நற்சான்று கொடுத்த காமில் காஜா நுாஹுக்கு நாம் எதிர்ப்பா?


காமில் அவர்கள் சொல்வது போல், ததஜ பொதுக்குழுவில் வாசிக்கப்படும் வரவு செலவு கணக்குகள் போலியான கள்ளக் கணக்கு, ஜமாஅத் பணத்தை வங்கியில் செலுத்தாமல் தன் உபயோகத்தில் வைத்தது. நண்பரான வியாபாரியிடம் கொடுத்து வைத்தது. வெளிநாட்டிலிருந்து ஹவாலா மூலம் வரவழைத்தது. பொருளாதாரத்தை பொருளாளரிடம் கொடுத்து வைக்காமல் தானே வைத்துக் கொண்டது. பீ.ஜே. தவிர வேறு எந்த நிர்வாகிக்கும் பொதுக்குழுவினருக்கும் வரவு செலவு கணக்குகள் பற்றிய எந்த அறிவும் தொடர்பும் இல்லாமல் வைத்துக் கொண்டது.  இதுவெல்லாம் அயோக்கியத்தனம் மொள்ளமாரித்தனம் திருட்டுத்தனம் என்பதில் நமக்கு அணு அளவும் மாற்றுக் கருத்து இல்லை. இவற்றுக்கெல்லாம் யார்? முன் மாதிரி தெரியுமா? அதையெல்லாம் தெரிந்திருந்தால் காமிலும் காஜா நுாஹும் நற்சான்று கொடுத்திருக்க மாட்டார்கள் என்றுதான் சொல்லி உள்ளோம்.

https://mdfazlulilahi.blogspot.com/2018/10/blog-post_10.html 

காமில், காஜா நுாஹு ஆகியவர்களுக்கு எதிராக நாம் எழுதவில்லை. சாபம் கேட்கவில்லை. மலைக் கள்ளனை அடையாளம் காட்டி அவனை தலைவனாக ஏற்றுள்ளவர்களுக்கு எதிராகவே அல்லாஹ்வின் லஃனத்து இறங்க வேண்டும் என்கிறோம். 

மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிக்கு அருகில் உள்ள பீடி கம்பெனிக்காரர் இடத்தை வாங்குவதாகச் சொல்லி ரூ.10 லட்சம் வசூலிக்கப்பட்டது. பீடி கம்பெனிக்காரர் இடத்தை இலவசமாகக் கொடுத்தார். உடனே அந்தப்  பணத்தை பீ.ஜே. தனது பினாமி அன்வர் பாஷாவிடம் கொடுத்து வைக்கும்படி பள்ளி நிர்வாகத்துக்கு ஆணையிட்டுள்ளதாக லுஹா கூறினார். அதை மறுத்து எதிர்த்தவருக்கு எதிராக P.J. யிடம் போட்டுக் கொடுத்து P.J. யிடம் நற்பெரும் பயனும் பெற்றவர்தான் லுஹா.


பீ.ஜே.யின் உத்தரவு வருவதற்கு முன்பாகவே அந்த ரூ.10 லட்சம் பணத்தில் ரூ.லட்சம் பணத்தை லுஹா ஏற்கெனவே செலவு செய்துவிட்டிருந்தார். மீதி பணத்தை பலரிடமும் பிரித்து பிரித்து கொடுத்து வைத்திருந்தார். அதில் ஒரு நபர் கூட நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் கிடையாது.


உதாரணத்திற்கு R.R. ஸ்டோர் என்ற வியாபாரியை எடுத்துக் கொள்வோம். அவரிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்து வைத்திருந்தார். அவர் ஏகத்துவம் துணை ஆசிரியர் இப்ராஹீமுக்கு பெண் கொடுத்த மாமா என்ற தகுதியை தவிர, வேறு எந்த தகுதியும் கிடையாது. தவ்ஹீதுக்காகவோ, மஸ்ஜித் ரஹ்மானுக்காகவோ என்ன செய்தாரோ? ஆனால்   ஏகத்துவம்  இப்ராஹீமுக்கு மாமாவாக இருந்தார்.


இப்படி லுஹா ஏற்கனவே வியாபாரிகளிடம் கொடுத்து பயன்படுத்தி உள்ளதை மறைக்கவே பீ.ஜே. கேட்கிறார் கொடுக்கவா என நிர்வாகிகளிடம் கேட்பது போல் நடித்து நிர்வாகிகளையும் ஏமாற்றினார். பீ.ஜே.யையும் ஏமாற்றினார். இந்த நடிகரை தலைவராகக் கொண்ட அமைப்பு நற்சான்றுக்குரியதா அல்லாஹ்வின் சாபத்துக்குரியதா?


பள்ளி கட்டுமான பணிகளை நிர்வகிக்கவும் மேற்பார்வை செய்யவும் என மாத சம்பளம் பேசி வேலைக்குச் சேர்ந்தவர். தலைவர் பதவியை கேட்டு வாங்கிய லுஹா. பள்ளியின் கட்டுமானத்தை முழுவதுமா மேற்பார்வை செய்தவர் பள்ளி செயலாளர். ஆனால் அதற்கான சம்பளத்தை சொளையாக நிர்வாகத்திற்கு தெரியாமல் எடுத்துக் கொண்டவர் ஷம்சுல் லுஹாதான்.


பள்ளிக்கு என்று தனியாக லேண்ட் லைன் போன் இருந்தும் லுஹா மருமகன் பெயரில் லுஹா வீட்டிற்கு லேண்ட் லைன் போன் தொடர்பு வாங்கினார். அப்பொழுதெல்லாம் போன் அவ்வளவு ஈஸியாக கிடைக்காது. அந்தக் கட்டணத்தையும் பள்ளியின் பணத்திலிருந்து செலுத்தியவர் லுஹா.  இந்த காரியத்தை நிர்வாகத்தில் யாரிடமும் கலந்து கொள்ளாமல் செய்தவர் லுஹா.


இப்படி பள்ளி பணத்தில் போன் பில் கட்டி விட்டு அல்லாஹ்வின் அருளுக்குரியவரிடமும் தனது வீட்டு போன் பில் வகைக்கு என்று பணம் பெற்றவர் லுஹா. இப்படிப்பட்டவரை தலைவராகக் கொண்ட அமைப்பு நற்சான்றுக்குரியதா அல்லாஹ்வின் சாபத்துக்குரியதா?


லுஹா வீட்டில் ஏற்கெனவே 2 கம்யூட்டர்கள் இருந்தது. அது போக இன்னொரு லேப் டாப் வேண்டும் என்று அல்லாஹ்வின் அருளுக்குரிவரிடம் கேட்டவர் லுஹா.


அப்போது உங்களிடம் தான் 2 கம்யூட்டர்கள் உள்ளதே என்று கூறியபோது P.J. விற்கு நீங்கள் லேப் டாப் வாங்கி கொடுத்திருக்கிறீர்களே, அவரைப்போல நானும் ஒரு தாயிதானே எனக்கும் கொடுக்கக் கூடாதா என்று கேட்டவர் லுஹா.


இப்படி அடுத்தவர்கள் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து விட்டு. மேடையில் தவ்ஹீத் மவுலிகள் கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்துவதாக பஞ்சாங்கம் பாடுவார். இப்படி பாடி எப்படியெல்லாம் வசூலித்தார் என்பதை அடுத்த வெளியீடடில் பார்ப்போம். காமில் அவர்கள் கூறிய அனைத்து வரவு செலவுகளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிவதில்லை  என்ற குற்றச்சாட்டுக்கு யார் முன் மாதிரி என்பதை பாருங்கள்.

லுஹா கணக்கை சரியாக பராமரிக்கவில்லை. அனைத்து வரவு செலவுகளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிவதில்லை. பள்ளிவாசல் நிதியை பள்ளி அல்லாத பணிகளுக்கு பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு 28-08-2001 அன்று பி.ஜே. எழுதிய இயல்பான ஒரிஜினல் கடிதம்.




பள்ளி பொருளாளர் மவுலவி J.S. ரிபாஈ ரஷாதி பள்ளிக்கு வரும் பணம் பொருளாளராகிய  என்னிடம் தராமலும் பேங்கில் போடாமலும் லுஹா தன் கையில் வைத்து செலவு செய்கிறார். பள்ளிப் பணத்தை பள்ளி அல்லாத வகைக்கு செலவு செய்கிறார் என்று  இந்தக் கடிதத்தை நிர்வாகக் குழுவில் படித்துக் காட்டி கணக்குக் கேட்டார். லுஹா கணக்கு காட்டினாரா? கணக்குக் காட்டாமல் நெஞ்சில் அடித்து அழுது ஏமாற்றினாரா?

இது போன்றவை காமில் காஜா நுாஹு போன்றவர்களுக்குத் தெரியாததால்தான் நற்சான்று  கொடுத்துள்ளார்கள் என்று நம்புகிறேன். 

அனைத்து வரவு செலவுகளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிவிக்காமல். பெயரளவில் செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் பொதுக்குழு என வைத்து  பள்ளிவாசல் நிதியை பள்ளி அல்லாத பணிகளுக்கு பயன்படுத்தியவரை தலைவராகக் கொண்ட ததஜவினர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!

முதியோர் இல்லம் பராமரிப்பு சொத்து வாங்கியது 1,84, 04,245, சிறுவர் இல்லம் பராமரிப்பு சொத்து வாங்கியது 6,67,80,927 என்று பொய்யாக கணக்கு காட்டி விட்டு பீ.ஜே.யிடமிருந்து வராத பணத்தை வந்ததாக ததஜ பொதுக்குழுவில் பொய் சொன்ன பொய்யர்கள் மீதும் அந்தப் பொய்யர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்களை குடும்பத்தோடு நாசமாக்குவாயாக! ஒருத்தனையும் விட்டு வைக்காதே. பள்ளிப் பணத்தில் கள்ளக் கணக்கு எழுதுபவர்களுக்கு படிப்பினையாக இவர்களை ஆக்குவாயாக! ஆமீன்.





Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.