“அருகாமை”யில் காப்பாற்றிய கலைஞர் கருணாநிதி
பைத்தியமா இவன்? AKJ இன்ஜினியர் என்பவர் 966 53 894 2460 என்ற நம்பரிலிருந்து சினிமா நடிகர் வடிவேல் படத்துடன் போட்டிருந்த விமர்சனம் இது.
என்ன காரணத்துக்காக பைத்தியமா இவன்? என போட்டார் தெரியுமா?
அல்குர்ஆன் 6:144. வசனத்திற்கு ஆ.கா.அ. அப்துல் ஹமீது பாகவி, தென்காசி E.M. அப்துர் ரஹ்மான், நூரிய்யி, பாஜில் பாகவி போன்ற முன்னோர்கள் செய்த தமிழாக்கங்களை போட்டிருந்தேன். அதை பார்த்து விட்டுத்தான் இன்ஜினியர் படிப்பு படித்த AKJ பைத்தியமா இவன்? என போட்டிருந்தார். அதற்கு நாம் அளித்த பதில்.
[21/07, 10:06 pm] Fazlulilahi: அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டுவனாக. இந்த கருத்தை முதலில் எழுதியவர்கள் அப்துல் ஹமீது பாகவி , தென்காசி E.M. அப்துல் றஹ்மான் நூரி ஆகியோர் தான். நீங்கள் யாரை பைத்தியம் என்று கூறி இருக்கிறீர்கள்? என்று நாம் பதிலில் கேட்டு இருந்தோம்.
வமினல் பகரிஸ்னைனி
وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِ
என்ற 6:144.ல் உள்ள இதற்கு பாகவி, நூரி போன்றவர்கள் செய்த மொழி பெயர்ப்பு. என்ன?
பசு இனத்திலும் ஆண் பெண் இரண்டு வகை உண்டு என்பதுதான். இதற்கு ஆதாரமாக 5 பதிப்புகளிலிருந்து ஆதாரங்களை போட்டோ எடுத்து போட்டிருந்தோம்.
இதன் பிறகும் AKJ இன்ஜினியர் போன்ற (ஆங்கில) காலேஜ்களில் படித்தவர்கள் மட்டுமல்ல, ஏழாண்டுகள் அரபு கல்லுாரிகளில் படித்தவர்களும் ஏன் தங்களை தமிழ் பல்கலைகழகம் என்று சொல்லிக் கொண்டவர்களும். கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
அதே நேரத்தில் வரவேற்று வாழ்த்தியவர்களும் உண்டு. இணைப்பில் உள்ள ஸ்கிரீன் ஷார்ட்களை பார்த்துக் கொள்ளுங்கள்.
சொல்லில் உள்ள குண்டு ة வை வைத்து பெண்பாலகாக் கருத வாய்ப்பிருக்கு
[21/07, 10:36 pm] திருச்சி...............: ما شاء الله
[21/07, 10:46 pm] கடையநல்லுார் ..........: Mashaa Allah good explanation
[21/07, 10:47 pm] கடையநல்லுார்--------: Jazak Allah khair
[22/07, 10:35 am] மேலப்பாளையம் ----- :
السلام عليكم🤝🏻
அரபு பெண்பால் சொல்லை தனித்தறிவதற்கு குண்டு ة
அலிஃப் சுங்றா ى
அலிஃப் குப்றா ا( பெரிய பேஸ்)
சொல்லின் இறுதியில் இருக்கும்
: بقرة
சொல்லில் உள்ள குண்டு ة வை வைத்து பெண்பாலகாக் கருத வாய்ப்பிருக்கு
விதிவிலக்காக சில சொல் ஆண்பால் அடையாளத்துடன் இருக்கும் ஆனால் அது பெண் பெயராக இருக்கும்
مريم
இதில்
خديجة فاطمة
போல குண்டு ة இல்லை. சில சொல் பெண்பால் அடையாளத்துடன் இருக்கும் ஆனால் அது ஆணாக இருக்கும்
موسى
சாமிரி மாட்டின் சப்தம் போன்று கத்த வைத்தது காளைகன்று தான் காளைக்கன்றின் பக்திதான் அவர்களின் உள்ளத்தில் புகுத்தப்பட்டது.
அதன் நீட்சிதான் இன்றும் தொடரும் காளைக்கன்று வழிபாடு(தஞ்சை பெரிய கோயில் ஒற்றைக்கல் நந்தி)
உங்களின் மேற்கோள்படி காளைமாடு என்பது தான் சரி
நன்றி ஜஸாக்கல்லாஹ் கைரா🤝🏻
இப்படியாக வரவேற்று வாழ்த்தியவர்களுக்கு மத்தியில், நீங்கள் அப்துல் ஹமீது பாகவி , தென்காசி E.M. அப்துல் றஹ்மான் நூரி போன்றோரை கிண்டலடித்து நக்கல் பண்ணுகிறீர்களா? பசு இனத்திலும் ஆண் பெண் இரண்டு வகை உண்டு என்ற அவர்கள் கருத்தை ஆதரிக்கிறீர்களா?
பகர் என்றால் பன்மை. அதை ஒருமையாக்குவதற்கு தா சேர்க்கப்படும். அதாவது பகர் என்றால் மாடுகள், பகரத் என்றால் ஒரு மாடு என்று பொருள். தம்ரத் என்றால் ஒரு பேரீச்சம்பழம். தம்ரு என்றால் பேரீச்சம் பழங்கள் என்ற பீ.ஜே. முக்தாருஸ்ஸிஹாஹ் என்ற அரபு அகராதி நுாலை ஆதாரமாகக் தந்துள்ளார்.
அது போல் நீங்கள் தமிழ் அகராதி நுாலில் இருந்து பசுவுக்கு ஆதாரம் தர வேண்டும் என்று சூடாகிப் பேசினார்கள் மவுலவிகள்.
அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், ஈவது விலக்கேல் என மனப்பாடமாக படித்து இருக்கிறோம். படிக்கிற வயதில் இவற்றின் பொருளை அறிந்து மனதில் பதிந்த பாடமாக ஆக்கவில்லை. வெறும் வாய்ப்பாடாகத்தான் இருந்தது. சிந்திக்கும் வயதில் தான் அதன் பொருள் மனதில் ஆனது.
அது போலத்தான். பசு பற்றி பள்ளி பருவத்தில் அறிந்து இருக்கிறோம். பகரா என்ற அரபுச் சொல் ஆண் மாடு, பெண் மாடு ஆகிய இரண்டையும் குறிப்பது போல் தான் பசு என்ற தமிழ் சொல்லும்.
முன்பு ஒரு முறை மவுலவிகள், M.A. பட்டதாரிகள், கம்யூட்டர் மேதாவிகள் ஸ்காலர்கள் (தாஇகள்) என இருந்த கூட்டத்தில் அருகாமையில் என்று ஒருவர் சொன்னார். பக்கத்தில் என்றா சொல்கிறீர்கள் என்று கேட்டேன். ஆம் என்றார். அப்படியானால் அருகில் என்று சொல்லுங்கள். பக்கத்தில் என்பதற்கு இணையான சொல் அருகில் என்பதுதான் என்றேன்.
மவுலவிகள், கம்யூட்டர் மேதாவிகள் உட்பட அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து அருகாமை என்றால் பக்கத்தில் என்று தான் அர்த்தம் என உறுதியாக நின்றார்கள். அருகா என்ற வார்த்தையிலேயே துாரம் என்ற பொருள் உள்ளதே புரியவில்லையா?
ஒரு சொல்லுடன் ஆமை சேர்ந்தால் எதிர் சொல் ஆகி விடும். செய் என்றால் செய்ய வேண்டும் என்று பொருள். அதனுடன் ஆமை சேர்ந்தால் செய்யாமை என எதிர் சொல் ஆகி விடும் . கல் என்றால் படி.ஆமை சேர்ந்தால் கல்லாமை. முயல் என்றால் முயற்சி செய்தல். ஆமை சேர்ந்தால் முயலாமை. இப்படி பல விளக்கங்கள் கொடுத்தோம்.
படித்த மாமேதைகள் மத்தியில் படிக்காதவனின் உண்மைச் சொல் என்றுமே எடுபடாது. அது போல் அருகாமை பற்றிய நாம் சொன்ன உண்மை விளக்கம் எடுபடவே இல்லை.
சென்னை தலைமைச் செயலகத்தில் IAS, IPS அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அது பேசப்பட்ட ஒரு விஷயம் கட்டம் கட்டப்பட்ட செய்தியாக பத்திரிக்கைகளில் வந்தது.
முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசிய ஒரு IPS அதிகாரி திருநெல்வேலிக்கு அருகாமையில் உள்ள கொடியன்குளத்தில் என்று பேசினார். உடனே குறுக்கிட்ட முதல்வர். அருகிலா அருகாமையிலா? என்று கேட்டார். தமிழே (முதல்வரே) குறுக்கிட்டு விட்டதால் சுதாரித்துக் கொண்ட IPS அதிகாரி இடத்தால் அருகில் உள்ளத்தால் அருகாமையில் என்று சமாளித்தார். இப்ப பத்திரிக்கைகளில் செய்தி வந்தது.
1997ல் தமிழக முதல்வராக டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபொழுது இது நடந்தது. அதன் பிறகுதான் படித்த மாமேதைகள் படிக்காதவனான எனது சொல்லை உண்மை என்று ஏற்றார்கள்.
அது போல் இவர்கள் கேட்டுள்ள தமிழ் அகராதி நுால் ஆதாரத்தை ஒரு கல்வி நிறுவன தாளாளர் அனுப்பித் தந்தார். அதில் பசு PACU, PASU 1.COW, 2. BULL என்று போட்டுள்ளார்கள். அதை இடம் பெறச் செய்துள்ளேன்.
தமிழ் அகராதிக் கலை PDF/132 ஐயும் போட்டோ எடுத்து இடம் பெறச் செய்துள்ளேன்.
ஆண் எருமை, பெண் எருமை என்று சொல்வது போல, ஆண் பசு, பெண் பசு என்றும் சொன்னார்கள். ஆனால் ஆண் பசு என்று சொல்லும் வழக்கம் இக்காலத்தில் இல்லாமல் ஆகி விட்டது என்பதற்குரிய தமிழ் அகராதி ஆதாரத்தையும் போட்டு விட்டேன்.

வமா அலைனா இல்லல் பலாஃக்
Comments