ஒரு கோப்பைச் சோத்துக்காக ஈமானை இழப்பதா?

💥 
அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
இந்த மாதத்தில் ஓதப்படும் முஹியத்தீன் மவ்லிதில் என்ன இருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியூமா? அங்கே இருப்பது சிர்க்கு இல்லையானால் உலகத்தில் சிர்க்கே கிடையாது. அது நரகத்துக்கு இழுத்துச் செல்லாவிட்டால் நரகத்துக்கு இட்டுச் செல்லும் எந்தக் கிரியையூம் கிடையாது. நீங்களாகவே சில வரிகளை வாசித்து நீங்களாகவே சிந்தித்து அல்லாஹ்வூக்குப் பயந்து ஒரு முடிவை எடுங்கள். இதோ அதிலிருந்து சில வரிகள்:
முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கூறியதாக சொல்லப்படுகின்றது:
ولولا لجام الشرع على لساني لأخبرتكم بما تأكلون وبما في بيوتكم تفعلون أنتم بين يدي كالقوارير أرى ما في ضمائركم وأبصر في ما سرائركم
எனது நாவின் மீது ஷரீஅத் எனும் கடிவளம் இல்லையாயின் நீங்கள் சாப்பிடக்கூடியவைகள் பற்றியூம் நீங்கள் வீட்டில் செய்யக்கூடியவைகளையூம் அறிவித்திருப்பேன். நீங்கள் என் முன்னே போத்தல்களைப் போன்றாகும். உங்கள் உள்ளங்களில் உள்ளவைகளை நான் காண்கிறேன்.
ما تطلع الشمس حتى تسلم علي وتخبرني بما يجري في البلاد
சூரியன் எனக்கு ஸலாம் சொல்லி உலகில் நடப்பவை பற்றி எனக்கு அறிவிக்காமல் உதிக்காது.
وعزة ربي إن السعداء والأشقياء يعرضون علي ويوقفون لدي وإن نور عيني في اللوح المحفوظ مقيم وأنا غائص في بحار علم الله القديم
எனது இறைவனின் கண்ணியத்தின் மீது ஆணையாக பாக்கியசாலிகளும் துர்ப்பாக்கியசாலிகளும் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றார்கள். என் முன் நிறுத்தப்படுகின்றார்கள். எனது கண்ணின் பிரகாசம் ளவ்ஹுல் மஹ்பூளில் இருக்கின்றது. நான் இறைவனது பூர்வீக அறிவில் மூழ்கியிருக்கிறேன?????;.
உங்கள் கண்மனியான நபி எப்போதாவது இப்படிக் கூறியது உண்டா?
كنت وأنا ابن عشر سنين أرى الملائكة تمشي حولي بإذن الله وأسمعهم يقولون لصبيان المكتب افسحوا لولي الله
நான் பத்து வயதாயிருக்கும் போது அல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரம் மலக்குகள் எனக்குச் சூழால்; நடப்பதைக் காண்கிறேன். அவர்கள் பள்ளிக்கூடச் சிறுவர்களைப் பார்த்து, “அல்லாஹ்வின் வலிக்கு இடம்கொடுங்கள்| என்று சொல்வதைக் கேட்பேன்.
எந்த நபிக்கும் கொடுக்காத அந்தஸ்துக்கள் எப்படி இவர்களுக்கு வந்தது?
قال رضي الله عنه لخادمه خضر اذهب إلى الموصل وفي ظهرك ذرية أولهم ذكر اسمه محمد يعلمه القرآن رجل أعجمي اسمه علي بغدادي في سبعة أشهر ويستكمل حفظه وهو ابن سبع سنين بللا نظر وتعيش أنت أربعا وتسعين سنة وشهر وسبعة أيام بلا خطر وتموت بأرض بابل فكان جميع ذلك بلا تفاوت كما ذكر
அவர் தனது பணியாளன் கிழ்ருக்கு சொன்னார்: ‘நீர் மவ்ஸிலுக்ச் செல். உனது முதுகில் ஒரு சந்ததி உண்டு. அவர்களில் முந்தியவர். ஒரு ஆண். அவரது பெயர் முகம்மத். அவருக்கு ஒரு அஜமி மனிதன் ஏழு மாதங்களில் குர்ஆனைப் படித்துக்கொடுப்பார். அவரது பெயர்: அலி பக்தாதி. ஏழு வருடங்களில் குர்ஆனை மணணமிடுவார். நீர் 94 வருடங்களும் 4 மாதங்களும் 7 நாட்கள் எந்த ஆபத்தும் இன்றி வாழ்வீர். பாபில் என்ற ஊரில் மரணிப்பீர்’ அவர்கள் கூறிய அனைத்தும் எந்த மாற்றம் இல்லாமல் நடந்தது.
அல்லாஹ் தனக்கு ஐந்து மறைவான அறிவூகளை சொந்தமாக்கிக் கொண்டான் என்பது பொய்யா? மவ்லிதை புணைந்தவர் மனிதர்களை இந்த அளவூக்கு முட்டால் என நினைத்துக்கொண்டாரா? எமது பகுத்தறிவூக்கு நான்கு தக்பீர்களையூம் சொல்லிவிடவேண்டியது தானே!
துஆ அல்லாஹ்விடமே கேட்கப்படவேண்டும், கேட்டால் அவன் நிச்சயம் தருவான் என அவன் வாக்களித்திருக்கும் போது இந்த மொலிதில் சொல்வதைப் பார்த்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்க்ள!!!
من استغاث بي في كربة كشفت عنه ومن نادى باسمي في شدة فرجت عنه
யாராவது கஷ்டத்தில் என்னைக் கொண்டு உதவி தேடினால் அவனது கஷ்டம் நீக்கப்படும். யாராவது எனது பெயரைச் சொல்லி அழைத்தால் அவனது கஷ்டம் நீங்கும்.
أمن يجيب المضطر إذا دعاه   கடும் துன்பத்திற்கு உள்ளானவன் அவனை அழைத்தால் பதிலளிக்கும் (அல்லாஹ் சிறந்தவனா? அல்லது அவர்களது தெய்வம் சிறந்ததா?) என்ற வசனத்தை குர்ஆனிலிருந்து எடுத்தெரிய வேண்டுமா?
யாகுத்பா என்று பாடப் படக்கூடிய ஒரு கவியில் முதல் அடி இப்படிக் கூறுகின்றது:
يا قطب أهل السما والأرض غوثهما
வானவர்களையூம் பூமியூலுள்ளவர்களையூம் இரட்சித்துக் காப்பாற்றுபவரே!
என்ன ஆச்சரியம்! எந்தப் பாவமும் செய்யாத மலக்குகளைக் காப்பாற்ற இவரின் உதவி தேவைப்படுகின்றதா?   அந்தப் பாடலில் இன்னொரு இடத்தில்
ومن ينادي اسمي ألفا بخلوته ............ أجبته مسرعا من أجل دعوته
யார் எனது பெயரை தனித்திருந்து ஆயிரம் விடுத்தம் அழைக்கின்றாரோ ……… அவனது அழைப்புக்காக நான் விரைந்து பதில் அளிப்பேன்.
என்ன ஆச்சரியம்! அல்லாஹ் ஒரு விடுத்தம் அழைத்தால் பதில் அளிப்பதாக வாககளித்திருக்கும் போது இவர்களை நாம் ஆயிரம் விடுத்தம் அழைக்க நாம் பைத்தியகாரர்களா?
எனது இஸ்லாமிய சசோதர சகோதரிகளே இப்போது நீங்கள் படித்த இஸ்லாத்தின் அடிப்படையில் உங்கள் பகுத்தறிவை முன்வைத்து சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கண்களில் மண்ணைத் தூவி உங்கள் பணத்தையல்ல உங்களது ஈமானையே பறிக்கப்படுகின்றது,
எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!💥

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.