2:54 பெருநாள் டிரஸ் பரிசும் கேள்வியும்

குர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைத்துாதர்கள் எந்த மக்களுக்காக அவர்கள் துாதர்களாக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களுக்கு அவர்கள் போதனை செய்யும்போது யா ஃகவ்மி - என் சமுதாயமே என்று அழைத்து அவர்களுக்கு உபதேசித்ததாக அல்லாஹ் கூறுவதை நாம் கண முடியும்.

அந்த இறைத்துாதர்களைப் பற்றி குறிப்பிடும்போது அல்லாஹ்வும் இன்ன சமுதாயத்துக்கு அனுப்பப்பட்ட இன்ன துாதர் என்று அவர்களை அந்தந்த சமுதாயத்துடன் இணைத்துக் கூறுவதை நாம் காண முடியும்.

இந்த நடைமுறை இரண்டு துாதர்களைப் பற்றி கூறும்போது மட்டும் மாறுபடுவதைக் குர்ஆனில் நாம் காண முடியும்.

அந்த இறைத்துாதர்ககள் இரண்டு பேர் யார்? ஏன் இந்த மாற்றம்? என்ற சிந்தனையை இந்த வார ஜும்ஆ உரையின் தலைப்பாக நாம் எடுத்துக் கொண்டோம். முன்பாக அதனைக் கேள்வியாகவும் வைத்தோம்.

யா ஃகவ்மி - என் சமுதாயமே என்று எந்த இறைத் துாதர்கள் அழைக்கவில்லை? 

இன்ன ஃகவ்ம் -சமுதாயம்  என்ற வார்த்தை எந்த இறைத் துாதர்களுக்கு பயன்படுத்தப்படவில்லை?

உலகில் உள்ள எல்லா மனிதர்களும் ஒவ்வொரு சமுதாயத்தைச் சார்ந்தவர்களே. 

யா ஃகவ்மி - என் சமுதாயமே என்று அழைக்காத. குறிப்பிட்ட இறைத் துாதர்களுக்கு ஏன் சமுதாயம் இல்லை? 

ஆகிய கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பவர்களுக்கு பெருநாள் டிரஸ் பரிசு அளிக்கப்படும் என்று நேற்று (17-07-2020). காலை அறிவித்து மேலப்பாளையம் சகோதரர்களுக்கு அனுப்பி இருந்தோம். இந்திய நேரம் மதியம் 2 மணிக்குள் பதில் தர வேண்டும் என்று கூறி இருந்தோம்.

இந்த 2:54  வசனத்தில் சமுதாயம் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.  
ஃகவ்ம் - சமுதாயம்
ஃகவ்மி - என் சமுதாயம் 
ஃகவ்மிஹி - அவருடைய சமுதாயம் 
லிஃகவ்மிஹி - அவருடைய சமுதாயத்துக்கு
யா ஃகவ்மி - என் சமுதாயமே
இப்படி வார்த்தைக்கு வார்த்தை பொருள் செய்வது  மிக  மிக எளிது. வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு  தந்த உடன் அறிஞர், ஆய்வாளி,  படைப்பாளி, அல்லாமா என்று எண்ணி விடுகிறார்கள். வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு  தர பெரிய திறன் ஒன்றும் தேவை இல்லை. அகராதிகளை பார்த்தால் போதும்.

ஆய்வு செய்யத்தான் அறிவுத்  திறன் தேவை.  அல்லாஹ் தனது துாதர்களைப் பற்றி கூறும் போது தேவையான இடங்களிலெல்லாம் ஃகவ்ம் - சமுதாயம் பற்றியும் குறிப்பிட்டுள்ளான். 


2:54, 60,67  மூஸா தமது சமுதாயத்தை நோக்கி "என் சமுதாயமே!

7:59. நூஹை, அவரது சமுதாயத்திடம்

7:80. (லூத்) தமது சமுதாயத்திடம் கேட்டார்.

7:159. மூஸாவுடைய சமுதாயத்தில் 

9:70. இப்ராஹீமின் சமுதாயம்,

11:50. ஆது சமுதாயத்திடம், அவர்களது சகோதரர் ஹூதை

11:61. ஸமூது சமுதாயத்திடம், அவர்களின் சகோதரர் ஸாலிஹை 

இப்படியாக வசனங்களைக் குர்ஆனில் காண்கிறோம்.

இறைத்துாதர் ஈஸாநபி(அலை) அவர்கள் பற்றிக் கூறும்போது. ஈஸா, மஸீஹ் என்பதுடன் கவ்ம் என்ற வார்த்தை சேர்த்து கூறப்படவே இல்லை.

மற்ற இறைத் துாதர்கள் யாருக்கு அனுப்பப்பட்டார்களோ அவர்கள் பற்றி குர்ஆனில் சொல்லும்போது, இந்த துாதரை இந்த சமுதாயத்துக்கு அனுப்பி வைத்தோம் என்று சொல்லப்பட்டுள்ளதைக் காண்கிறோம். 

இறைத்துாதர் நபி ஈஸா(அலை) அவர்கள் இன்ன சமுதாயத்துக்கு துாதராக அனுப்பப்பட்டார் என்று சொல்லப்படவில்லை.


இறைத்துாதர் ஈஸா நபி அவர்கள் மற்ற நபிமார்கள் போல் யா ஃகவ்மி என்னுடைய சமுதாயமே என்று அழைத்த மாதிரியான வசனங்களும் குர்ஆனில் இல்லை. 

குர்ஆனில் எந்த இடத்திலும் ஈஸா நபியின் ஃகவ்ம் சமுதாயம் என்று சொல்லப்படவே இல்லை

ஈஸா நபி அவர்களுடன் ஃகவ்ம் - சமுதாயம் என்று சேர்த்து கூறப்பட்ட ஒரே வசனம். 

மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்டபோது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் (ஏளனமாகக்) கூச்சலிட்டனர். 43:57.  என்ற வசனம் மட்டும் தான்.

இந்த வசனத்தில் உள்ள உங்களுடைய - சமுதாயத்தினர் என்றுள்ள வார்த்தை நபி ஈஸா(அலை) அவர்கள் உடைய ஃகவ்ம் - சமுதாயம் பற்றியது அல்ல. இறுதி இறைத் துாதர் முஹம்மதுநபி (ஸல்) அவர்களுடைய ஃகவ்ம் - சமுதாயம் பற்றி சொல்லப்பட்டதுதான்.


பனீ இஸ்ரவேலர்களுக்கு நபியாக வந்த மூசா,  அவர்களை என் சமுதாயமே  (2:54, 60,67 )என்று அழைத்ததாக குறிப்பிடும் அல்லாஹ், 


அதே சமுதாயத்துகே நபியாக வந்த ஈஸா, அவர்களை பனீ இஸ்ரவேலர்களே என்றே அழைத்ததாக கூறுவதை நாம் காண்கிறோம்5:72. 61:6. 

ஈஸா(அலை) அவர்கள் தாயார் மர்யம்(அலை) அவர்கள் பற்றி கூறும்போது அவர் தமது சமுதயாத்திடம் வந்தார் 19:27. என்று உள்ளது. அதாவது மர்யம்(அலை) அவர்களை அவரது சமுதயாத்துடன் இணைத்துக் கூறி உள்ளான் அல்லாஹ்.. 

ஆனால் மர்யம்(அலை) அவர்கள் பெற்றெடுத்த பிள்ளையான ஈஸா(அலை) அவர்களை குர்ஆனின் எந்த இடத்திலும் எந்த சமுதாயத்துடனும் இணைத்துக் கூறப்படவே இல்லை.

மற்ற இறைத்துாதர்களைப் போல ஈஸா(அலை) அவர்களுக்கு ஏன் சமுதாயம் என்று ஒன்று இல்லை? அவர்கள் ஏன் ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவராக கூறப்படவில்லை?

வாழையடி வாழையான மனிதனின் வாரிசுத் தொடர் - தலை முறை என்பது அவனது தந்தை வழியாகத்தான் வரும். தந்தையின் குடும்பம், குலம், கோத்திரம், மொழி நாடு அடிப்படையில்தான் பிள்ளைகள் கூறப்படுவார்கள்.

எல்லா இறைத்துாதர்களும் தந்தை வழி வந்த வாரிசுத் தொடராக இருந்தார்கள். அதனால் இயற்கையான முறைப்படி அவர்களது தந்தையின் சமுதாயத்தவராக இருந்தார்கள்.

ஈஸா(அலை) அவர்கள் தந்தையின்றி அற்புதத்தில் பிறந்தவர்கள். ஆகவே அவர்களுக்கு தந்தை வழி சமுதாயம் கிடையாது. 

அதனால் பனீ இஸ்ராயீல்களைப் பார்த்து யா ஃகவ்மி - என் சமுதாயமே  என்று கூறினால் தவறாக ஆகி விடும். இது தான் குர்ஆனின் நடைமுறையாக உள்ளது. 

இந்த விதி முறைகளுக்கு மாற்றமாக ஒரு வசனத்தைக் கூட குர்ஆனில் காண முடியாது. தாயும் தந்தையும் இன்றி மண்ணால் படைக்கப்பட்டவர் ஆதம்(அலை) அவர்கள். 

ஆகவே குர்ஆனில் ஆதமுடைய ஃகவ்ம் - சமுதாயம் என்றும் கூறப்படவில்லை. பனீ ஆதம் -  ஆதமுடைய மக்கள் - பிள்ளைகள் என்றே எல்லா இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. 

ஆதம்(அலை) ஈஸா(அலை) சம்பந்தமான இந்த உண்மையை நிலையை ஒத்த நிலையை  குர்ஆனும் கூறி உள்ளது. 


அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார்.489 அவரை மண்ணால் படைத்து 'ஆகு' என்று அவரிடம் கூறினான்.506 உடனே அவர் ஆகி விட்டார். 3:59.

இந்த ஒரு வசனத்தில் மட்டும் தான் ஆதம்(அலை) ஈஸா(அலை) ஆகிய இருவர் பெயரும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. 

இந்த சொல்லாட்சிகளும் குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு ஆதாரங்களாக உள்ளன. 


மேற்கண்டவை தான் நேற்றைய நமது  ஜும்ஆ உரையாக இருந்தது. இஸ்ரா, ஆதிலா, பஷ்ஷார், ஸமர் ஆகிய 4 சிறுவர் சிறுமிகள் மட்டும்  ஆதம்(அலை)  என்று மட்டும் பதில் கூறி இருந்தார்கள். ஆறுதல் பரிசாக ரூபாய் ஐநுாறு கொடுத்தோம். மார்க்க கேள்வி தானே பணம் வேண்டாம் என்று கூறி விட்டார்கள். ----
--------------------------------------------------------------


இந்த 2:54 வசனத்தில்  “இன்ன” என்ற தஃகீத்  இடைச் சொல்  இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது. இதற்கு   “நிச்சயமாக” என்று  சிலர் தமிழாக்கம் செய்துள்ளனர். 

"இன்ன" "அன்ன"  என்பது இடைச் சொல்லாகும். இடைச் சொற்களுக்கு அது போன்ற இடைச் சொல்லைத்தான் பொருள் செய்ய வேண்டும்.  

இடைச் சொல் என்றால் அதைத் தனியாகக் கூறினால் அா்த்தம் இருக்காது. இன்னொரு சொல்லுடன் சோ்த்தால்தான் அா்த்தம் தரும்  என்பதை முன்பு விளக்கி இருக்கிறோம். 

"இன்ன" என்பதற்கு “நிச்சயமாக” என்று  பொருள் செய்ய வேண்டும் என்ற  நிலைப்பாட்டில் உள்ள ஜான் டிரஸ்ட், பாகவி, தாருஸ்லாம், அன்வாருல் குர்ஆன், இம்தாதி, றஹ்மத் ஆகியோர். 2:54. ல் உள்ள இரண்டு  "இன்ன"வில் ஒன்றை மொழி பெயர்த்து மற்றொன்றை மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார்கள்.  

இது போன்றே “நிச்சயமாக” நிலைப்பாட்டில் உள்ள  எல்லா தர்ஜமாக்களும் உள்ளன.

இனி 2:54ன் வார்த்தைக்கு வார்த்தை

وَإِذْவஇ(ர்)து 
போது -சமயம் - நேரம்

قَالَ- ஃகால 
கூறினா(ன்)ர் - சொன்னா(ன்)ர்

وَإِذْ قَالَவஇ(ர்)து  ஃகால 

அவர் கூறியபோது

مُوسَىٰ மூஸா 

لِقَوْمِهِ - லிஃகவ்மிஹி 
தமது (தன்) சமூகத்திற்கு - தம் சமூகத்தாருக்கு - அவருடைய மக்களுக்கு


يَا قَوْمِ யா ஃகவ்மி 
என் சமூகத்தாரே!

إِنَّكُمْ - இன்னகும் 
நீங்களே

ظَلَمْتُمْ ழலம்தும் 
உங்களுக்கே தீங்கிழைத்து விட்டீர்கள் - நீங்கள் அநியாயம் (அக்கிரமம் - அநீதி - அநியாயம்) செய்துவிட்டீர்கள் - 

أَنفُسَكُم அன்Fபுஸகும் 
உங்களுக்கே -  நீங்களே - 

بِاتِّخَاذِ பித்திகா(ரி)தி
எடுத்துக் கொண்டதன் மூலம் - எடுத்துக் கொண்டதினால்

كُمُ - குமு
நீங்கள்

بِاتِّخَاذِكُمُ - பித்திகா(ரி)திகுமு
நீங்கள் எடுத்துக் கொண்டதனால்

الْعِجْلَ -  அல் ஃஇஜ்ல 
காளைக் கன்று

فَتُوبُوا Fபதுாபூவ் 
எனவே மன்னிப்புக் கேளுங்கள்! - ஆகவே மனந்திரும்புங்கள் -  பாவமன்னிப்புக் கோருங்கள் -பாவ மீட்சி கோருங்கள்;- பாவத்தை விட்டு திரும்புங்கள் 

إِلَىٰ- இலா 

மேல் - (அதன்)  பக்கம் - (அதன்)பால் - வரை

بَارِئِكُمْ- பாரியிகும்
உங்களைப் படைத்தவன்

إِلَىٰ بَارِئِكُمْ இலா பாரியிகும் 
உங்களைப் படைத்தவனிடம் - உங்களைப் படைத்தவனின் பக்கம் 

فَاقْتُلُوا - Fபக்துலுா
ஆகவே கொல்லுங்கள் - கொன்று விடுங்கள் - அவர்கள் கொல்லப்பட்டனர்- மாய்த்துக் கொள்ளுங்கள்,

أَنفُسَكُمْ அன்Fபுஸகும் 
உங்களையே -  உங்கள் உயிர்களை 

ذَٰلِكُمْ -  தா(ரா)லிகும் 
அது

خَيْرٌ - கைருன்
நல்லது - சிறந்தது

لَّكُمْ லகும் 
உங்களுக்கு

عِندَ- இன்த
இடம்

بَارِئِكُمْ- பாரியிகும்

உங்களைப் படைத்தவன்


عِندَ بَارِئِكُمْ இன்தபாரியிகும்
உங்களைப் படைத்தவனிடம்

فَتَابَ - Fபதாப  
எனவே மன்னித்தான்

 عَلَيْكُمْ -அலைக்கும்
உங்களை


فَتَابَ عَلَيْكُمْ - Fபதாப  அலைக்கும்
ஆகவே அவன் உங்களை மன்னித்தான்

إِنَّهُ -  இன்னஹு
அவனே

هُوَ - ஹுவ
அவன்  

إِنَّهُ هُوَ இன்னஹு ஹுவ
அவன்தான் - அவனே


التَّوَّابُ அத்தவ்வாபு
மன்னிப்பவன் - மிக மன்னிப்பவன் - மன்னிப்பை ஏற்பவன் - மீட்சி அளிப்பவன் - மிக்கப் பிழை   பொறுப்பவன்

الرَّحِيمُ அர் ரஹீ(மு)ம்
நிகரற்ற அன்புடையோன் - பெருங் கருணையாளன்  கருணையாளன் -கிருபையுடையவன் -பேரன்பாளன்.


وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُم بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَىٰ بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ  إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ﴿٥٤


வஇ(ர்)து  ஃகால  மூஸா லிஃகவ்மிஹி யா ஃகவ்மி இன்னகும் ழலம்தும் அன்Fபுஸகும் பித்திகா(ரி)திகுமுல்ஃஇஜ்ல   Fபதுாபூவ்         இலா பாரியிகும்  Fபக்துலுா அன்Fபுஸகும் தா(ரா)லிகும் கைரு(ன்)ல் லகும் இன்தபாரியிகும் Fபதாப   அலைக்கும் இன்னஹு ஹுவத்தவ்வாபுர் ரஹீ(மு)ம்

மொழிப் பெயர்ப்புகள் : 


மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, "என் சமூகத்தாரே! காளைக் கன்றைக் கடவுளாக்கிக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே பாவமிழைத்துக் கொண்டீர்கள். ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவ மீட்சி கோருங்கள்; உங்களுள் ஒருவர் மற்றவரை மாய்த்துக் கொள்வதுதான் உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிக்கத் தக்கது" எனக் கூறினார். (அவ்வாறே செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைத்துப் பாருங்கள்). நிச்சயமாக, அவன் பாவ மீட்சியை ஏற்று மன்னிப்பவன்; நிகரற்ற அன்பாளன். - (அதிரை ஜமீல்)

"என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கிழைத்து விட்டீர்கள்.19 எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! உங்களையே கொன்று விடுங்கள்!20 இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நல்லது'' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக! அவன் உங்களை மன்னித்தான். அவனே மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். - (PJதொண்டி)


மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை (கடவுளாக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்துவிட்டீர்கள்ஆகவேஉங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக்கோருங்கள்உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்அதுவே உங்களைப் படைத்தவனிடம்உங்களுக்கு நல்லதாகும்” எனக் கூறியதை (நினைவு கூறுங்கள்.) (அவ்வாறு நீங்கள் செய்ததால்) அவன் உங்களை மன்னித்தான் நிச்சயமாகஅவன் மன்னிப்பவனாகவும்பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.  (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)


மூஸா தம் சமூகத்தாரை நோக்கி "என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்" எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான். - டாக்டர். முஹம்மது ஜான்



பின்னும் (நினைத்துப் பாருங்கள்:) மூஸா தன் சமூகத்தாரை நோக்கி "என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டதனால் (பகுத்தறிவுடைய) நீங்கள் (கேவலம் ஒரு மிருகத்தை வணங்கி) உண்மையாகவே உங்களுக்கு தீங்கிழைத்துக் கொண்டீர்கள். நீங்கள் மனம் வருந்தி உங்களை படைத்தவனிடம் மீண்டு உங்(களிலுள்ள வரம்பு மீறியவர்)களை நீங்களே கொன்று விடுங்கள். இதுதான் உங்களை படைத்தவனிடம் உங்களுக்கு நன்மை தரும்" என்று கூறினார். ஆகவே (அவ்வாறே நீங்களும் செய்ததனால்) உங்களை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான். - ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)


மேலும், இதையும் நினைவுகூருங்கள்: மூஸா, (இந்த அருட்கொடைகளைப் பெற்றுத் திரும்பி வந்து) தம் சமுதாயத்தார்களை நோக்கி, “என்னுடைய சமுதாயத்தாரே! காளைக்கன்றை நீங்கள் தெய்வமாக்கிக் கொண்டதனால் திண்ணமாக உங்களுக்கு நீங்களே (பெரும்) அநீதி இழைத்துக் கொண்டீர்கள். ஆகவே, நீங்கள் உங்களைப் படைத்த இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். மேலும் உங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்ளுங்கள். இதுவே உங்களைப் படைத்த இறைவனிடம் உங்களுக்கு நன்மை பயக்கும்” என்று கூறினார். (அந்நேரத்தில்) உங்கள் இறைவன், உங்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும் கருணை பொழிபவனுமாய் இருக்கின்றான். -  (IFT)

மேலும், மூஸா தன் சமூகத்தாரிடம் “என்னுடைய சமூகத்தாரே, நீங்கள் காளைக்கன்றை வணக்கத்திற்குரியதாக எடுத்துக்கொண்டதன் காரணமாக நிச்சயமாக உங்களுக்கு நீங்களே அநீதம் இழைத்துக் கொண்டீர்கள்; ஆகவே உங்களைப் படைத்தவனிடம் நீங்கள் (பாவ மன்னிப்பு பெற) தவ்பாச் செய்யுங்கள்; ஆகவே உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளுங்கள்; இதுதான் உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்” என்று _ (நினைத்துப் பாருங்கள்). ஆகவே, (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் (மன்னித்து) உங்கள் தவ்பாக்களை அங்கீகரித்தான்; நிச்சயமாக அவன்தான் தவ்பாவை மிகுதியாக ஏற்(று மன்னிப்)பவன்; மிகக் கிருபையுடையவன்.(அல்-மதீனா அல்-முனவ்வரா)





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு