தன்மானம் முக்கியம் ..!-ஒவ்வொன்றும் நாங்கள் வடித்துக் கொண்டிருக்கும் ஆனந்தக் கண்ணிரின் வெளிப்பாடு..!

மாற்று மத நண்பர்கள் முஸ்லிம்களை பாராட்டுவதை முகநூல் முழுக்க பரப்புகிறோம் என்றால் அது ஏதோ பெருமைக்காக செய்வது என்று யாரும் தயவு செய்து எண்ணி விடாதீர்கள்..
நிச்சயமாக பெருமை இல்லை..!
ஒவ்வொன்றும் நாங்கள் வடித்துக் கொண்டிருக்கும் ஆனந்தக் கண்ணிரின் வெளிப்பாடு..!
ஆளும் ஆட்சியாளர்களும், ஊடகங்களும் எங்களை புண்படுத்தியதெல்லாம் வெறும் வார்த்தைகளால் விளக்கி விட முடியாதது..
எங்கள் மதம் அன்பை தாண்டா போதிக்குது.. அன்பை தாண்டா போதிக்குது.. என்று கத்தி கத்தியே பல வருடங்களை கடத்தி விட்டோம்..
யாரோ இரண்டு முட்டாள்கள் செய்வதற்கெல்லாம் எங்களையும் எங்கள் மதத்தையும் இழிவுப்படுத்தாதீர்கள்... என்று நாங்கள் இட்ட ஓலங்கள் காற்றோடு கலந்து போயின..
ஆனாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்தோம்..
...ஏனோ தெரியவில்லை, எந்த ஆட்சியாளருக்கும் அதில் அலாதி ஆர்வம்..
பாய்மார்கள் கடையில் சாமான் வாங்காதே..
பாயா? வாடகைக்கு வீடு கொடுக்காதே..
இப்படியான ஒரு நிலை இந்த சமூகத்தில் திணிக்கப்பட்டுப் போனது..
இவையெல்லாம் எங்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய வடுக்கள் எத்தனை ஆழமானது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்..
ஒரு இயற்கை பேரழிவு தானா எங்களை சரியாய் அடையாளம் காட்ட வேண்டும்??
ஒருவரை வாழ வைத்தவர் இந்த சமுதாயத்தையே வாழ வைத்ததற்கு சமம்..
ஒருவரை கொலை செய்பவர் இந்த சமுதாயத்தையே அழித்ததற்கு சமம்.
இது எங்கள் நபியின் போதனை.
நாங்கள் ஒருகாலும் வன்முறைக்கு துணை போகக்கூடியவர்கள் இல்லை..
அதை எங்கள் சக மாற்று மத அன்பர்களே உணர்ந்து விட்டார்கள் என்பதை காணும் போது உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகின்றது..
பாருடா.. என் ஹிந்து நண்பன் சொல்றான் பாரு..
என் கிறித்தவ நண்பன் சொல்றான் பாரு...
என்று.. மகிழ்ச்சியை வெளிக்காட்டும்
குழந்தைகளாகி விடுகிறோம் !!
~~~~~~~~~~~~~~~~~~~
நிவாரணப் பணிகளிலும் மீட்புப் பணிகளிலும்
ஈடுபட்டுள்ள தோழர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்.
எடுக்கும் படங்களை எல்லாம் ஒன்றுவிடாமல்
முகநூலில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று
எந்தக் கட்டாயமும் இல்லை.
ஏனெனில் உதவி பெறுபவர்களின் தன்மானம் முக்கியம்.
தனிப்பட்ட மனிதர்கள், குடும்பங்களின் படங்களை
அருள்கூர்ந்து பதிவேற்றம் செய்யாதீர்கள்.
“என் கணவன் வாங்கித் தரும் புடவையைத் தவிர
இதுவரை வேறு யார் தந்த புடவையையும் கட்டியதில்லை.
ஆனால் இபபோ ஒரு மாற்றுப் புடவைக்கு யார் யாரிடமோ
கையேந்தும் நிலை வந்துவிட்டதே” என்று
ஒரு பெண்மணியின் கதறல் நெஞ்சைத் துளைக்கிறது.
ஒரு வேளைச் சோற்றுக்கும் புடவைக்கும் கையேந்தும் நிலை
வந்துவிட்டதே என்று அவரைப்போல் பலரும் மனம் குமுறலாம்.
ஆகவே கைநீட்டி உதவி பெறுபவர்களின் படங்கள்
அனைத்தையும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில்
பதிவு ஏற்றியே தீர வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
நீங்கள் உதவி செய்வதைவிட
உதவி பெறுபவர்களின் தன்மானம் மிக முக்கியமானது.
நினைவில் கொள்ளுங்கள் தோழர்களே..!
-
Via
whatsapp

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.