அதிரையும் பீ.ஜே. தொழுகையும் திருந்துமா ததஜ? பி.ஜே.தொழாததற்கு த.மு.மு.க. காரணமா?
மீலாத் கமிட்டி தலைவர்களை விமர்சித்த பி.ஜே, தொழுகையை நிலை நாட்டுவதில்லையா?
12.10.2018 அன்று அதிரையில் நடந்த இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் ஆட்டோ ரியாஸ் வைத்த
குற்றச்சாட்டு. 2005லிருந்து
நான் உங்களிடம் வேலை செய்கிறேன். நீங்கள் சுபுஹு தொழ வருவதில்லை
என்பது. அதற்கு செக்யூரிட்டிதான் காரணம் என்று பீ.ஜே. பதில் கூறி உள்ளார். இதை பலரும்
பரப்பி உள்ளனர். ததஜவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். வரவேற்கிறோம்.
இதே
அதிரையில் 20.08.2011 அன்று ததஜ சார்பில்,
பீ.ஜே.யை அப்படியே தக்லித் செய்யும் மிமிக்ரி நடிகர்கள் என்று விமர்சிக்கப்பட்டவர்களில் ஒருவரான அஸ்ரப்தீன்
பிர்தவ்சியின் கேள்வி பதில்
நிகழ்ச்சி நடந்தது.
அதில் ஷாஜஹான் எனும் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் ' உங்களின் தலைவர் பி.ஜே. பஜ்ர் தொழுவதில்லை, இந்த நிலையில், ததஜ வில் தலைவராக இருக்கிறார்களே என்று கேட்டார்.
அசடு வழிந்து பதில் என்ற
பெயரில் உளறிக் கொட்டிய மிமிக்ரி நடிகர் அஸ்ரப்தீன் பிர்தவ்சி சொன்ன ததஜ சார்பிலான பதில்.
த.மு.மு.க.வில் இருக்கும் போது அவரது பாதுகாப்பு கருதி அவர் தொழ வர
வேண்டாம் எனும் முடிவு எடுக்கப்பட்டது. அவர் தொழாததற்க்கு த.மு.மு.க.வினர்தான்
காரணம் என்றார்.
.
பி.ஜே.தொழவில்லை என்றால் அவர் நரகம்
செல்வார்! அது குறித்து யாரும் கவலைப் பட வேண்டியதில்லை! என்றும் அப்துர்றஹ்மான்
பிர்தவ்ஸி வழியில் பதில் சொன்னார்.
இதற்கு அன்று நாமும் மற்றவர்களும் செய்த விமர்சனங்கள்.
மார்க்க கடமையான தொழுகையை மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக
விடலாமா? தமுமுக வில் இருந்து வெளியில்
வந்து பரிசுத்த இயக்கம் கண்ட பிறகாவது தொழுது இருக்கலாமே ?
பாதுகாப்பு காரணம் எனில், இப்போது துப்பாக்கி
ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு வழங்கிய பின் இந்த ஒரு வருடத்திலாவது தொழ வந்திருக்கலாமே?
அல் உம்மா, விடியல், போன்ற முஸ்லிம் இயக்கங்களால் உயிருக்கு ஆபத்து' எனக் கூறும் நீங்கள் மற்ற நான்கு வக்துக்களும்
வரலாமே?
மற்ற விசயங்களுக்காக அலுவலகத்திற்கு வரும் போதும், தேர்தல் நேரத்தில் அரசியல்வதிகளுக்காக
தெருத் தெருவாக பிரசாரம் செய்யும் போதும் இல்லாத பாதுகாப்பு பயம் அல்லாஹ்வை தொழ பள்ளிக்கு வரும் போது மட்டும் வருவது ஏன்?
அவர் தொழா விட்டால் அவர் நரகத்திற்கு செல்வார் ! மற்றவர்கள்
கேட்க தேவையில்லை என்றால் வட்டி வாங்குபவன் ,வரதட்சனை வாங்குபவன், மவ்ழிது ஓதுபவன், பாதிஹா ஓதுபவன் யாரையும் நீங்கள் திட்ட வேண்டியதில்லையே?
நீங்கள் உங்களை மறந்து விட்டு
மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகின்றீர்களா? எனும் குரான் வசனத்தின் படி முதலில் பி.ஜே.வுக்கு தொழுகையை
ஏவ த.தஜ.நிர்வாகிகள் முன் வர வேண்டாமா?
தொழுகையை நிலை நாட்டி ஜகாத் கொடுப்பவர் தான் பள்ளிவாசலை
நிர்வகிக்க வேண்டும்! என அல்லாஹ் திருமறையில்
கூறியுள்ளான் அதனால் தொழுகையில்லாத சுன்னத்
ஜமாஅத் பள்ளி நிர்வாகிகள் தகுதியற்றவர்கள் எனக் கூறிய ததஜ,
இப்போது தொழுகையை நிலை நாட்டாத ஒருவரை 600 பள்ளிவாசல்களின் (தமிழகம் முழுதும் ததஜ
விற்கு அன்று அறுநூறு பள்ளியாம்) நிர்வாகியாக, பரிசுத்த இயக்கத்தின்
தலைவராக வைத்திருப்பது சரியா? நேரடியாக பள்ளிவாசல்களுக்கு தலைவராக இல்லை! என்றாலும் 600 பள்ளிவாசல்களைக் கொண்ட இயக்கத்தின் தலைவர் அல்லவா?
'அசர் போகும் ஊர்வலமும் போகும், மக்ரிப் போகும் ஊர்வலமும் போகும். இப்படி மீலாத் ஊர்வலமும் போகும்
ஒருத்தனும் தொழ மாட்டன்! இவர்கள் எல்லாம் இஸ்லாமிய இயக்கத் தலைவர்களாம்! என மீலாத் கமிட்டி தலைவர்களை விமர்சித்த பி.ஜே, தொழுகையை நிலை நாட்டுவதில்லையே?
ததஜ ஒரு இஸ்லாமிய இயக்கமா? இவர் ஒரு இஸ்லாமிய
இயக்கத் தலைவரா? பி.ஜே. தொழுகையை நிலை
நாட்டுவதில்லை என்று அபு அப்துல்லாஹ் தொடங்கி அவரோடு நெருக்கமாக இருந்த அன்றைய, இன்றைய மாநில நிர்வாகிகள்
வரைக்கும் அனைவருக்கும் தெரியும்!
இதை இல்லை என இன்றைய மாநில நிர்வாகிகள் அல்லாஹ்வின் மீது ஆணையிடத் தயாரா? இந்த விசயத்தில் இன்றைய மாநில நிர்வாகிகள் கூட
பி.ஜே.விற்கு வக்காளத் வாங்க மாட்டார்கள். ஏன் எனில் அவர்களுக்கே
தெரியும்!
'அது அவருக்கும் அல்லாஹ்விற்கும் உள்ளது" என்று தான் கூறுவார்களே தவிர வேறு ஒன்றும் அவாகளால் சொல்ல முடிவதில்லை!
எந்தக் கேள்விக்கும்
என்னிடம் பதில் உள்ளது என இறுமாப்போடு பேசிய
அண்ணனிடம் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் இருக்காது!
அன்று அஸ்ரப்தீன் பிர்தவ்சி அவர்கள் அளித்த பதில் ததஜ சார்பிலானது. அதை
விமர்சித்த எம்மை எதிர்க்க கச்சை கட்டி நின்றவர்கள். ரவுண்டு கட்டி விமர்சித்தவர்கள்தான்
இந்த ததஜவினர்.
அவர்கள்தான் இன்று பீ.ஜே.யின் பதிலை கிண்டல் செய்கிறார்கள். இது
இஸ்லாத்தின் அடிப்படையிலான இஸ்லாமிய உணர்விலான விமர்சனம் அல்ல. இயக்க வெறியே
என்பதுதான் நமது நிலை.
பீ.ஜே.
விபச்சாரம் செய்தார் என்பதற்காக அவரது புத்தகங்களுக்கு தடை என்றால். அஸ்ரப்தீன் பிர்தவ்சி, அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி, எம்.ஐ.சுலைமான் போன்றவர்கள் மீதெல்லாம் அதே குற்றச்சாட்டைக்
கூறியவர்தான் இன்றைய தலைவர்.
விபச்சாரம், பண மோசடி போன்றவற்றுக்கு ததஜ எதிரானது
என்றால். இவர்கள் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்குமா?
1988லிருந்து ஆயிரம்
ஹதீஸ் மொழி பெயர்த்து தருவதாகக் கூறி பண மோசடி செய்துள்ள ததஜ மவுலவி மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுத்து திருந்துமா ததஜ?
தஃவா
செய்கிறோம் (முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கிறோம்) என்று பொருள்
மயக்க வார்த்தையால் வசூலித்து. அதில் அபிடவிட் பணிக்கு என ஊதியம் என்றிருந்த ஊதாரி
ததஜ மவுலவி மீது நடவடிக்கை. செய்யுமா? செய்து திருந்துமா ததஜ?
இன்று விமர்சிக்கும் ததஜ, ஒன்றாக இருந்தபொழுது பி.ஜே.வுக்கு தொழுகையை ஏவ த.தஜ.நிர்வாகிகள் முன் வராதது ஏன்?
பீ.ஜே, அஸ்ரப்தீன் பிர்தவ்சி, அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி, எம்.ஐ.சுலைமான் போன்றவர்கள் தவ்ஹீது பெண்களிடம் செய்த சேட்டைகளை கண்டும் காணாமலும் இருந்தவர்கள் மீதும் இன்றும் மற்றவைர்களையும் பல பண மோசடியாளர்களையும் கண்டு கொள்ளாமல் இருப்பவர்கள் அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.
Comments