ஆறு நாட்களா? நான்கு நாட்களா? இரண்டு நாட்களா? எது சரி?
இன்று ஜும்ஆ உரையில் கேட்ட கேள்விகளும் பதிலும். வானங்களையும், பூமியையும் படைத்தது பற்றி குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் சொல்லிக் காட்டி உள்ளான்.
உங்கள்
இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் என்று 7:54. 10:3, 11:7, 57:4 ஆகிய வசனங்களில் கூறி உள்ளான்.
பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? என்று கேட்டு பூமியை 2 நாட்களில் படைத்ததாக 41:9 வசனத்தில் உறுதி கூறி உள்ளான்.
இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான் என 41:12 வசனத்தில் கூறி உள்ளான்.
இதை பார்க்கும் போது உங்களுக்கு ஒன்றுக்கொன்று முரண்பட்டது போல் தோன்றுகிறதா? இல்லையா?
நான் முஸ்லிம் என் வாப்பா முஸ்லிம் பெத்தாப்பா முஸ்லிம் என்று பெருமைப்படும் பரம்பரை முஸ்லிம்களான உங்களுக்கே முரண்பட்டது போல் தோன்றும் போது. இஸ்லாத்திலும் திரு குர்ஆனிலும் குறை கண்டுபிடிக்க முயல்பவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருப்பார்களா? கேட்டு வருகிறார்கள்.
நான் முஸ்லிம் என் வாப்பா முஸ்லிம் பெத்தாப்பா முஸ்லிம் என்று பெருமைப்படும் பரம்பரை முஸ்லிம்களான உங்களுக்கே முரண்பட்டது போல் தோன்றும் போது. இஸ்லாத்திலும் திரு குர்ஆனிலும் குறை கண்டுபிடிக்க முயல்பவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருப்பார்களா? கேட்டு வருகிறார்கள்.
41:9 ல் பூமியை இரண்டு நாட்களில் படைத்ததாகக் கூறுகிறான்.
41:12ல் வானத்தை இரண்டு நாட்களில் படைத்ததாகக் கூறுகிறான்.
அப்படியானால் வானமும் பூமியும் நான்கு நாட்களில் படைக்கப்பட்டது என்று கணக்கு வருகின்றது.
7:54. 10:3, 11:7, 57:4 ஆகிய வசனங்களில் ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டதற்கு இது முரணாக உள்ளதே?
ஆறு நாட்களா? நான்கு நாட்களா? இரண்டு நாட்களா? எது சரி?
ஆறு நாட்களா? நான்கு நாட்களா? இரண்டு நாட்களா? எது சரி?
இப்படி முஸ்லிம் அல்லாதவர்கள் இந்த ஆயத்துகளைப் பார்த்து விட்டு உங்களிடம் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? உங்கள் முழியைப் பார்த்தாலே தெரிகிறது பகு பகு என்று முழிப்பீர்கள் என்று.
நீங்கள் அரபிகளாக இல்லாவிட்டாலும் ஓரளவு அரபு மொழி தெரிந்தே இருக்கிறீர்கள். 7:54. 10:3, 11:7, 57:4 ஆகிய வசனங்களில் உள்ள
ஸமா - வானம்.
அர்ழ் - பூமி.
சித்த - ஆறு.
ஸபஃஅ - ஏழு
அய்யாம் - நாட்கள் என அறிவீர்கள்.
ஸஹன் என்றால் ஒரு தட்டை, பிளேட். ஸஹனைன் என்றால் இரண்டு பிளேட் என்கிறீர்களே அது போல் தான். யவ்ம் - நாள். யவ்மைன் - இரண்டு நாட்கள். 41:9
இதற்கான மேலும் உள்ள விரிவான விளக்கங்களைக் காண பிளாக்கரை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.
இஃக்ரஃ படிப்பீராக என்று இறங்கிய குர்ஆன் சிந்திப்பீராக என்று பல இடங்களில் கூறி உள்ளது. சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்டுள்ளது.
மேலோட்டமாகப் பார்க்காமல் சிந்தித்து ஓதினால் நீங்கள் முரண்பாடாக எண்ணும் வசனங்களுக்கு வேறு வசனத்தில் விளக்கம் இருக்கும் உங்கள் சந்தேகங்களை நீக்கும் வகையில் திருக்குர்ஆனே விளக்கம் சொல்லி விடும்.
பூமியைப் படைத்தல் என்பது இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.
பூமி என்ற கோளைப் படைத்தது இரண்டு நாட்கள்.
மனிதன் வாழ்வதற்காக பூமியைப் படைத்ததால் அதில் நிறைய ஏற்பாடுகளைச் செய்தான்.
இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட தாவர வகைகள் மட்டும் மூணரை லட்சங்கள் உள்ளன. இவை இந்த உலகத்தில் உள்ள மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை.
ஒரு பொருள் அசையாமல் இருப்பதற்கு இன்னொரு கனமான பொருளை அதன் மீது வைப்போம். இன்னும் உறுதியாக இருக்க ஆணியை அடித்து இறுக்குவோம். துளையிட்டு ஸ்குரு போன்றவற்றை முளைகளாக ஆக்குவோம். அது போல் 1674 கி.மீ. வேகத்தில் ஓடும் பூமியின் அதிர்ச்சி மனிதர்களுக்குத் தெரியாமல் இருக்க, மனிதர்கள் தூக்கி எறியப்படாமல் இருக்க, கட்டடங்கள் நொறுங்கி விடாமல் இருக்க. இன்னும் பல காரணங்களுக்காகவும் மலைகளை முளைகளாக ஆக்கினான். இவை பற்றி விவரித்தால் உரை நீண்டு கொண்டே போகும்.
நிலத்தடி நீர் போன்ற ஏராளமான ஏற்பாடுகளை பூமிக்குள் அமைத்தான். இது போன்ற ஏற்பாடுகளுக்கு இரண்டு நாட்கள் என்று திரு குர்ஆனே விளக்கி இருக்கிறது.
மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் மற்ற கோள்களுக்குத் தேவை இல்லை என்பதால் அவற்றையும் வானத்தையும் படைக்க சேர்த்து இறைவன் எடுத்துக் கொண்டது இரண்டு நாட்களாகும்.
வானத்தைப் படைக்க இரண்டு நாட்கள்,
பூமியைப் படைக்க இரண்டு நாட்கள்,
பூமிக்குள் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்ய இரண்டு நாட்கள்
ஆக ஆறு நாட்கள் என்பது இதன் பொருள்.
பூமியை மட்டும் தனியாகச் சொல்லும்போது இரண்டு நாட்கள் என்று சொல்லப்பட்டால் சிறப்பு ஏற்பாடுகளை நீக்கி விட்டு இரண்டு நாட்கள் என்று பொருள்.
இனி அல்லாஹ் தந்துள்ள பதிலைப் பாருங்கள்.
நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே. 41:10.
இதுவரை நீங்கள் படித்தது நாம் இன்று (03-07-20) ஆற்றிய ஜும்ஆ உரை
அடுத்த தலைப்பான
ஜெயலலிதாவே செட்டப் வழக்கு என்றதை உண்மை என்றது யார்? என்பதைக் காண கிளிக் செய்யவும்
முந்தைய தலைப்பு
Comments