தற்பெருமை கொண்டதோடு) குற்றம் செய்த கூட்டமாக இருந்தனர். 10:75. 



19 "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்புவதற்காகவும்இப்பூமியில் உங்கள் இருவருக்கும் கிப்ரியாஃஉ

الْكِبْرِيَآءُ


பெருமை  கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் (பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்குமா -பெரியவர்களாகி விடவுமா-மேலாதிக்கம் நிலை நாட்டப்பட வேண்டும்(தலைமைத்தனம்) ஆகிவிடவேண்டுமென்பதற்குமா) எங்களிடம் வந்திருக்கிறீராநாங்கள் உங்கள் இருவரையும் நம்புவோர் அல்லர்'' என்று அவர்கள் கூறினர் 10:78. 




20. அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின் இன்பத்தை நாம் அனுபவிக்கச் செய்தால் "என்னை விட்டும் தீங்குகள் அகன்று விட்டன'' என்று கூறுகிறான். அவன் பெருமிதமும்Fபஃகூருன்


 فَخُوْرٌۙ‏

கர்வமும் (பெருமையும்- அகந்தை) கொள்கிறான். (துன்பங்களை) சகித்துக் கொண்டு நல்லறங்கள் புரிவோரைத் தவிர. அவர்களுக்கே மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.26 11:10,

21. அனைவரும் அல்லாஹ்வின் முன்னே நிற்பார்கள். "உங்களையே நாங்கள் பின்பற்றினோம். எனவே அல்லாஹ்வின் வேதனையிலிருந்து சிறிதளவேனும் எங்களைக் காப்பாற்றுவீர்களா?'' என்று  நஸ்தக்பரூ

نَ اسْتَكْبَرُوْۤا

கர்வம் (பெருமை அடித்துக்-பெரிய மனிதர்களாய்க்’ கருதிக்) கொண்டிருந்தோரிடம் பலவீனர்கள் கேட்பார்கள். அதற்கவர்கள் "அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டியிருந்தால் உங்களுக்கு வழிகாட்டியிருப்போம். நாம் இங்கு துடிப்பதும்சகிப்பதும் நம்மைப் பொறுத்த வரை சமமானதே. நமக்கு எந்தப் போக்கிடமும் இல்லை'' என்று கூறுவார்கள். 14:21. 


22. உங்கள் இறைவன் ஒரே இறைவனே. மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் (இதை) மறுக்கின்றன. அவர்கள் முஸ்தக்பிரூன

 مُّسْتَكْبِرُوْنَ‏

பெருமையடிப்பவர்கள். (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள்.- மிகக் கர்வம்கொண்டு-தற்பெருமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.) 16:22. 


23. அவர்கள் மறைப்பதையும்வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் அறிவான் என்பதில் சந்தேகம் இல்லை. முஸ்தக்பிரீன

 الْمُسْتَكْبِرِيْنَ‏
பெருமையடிப்போரை (கர்வம் கொண்ட-அகந்தை கொள்வோரை ) அவன் விரும்ப மாட்டான். 16:23. 


24. "நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அதில் நிரந்தரமாகத் தங்குவீர்கள்.'' (என்று கூறப்படும்) முதகப்பிரீன 

 الْمُتَكَبِّرِيْنَ‏ 
பெருமையடித்தோரின் (ஆணவம் கொண்டவர்களின் ) தங்குமிடம் மிகவும் கெட்டது. 16:29. 


25. வானங்களில்507 உள்ளவையும்பூமியில் உள்ள உயிரினங்களும்வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் லா யஸ்தக்பிரூன

 لَا يَسْتَكْبِرُوْنَ‏
பெருமையடிக்க மாட்டார்கள். (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பதில்லை.- 16:49. 


26."பூமியில் இரண்டு தடவை குழப்பம் செய்வீர்கள்! பெருமளவுக்கு ஃஉலுவ்வன்

 عُلُوًّا

ஆணவம் கொள்வீர்கள்!'' (ஆணவத்துடன்பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக-கர்வம் கொண்டு அநியாயம் செய்)வீர்கள்!- பெரிதும் அக்கிரமம் புரிவீர்கள்’  (அகம்பாவத்துடன் அக்கிரமங்கள் செய்து) பெரும் உயர்வாக உயர்வீர்கள்) என்று இஸ்ராயீலின் மக்களுக்கு அவ்வேதத்தில் அறிவித்தோம். 17:4. 


27. பூமியில் மரஃஹா
مَرَحًا‌
கர்வத்துடன் (பெருமையாய் செருக்காக) நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்துமலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்!26617:37



28. மனிதனுக்கு நாம் அருட்கொடையை வழங்கும்போது நம்மைப்  அஃரழ 
اَعْرَضَ

புறக்கணித்துதொலைவில் செல்கிறான். பெருமை கொள்கிறான்;- அகந்தையுடன் நடந்து கொள்கிறான்;- அவனுக்குத் தீங்கு ஏற்படும்போது நம்பிக்கை இழந்தவனாகிறான். 17:83. 



29. "சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் கப்பிர்ஹு தக்பீரா
كَبِّرْهُ تَكْبِيْرًا‏

பெருமைப்படுத்துவீராக! (பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. - மிக மிகப் பெருமைப்படுத்திக் கூறுங்கள்.- எடுத்துரைப்பீராகஅவனுடைய பரிபூரணமான பெருமையை!- 17:111. 


30. தமது பெற்றோருக்கு நன்மை செய்பவராகவும் அவர் இருந்தார். பாவம் செய்பவராகவோஜப்பாரன் 
 جَبَّارًا 
அடக்குமுறை செய்பவராகவோ (அடக்கி ஆள்பவராகவோ- பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ-மாறு செய்பவராகவோ முரடராகவோ - அவர் இருக்கவில்லை. 2619:14. 



31. என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும்ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான்.278 என்னை துர்பாக்கியசாலியாகவும் ஜப்பாரன் 

جَبَّارًا

அடக்குமுறை செய்பவனாகவும் (பெருமைக்காரனாக –முரடனாக) அவன் ஆக்கவில்லை. 2619: 32.  


32. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அவனிடத்தில் இருப்போர் அவனது வணக்கத்தை விட்டும் லா யஸ்தக்பிரூன

 لَا يَسْتَكْبِرُوْنَ 

பெருமையடிக்க மாட்டார்கள். (அடிபணிய மறுப்பதில்லை- IFT) சோர்வடையவும் மாட்டார்கள். 21:19. தனது கழுத்தைத் திருப்பிக் கொள்கிறான். (வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு-பிறழச் செய்ய வேண்டும்-வழி கெடுப்பதற்காகதிருப்பிவிடும் பொருட்டு தன் கழுத்தை திருப்பியவர்களாக (கர்வம் கொண்டு அவனுக்கு இவ்வுலகில் இழிவு உண்டு. கியாமத் நாளில்1 சுட்டெரிக்கும் வேதனையை அவனுக்குச் சுவைக்கச் செய்வோம். 22:9. 



33. அல்லாஹ்வின் பாதையை விட்டும் (தொலைந்து 
போக வேண்டும் - 
இழக்கப்பட  வேண்டும்) வழிகெடுப்பதற்காக லியுழில்ல
 لِيُضِلَّ

தனது கழுத்தைத் திருப்பிக் கொள்கிறான். (வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு-பிறழச் செய்ய வேண்டும்-வழி கெடுப்பதற்காகதிருப்பிவிடும் பொருட்டு தன் கழுத்தை திருப்பியவர்களாக (கர்வம் கொண்டு அவனுக்கு இவ்வுலகில் இழிவு உண்டு. கியாமத் நாளில்1 சுட்டெரிக்கும் வேதனையை அவனுக்குச் சுவைக்கச் செய்வோம். 22:9. 


34. அவற்றின் மாமிசங்களோஅவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.292 அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் லிதுகப்பரூ

 لِتُكَبِّرُوا

பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக! 22:37.  



35. அவர்கள் Fபஸ்தக்பரூ

 فَاسْتَكْبَرُوْا 


பெருமையடித்தனர். அவர்கள் ஃஆலீ(ன)ன்

عٰلِيْنَ‌
ஆதிக்கம் செலுத்தும் கூட்டமாக இருந்தனர் 

ஆணவங்கொண்டு பெருமையடிக்கும் சமூகத்தாராக இருந்தார்கள்(ஜான்)

கர்வம்கொண்டு பெருமை அடிக்கும் மக்களாக இருந்தார்கள்.( அப்துல் ஹமீது பாகவி)

பெரும் செருக்குடன் நடந்து கொண்டனர். மேலும்ஆணவம் கொண்ட மக்களாகவும் இருந்தனர். (IFT)

அவர்கள் கர்வங்கொண்டு (தங்களை) உயர்வாகக் கருதும் சமூகத்தவராக இருந்தார்கள்.  (சவூதி) 2623: 46


36. முஸ்தக்பிரீன

مُسْتَكْبِرِيْنَ ‌ۖ


ஆணவம் கொண்டு (ஆணவங் கொண்டவர்களாக-கர்வங்கொண்டு-இறுமாப்புக் கொண்டவர்களாய்-ர்வங்கொண்டவர்களாக) இரவு நேரங்களில் அதைக் குறை கூறிக் கொண்டு இருந்தீர்கள். 23:67. 






37."நம்மிடம் வானவர்கள் இறக்கப்பட வேண்டாமாஅல்லது நமது இறைவனை நாம் நேரில் பார்க்க வேண்டாமா?'' என்று நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். அவர்கள் தங்களைப் பற்றி அஸ்தக்பரூ

 اسْتَكْبَرُوْا

பெருமையடிக்கின்றனர் (தங்களை மிக மிகப் பெரிதாக எண்ணி ஆணவம் கொண்டு -.இவர்கள் தங்கள் மனங்களில் திட்டமாக தங்களைப் பெரிதாக எண்ணிக் கொண்டனர்,) மிகப் பெரிய அளவில் வரம்பு மீறி விட்டனர்.2125:21. 





38. Fபாரிஹீ(ன)ன்

 فٰرِهِيْنَ‌ۚ‏

மிகத் திறமையுடன் (ஆணவம் கொண்டவர்களாக மிக்க ஆனந்தமாக-பெருமை கொண்டவர்களாய்) மலைகளை வீடுகளாகக் குடைகிறீர்கள்! 26:149. 




39. அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும்ஃஉலுவ்வன்

عُلُوًّا‌

ஆணவமாகவும் (பெருமை கொண்டவர்களாகவும்- கர்வம் கொண்டு ஆணவத்தினாலும்தான்-அகம்பாவத்தாலும்) மறுத்தனர். "குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?'' என்று கவனிப்பீராக! 27:14





40. தஃலுா

 تَعْلُوْا

என்னை மிகைக்க நினைக்காதீர்கள். (என்னிடம் பெருமையடிக்காதீர்கள்.(கர்வம் கொண்டு) என்னிடம் பெருமை பாராட்டாதீர்கள்.- ஆணவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள்.- பெருமை பாராட்டாதீர்கள்,) கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்! (என்று அதில் உள்ளது.)26 27:31. 


41.ஃபிர்அவ்ன் பூமியில் ஃஅலா

 عَلَ

ஆணவம் கொண்டிருந்தான். (மிகவும் பெருமையடித்துக் கொண்டு) அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான். 28:4. 



42. அவனும்அவனது படையினரும் நியாயமின்றி பூமியில் வஸ்தக்பர
 وَاسْتَكْبَرَ

பெருமையடித்தனர்.( தற்பெருமை கொண்டனர்.) நம்மிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் எனவும் நினைத்தனர். 28:39. 








43.காரூன்மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமைமிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். லாதFப்ரஃஹ்

 لَا تَفْرَحْ‌

"மமதை கொள்ளாதே! 


இன்னல்லாஹ லா யுஃஹிப்புல் Fபரிஃஹீ(ன)ன

 اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْفَرِحِيْنَ‏


மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக! 28:76. 

பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ்நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான் ( முஹம்மது ஜான்)

"நீ மகிழ்வடைந்துவிடாதே! (பெருமை கொண்டு) மகிழ்வடைபவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை"  (அப்துல் ஹமீது பாகவி )

பூமியில் அராஜகம் விளைவிக்க முயற்சி செய்யாதே! அராஜகம் விளைவிப்பவர்களைத் திண்ணமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (IFT)

குழப்பத்தையும் தேடாதே! (ஏனென்றால்)குழப்பம் செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்பமாட்டான் (சவூதி) 28:76. 



நீ மகிழ்ச்சியடைய வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் மகிழ்பவர்களை நேசிக்க மாட்டான். (ஷாஹுல் ஹமீது அன்சன்ஸ்) 28:76. 


44.பூமியில் ஃஉலுவ்வன்

 عُلُوًّا
ஆணவத்தையும், (பெருமைப்படுத்திக் கொள்ளவும்,அகம்பாவத்தையும்,குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே. 28:83. 


45.காரூன்ஃபிர்அவ்ன்ஹாமான் ஆகியோரையும் அழித்தோம். அவர்களிடம் மூஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர்கள் பூமியில் Fபஸ்தக்பரூ

 فَاسْتَكْبَرُوْا

அகந்தை கொண்டனர். (பெருமையடித்து நின்றார்கள். தாங்களே மேலானவர்கள் என இறுமாப்புக் கொண்டார்கள்.) அவர்கள் வெல்வோராக இருக்கவில்லை. 29:39.  


46. அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் முஸ்தக்பிரன்

 مُسْتَكْبِرًا


அகந்தை (பெருமை-கர்வம்-தற்பெருமை-) கொண்டவனாகவும்அதைச் செவியுறாதவனைப் போலவும்தனது காதுகளில் அடைப்பு உள்ளது போலவும் புறக்கணிக்கிறான். அவனுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக! 31:7. 




47.. மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் 
மரஃஹா
 مَرَحًا 

கர்வமாக நடக்காதே! 

முஃக்தாலின்
 مُخْتَالٍ
செருக்கு மிக்க 
Fபஃகூரின்
 فَخُوْرٍۚ‏

கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். 31:18

பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர்ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (ஜான்)


பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (பாகவி )

பூமியில் செருக்காய் நடக்காதே! அகந்தையும் ஆணவமும் கொண்ட எவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (IFT)

பூமியில் கர்வமாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ்தற்பெருமைக்காரர்கர்வங்கொண்டோர் ஒவ்வொருவரையும் நேசிக்கமாட்டான்.  (சவூதி) 31:18


48. நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும்போது ஸஜ்தாவில் விழுவோரும்தமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவோரும்லா யஸ்தக்பிரூன

 لَا يَسْتَكْبِرُوْنَ


பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றை நம்புபவர்கள். 32:15. 



49 "இந்தக் குர்ஆனையும்இதற்கு முன் சென்றதையும்நம்பவே மாட்டோம்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். அநீதி இழைத்தோர் தமது இறைவனிடம் நிறுத்தப்பட்டிருக்கும்போது நீர் பார்ப்பீராயின் அவர்களில் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சுமத்துவார்கள். "நீங்கள் இல்லாதிருந்தால் நாங்களும் நம்பிக்கை கொண்டிருப்போம்'' என்று பலவீனமாக இருந்தோர்
 اسْتَكْبَرُوْ

பெருமையடித்துக் கொண்டிருந்தோரிடம் (பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை -  கர்வம் கொண்ட வர்களை ­தங்களைப் பெரியவர்களாய்க் கருதிக்கொண்டிருந்தவர்களை நோக்கி, -)கூறுவார்கள். 34:31. 



50."நேர்வழி உங்களிடம் வந்தபோது நாங்கள் தான் உங்களைத் தடுத்தோமாஇல்லை. மாறாக நீங்களே குற்றவாளிகளாக இருந்தீர்கள்'' என்று அஸ்தக்பரூ

 اسْتَكْبَرُوْا


பெருமையடித்தோர் (பெருமை தேடிக் கொண்டிருந்தவர்கள்,- கர்வம் கொண்டிருந்தவர்கள்- பெரியவர்களாய்க் காட்டிக்கொண்டிருந்தவர்கள்-பெருமையடித்துக்கொண்டிருந்தவர்கள்) பலவீனர்களிடம் கூறுவார்கள். 34:32. 

51 "அல்லாஹ்வை மறுக்குமாறும்அவனுக்கு இணையானவர்களைக் கற்பனை செய்யுமாறும் எங்களுக்கு நீங்கள் கட்டளையிட்டபோது இரவிலும்பகலிலும் செய்த சூழ்ச்சி தான் (எங்களை வழிகெடுத்து விட்டது)'' என்று அஸ்தக்பரூ

 اسْتَكْبَرُوْا

பெருமையடித்தோரை (பெருமை தேடிக் கொண்டவர்களிடம்,கர்வம் கொண்டிருந்தவர்களை- பெரியவர்களாய்க் காட்டிக் கொண்டிருந்தவர்களிடம் - பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களிடம்,) நோக்கி பலவீனர்கள் கூறுவார்கள். வேதனையை அவர்கள் காணும்போது கவலையை மனதுக்குள் மறைத்துக் கொள்வார்கள். (நம்மை) மறுப்போரின் கழுத்துக்களில் விலங்கிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) அவர்கள் தண்டிக்கப்படுவார்களா? 34:33. 


52.தங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்தால் எந்த ஒரு சமுதாயத்தையும் விட தாங்கள் நேர்வழி பெற்றோராக ஆவோம் என அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தார்கள். அவர்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்தபோது அது அவர்களுக்கு வெறுப்பையும்பூமியில் நிஸ்திக்பாரன்

 اۨسْتِكْبَارًا


பெருமையடிப்பதையும், (கர்வம்கொண்டு- அதிகம் இறுமாப்புக் கொள்ளவும்,-) கெட்ட சூழ்ச்சியையும் தவிர (வேறு எதையும்) அதிகமாக்கவில்லை. கெட்ட சூழ்ச்சி அதைச் செய்தோரையே சூழ்ந்து கொள்ளும். முன்னோர்களின் கதியைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கிறார்களாஅல்லாஹ்வின் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் காணமாட்டீர்! அல்லாஹ்வின் நடைமுறையில் எந்தத் திருப்பத்தையும் காணமாட்டீர்.2635:42, 43. 


53. "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் ஸ்தக்பிரூன


 يَسْتَكْبِرُوْنَۙ‏


பெருமையடிப்போராக (பெருமையடித்தவர்களாக கர்வம் கொண்டு,- தற்பெருமை கொண்டார்கள்; அவர்கள் இருந்தனர். 37:35. 




54. (ஏகஇறைவனை) மறுத்தோர் Fபீ ஃஇZஸ்ஸதி(ன்)வ் வ ஷிஃகா(கின்)ஃக்

 فِىْ عِزَّةٍ وَّشِقَاقٍ‏

கர்வத்திலும்முரண்பாட்டிலும் உள்ளனர். 38:2.  

மகிமையிலும் கஷ்டத்திலும் 

பெருமையிலும்மாறுபாட்டிலும் (ஆழ்ந்து) கிடக்கின்றனர். (ஜான்)

பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் (மூழ்கி) இருக்கின்றனர்.( பாகவி )

பெரும் ஆணவத்திலும்பிடிவாதத்திலும் உழன்று கொண்டு இருக்கின்றார்கள். (IFT)

பெருமையிலும்முரண்பாட்டிலும் (மூழ்கி) இருக்கின்றனர். (சவூதி)38:2. 



55.இப்லீஸைத்509 தவிர வானவர் அனைவரும் பணிந்தனர். அவன் இஸ்தக்பர

 اِسْتَكْبَرَ
அகந்தை கொண்டான். (பெருமை அடித்தவனாக கர்வம்கொண்டு - தன்னைப் பெரியவனென்று கருதி கர்வம் கொண்டான்) (ஏகஇறைவனை) மறுப்போரில் ஆனான்.2638:74.


56. "இப்லீஸே! எனது இரு கைகளால்488 நான் படைத்தவருக்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்ததுஸ்தக்பர்த

 اَسْتَكْبَرْتَ

அகந்தை கொண்டு விட்டாயா? (பெருமையடிக்கிறாயா?உன்னை மிகப் பெரியவனாக மதித்துக் கொண்டாயா?- நீ கர்வம் கொண்டு விட்டாயா?  மினல் ஃஆலீ(ன)ன்

 مِنَ الْعَالِيْنَ‏

அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' (மிக உயர்ந்தவர்களிமிருந்து- உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” - உயர்ந்த பதவியுடையவனாகி விட்டாயா?"நீ உயர் அந்தஸ்து உடையவர்களுள் ஒருவனாகி விட்டாயா?” -என்று (இறைவன்) கேட்டான். 38:75. 


57."மாறாகஉன்னிடம் எனது வசனங்கள் வந்தன. அவற்றை நீ பொய்யெனக் கருதினாய். வஸ்தக்பர்த

وَاسْتَكْبَرْتَ


ஆணவம் கொண்டாய். (பெருமையடித்தாய்;- கர்வம் கொண்டாய்;- தற்பெருமை கொண்டாய்;) (என்னை) மறுப்பவனாக இருந்தாய்'' (எனக் கூறப்படும்.) 39:59. 


58. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோரின் முகங்களைக் கருப்பாக கியாமத் நாளில்1 காண்பீர்! லில் முதகப்பிரீன

 لِلْمُتَكَبِّرِينَِ

ஆணவம் கொண்டோருக்கு (பெருமையடித்துக் கொண்டிருந்த - கர்வம் கொண்ட – பெருமையடித்தவர்களுக்கு - கர்வங்கொண்டிருந்தவர்களுக்கு) நரகத்தில் தங்குமிடம்     இல்லையா39:60. 


59. "நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள்!'' என்று கூறப்படும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல்முதகப்பிரீன 

 الْمُتَكَبِّرِيْنَ‏

பெருமையடித்தோரின் (பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய-கர்வம்கொண்ட இவர்கள்) தங்குமிடம் மிகவும் கெட்டது. 39:72. 



60. "விசாரிக்கப்படும் நாளைநம்பாத ஒவ்வொரு முதகப்பிரின்
 مُتَكَبِّرٍ  

அகந்தை கொண்டவனை (பெருமையடிக்கும்-கர்வம்கொண்ட-ஆணவக்காரர்களை) விட்டும் உங்கள் இறைவனிடமும்எனது இறைவனிடமும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று மூஸா கூறினார். 40:27. 


61. அவர்கள் தங்களுக்கு எந்தச் சான்றும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர். அல்லாஹ்விடமும்நம்பிக்கை கொண்டோரிடமும் இது பெரும் கோபத்தை ஏற்படுத்துவதாகும். இவ்வாறே
முதகப்பிரின் ஜப்பாரின்

  مُتَكَبِّرٍ جَبَّارٍ‏

பெருமையடித்து அடக்கியாளும் (பெருமையடித்து ஆணவம் கொள்ளும்- பெருமை கொள்ளும் வம்பர்களின்-ஆணவக்காரனுடையவும் கொடுங்கோலனுடையவும்-பெருமைகொண்டவம்பு செய்கின்றஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான். 40:35. 


62. நரகத்தில் அவர்கள் தர்க்கம் செய்து கொள்ளும்போது "உங்களைத் தானே நாங்கள் பின்பற்றிக் கொண்டிருந்தோம். எனவே நரகத்திலிருந்து சிறிதளவை எங்களை விட்டும் தடுப்பவர்களாக இருக்கிறீர்களா?'' என்று பலவீனர்கள் அஸ்தக்பரூ
 اسْتَكْبَرُوْۤا 

பெருமையடித்தோரை (பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களிடம், -பெருமை அடித்துக் கொண்டிருந்தோரை -பெரியவர்கள் போல் காட்டிக் கொண்டவர்களை) நோக்கிக் கேட்பார்கள். 40:47. 


63. "நாம் அனைவருமே இதில் தானே இருக்கிறோம். அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பு அளித்து விட்டானே'' என்று அஸ்தக்பரூ

 اسْتَكْبَرُوْۤا

பெருமையடித்தோர் (பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்கள்  - பெருமையடித்துக் கொண்டிருந்த அ(வர்களுடைய தலை)வர்கள், பெரியவர்கள் போல் காட்டிக் கொண்டிருந்தவர்கள்- அவர்களுடைய தலைவர்களான) பெருமையடித்துக் கொண்டிருந்தோர்) கூறுவார்கள். 40:48. 


64. தங்களுக்குச் சான்று கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்வோரின் உள்ளங்களில் இல்லா கிபுருன்

 اِلَّا كِبْرٌ


பெருமை தவிர வேறில்லை. அதற்கு அவர்கள் தகுதி படைத்தோர் இல்லை. அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்;488 பார்ப்பவன்488.40:56

65. "என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்;49 எனது வணக்கத்தை விட்டும் யஸ்தக்பிரூன

 يَسْتَكْبِرُوْنَ 

(தற்பெருமை பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.340:60. 







66.நீங்கள் பூமியில் நியாயமின்றி தFப்ரஹுன
 تَفْرَحُوْنَ


பெருமிதம் கொண்டதும்தம்ரஹஹுன
 تَمْرَحُوْنَ‌
இறுமாப்பு கொண்டதுமே இதற்குக் காரணம். 40:75. 

(பெருமையடித்து) மகிழ்ந்து பூரித்துக் கொண்டிருந்தீர்களே (அதற்கான தண்டனையாகும்). (ஜான்)

அளவுகடந்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்ததாலும்இறுமாப்போடு இருந்ததாலும் இதுவே உங்களுக்கு (தகுமான கூலியாகும்)" (பாகவி)

உண்மைக்கு மாற்றமானதைக் கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தீர்கள்பூரிப்பில் இறுமாந்து கொண்டும் இருந்தீர்கள். (IFT)

(அளவு கடந்து) மகிழ்ச்சியடைந்தவர்களாக இருந்ததன் காரணமாகவும்இறுமாப்புக் கொண்டவர்களாக இருந்ததன் காரணத்தினாலுமாகும்  (சவூதி)40:75. 



67. நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். அல் முதகப்பிரீன

 الْمُتَكَبِّرِيْنَ‏


ஆணவம் கொண்டோரின் (பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் கர்வம் கொண்ட இவர்கள் -அகங்காரம் கொண்டவர்களின்) தங்குமிடம் மிகவும் கெட்டது 40:76

68. ஆது சமுதாயம் பூமியில் நியாயமின்றி Fபஸ்தக்பரூ

فَاسْتَكْبَرُوْا 

ஆணவம் கொண்டனர். (பெருமையடித்துக் கொண்டு-பெருமைகொண்டு) "எங்களை விட வலிமை மிக்கவர் யார்?'' எனக் கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட வலிமையானவன் என்பதை அவர்கள் காணவில்லையாஅவர்கள் நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர். 41:15


69. அவர்கள் அஸ்தக்பரூ

اسْتَكْبَرُوْا


பெருமையடித்தால், (பெருமையடித்தவர்களாக - கர்வம் கொண்டு) உமது இறைவனிடம் இருப்போர் இரவிலும்பகலிலும் அவனைத் துதிக்கின்றனர். அவர்கள் சோர்வடைய மாட்டார்கள்41:38. 






70. ஃபிர்அவ்ன் ஃஆலிய்யன்

عَالِيًا 

ஆணவம் கொண்டு வரம்பு மீறியவனாக இருந்தான்.26 44: 31.
ஆணவம் கொண்டவனாகவரம்பு மீறியவனாக இருந்தான். – ஜான்
வரம்பு மீ(றித் துன்பு)று(த்து)பவனாகவும்மாறு செய்பவனாகவுமே இருந்தான்.பாகவி
வரம்பு மீறுவோரில் அனைவரையும்விட மிகக் கொடியவனாக இருந்தான். – IFT

அவன் (அடக்கி ஆளுதல்ஆணவம் கொள்ளுதல் ஆகியவற்றில்) உயர்ந்தவனாக (நிராகரிப்பில்) வரம்பு மீறியவர்களில் (உள்ளவனாக) இருந்தான். சவூதி 44: 31.



71.தன் மீது கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களைச் செவியுறுகிறான். பின்னர் அதைக் கேட்காதவனைப் போல் முஸ்தக்பிரன்

مُسْتَكْبِرًا


அகந்தை கொண்டவனாகப் (பெருமையடித்துக் கொண்டு –கர்வம்கொண்டு- முழு ஆணவத்துடன்)  பிடிவாதம் பிடிக்கிறான். துன்புறுத்தும் வேதனையை அவனுக்கு எச்சரிப்பீராக! 45:8. 


72. (ஏகஇறைவனை) மறுப்போரிடம் "எனது வசனங்கள் உங்களுக்குக் கூறப்படவில்லையாFபஸ்தக்பர்தும்

فَاسْتَكْبَرْتُمْ



அகந்தை கொண்டீர்கள்! (பெருமையடித்துக் கொண்டு – பெருமைகொண்டு - பெருமையடித்தீர்கள்.- பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்,) குற்றம் புரிந்த கூட்டமாக இருந்தீர்கள்'' (எனக் கூறப்படும்).. 45:31. 



73. வானங்களிலும்,507 பூமியிலும் அல் கிப்ரியாஃஉ
 الْكِبْرِيَآءُ  


பெருமை அவனுக்கே உரியது. (எல்லா பெருமைகளும் அவனுக்கே சொந்தமானவை. -) அவன் மிகைத்தவன்ஞானமிக்கவன். 45:37. 



74. ''இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்துஇஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு சாட்சி கூறி நம்பிக்கையும் கொண்ட நிலையில் நீங்கள் (இதை) மறுத்து வஸ்தக்பர்தும்

 وَاسْتَكْبَرْتُمْ‌


அகந்தை கொண்டால் (பெருமை அடித்துக் கொண்டால் – பெருமைகொண்டு – ஆணவத்திலேயே -பெருமையும் அடித்துக் கொண்டீர்கள்) (என்னவாகும் என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்!'' என (முஹம்மதே!) கேட்பீராக! அநீதி இழைக்கும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். 46:10. 



75. (ஏகஇறைவனை) மறுத்தோர் நரகத்தின் முன்னே கொண்டு செல்லப்படும் நாளில்1 "உங்கள் உலக வாழ்க்கையில் உங்கள் நன்மைகளை நீங்களே அழித்து விட்டீர்கள். அதிலேயே இன்பம் கண்டீர்கள். நியாயமின்றி பூமியில் நீங்கள் தஸ்தக்பிரூன

 تَسْتَكْبِرُونَ



பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும்நீங்கள் குற்றம் புரிந்து கொண்டிருந்ததாலும் இன்று இழிவு தரும் வேதனையைப் பரிசாக வழங்கப்படுகின்றீர்கள்'' (என்று கூறப்படும்.) 46:20. 

76. நம்மிடையே இவருக்கு மட்டும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாஇல்லை. இவர் அஷி(ருன்)ர்

 اَشِرٌ 


கர்வம் கொண்ட (ஆணவம் பிடித்த - இறுமாப்புக் கொண்ட- பெரும் பொய்யர். (என்றனர்) 54:25. 



77. யார் அஷி(ருன்)ர்

اَشِرٌ 

கர்வம் கொண்ட (ஆணவம் பிடித்த-இறுமாப்புக் கொண்ட-தற்பெருமைக்கார) பெரும் பொய்யர் என்பதை நாளை அறிவார்கள். 54:26

78.. "விளையாட்டும்வீணும்கவர்ச்சியும்உங்களுக்கிடையே வதFபாஃகுருன்

 وَّتَفَاخُرٌۢ 


பெருமையடித்தலும், (பெருமையடித்துக் கொள்வதும்;- வீண்பெருமையும்), பொருட்செல்வத்தையும்மக்கட்செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.'' என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏகஇறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும்திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. 57:20


79. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும்அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்).289  முஃக்தாலின்

 مُخْتَالٍ


கர்வமும் (செருக்கும் கர்வங்கொண்டு -தம்மையே பெரிதாகநினைத்துக் கொள்கின்ற,   Fபஃகூ(ரி)ர்

 فَخُوْرِۙ‏

தற்பெருமையும் பெருமை பேசித்திரிகின்ற  -தற்பெருமையடிப்போர்) கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். 57:23. 



80. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) பேரரசன்தூயவன்.10 நிம்மதியளிப்பவன்அடைக்கலம் தருபவன்கண்காணிப்பவன்மிகைத்தவன்ஆதிக்கம் செலுத்துபவன்அல்முதகப்பிரு

 الْمُتَكَبِّرُ‌ؕ  


பெருமைக்குரியவன்.(பெருமைக்குரித்தானவன்) அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.1059:23. 


81. "வாருங்கள்! உங்களுக்காக அல்லாஹ்வின் தூதர் பாவமன்னிப்புத் தேடுவார்'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் தமது தலைகளைத் திருப்பிக் கொள்கின்றனர். மேலும் முஸ்தக்பிரூன

 مُّسْتَكْبِرُوْنَ‏

அகந்தை  (பெருமை- கர்வம்-ஆணவம்)  கொண்டு தடுப்போராக அவர்களைக் காண்பீர். 63:5. 


82. நீ அவர்களை மன்னிப்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் தமது விரல்களைத் தமது காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். தமது ஆடைகளால் மூடிக் கொள்கின்றனர். பிடிவாதம் பிடிக்கின்றனர். வஸ்தக்பரூஸ்திக்பா(ரன்)ரா

وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا‌ ۚ‏


அதிகம் அகந்தை கொள்கின்றனர். 71:7. 

பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள். – ஜான்
பெரும் அகங்காரம் கொண்டு,  -  பாகவி 
மிகவும் அகம்பாவம் கொண்டிருந்தார்கள்.- IFT)

பெரும் அகந்தையாகவும் அகந்தை கொண்டனர்.-  சவூதி


83. உமது இறைவனைப் Fபகப்பிர்
  فَكَبِّرْ


பெருமைப்படுத்துவீராக! (மேன்மையைப் பிரகடனப்படுத்துவீராக!) 74:3. 


84.பின்னர் புறக்கணித்து அஸ்தக்பர

اسْتَكْبَرَۙ‏


கர்வம் (தற்பெருமை – அகந்தை) கொண்டான்.   74:23. 


85. ஆம்! இது மஜீது(ன்)

 مَّجِيْدٌ


மகத்தான (பெருமை பொருந்திய உயர்மிக்க-அதிக மகத்துவம் மிக்கது;- கீர்த்திமிக்க) குர்ஆன்! 85:21. 












Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.