கிறிஸ்தவ ஃபாஸ்டராக இருந்த M.C முஹம்மத் மரணம்.

ஸ்ரீவைக் குடம் டாக்டர் மீரான் அவர்களுடைய உடன் பிறந்த கடைசி சகோதரர் டாக்டர் பிலால்  மரணம்.

இரண்டு பேரின் மரணச் செய்திகளும் ஒரே நேரத்தில் நமக்கு வந்துள்ளன

கிறிஸ்தவ ஃபாஸ்டராக இருந்தவர் கிறிஸ்துராஜ்.  1995 ஜனவரி 21 ஆம் தேதி மேலப்பாளையத்தில் நடந்த திரு குர்ஆன் மாநாடு 22ஆம் தேதி நடந்த தடா எதிர்ப்பு பேரணிகளில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் சொன்னது.


இஸ்லாத்தில் குறை கண்டு விமர்சிக்கும் நோக்குடன் குர்ஆனை படித்தேன்.  இஸ்லாமிய மார்க்கத்தை என் வாழ்வியலாக ஏற்றுக் கொள்ள வைத்தது திரு குர்ஆன். கிறிஸ்துராஜாக இருந்த நான்  M.C முஹம்மத் ஆக ஆனேன் என்றார்.  தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து வந்தார். இன்று  இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார். 

JJ டெய்லர்ஸ் உறவினரும் பிரச்சனையான கால கட்டங்களில் நமக்கு துணை நின்றவர். தவ்ஹீது மாநாடுகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தியவர்.  ஸ்ரீவைக் குடம் டாக்டர் மீரான் அவர்கள்.

அவருடைய உடன் பிறந்த கடைசி சகோதரர் டாக்டர் பிலால்  அவர்கள் கடந்த பல வருடங்களாக சவுதியில் டாக்டராக பணி புரிந்து வந்துள்ளார்.


தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வந்தார்.  அவரும் அதே கொரோனாவினால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டார்.  மிகவும் கவலைக் கிடமான நிலையில் அதி தீவிர சிகிச்சைக் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி வஃபாத்தாகி விட்டார்கள்... ...



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு