ஐந்து நேரத் தொழுகைக்கு அல் குர்ஆனில் ஆதாரம் உண்டா?

மூன்று நேர தொழுகைகளுக்குத்தான் குர்ஆனில் ஆதாரம் உள்ளது என்று அஹ்லே குர்ஆன்கள்  குழப்பி விட்டு போய் விட்டதாக சொன்னீர்கள். நீங்களும் உங்கள் சகலையும் தேடிப் பார்த்த வரை 3 வேளை தொழுகைகளுக்குத்தான் குர்ஆனில் ஆதாரம் கிடைக்கிறது என்றீர்கள்.


நாம் அரேபிய நாட்டில் இருப்பதால் இதை எளிதில் புரிய முடியும். ஒருவர் என்பதை தமிழில் ஒரு ஆள் என்போம். இருவரோ அதற்கு மேலோ சொல்வதாக இருந்தால் ஆட்கள் என்போம்.


அரபியில் ஒரு ஆள் என்பதை நபர் என்போம். இரண்டு ஆட்கள் என்பதை நபரீன் அல்லது நபரைன் என்போம். மூன்று ஆட்களோ அதற்கு அதிகமானவர்களோ வந்தால் நபராத் என்போம்.


திர்ஹம் (ஒரு திர்ஹம்) திர்ஹமைன் (2திர்ஹங்கள்) தலாத திராஹிம் (3 திர்ஹங்கள்) இதில் இருந்து என்ன புரிகிறோம். ஒருமை (சிங்குளர்) பன்மை (புளுரல்) ஆக இரண்டு சொல்லாடல்கள் தான் நாம் அறிந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உண்டு.


அரபியில் ஒருமை, இருமை, பன்மை என்ற மூன்று சொற்கள் உள்ளன. அரபகத்தில் உள்ள நாம் அதை பயன்படுத்துகிறோம். நாம் தெரிந்த மற்ற மொழிகளிலிருந்து உள்ள இந்த வித்தியாசத்தை சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இப்பொழுது இதைப் புரிந்து கொண்டு சிந்தனைக்கு எடுத்துக் கொண்டு ஆயத்துக்களை அணுகுவோம்.


எந்த  ஒரு  விஷயத்தை  எடுத்துக்  கொண்டாலும்.  அந்த  மொழியிலே  சொல்லக்  கூடிய  வார்த்தைகளுக்கு   அர்த்தம்  என்ன? என்பது நமக்கு விளங்க வேண்டும்.  அது  நமக்கு  விளங்கியது  என்று  சொன்னால்.  அதன்  மூலம்  எந்த  தவறுகளும்  தீமைகளும்  ஏற்படாது. இதை ஜியாரத்து என்பது போராட்டமா? என்ற தலைப்பிலும் விளக்கி உள்ளேன். பார்த்துக் கொள்ளவும்.


2:238   حَافِظُوْا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰى وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ‏ 
2:238. தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு  நில்லுங்கள்.


தொழுகைகளை குறிப்பாக நடுத் தொழுகையை பேணிக் கொள்ளுங்கள் என்று 2:238 வசனம் கூறுகின்றது. இந்த வசனத்தில் உள்ள தொழுகைகள் என்ற வார்த்தை ஒருமையா பன்மையா? பன்மைதான். அரபு மொழியில் இரண்டு என்பதற்கு இருமை என்ற தனிச் சொல்லாடல்  உள்ளது. பன்மைக்கு குறைந்தது மூன்று இருக்க வேண்டும். 


அரபு கல்லுாரிகளில் போய் கிராமர் படிக்காவிட்டாலும், அரபு நாட்டில் உள்ள நாம் இப்படித்தான் இந்த இலக்கண முறைப்படித்தான் பேசுகிறோம். ஆனால் புரிந்து பேசவில்லை. இப்பொழுது சிந்தனைக்கு எடுத்துக் கொண்டோம். அதனால் மூன்றுக்குக் குறைவாக அரபு மொழியில் பன்மை இல்லை என்பதை புரிந்து விட்டோம். 


தொழுகைகளையும் (அதாவது பன்மைக்கு குறைந்த பட்சமான மூன்றையும்) நடுத் தொழுகையையும் (என்ற ஒன்றையும்) சேர்க்கும் போது அது மொத்தம் நான்கு தொழுகைகள் என்று ஆகி விடுகின்றது. 

நடு என்று சொல்வதாக இருந்தால் அது ஒற்றைப் படையாகத்தான் இருக்க வேண்டும். நான்கில் எதையும் நடு எனச் சொல்ல முடியாது. ஐந்து இருந்தால் தான் அதில் ஒன்றை நடு எனச் சொல்ல முடியும். எனவே மொத்த தொழுகைகள் ஐந்து என்று இதிலிருந்து மிகத் தெளிவாக நம்மால் விளங்க முடிகின்றது.

மூன்று தொழுகைகள் என்று வைத்துக் கொண்டாலும் நடுத் தொழுகை என ஒரு தொழுகையைக் குறிப்பிட முடியுமே என்று அந்த அஹ்லே குர்ஆன்கள் வாதிடலாம். மூன்றில் ஒன்றை நடு எனச் சொல்ல முடியும் என்பது சரியான வாதம்தான்.

இந்த வசனத்தில் தொழுகைகள் என்று பன்மையாகச் சொல்லப்பட்டுள்ளது. பன்மைக்கு குறைந்த பட்சம் என்ன? மூன்று. அத்துடன் நடுத் தொழுகைப் பற்றி தனியாகச் சொல்லப்பட்டுள்ளது. அதனால் நடுத் தொழுகையை நீக்கி விட்டுக் குறைந்தது மூன்று தொழுகைகள்  என்பது தான் இந்த வசனம் சொல்லும் கருத்தாகும்.

பன்மையையும், நடு என்ற சொல்லையும் ஒரு சேரக் கவனித்து சிந்திக்க வேண்டும். அப்படி சிந்தித்து ஆய்வு செய்யும்பொழுது ஐந்து வேளைத் தொழுகை உண்டு என்ற கருத்து இவ்வசனத்தில் அடங்கி உள்ளது என்பதை மிகத் தெளிவாக அறியலாம்.



11:114   وَاَقِمِ الصَّلٰوةَ طَرَفَىِ النَّهَارِ وَزُلَـفًا مِّنَ الَّيْلِ‌ ؕ اِنَّ الْحَسَنٰتِ يُذْهِبْنَ السَّيِّاٰتِ ‌ؕ ذٰ لِكَ ذِكْرٰى لِلذّٰكِرِيْنَ ‌ۚ‏ 
11:114. பகலின் (காலை, மாலை ஆகிய) இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவீராக - நிச்சயமாக நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை.



இந்த வசனத்தில் (11:114)  பகலின் (காலை, மாலை ஆகிய) இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவீராக என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வசனத்தில் பகலின் இரு முனைகளைக் குறிக்க இருமை பயன்படுத்தப்பட்டுள்ளது. இரவின் பகுதிகள் என்று பன்மையாக கூறப்பட்டுள்ளது.

அரபு மொழியில் பன்மை என்பது குறைந்தது மூன்று என்றும். இரண்டைக் குறிக்க இருமை எனத் தனிச் சொல் அமைப்பு உள்ளது. இது நமது பழக்கத்திலும் உள்ளது. சிந்தித்து விளங்காமல் பேசி வருகிறோம் என்பதை மேலே நினைவு கூறி உள்ளோம். எனவே இரவில் மட்டும் குறைந்தது மூன்று தொழுகைகள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இரவின் பகுதிகளிலும் என்று கூற முடியும்.

மக்ரிப், இஷா, சுபுஹ் என்ற மூன்று தொழுகைகளைத்தான்ந்த வார்த்தை குறிக்கின்றது. பகலின் இரு ஓரங்கள் என்பது லுஹர், அஸர் என்ற இரண்டு தொழுகைகளைக் குறிக்கின்றது. ஆக ஐந்து நேரத் தொழுகைக்கு அல் குர்ஆனில் ஆதாரம் உண்டா? என்ற கேள்விக்கு. ஐந்து வேளைத் தொழுகை உண்டு என்று இந்த வசனத்தின் மூலம் திருக்குர்ஆன் நேரடியாக பதில் சொல்லி விட்டது. 


உங்களை குழப்பியவரை வேறு யாராவது குழப்பி இருப்பார்கள். ஆகவே அவருக்கு இந்த விளக்கத்தைக் கூறுங்கள். அல்லாஹ் நேர் வழி காட்டுவான். 




                            
17:78   اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْـفَجْرِ‌ؕ اِنَّ قُرْاٰنَ الْـفَجْرِ كَانَ مَشْهُوْدًا‏ 
17:78. (நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள்கள் சூழும் வரையில் தொழுகையையும் ஃபஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக ஃபஜ்ரு (தொழுகையில்)  குர்ஆன் சாட்சி கூறுவதாக ருக்கின்றது.




24:58   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِيَسْتَـاْذِنْكُمُ الَّذِيْنَ مَلَكَتْ اَيْمَانُكُمْ وَالَّذِيْنَ لَمْ يَـبْلُغُوا الْحُـلُمَ مِنْكُمْ ثَلٰثَ مَرّٰتٍ‌ؕ مِنْ قَبْلِ صَلٰوةِ الْفَجْرِ وَحِيْنَ تَضَعُوْنَ ثِيَابَكُمْ مِّنَ الظَّهِيْرَةِ وَمِنْۢ بَعْدِ صَلٰوةِ الْعِشَآءِ ‌ؕ ثَلٰثُ عَوْرٰتٍ لَّـكُمْ‌ ؕ لَـيْسَ عَلَيْكُمْ وَ لَا عَلَيْهِمْ جُنَاحٌۢ بَعْدَهُنَّ‌ ؕ طَوّٰفُوْنَ عَلَيْكُمْ بَعْضُكُمْ عَلٰى بَعْضٍ‌ ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏ 
24:58. ஈமான் கொண்டவர்களே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்;  ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (ளுஹரில் உபரியான) உங்கள் ஆடைகளை களைந்துள்ள நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்- ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.


20:130   فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا‌ ۚ وَمِنْ اٰنَآىٴِ الَّيْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضٰى‏ 
20:130. (நபியே!) அவர்கள் சொல்வதைச் சகித்துக் கொள்வீராக! இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உம்முடைய இறைவனைப் போற்றிப் புகழ்வீராக! இன்னும் பகலின்  ஓரங்களிலும் இவ்வாறே துதிப்பீராக!  இதனால் ( கிடைக்கும் கூலியில்) நீர் திருப்தி பெறலாம்.

30:17   فَسُبْحٰنَ اللّٰهِ حِيْنَ تُمْسُوْنَ وَحِيْنَ تُصْبِحُوْنَ‏ 
30:17. ஆகவே, (முஃமின்களே!) நீங்கள் மாலைப் பொழுதை அடையும் போதும், காலைப் பொழுதை அடையும் போதும்அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருங்கள்.
30:18   وَلَـهُ الْحَمْدُ فِىْ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَعَشِيًّا وَّحِيْنَ تُظْهِرُوْنَ‏ 
30:18. இன்னும் வானங்களிலும், பூமியிலும்; அவனுக்கே புகழனைத்தும்; இன்னும், அந்தி நேரத்திலும் நண்பகல் (ளுஹர்) நேரத்திலும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்).

50:39   فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوْبِ‌ۚ‏ 

50:39. எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! இன்னும், சூரியன் உதிப்பதற்கு முன்னரும், (அது) மறைதற்கு முன்னரும் உம்முடைய இறைவனைப் போற்றி புகழ்வீராக!

இத்தனை வசனங்களும் தொழுகையின் நேரங்களையும் அவை ஐந்து நேரத் தொழுகைகள்தான்  என்பதையும் தெளிவாகக் கூறிக் கொண்டிருக்கின்றன.


நன்றி http://www.tamililquran.com/qurandispcmp.php?start=4.#4.:103 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.