தா்ஜுமாவில் ததஜ அறிஞர் குழுவும்தான் சேர்ந்து விளையாடி மேல்தாவித் தனத்தைக் காட்டி உள்ளதோ?
பீ.ஜே. குர்ஆன் தமிழாக்கம் அவருடைய சொந்த அறிவு மட்டும் இல்லை...... என்ற தலைப்பில் இ.முஹம்மது பாரூக் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். நீக்கப்பட்ட ஆதார பக்கத்தையும் வெளியிட்டுள்ளார். ஆகவே தர்ஜுமாவில் விளையாடியுள்ளது சம்பந்தமான நமது கேள்விகளுக்கு ததஜ அறிஞர் குழுவினரிடம் பதிலை எதிர் நோக்குகிறோம்.
நிச்சயமாக வேறு எந்த மொழி பெயா்ப்புகளிலும் யாரும் சொல்லாத அளவுக்கு நிச்சயமாக பற்றி 3 வித விளக்கத்தை அழுத்தம் திருத்தமாக எழுதிவா்கள் யார்? இ.முஹம்மது பாரூக் கூறியுள்ள இந்த ததஜ அறிஞர் குழுவினர் தானே?
இன்றும் ததஜவில் உள்ள முன்பு வந்த முஸ்லிம் பெண்மணி மாத இதழ் ஆசிரியரும் இஸ்லாமிய கல்லுரியின் முன்னாள் பேராசிரியருமான மெளலவி எம். ஐ. சுலைமான்,
மேலப்பாளையம் அல் இர்ஷாத் மகளிர் கல்லுாரியின் முதல்வரும் ததஜ
மேலாண்மைக்குழு இப்போதைய தலைவருமான *மெலலவி எம். எஸ்.
சுலைமான்,
அனைத்து தவ்ஹீத் ஜமாத் கூட்டமைபிள் மாநில துணைத் தலைவராக இருந்த களஞ்சியம்
பெண்கள் கல்லுாரி *எஸ். கலீல்
ரஸுல்
கடையநல்லுர் இஸ்லாமிய கல்லுரியின் பேராசிரியர் *மவுலவி முகம்மது அலி ரஹ்மானி ஆகியவர்களின் கருத்தும்
அதில் உள்ளது. அதாவது அதில் உள்ள தவறுகளுக்கு இவர்களும் தான் பொறுப்பாளர்கள் என்று
இ.முஹம்மது பாரூக்கும் ததஜவினரும் ஒப்புக் கொண்டு ஆதாரம் வெளியிட்டுள்ளார்கள்.
அதற்கு முதலில் நன்றி
தெரிவித்துக் கொண்டு கேள்விக்கு வருகிறோம்.
ததஜ அறிஞர் குழுவின் (பீ.ஜை.)
தர்ஜுமாவில் இம்மொழிபெயர்ப்பு பற்றி என்ற தலைப்பு உள்ளது.
அதில் குர்ஆனிலிருந்து எதையெல்லாம் மொழிபெயர்க்காமல் தவிர்த்துள்ளார்கள். எதையெல்லாம் மாற்றி எழுதியுள்ளார்கள்
என்பது பற்றியெல்லாம் அவர்களே குறிப்பிட்டுள்ளதுடன் காரணமும் கூறியுள்ளார்கள்.
அதில் 1342
ஆம் பக்கம் 4வது பாராவில் அரபு மொழியில் கூறப்படும் வாக்கியங்களில் சுமார் சரிபாதி
வாக்கியங்களில் நிச்சயமாக என்பதைப் பயன்படுத்துவர். தமிழில் எதிரி நம்பவே மாட்டான்
என்ற சந்தர்ப்பத்தில் மட்டுமே அவ்வாறு பயன்படுத்துவோம். தமிழில் அவ்வாறு கூறும்
வழக்கம் இல்லாததாலும் சாதாரணமாகக் கூறுவதே நிச்சயத்தைத் தான் குறிக்கும்
என்பதாலும் "நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன்" என்பதை "அல்லாஹ்
மன்னிப்பவன்" என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம் என்று எழுதியிருந்தார்கள். இதோ
அந்த ஆதாரம்.
ததஜ அறிஞர் குழுவின் இந்த
மேல்தாவித் தனத்தைக் கண்டித்தும். முட்டாள் தனத்தை விமா்சித்தும் பல தலைப்புகளில் அடையாளம் காட்டி கேள்வி
கேட்டிருந்தோம்.
அதன் பிறகு ஆரம்ப வெளியீடுகளின் கடைசியில் இடம் பெற்றிருந்த
இம்மொழிபெயர்ப்பு பற்றி என்ற தலைப்பை முன் பக்கங்களுக்கு மாற்றினார்கள்.
அதில் 14ஆவது பக்கத்தில் 3ஆவது பாராவில் எப்படி திருத்தி எழுதியுள்ளார்கள்
என்பதை பாருங்கள்.
அரபு மொழியில் ஒரு கருத்தை வலியுறுத்தி சந்தேகத்திற்கு
இடமில்லாத வகையில் தெரிவிப்பதற்காக ”இன்ன“ அல்லது ”அன்ன” என்ற இடைச் சொல்லைப் பயன்படுத்துவார்கள். இது
போன்ற வழக்கு தமிழில் இல்லை.
நிச்சயமாக என்று சிலா் இதற்குத் தமிழாக்கம் செய்துள்ளனா்.
இது தவறாகும் என்று ததஜ அறிஞர் குழுவினர் எழுதியுள்ளார்கள்.
ஆரம்ப வெளியீடுகளை கையில் வைத்திருப்பவா்கள். 1342 ஆவது
பக்கத்தைப் பாருங்கள்.
1. அரபு மொழியில் கூறப்படும் வாக்கியங்களில் சுமார் சரிபாதி
வாக்கியங்களில் நிச்சயமாக என்பதைப் பயன்படுத்துவர் என்று எழுதி இருக்கும்.
இப்படி இட்டுக் கட்டி எழுதியவா்கள் யார்? இ.முஹம்மது பாரூக் கூறியுள்ள இந்த ததஜ அறிஞர் குழுவினர் தானே. இவர்களைத் தவிர வேறு யாராவது எந்த மொழி பெயா்ப்பிலாவது நிச்சயமாக பற்றி
இப்படி எழுதியுள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.
2. தமிழில் எதிரி நம்பவே மாட்டான் என்ற சந்தர்ப்பத்தில்
மட்டுமே அவ்வாறு பயன்படுத்துவோம். தமிழில் அவ்வாறு கூறும் வழக்கம் இல்லாததாலும்
சாதாரணமாகக் கூறுவதே நிச்சயத்தைத் தான் குறிக்கும் என்றும் இருக்கும்.
இப்படியும் இட்டுக் கட்டி எழுதியவா்கள் யார்? சாட்சாத் இ.முஹம்மது பாரூக் கூறியுள்ள இந்த ததஜ அறிஞர் குழுவினர் தானே.
3. சாதாரணமாகக் கூறுவதே நிச்சயத்தைத் தான் குறிக்கும் என்பதாலும் "நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன்" என்பதை "அல்லாஹ்
மன்னிப்பவன்" என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம் என்றும் இருக்கும்.
இப்படி எழுதியவா்கள் யார்? சாட்சாத் இந்த ததஜ அறிஞர் குழுவினர் தானே.
நிச்சயமாக வேறு
எந்த மொழி பெயா்ப்புகளிலும் யாரும் சொல்லாத அளவுக்கு நிச்சயமாக பற்றி
3 வித விளக்கத்தை அழுத்தம் திருத்தமாக எழுதிவா்கள் ததஜ அறிஞர் குழுவினர்தான்.
“இன்ன”
“அன்ன” என்பதற்கு நிச்சயமாக என்று
அழுத்தமாக தமிழாக்கம் செய்தவா்கள் ததஜ அறிஞர் குழுவினர் தான்.
மக்கள் மறதியை பயன்படுத்தி தாங்கள்
செய்த தவறை மறைக்கும் வேலையை செய்துள்ளார்கள். இ.முஹம்மது பாரூக் அடையாளம் காட்டி விட்டார்.
நிச்சயமாக
என்று சிலா் இதற்குத் தமிழாக்கம் செய்துள்ளனா். இது தவறாகும் என்று எழுதி பிறா் மீது பழி சுமத்தியுள்ளார்கள் ததஜ
அறிஞர் குழுவினர். இது மாதிரிதான் பல சம்பவங்கள் உள்ளன.
தாங்கள் செய்த மாபாதகச் செயல்களை மறைப்பார்கள். அதற்காக பிறா் மீது மாபாதகச் செயல் செய்ததாக
குற்றச்சாட்டுக்களை நிச்சயமாகக் கூறுவார்கள்.
மாபெரும் துரோகச் செயல்களை தாங்களே முன்னின்று செய்வார்கள்.
தற்காப்புக்காக யாரையாவது துணைக்கு சோ்ப்பார்கள்.
கடைசியில் தங்களை மட்டும் துாய்மையாளராகக் காட்டுவார்கள்.
இவற்றுக்கெல்லாம் மிகப் பெரிய ஆதாரம்தான் ததஜ அறிஞர் குழுவினர்களின் மொழி
பெயா்ப்பு.
அதில் உள்ள நிச்சயமாக என்று சிலா் இதற்குத் தமிழாக்கம் செய்துள்ளனா். இது தவறாகும் என்ற குற்றச்சாட்டு.
தான்தோன்றித் தனமாக தமிழாக்கம் செய்து தா்ஜுமாவில்
விளையாடிய ததஜ அறிஞர் குழுவினர் இடைச் சொல் பெயா்ச் சொல் என்று எழுதியுள்ளது சரியா என்பதை
பின்னா் பார்ப்போம். மேலே கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் தரட்டும்.
ஆகஸ்டு
2017 முதல் ஜுலை 2018 முடிய ஒரு வருடத்திற்கான வரவு செலவு அறிக்கையில்
செலவு
முதியோர் இல்லம் பராமரிப்பு சொத்து வாங்கியது 1,84, 04,245 சிறுவர் இல்லம் பராமரிப்பு சொத்து வாங்கியது 6,67,80,927 என வாங்காத சொத்தை வாங்கியதாகக் கணக்கு காட்டிய கள்ளக் கணக்கர்கள் மீதும். அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! அவர்களை கூண்டோடும் குடும்பத்துடனும் அழித்தொழிப்பாயாக!
செலவு
முதியோர் இல்லம் பராமரிப்பு சொத்து வாங்கியது 1,84, 04,245 சிறுவர் இல்லம் பராமரிப்பு சொத்து வாங்கியது 6,67,80,927 என வாங்காத சொத்தை வாங்கியதாகக் கணக்கு காட்டிய கள்ளக் கணக்கர்கள் மீதும். அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! அவர்களை கூண்டோடும் குடும்பத்துடனும் அழித்தொழிப்பாயாக!
Comments