2:50 கடல் பிளந்த உண்மையும் கட்டுக் கதையும்

இந்த வசனத்தில் கடல் பிளந்தது  பற்றி கூறப்பட்டுள்ளது.  ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒரு சாராருக்கு சாதகமாக  (அருளாக)வும் இன்னொரு சாராருக்கு பாதகமாகவும் அமையும். அதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாணமாகும். 

கடல் பிளந்தது மூஸா நபிக்கு ஆதரவாக -அருளாக ஆனது. 

பிர்அவ்ன் கூட்டத்துக்கு  எதிராக - அழிவாக ஆனது.

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/250.html



மக்கள் உண்மையை விட புராணங்கள் மாதிரி சுவாரஸ்யமான கட்டுக்  கதைகளையே விரும்புவார்கள். அதனால் பிர்அவ்ன் சம்பந்தமாக நிறைய கட்டுக் கதைகள் உள்ளன.  அவற்றில் இரண்டை தருகிறோம்  பாருங்கள். அதற்கு முன் 2:50 வசனத்தை ஒட்டி சிறு விளக்கம்.

إِذْ  என்ற இந்த வார்த்தை நேரம் -  போது - சமயம்  என்ற பொருளுக்காக பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்,  இதை எதனுடன் இணைக்கிறோமோ அந்த பொருளுடன் "போது - நேரம் - சமயம் போன்றவைகளை இணைத்துக் கொள்ள வேண்டும். 

உதாரணமாக قَالَ என்றால் கூறினான் என்றும் إِذْ قَالَ என்றால் கூறிய போது என்றும்

قُلْنَا என்றால் நாம் கூறினோம் என்றும் 

إِذْ قُلْنَا என்றால் நாம் கூறியபோது என்றும்

نَجَّيْنَا  என்றால் நாம் பாதுகாத்தோம் என்றும்  

إِذْ نَجَّيْنَا என்றால்  பாதுகாத்த போது என்றும்

فَرَقْنَا என்றால் நாம் பிரித்தோம் என்றும் 


إِذْ فَرَقْنَا என்றால் பிரித்த போது என்றும் கூறுவது போல என்பதை விளங்கிக் கொள்வோம்
-----------------------------------------

அவனை கடலில் மூழ்கடித்துச் சாகச் செய்ய வேண்டும் என்று சொன்னது யார்?

பிர்அவ்ன் தன்னைப் போல் ஒரு சிலையை வடித்து அதனையே மக்களை வணங்கி வருமாறு உத்திரவு பிறப்பித்தான். எப்போது தன்னை இறைவன் என்று இவன் வாதித்தானோ அப்போதே இவனது முகம் விகாரமாகிவிட்டது. நைல் நதி வற்றி விட்டது. 

இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு அவனிடம் வந்து நீதான் இறைவன் என்று சொல்கிறாயே! நதியில் தண்ணீர் ஓடச் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முறையிட்டார்கள். பிர்அவன் முதலில் திகைத்ததான். பின்பு சமாளித்துக் கொண்டு அவசியம் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி மக்களை சமாளித்துவிட்டு ஒரு மலைக்குச் சென்றான்.

இறைவனிடம், ‘இறைவனே! நீதான் உண்மையாக வணங்கத் தகுதியுடையவன். நான் பொய்மையிலிருக்கிறேன். மறுமையில் எனக்கு எந்த நலவும் வேண்டாம். இம்மையிலேயே எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து விடு. வற்றிவிட்ட நைல்நதி மீது மீண்டும் தண்ணீர்ப் பெருக்கெடுத்து ஓடச் செய்’ என்று கேட்டு பிரார்த்தித்தான்.
அச்சமயத்தில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பிர்அவ்ன் முன் மனித உருவில் தோன்றி, தன் எஜமானின் அருட்கொடைகளை மறந்து நன்றி கெட்டத்தனமாக நடக்கும் மனிதருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?’ என்று கேட்டார்கள்.
அதற்கு பிர்அவ்ன், அவனை கடலில் மூழ்கடித்துச் சாகச் செய்ய வேண்டும்’ என்று ஆத்திரம் பொங்க கூறினான். பிர்அவ்னிடமிருந்து அதை எழுத்து மூலமாக வாங்கிக் கொண்டார்கள். 
பிர்அவ்ன் இவ்வாறு எழுதிக் கொடுத்த சமயத்தில் ‘ஓ! பிர்அவ்னே! உனக்கு நைல்நதி மீது ஆதிக்கம் செலுத்தி வரும் ஆற்றலைத் தந்தோம்’ என்று அசரீரி கேட்டது. இந்த சப்தத்தை எகிப்து வாசிகள் அனைவரும் கேட்டார்கள். 
இப்படி எழுதி விட்டு ஆதாரம் ஒரு வரலாற்றுக் குறிப்பு உள்ளது என்று முடித்து இருப்பார்கள்.
பிர்அவ்னை அல்லாஹ்  கடலில் மூழ்கடித்தான் என்றால் நம்புவது தான் முஃமின்கள்   பண்பு. . 
ஹீப்ரு மொழியில் ‘மூ’ என்றால், தண்ணீர் என்று பொருள். ‘ஷா’ என்றால் மரம் என்று பொருள். மூஷா என்ற பெயரே  மூஸா என்று ஆகிவிட்டது என்று எழுதி விட்டு. ஆதாரம்  ஒரு குறிப்பில் காணப்படுகிறது என்று முடித்து இருப்பார்கள். இப்படி நிறைய எழுதி வைத்து இருக்கிறார்கள்.
மூஸா (அலை) பிர்அவ்ன் சம்பந்தமாக குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ளவை மட்டுமே உண்மை. மற்றவை அனைத்தும்  பொய்களே!



இனி வார்த்தைக்கு வார்த்தை 

وَإِذْ வஇ(ர்)து 
 போது -சமயம் - நேரம்

فَرَقْنَا Fபரஃக்னா 
நாம் பிளந்தோம்

بِكُمُ பிகுமு 
உங்களுக்காக

الْبَحْرَ - அல் பஃஹ்ஃற 
கடல் - கடலை

فَأَنجَيْنَا - Fபஃஅன்ஜய்னா 
காப்பாற்றினோம்

كُمْ கும் 
உங்களை
 وَاَغْرَقْنَآ - வஃஅஃகறஃக்னா 
மூழ்கடித்தோம்

آلَ- ஃஆல 
கூட்டத்தார் - ஆட்கள்

 فِرْعَوْنَ - Fபிர்ஃஅவ்ன 
Fபிர்அவ்னின் 

وَاَنْتُمْ - வஅன்தும் 
நீங்கள் 

تَنظُرُونَ - தன்ழுரூ(ன)ன்
பார்க்கிறீர்கள் - பார்த்துக் கொண்டிருக்க

وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ‎ 

வஇ(ர்)து Fபரஃக்னா பிகுமுல்பஃஹ்ஃற  Fபஃஅன்ஜய்னாகும் ஃஅஃகறஃக்னா ஃஆல Fபிர்ஃஅவ்ன வஅன்தும் தன்ழுரூ(ன)ன்

மொழிப்பெயர்ப்புகள்: 
உங்களுக்காக நாம் கடலைப் பிளந்து, உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்.- (அதிரை ஜமீல்)

உங்களுக்காகக் கடலைப் பிளந்து, உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் ஆட்களை நாம் மூழ்கடித்ததை எண்ணிப் பாருங்கள்! -(PJதொண்டி)

50. மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்துஉங்களை நாம் காப்பாற்றி,
 நீங்கள் பார்த்துக் கொண்டிருக் கும் போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை
அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்.-(ஜான் டிரஸ்ட், K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)


மேலும் உங்களுக்காகக் கடலைப் பிளந்து நாம் உங்களை காப்பாற்றி (உங்களைப் பின்தொடர்ந்து வந்த) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே மூழ்கடித்தோம். -(ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்) 


மேலும், நாம் உங்களுக்காகக் கடலைப் பிளந்(து வழி ஏற்படுத்தித்தந்)து, பின்னர் உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை நாம் மூழ்கடித்ததையும் எண்ணிப் பாருங்கள்! - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)


மேலும், நாம் உங்களுக்காகக் கடலைப் பிளந்து, பின்னர் நாம் உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையிலேயே ஃபிர் அவ்னுடைய கூட்டத்தாரை மூழ்கடித்தோம் என்பதையும் (நினைவு கூறுங்கள்) - (அல்-மதீனா அல்-முனவ்வரா)

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு