காந்திஜியை ஏன் போட்டுத் தள்ளினார்கள்?

கொள்ளைக்கார ஆட்சியாளர்களையெல்லாம் உலகின் தலை சிறந்த வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் என்று புகழ்ந்துள்ளது வரலாறு. உலக வரலாற்றில் பார்த்தால் எத்தனையோ ஆட்சியாளர்கள் போர் புரிந்து இருக்கிறார்கள்

இதில் முதல் இடத்தை வகிப்பவர்கள் பிரிட்டிஷ். அந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தை சூரியன் அஸ்தமிக்காத ஆட்சி என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு உலகின் பெரும் பகுதியை ஆண்டு கொண்டிருந்தார்கள். உலகில் உள்ளவர்களுக்கு ஆட்சி செய்யத் தெரியாது என்பதால் ஆட்சி செய்தார்களா? என்றால் கிடையாது. எதனால் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். எப்படி ஆண்டு கொண்டிருந்தார்கள்.


எந்தப் பகுதியை ஆண்டாலும் முதலில் அப்பகுதி மக்களுக்கு அவர்களுக்கு உரிய உரிமைகளை கொடுத்தார்கள். தேவையான வசதிகளை செய்து கொடுத்தார்கள். இரயில், பஸ் போன்ற சிறப்பான போக்குவரத்து பாதைகளை அமைத்தார்கள். 

அந்த நாட்டு மக்களின் நலனுக்காக பயன்பாட்டுக்காக என்பதுபோல் அவற்றைச் செய்தார்கள். அதன் மூலம் குடிமக்களின் கவனத்தை திசை திருப்பினார்கள். மக்கள் மதி மயங்கியதும் அங்குள்ள பொருளாதாரங்களையும் செல்வங்களையும் இரயில்கள் மூலம் தங்கள் நாட்டிற்கு அள்ளிச் சென்றார்கள்


பிறகு அங்குள்ள மக்களை அவர்களது அடிமைகளாக, கொத்தடிமைகளாக ஆக்கிக் கொண்டார்கள். இதுதான் அவர்கள் செய்து கொண்டு இருந்த ஆட்சி. இது ஒரு ஆட்சியா? கொத்தடிமைத்தனம். இந்த கொத்தடிமைத்தனத்திலிருந்து பிற்காலத்தில் ஒவ்வொரு நாடாக விடுதலை பெற்றது. சுதந்திரம் அடைந்தது.


பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்கும்பொழுது ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் சொந்தக்காரன்- மண்ணின் மைந்தன் அதை எதிர்த்தால் எதிர்த்தவன் கொல்லப்பட்டான். இப்படிக் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை. கோடான கோடி. அவ்வளவு மக்கள் இந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முந்தைய தலைமுறையான நமது தந்தைகளின் காலம் வரை இதுதான் நிலை. இப்பொழுதுதான் இல்லை.


70 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவின் நிலையும் இதுதான். இந்தியாவுக்கு பின் சுதந்திரம் அடைந்த நாடுகளும் உண்டு. 50 ஆண்டுகளுக்கு முன் பார்த்தால். 900ஆண்டுகளாக உலகில்  இந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மக்கள். கோடி கோடியாய் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் போர் புரிந்ததெல்லாம் எதற்காக? 


மற்ற நாடுகளில் இருந்த தங்கம், வைரம், வைடூரியங்கள் போன்ற செல்வங்களை. இயற்கை வளங்களை தங்கள் நாட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான். போர் புரிந்தார்கள். உலகம் முழுவதும் நாம் ஆட்சி செய்கிறோம் என்ற அகம்பாவம்தான். போர் புரிய வைத்தது.


இதே மாதிரி விரல் விட்டு எண்ணக் கூடிய பகுதிகளிலே ஆட்சி செய்த போர்ச்சுக்கீஸியர்களும் இதே அட்டூழியங்களை செய்திருக்கிறார்கள்இதே போல பிரஞ் படைகளும் அவர்களது அண்டை நாடுகளோடு சண்டை செய்து போர் தொடுத்து கொள்ளையடித்திருக்கிறார்கள்


இதற்கெல்லாம் இவர்களின் இந்த செயல்களுக்கெல்லாம் எந்த ஒரு மதச் சாயமும் பூசப்படவில்லை. இவர்களின் அநியாயச்செயல்கள் நியாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. இந்த கொள்ளைக்கார ஆட்சியாளர்களெல்லாம் உலகின் தலை சிறந்த வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் என்று புகழப்பட்டிருக்கிறார்கள். அப்படி எழுதி வைத்திருக்கிறார்கள். யாரை? பாமரனுக்கும் புரியும்படி சொல்வது என்றால்.


அடுத்தவன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தான். அங்குள்ள உணவுகளைத் தின்றான். இருக்கும் பொருள்களை கொள்ளை அடித்தான்.. அங்குள்ள பெண்களை கற்பழித்தான். இப்படி செய்துவிட்டு வந்தவனை சிறந்த மனிதன் என்றால் எப்படி? எல்லாரும் சிரிக்க மாட்டார்களா?


அந்த மாதிரிதான் இந்த ஆட்சியாளர்கள் பற்றிய புகழ்ச்சி. அடுத்தவன் நாட்டில் அத்துமீறி நுழைந்தார்கள். அந்த நாட்டு மக்களையே கொத்தடிமைகளாக ஆக்கினார்கள். அங்குள்ள பொருளாதாரங்களையெல்லாம் கொள்ளையடித்தார்கள். அத்தனை வளங்களையும் தங்களுடைய நாட்டுக்கு அள்ளிச் சென்றார்கள்


அப்படிப்பட்டவர்களை சிறந்த ஆட்சியாளர்கள் என்று பெரிய பெரிய வரலாற்று ஏடுகளில் எழுதி வைத்துள்ளார்கள். அந்த பொய்யான வரலாற்றை பாதுகாத்தும் வருகிறார்கள். அதனால் இன்றளவும் அவா்களால் போற்றப்படுகிறார்கள். அபுபக்கர் சித்தீக்(ரலி) போன்றவர்களை அந்த வரலாற்றில் அவர்கள் சொல்லி இருக்கிறார்களா


இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த நேரம். பத்திரிக்கையாளர்கள் காந்தியிடம் கேட்டார்கள். எப்படிப்பட்ட ஆட்சி இந்த நாட்டில் அமைய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்? என்று.  இந்தியாவின் தந்தை என போற்றப்படும் காந்தி ஏதோ ஒரு வழியில் தெரிந்து கொண்டு சிலாகித்துச் சொன்னார்.


அரேபிய தீப கற்பத்திலே உமர் இப்னு கத்தாப் என்று சொல்லப்படக் கூடிய ஒருவர் ஆட்சி புரிந்து இருக்கிறாரே. அது போன்ற ஒரு ஆட்சி நம்முடைய நாட்டிலே மலர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று சொன்னார். அவரை ஏன் போட்டுத் தள்ளினார்கள் புரிகிறதா? காந்திஜியை ஏன் போட்டுத் தள்ளினார்கள்? இஸ்லாமிய ஆட்சி வரவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதால் போட்டுத் தள்ளினார்கள்.


காந்திஜி ஓரளவு தெரிந்து கொண்டு அப்படி சொல்லும்போது கூட முஹம்மது நபி வழி வந்த இரண்டாவது கலீபா என்றோ. அல்லாஹ்வின் சட்டம் என்றோ. அல்லது இஸ்லாம் என்ற வார்த்தையையோ. அவர் பயன்படுத்தவே இல்லை. அரேபிய தீப கற்பத்திலே உமர் இப்னு கத்தாப் என்பவர் ஆட்சி புரிந்தார் என்றுதான் சொன்னார். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தது. போட்டுத் தள்ளி விட்டார்கள்.


நபி(ஸல்) அவர்களை கொல்வதற்கு வாளேந்தி வந்த உமர்(ரலி) அவர்கள் இடத்திலே இப்படிப்பட்ட ஆட்சி புரிவதற்குரிய ஞானம் இருந்ததா? நிச்சயமாக இல்லை. அல்லாஹ் கொடுத்த வேதம். அதில் கூறப்பட்டுள்ள சட்டங்கள். அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) செய்த ஆட்சி முறை. அதனை பார்த்து அப்படியே அந்த வழியிலேயே ஆட்சி செய்திருக்கிறார். அதனால் 1300 ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்னொரு நாட்டில் இருக்கக் கூடிய ஒருவா் உமர்(ரலி) அவர்களை பாராட்டக் கூடிய அளவுக்கு ஆகி இருக்கிறார்.


ஒரு நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர் என பெயர் பெற்றவரின் வாயால் சொல்ல வைத்தது. புகழ வைத்தது. அப்படி என்றால் இது யாருடைய சிறப்பு. நமது மார்க்கத்தின் சிறப்பு இல்லையா? இப்படிப்பட்டவர்கள் வரலாறுகளை உலக பதிவு புத்தகங்களில் பதிந்து உள்ளார்களா? என்றால் இல்லை. ஏன்? 

இதுவெல்லாம் மூடி மறைக்கப்பட்டு விட்டது. உமர்(ரலி) ஆட்சி காலத்தை உலகம் பாராட்டவில்லைஉலகம் போற்றி புகழவில்லை ஏன்? நமக்கே தெரியாதபொழுது நாம் எங்கே அடுத்தவர்களுக்கு சொல்வது. நமக்கே தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றது.


ஆக உலக வராற்றில் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இருந்த முரட்டுக் கொள்ளைக்காரர்களெல்லாம் முறையான ஆட்சியாளர்களாக பாராட்டப்படுகின்றார்கள். இன்றளவும் போற்றப்படுகின்றார்கள். அதற்காகவே அவர்களது பிறந்த நாட்கள் இன்றும் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் கொண்டாடுகின்கிறார்கள்

அதனால் நம்மவர்களுக்கும் பிறந்த நாட்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று சொல்வதாக நினைக்க வேண்டாம். உலகத்தில் மிகச் சிறந்த ஆட்சியாளர்களாக நம்மவர்கள் இருந்தும். அவர்கள் பெயர்கள் உலக வரலாற்றில் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. இதை நாம் சிந்தித்துப் பார்க்கவே கூறுகிறோம்.


மிகப் பெரிய ஒரு கொடுங்கோலன் ஹிட்லர். எத்தனை பேரைக் கொன்றான்? எண்ணவே முடியாது. அவ்வளவு பேருடைய உயிர் சேதமாவதற்கு அந்த ஒரு மனிதனுடைய மூளை காரணமாக இருந்திருக்கின்றது. அந்த ஹிட்லரைக் கூட மோசமானவனாக சித்தரிக்கவில்லை. அவர் ஆட்சியாளர் என்கிறார்கள். ஆட்சி என்ற அடிப்படையில் இதுவெல்லாம் நியாயமாம். 


இறைவனின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் ஆட்சி புரியவில்லையா? அவர்களின் வழி வந்த கலீபாக்கள் ஆட்சி புரியவில்லையா? ஆட்சியாளர்களாக இருக்கவில்லையா? அவர்கள் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக ஏதாவது ஒரு போர் புரிந்து இருக்கிறார்களா?


ஏனைய ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக எத்தனை போர்கள் செய்திருக்கிறார்கள். எத்தனை பெண்களைக் கொன்றார்கள். எத்தனை பெண்களைக் கற்பழித்தார்கள். எவ்வளவு பச்சிளங் குழந்தைகளைக் கொன்றார்கள். கடவுளின் கடைசித் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்வில் இதுபோல் ஏதாவது ஒன்றை விரல் விட்டுச் சொல்ல முடியுமா?


ஏன் இந்த உலகம் இந்த வித்தியாசத்தை பார்க்க மறுக்கிறது. ஏன் இதை திரை போட்டு மறைக்கிறது தெரியுமா? முஹம்மதுநபி(ஸல்) அவர்கள் உண்மை வாழ்வு தெரிந்தால் இதன் மூலம் இஸ்லாம் வெளிச்சத்திற்கு வந்து விடும். இஸ்லாம் மக்களை சென்றடைந்து விடும் என்ற பின்னணி இருக்கிறது. அதனால் மறைக்கிறார்கள். 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி முஸ்லிம்கள் உதவினார்கள். ஆனால் மீடியாக்களோ மனிதாபிமான முறையிலான உதவி. மதத்துக்கு அப்பால்பட்ட உதவி என்று பதறிப் பதறிக் கூறின.


செய்திதானே இதில் என்ன இருக்கிறது என்று எண்ணாதீர்கள். நேற்றையச் செய்திதான் இன்றைய வரலாறு. இன்றையச் செய்தி நாளைய வரலாறு. நமது வரலாற்றை நாம்தான் பாதுகாக்க வேண்டும். 

உதவுதல் என்பது இஸ்லாமியப் பணி.  முஸ்லிம்கள் உதவியது இஸ்லாத்தின் அடிப்படையிலானது. இந்த உண்மை மக்கள் மனதில் பதிந்து விட்டால் அது  இஸ்லாத்திற்கு பெருமை சேர்த்து விடும். பொது மக்களின் மனம் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு விடும் என்பதால் மறைத்தார்கள் அல்லவா. அதுபோல்தான் கடந்த கால இஸ்லாமிய வரலாறுகளும் மறைக்கப்பட்டன.


தொடரும் இன்ஷாஅல்லாஹ்

நன்றி ; மக்கள் உரிமை.
அடுத்த தலைப்பு
'அலெக்ஸாண்டர் வழிநடப்போம்' என்பது சரியா?




முந்தைய வெளியீடு




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.