முஸ்லிம்கள் அடுத்தவர்களுடைய அடையாளங்களை அழிக்கவில்லையே !ஏன்? சின்னங்களை சிதைக்கவில்லையே ஏன்?

உலகத்தில் யாரும் ஒருவரை ஒருவர் கொல்லக் கூடாது, போர் புரியக் கூடாது என்று தடுப்பதற்காக அமைக்கப்பட்டதுதான் .நா.சபை. அந்த சபையே ஒன்றுமே செய்ய முடியாத நிலையை இன்று பார்க்கிறோம்


அன்று இந்த மாதிரியான கட்டுப்படுத்தக் கூடிய எந்த சபைகளும் இல்லைமிகப் பெரிய ஆட்சி உமர்(ரலிஅவர்களிடம் இருந்ததுஅவர்கள் நினைத்து இருந்தால்,  அவர்களது ஆட்சியில்  இந்த உலகத்தையே பிடித்து இருக்கலாம்ஆனால் பிடிக்கவில்லையே ஏன்?  

அந்த மாதிரி எண்ணம் இல்லை. மக்காவில் வைத்து 13 ஆண்டுகள் தொல்லை கொடுத்தவர்களை பழி தீர்த்து இருக்கலாம். இந்த காலத்தவர்கள் என்றால் நிற்க வைத்து சுட்டு இருப்பார்கள். அந்த அளவு தொல்லை கொடுத்தவர்கள். துப்பாக்கி இல்லாவிட்டாலும் அக்கால வழக்கப்படி வாளால் வெட்டி இருக்கலாம். ஆனால் பழி தீர்க்கவில்லை. யாரையும் கொல்லவில்லையே ஏன்? அதுதான் இஸ்லாம்.


யாரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கம் முஸ்லிம்களிடத்தில் இருக்கவில்லை. போர் களத்திலும் அந்த நோக்கம் இருக்கவில்லை. இறைத்துாதர் காட்டிய வழியில் நடந்த எந்த ஒரு போராக இருந்தாலும். அங்கே குறைந்த அளவு உயிர் சேதத்தைத் தவிர வேறு எதுவும் நிலை பெறவில்லை. பெண்கள் கற்பழிக்கப்படுவது, குழந்தைகள் கொல்லப்படுவது, அடையாள சின்னங்கள் அழிக்கப்படுவது என்பதுதான் மற்றவர்கள் போரில் இருக்கும். இங்கே அவை இல்லை.


ஸ்பெயினில் முஸ்லிம்களுக்கு எதிராக என் செய்தார்கள்முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள். ஒரு பள்ளிவாசலைக் கூட விட்டு வைக்காமல் உடைத்து தள்ளினார்கள். மார்க்க அடையாளங்களை அழித்தார்கள். 

அதே மாதிரி இந்தியாவில் புத்த மத சுவடு கூட இல்லாமல் ஆக்கினார்கள். புத்த மதம் பிறந்த இடம் எது? இந்தியா. அந்த  இந்தியாவில் புத்த மதம் இருந்த அடையாளமே இல்லாமல் ஆக்கி விட்டார்கள். இருந்த அடையாளமும் இல்லை. பிறந்த அடையாளமும் இல்லை. இதுவெல்லாம் உலகில் மிகச் சாதாரணமாக நடக்கிறது.


இஸ்லாம் உலகில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை அடைந்தது. அரேபிய தீப கற்பமான வளைகுடாவிலே இன்றளவும் மிகச் சிறந்த செல்வ நிலையை அடைந்துள்ளது. சர்வ வல்லமை உடையதாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. முகலாயர்கள் மூலமாக இந்தியா வரை இஸ்லாம் இடம் பெற்று இருந்தது. ஆனால் முஸ்லிம்கள் அடுத்தவர்களுடைய  அடையாளங்களை அழிக்கவில்லையே சின்னங்களை சிதைக்கவில்லையே ஏன்? அடுத்தவர்களைக் கட்டுப்படுத்தவில்லையே.


இவற்றிலிருந்து என்ன தெரிகிறது. அல்லாஹ்வுடைய துாதர்(ஸல்) செய்ததெல்லாம் தற்காப்பு போர்கள், அறப்போர்கள். அதையெல்லாம் மற்றவர்கள் செய்த போர்கள் மாதிரிதான் என்று ஒப்பிட்டு சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஆகவே அல்லாஹ்வுடைய துாதர் ரசூல்(ஸல்) அவர்களுடைய தற்காப்பு போர்களான அறப்போர்களின் பின்னணியை, அதனுடைய எண்ணிக்கைகளை, அதனுடைய பெயர்களை, அதில் கலந்து கொண்ட வீரர்களான ஸஹாபாக்கள் வாழ்க்கையை, அந்த அறப்போர்களுக்காக அவர்கள் செய்த தியாகங்களை. இந்த தெடாரில் நாம் விரிவாக காண்போம் இன்ஷாஅல்லாஹ்.


நாம் அறிந்து கொண்ட விஷயங்களை மனதில் நிறுத்தி சிந்தித்து செயல்பட வேண்டும். இது இஸ்லாமிய வரலாற்று சம்பவங்களாக இருக்கிறது. எனவே உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் அறியச் செய்வது நமது கடமையாகும். இதன் மூலம் நமக்கு ஒரு நல்ல நிலை ஏற்படும். முஸ்லிம்களுடைய தரமே உலக அளவில் மாறும். ஏனெனில் உலகில் நிறைய பேர் தவாறக விளங்கி வைத்துள்ளார்கள். குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இஸ்லாத்தை தழுவி இருப்பவர்கள் எல்லாம் முதலில் என்ன சொல்கிறார்கள்.


இஸ்லாத்தைப் பற்றி நாங்கள் நினைத்தது வேறு என்று. அப்படியானால் வேறு விதமாக இஸ்லாம் சித்தரிக்கப்படுவதற்கு காரணம் என்ன?. இது போன்ற உண்மை வரலாறு மறைக்கப்பட்டதுதான். ஒரு சமுதாயத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்று சொன்னால் அந்த சமுதாயத்தின் வரலாற்றை மறைத்தால் போதும் என்பார்கள். ஒரு சமுதாயத்தின் வரலாறு மறைக்கப்பட்டுக் கொண்டே வந்தால். அந்த சமுதாயம் ஒன்றும் இல்லாமல் போய் விடும். அது நாடோடி சமுதாயமாக ஆகி விடும்.


எந்த ஒரு மொழிக்கு இலக்கணம் இல்லையோ அது மொழி அல்ல. எந்த ஒரு சமுதாயத்துக்கு வரலாறு இல்லையோ அது சமுதாயமே அல்ல. சாதாரண நாடோடிக் கூட்டமாகப் போய் விடும். அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று சொன்னால் நமது வரலாறுகள் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும். எதற்கு முன்னுரிமையும் முதல் உரிமையும் கிடைக்க வேண்டுமோ அதற்கு கிடைக்க வேண்டும். அதற்கு நாம்தான் முயற்சி செய்ய வேண்டும்.


எந்தக் கோணங்களிலெல்லாம் முயற்சிக்க வேண்டுமோ அத்தனை கோணங்களிலும் முயற்சிகள் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் முயற்சிக்காமல் இருக்கக் கூடாது. குறிப்பாக அரசு துறையில் உள்ளவர்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். முயற்சித்தால் அல்லாஹ் செயலாக்கித்தருவான். அதில் சந்தேகம் இல்லை.


முஸ்லிம்கள் நடத்தியது போர்களா? போராட்டங்களா? என்ற தலைப்பு இது. இதில் இறைத்துாதரின் அறப்போர் சம்பந்தமாக எழுதாமல். வேறு என்ன என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறார்களே. இப்படி ஒரு எண்ணம் வரலாம். பொய் முகங்களை தெளிவாக அடையாளம் காட்டினால்தான். உண்மை பளிச்சென்று தெரியும். எந்த ஒன்றும் மனதில் தெளிவாகப் பதிய வேண்டும் எனில் பீடிகைகள் முக்கியம். எவ்வளவு பெரிய அறிஞர்களாக இருந்தாலும் பீடிகைகள் இன்றி அவர்களது கருத்தை பதிய வைக்க முடியாது. இதுதான் மனித இயல்பு.


இறைத் துாதர் முஹம்மது(ஸல்) காலத்துப் போர் என்றவுடன் பத்ரு போர்தான் பெரும்பாலானவர்களின் நினைவுக்கு வரும். அதைத்தான் ரசூல்(ஸல்) காலத்தில் முதன் முதலில் நடந்த  போராக நம்மில் பலர் விளங்கி வைத்து இருக்கிறோம். போர் என்ற அடிப்படையில் நடந்த நிகழ்ச்சி அதுதான். இருந்தாலும் இந்த போருக்கு முன்னால் உள்ள பின்னணிகள் என்ன? இதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.


எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பின்னணியை விளங்காமல் செய்தியை மட்டும் நாம் தெரிந்து கொள்ளக் கூடாது. அப்படி தெரிந்து கொண்டோம் என்று சொன்னால் அது முழுமையானது ஆகாது. உண்மைகளை தெரிந்து கொள்ள உதவாது. அதில் நிறைய சந்தேகங்கள் இருக்கும். ஆகவே பின்னணிகளை அறிந்து கொள்வது மிக மிக அவசியமாக இருக்கின்றது. வரலாறு என்று சொன்னாலே அதனுடைய பின்னணிகள் காரணங்கள் இதனையெல்லாம் பார்க்க வேண்டும். அப்பொழுதான்  விளங்கும்.


மற்ற புத்தகங்களை விட வரலாறு புத்தகங்கள்தான் கனமாக பக்கங்கள் கூடுதலாக பெரிதாக இருக்கும். வரலாறு என்று சொன்னாலே காரண காரியங்களுடன் விளங்க வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து முழுமையான விபரங்களை, அறிவை நாம் பெற்றுக் கொள்ள முடியும். நாம் இதில் எத்தனை போர்கள் நடந்தன எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதையெல்லாம் புள்ளி விபரத்தோடு தெரிவது மட்டும் நமது நோக்கம் அல்ல. இந்த தொடரின் நோக்கமே நமக்கு என்ன படிப்பினைகள் முன் மாதிரி இருக்கிறது என்பதுதான்

அந்த படிப்பினைகளில் ஏற்கனவே நாம் முன்பு பார்த்த படிப்பினை. விசுவாசம் கொண்டவர்கள் முஃமின்கள்  அல்லாஹ் உடைய பாதையில் போரிடுவார்கள். யார் நிராகரிப்பாளர்களாக காபிர்களாக இருக்கிறார்களோ அவர்கள். ஷைத்தானுடைய வழியில் போரிடுவார்கள். ஆகவே ஷய்த்தானுடைய தோழர்களை எதிர்த்து போரிடுங்கள் என்று அல்லாஹ் சொல்லியுள்ளதை அறிந்தோம்.


ஆனால் இன்று உலகளாவிய அளவில் படிப்பினை  பெறாத முஸ்லிம்களில் பெரும் பகுதியினர் தங்களுக்குள் சண்டையிட்டு பிரிந்து கொண்டதுதான் அதிகம். காபிர்களுடன் அநியாயத்தை எதிர்த்து மோதியபொழுது ஏற்பட்ட உயிர் இழப்புகளை விட முஸ்லிம்கள் தங்கள் சகோதரர்களான முஸ்லிம்களுடன் அடித்துக் கொண்ட போதுதான் நிறைய ரத்தம் சிந்தி இருக்கிறோம்

பிரிவினை மார்க்கத்திற்கு முற்றிலும் புறம்பான செயல். தொடர் பகைமை எண்ணம் கொண்ட எல்லா சாராரும் நரகத்துக்கே உரியவர்கள். இவற்றைத் தெரிந்தும் படிப்பினை பெறாதவர்கள் என்ன செய்கிறார்கள். பிரிவினைவாதிகளின் இருப்பிடத்தை தேடிச் சென்று கை குலுக்கி ஆர்வமூட்டக் கூடிய வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.  


ஆகவே படிப்பினைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வரலாற்றை படிப்பினையாகத்தான் பார்க்க வேண்டும். வரலாற்றை கதை போல் பார்க்கும் நிலை மக்களிடம் உள்ளது. அதுதான் மனித இயல்பு. அந்த மாதிரியான மனித இயல்புப்படி பார்த்தால் படிப்பினைகளை வரலாறு விழுங்கி விடும்.

திரு குர்ஆனில் நபிமார்கள் வரலாறுகளையும் அவர்களை எதிர்த்தவர்கள் வரலாறுகளையும் அல்லாஹ் சொல்லி உள்ளான். 

வரலாறுகளில் மிக அழகியதை நாம் உமக்கு  கூறுகின்றோம் என்று (12:3) சூரா யூசுப்F பற்றி அல்லாஹ் சொல்லி உள்ளதை அறிவோம்

அதன் நோக்கம் என்ன? அதை நாம் சொல்லவில்லை. அதே அத்தியாயத்தில் அல்லாஹ்வே சொல்லி உள்ளான்

நிச்சயமாக யூசுஃபி(ன் வரலாற்றி) லும் அவரது சகோதரர்களி(ன் வரலாற்றி)லும் (விளக்கம்) கேட்பவர்களுக்குப் பல படிப்பினைகள் இருக்கின்றன” (திரு குர்ஆன்12:7) ”நிச்சயமாக (நபிமார்களாகிய) அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினைகள் இருக்கின்றது” ( திரு குர்ஆன்12:111)



வரலாறுகளை வெறும் வரலாறாக பார்ப்பதால் எந்த பயனும் இல்லை. வரலாறுகள் பெரும்பாலும் எல்லோரும் தெரிந்தவையாகத்தான் இருக்கும். மேலும் வரலாறுகள் ஞாபகத்தில் இருக்கும். படிப்பினைகள் தான் மறந்து விடும். ஷய்த்தான் மறக்கச் செய்வது படிப்பினைகளைத்தான். ஆகவே படிப்பினைகள் என்ற அடிப்படையில் அறப்போர் வரலாற்றை பார்ப்போம். தொடரும் இன்ஷாஅல்லாஹ்


முந்தைய தலைப்பு

'அலெக்ஸாண்டர் வழி நடப்போம்' என்பது சரியா?




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.