இன்று 01-07-2020 வந்த மேலப்பாளையம் மரணச் செய்திகள்
ஜ.உ.சாவின் தலைவர் P.A. காஜா முஈனுத்தீன் பாகவி அவர்களின் உடன் பிறந்த அண்ணன் ஜனாப். P.A. முக்தார் அவர்களின் மனைவியும், P.A.K.
மனைவியின் சகோதரியும் மேலப்பாளையம் தப்லீக் ஜமாஅத் முன்னோடி சில்லான் தாடி என்றழைக்கப்பட்ட
மாமா சில்லான் முஹம்மது மைதீன் அவர்கள் மகளும் M. ஷம்சுல் ஹுதா அவர்களின் தாயாருமான நபிஸத்துல் மிஸ்ரிய்யா அவர்கள் இன்று
(01-07-2020 புதன்கிழமை இரவு 9 : 30 மணியளவில் மரணமடைந்தார்கள்.
*இன்ஷாஅல்லாஹ் ஜனாஸா தொழுகை நாளை
(02-07-2020 வியாழக்கிழமை) காலை 9:00 மணிக்கு மேலப்பாளையம் பெரிய தெரு பள்ளிவாசல் கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.*
-----------------------------இன்று 01-07-2020 ஆசுரா மேலத்லத் தெருவை சேர்ந்த கொள்கை சகோதரர் காஜா மைதீன்* அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்).
அன்னாரின் ஜனாஸா தொமுகை இன்று இரவு 7:30 மணியளவில் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் வைத்து நடைபெறும். பின்னர் பெரிய கொத்துபா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் நடைபெறும். அனைவர்களும் ஜனாஷா தொழுகை மற்றும் அடக்கம் செய்வது அனைத்திலும் கலந்து கொண்டு அன்னாரின் மறுமைக்காக துஆ செய்யவும்
இவர் குடும்பப் பெயர் சமாயினா. ஆக்காளை வீடு என்பார்கள் நம் மூலம் துபை வந்தவர்களில் ஒருவர். பால்ய நண்பர் 1980 - 83வரை சமரசம் ஆசிரியர், காயல்பட்டிணம் ஹைதுரூஸ் ஆலிம் போன்றவர்களை வைத்து தவ்ஹீது கூட்டங்கள் போட பயன்பட்டவர்.
---------------------------------------------
குட்டிமூப்பன்தெரு ஹாஜி கே.எஸ்.செய்யதுமைதீன் அவர்களின் மனைவி (வெள்ளை மீரான் குடும்பம்) வெ.மு.பாத்திமுத்து பீவி இன்று மாலை வபாத்தானாகள்.நல்லடக்கம் நாளை காலை 9 மணி
ஷார்ஜா ஸபீர் ரெஸ்ட்டில் பணி புரியும் ஏகத்துவ சகோதரர் மதார் அவர்களின் தாயார். பாளைத் தொகுதி MLAவும் முன்னாள் அமைச்சருமான மைதீன் கான் அவர்களின் நம்பிக்கைக்குரியவர் K.S.செய்யதுமைதீன்
---------------------------------------------------------------
புலி அன்சாரி அவர்கள் ஓடைத் தெரு
-----------------------------------
சப் பாணி ஆலிம் மேலத்தெருவை.சாந்த -நூர்ருன்நிஷா.
--------------------------------------------
மறுமை வாழ்வு சிறப்பிக்க தூய வல்லோனிடத்தில் அதிகமதிகம் துவா செய்யுங்கள்... என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
---------------------------
நேற்று எங்கள் காயங்கட்டி குடும்பத்தைச் சார்ந்த மூத்தவர்களில் ஒருவரான அண்ணன் ஷேக் மைதீன் அவர்கள் திடீர் மரணம்.
ஒவ்வொருவரும் மரணிக்கக் கூடியவர்களே! என்று பிறருக்கு ஆறுதல் சொல்லி விடுவோம். நமக்கு என வரும்போது ஜீரணிக்க முடியாது.
அண்ணன் ஷேக் மைதீன் அவர்கள் மனைவியின் சகோதரரும் சம்பந்தியுமான எனது நண்பர் ஏயன்னா இப்றாஹீம் மஹ்ழரியிடம் இதைத்தான் சொல்ல முடிந்தது.
1965ல் அண்ணன் ஷேக் மைதீன் அவர்கள் குர்ஆன் ஹாபிழாக ஆகி நெய்னாம் பள்ளியில் தராவீஹ் தொழ வைக்க என் தந்தை அழைத்துச் சென்ற காட்சி நேற்று நடந்தது போல் உள்ளது. இதுதான் உலகம்.
Comments