முதன் முதலாக கச்சை கட்டி நின்ற பெண்மணி யார்?

இன்று கச்சை கட்டி நிற்கிறான் என்றால் எதிர்த்து நிற்கிறான் என்று பொருள். அன்று அந்தப் பெண்மணி கச்சை கட்டி நின்றது ஏன்? எதற்காக?
இன்று நாம் ஆற்றிய உரை


நாம் ஹஜ்ஜுடைய மாதத்தில் இருக்கிறோம். 
ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இம் மாதத்தில் ஹாஜிகள் செய்யும் ஹஜ் என்ற வணக்கத்திலும். நாம் செய்யும் வணக்கங்களும் இப்ராஹீம் (அலை) அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் சுற்றியே இருக்கிறது.

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post_37.html



)இணைப்பில் உள்ளது விண்வெளியில் இருந்து மெக்கா நகரை துபாய் செயற்கைகோள்  2013ல் படம் பிடித்து அனுப்பியது)


இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு யாருக்கும் அளிக்காத மாபெரும் தனிச் சிறப்புக்களை அல்லாஹ் வழங்கி இருக்கிறான். 

அதில் ஒன்று உலகில் அல்லாஹ்வை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயத்தை புனர் நிர்மானம் செய்கின்ற மகாத்தான பணியை பாக்கியத்தை இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் வழங்கினான்.


وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

இந்த ஆலயத்தின்33 அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்தியபோது "எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்;488 அறிந்தவன்'' (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127)

இதன் மூலம் நமக்கு உள்ள படிப்பினை அமல்கள் செய்தால் மட்டும் போதாது. "எங்கள் இறைவா! எங்களிடமிருந்து இந்த அமலை ஏற்றுக் கொள்வாயாக!  என்று பணிவுடன் பிரார்த்திக்கவும் வேண்டும் என்பதுதான்.

பெருநாள் தொழுகை முடிந்ததும் பயான் கேட்காமல் ஓடக் கூடிய கூட்டத்தைப் பார்க்கிறோம். குத்பா முடிய பொறுக்க முடியாத கூட்டத்தைப் பார்க்கிறோம். அவர்கள் சிந்திக்க வேண்டும். பெருநாள் தொழுகை என்ற அமலைச் செய்து விட்டால் போதாது. யா அல்லாஹ் என்னிடமிருந்து  இந்த அமலை ஏற்றுக் கொள்வாயாக!  என்று பணிவுடன் பிரார்த்திக்கவும் வேண்டும் 

அடுத்த சிறப்பு என்ன? அந்த இல்லத்தைத் தூய்மைப்படுத்தும் திருப்பணியையும் இப்ராஹீம் (அலை) அவர்களிடமே அல்லாஹ் கொடுத்தான்.

وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّى‌ ؕ وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ‏

இந்த ஆலயத்தை33 மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக!34  "தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)

அது மட்டுமா? இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற அந்த இடத்தில் தொழுமாறு அல்லாஹ் நமக்குக் கட்டளை இட்டுள்ளான்.

 وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّى

மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில்35 தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! என்று (அல்குர்ஆன் 2:125)

இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மக்காவுக்கு அபயத்தையும்அந்தப் பாலைவனத்தில் பலவகையான உணவுகளையும் இன்றளவும் வழங்கிக் கொண்டிருக்கிறான்.

وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِيْلًا ثُمَّ اَضْطَرُّهٗۤ اِلٰى عَذَابِ النَّارِ‌ؕ وَبِئْسَ الْمَصِيْ

"இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக34 ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!''497 என்று இப்ராஹீம் கூறியபோது, "(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டது'' என்று அவன் கூறினான்.  (அல்குர்ஆன் 2:126)


இப்ராஹீம் (அலை) அவர்களைப் பல்வேறு வழிகளில் சோதித்துப் பார்த்த போது அந்தச் சோதனையில் அவர்கள் வெற்றி பெற்றதாக அல்லாஹ் சொல்கிறான்.

وَاِذِ ابْتَلٰٓى اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ‌ؕ قَالَ اِنِّىْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ‌ؕ قَالَ وَمِنْ ذُرِّيَّتِىْ ‌ؕ قَالَ لَا يَنَالُ عَهْدِى الظّٰلِمِيْنَ‏

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்தபோது484 அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். "உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்'' என்று அவன் கூறினான். "எனது வழித்தோன்றல்களிலும்'' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். "என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது''245 என்று அவன் கூறினான்.497 (அல்குர்ஆன் 2:124)


மக்காவின் தனிச் சிறப்பைக் குறிப்பிடும் போது இப்ராஹீம் நின்ற இடமும் அங்கே உள்ளது என்று சிலாகித்துச் சொல்கிறான். 

 فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَۚ  وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ؕ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْ

அதில் தெளிவான சான்றுகளும்438 மகாமே இப்ராஹீமும்35 உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.34 அந்த ஆலயத்தில்33 அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏகஇறைவனை) மறுத்தால் அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.485 (அல்குர்ஆன் 3:97)

இப்ராஹீம் என்ற தனி நபர் ஒரு சமுதாயமாகவே திகழ்ந்ததாக அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான்.  

 اِنَّ اِبْرٰهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِيْفًاؕ وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَۙ‏

இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணைகற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.(அல்குர்ஆன் 16:120)

அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆளரவமற்ற வனாந்திரத்தில் தமது மனைவியையும்குழந்தையாக இருந்த மகன் இஸ்மாயீலையும் இப்ராஹீம் (அலை) விட்டு வந்தார்கள். 

رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوْا الصَّلٰوةَ فَاجْعَلْ اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில்,33 விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!246 (அல்குர்ஆன் 14:37)

குழந்தை இஸ்மாயீல்(அலை) தாகத்தால் தவித்த போது ஹாஜர் அம்மையார் அவர்கள் ஸஃபா மர்வா எனும் மலைகளில் ஏறி ஏதாவது வாகனக் கூட்டம் தென்படுகிறதா என்று பார்த்தார்கள்.

நம்மையும் அது போல் ஸஃபா மர்வா மலைகளுக்கிடையே ஓடுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். 

 اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآٮِٕرِ اللّٰهِۚ فَمَنْ حَجَّ الْبَيْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ اَنْ يَّطَّوَّفَ بِهِمَا ؕ وَمَنْ تَطَوَّعَ خَيْرًا ۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ‏

ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில்33 ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை.400 நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்;6 அறிந்தவன். (அல்குர்ஆன் 2:158)

இப்ராஹீம் (அலை) அவர்களது குடும்பத்தார் செய்த ஒவ்வொரு காரியத்தையும் அனைவரும் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுவதாக இருந்தால் இப்ராஹீம் (அலை) அவர்கள் மீது அல்லாஹ் எவ்வளவு அன்பு வைத்திருக்க வேண்டும்?

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆட்டைப் பலியிட்டதற்காக நாமும் அதைத் தொடர வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். 

 وَفَدَيْنٰهُ بِذِبْحٍ عَظِيْمٍ‏


பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.
وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ‌ۖ‏
 பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.
سَلٰمٌ عَلٰٓى اِبْرٰهِيْمَ

 இப்ராஹீமின் மீது ஸலாம்159 உண்டாகும்! (அல்குர்ஆன் 37:107-109)

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஷைத்தான் மீது கல்லெறிந்ததற்காக நாம் ஷைத்தானைக் காணாவிட்டாலும் நாமும் கல்லெறிய வேண்டும் என்று இறுதி இறைத் துாதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

அவர்கள் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகள் நம் மீது மார்க்கக் கடமையாகவே ஆக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து அவர்கள் மீது அல்லாஹ் எந்த அளவு நேசம் வைத்திருக்கிறான் என்பதை விளங்கலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இறுதி இறைத் துாதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை நோக்கி இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுவீராக'' என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

 ثُمَّ اَوْحَيْنَاۤ اِلَيْكَ اَنِ اتَّبِعْ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا‌ ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْ


"(நபியே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!'' என்று உமக்கு தூதுச்செய்தி அறிவித்தோம். அவர் இணைகற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)

இப்ராஹீமைத் தனது நண்பராக ஆக்கிக் கொண்டு விட்டதாகவும் அல்லாஹ் கூறுகிறான்.

 وَمَنْ اَحْسَنُ دِيْنًا مِّمَّنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ وَّاتَّبَعَ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا‌ ؕ وَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِيْمَ خَلِيْلًا‏

தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். (அல்குர்ஆன் 4:125)

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம்''. இப்ராஹீமுக்கு நீ அருள் புரிந்ததைப் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அருள் புரிவாயாக என்று துஆச் செய்யுமாறு  இறுதி இறைத் துாதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். (புகாரி 3370)

இதிலிருந்து இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனுக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள இயலும்.
இவ்வளவு மகத்தான சிறப்புக்களைப் பெற்றிருந்த இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனுக்கு அடிமை என்ற நிலையிலிருந்து விலக்குப் பெறவும் இல்லை. எஜமான் என்ற தனது தன்மையில் அல்லாஹ் அவர்களுக்குப் பங்களிக்கவுமில்லை.

وَاذْكُرْ عِبٰدَنَاۤ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ اُولِى الْاَيْدِىْ وَالْاَبْصَارِ‏


வலிமையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம், இஸ்ஹாக், யாகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 38:45)

தன்னுடைய அடியார்களில் ஒருவராகவே அவர்களை அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதனால் தான் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் விருப்பங்களில் சிலவற்றை அல்லாஹ் நிறைவேற்றாமலும் ஏற்காமலும் இருந்திருக்கிறான்.

அவர்களை அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு இமாமாக (தலைவராக) நியமித்த நேரத்தில் என் சந்ததிகளிலும் அத்தகையவர்களை ஏற்படுத்துவாயாக என்று கேட்டார்கள். அக்கிரமம் புரிபவர்களுக்கு என் வாக்குறுதி சேராது என்று அல்லாஹ் கூறி விட்டதை. அல்குர்ஆன் 2:124ல் பார்த்தோம்.


இவ்வளவு சிறப்புக்களைப் பெற்ற இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததிகளாக இருக்கின்ற தகுதியை மட்டும் வைத்து எவரும் அல்லாஹ்வின் அன்பைப் பெற இயலாது. அல்லாஹ்வுக்கு அடிமைகளாக வாழ்வதோடுஅல்லாஹ் எஜமான்என்பதையும் ஏற்று வாழ வேண்டும் என்பதை இந்த வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதனால் தான் அவர்களின் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடுவதற்கும் அனுமதி மறுத்து விட்டான்.

مَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِيَّاهُ‌ ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ‌ ؕ اِنَّ اِبْرٰهِيْمَ لَاَوَّاهٌ حَلِيْمٌ‏

இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார்.247 இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.-  (அல்குர்ஆன் 9:114)

ஒவ்வொரு மனிதனும் தனது இளமைப் பருவத்தில் அல்லது நடுத்தர வயதில் தனக்கு ஒரு சந்ததி வேண்டும் என்று ஆசைப்படுவான். இது போன்ற ஆசை இப்ராஹீம் நபியவர்களுக்கும் இருந்தது. அல்லாஹ்வின் நண்பர் என்பதால் அவர்களது ஆசையை அவர்களாகவும் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அல்லாஹ்வும் நிறைவேற்றவில்லை.

தள்ளாத வயதில் தான் அவர்களுக்கு இஸ்மாயில் இஸ்ஹாக் ஆகிய ஆண் மக்களை அல்லாஹ் கொடுத்தான்.

அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும்இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம். இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும்இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனாஇது வியப்பான செய்தி தான்'' என்று அவர் கூறினார் (அல்குர்ஆன் 11:71,72)

அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யாகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம்.223 -11:71,

 "இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும்போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான்'' என்று அவர் கூறினார். -11:72

நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். 15:53,

எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களாஎதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?'' என்று அவர் கேட்டார். (அல்குர்ஆன் 15:54)

அவர்களைப் பற்றிப் பயந்தார். பயப்படாதீர்!'' என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர். உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டுநான் மலட்டுக் கிழவியாயிற்றே'' என்றார். -(அல்குர்ஆன் 51:29)

இஸ்மாயீலையும்இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன். (அல்குர்ஆன் 14:39)

ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படக் கூடிய வயதில் ஏன் ஒரு குழந்தையை அல்லாஹ் கொடுக்கவில்லை.

எதை விரும்புகிறானோ எப்போது விரும்புகிறானோ அப்போது செய்யும் அதிகாரம் படைத்த ஏகன் தான்  அல்லாஹ்தான் என்ற ஏகத்துவத்தை அவன் விட்டுக் கொடுக்கவே இல்லை. விட்டுக் கொடுக்க மாட்டான் என்பதே நாம் இந்நாளில் நினைவி கொள்ள வேண்டும். மதக் குருக்கள், ஆன்மீகத் தந்தை என்று ஏமாற்றுபவர்களை நபிமார்களின் தந்தை இப்ராஹீம்(அலை) அவர்கள் வாழ்க்கை மூலம் அறிந்து. போலிகளை விட்டும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். 


முதன் முதலாக  கச்சை கட்டி நின்ற பெண்  யார்? என்பதுதான் தலைப்பு. அது பற்றிக் கூறி முடித்து விடுகிறேன்.

இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மனைவி ஸாரா அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தார்கள்.  எகிப்து நாட்டு கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதி வழியாகச் சென்றார்கள். புகாரியில் உள்ள 3358. 3364. நீண்ட ஹதீஸ்களை சுருக்கமாகச் சொல்கிறேன்.

எகிப்து மன்னன் சாரா (அலை) அவர்களை இரண்டு முறை கெடுக்க முயன்றான். வலிப்புக்கு உள்ளானான். சாரா (அலை) அவர்கள் துஆச் செய்ததால் குணமாக ஆனான். பிறகு ஹாஜர் என்ற அடிமைப் பெண்ணைப் பணிப் பெண்ணாகக் கொடுத்தான்.

பெண்களில் முதன் முதலாக இடுப்புக் கச்சை கட்டியது இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் ஹாஜர் (அலை) அவர்கள்தான். ஸாரா (அலை) அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை நீக்குவதற்காக அவர்கள் ஓர் இடுப்புக் கச்சையை அணிந்துக் கொண்டார்கள். என்று இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.

நான் என்றும் உங்கள் அடிமைதான் பணிப் பெண்தான் உங்கள் இடத்தை அடைய விரும்ப மாட்டேன் என்ற அடிப்படையில். தனது அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் விதமாக அன்று இடுப்பில் கச்சை கட்டினார்கள்.

இன்று அடிமைத்தனம் என்பது இஸ்லாத்தில் இல்லை. மத குருக்கள் என்ற போலிகளுக்கு முன்னால் பல ஆண்களும் இடிப்பில் துண்டை கட்டிக் நிற்பதைப் பார்க்கிறோம். இடிப்பில் துண்டை, துணியை, கச்சையாக கட்டிக் கொண்டு நிற்பது அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் செயலாகும்.

கச்சை கட்டினார்கள் என்றால் ஒரு காலத்தில் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தியது. இன்று கச்சை கட்டி நிற்கிறான் என்றால் எதிர்த்து நிற்கிறான் என்று பொருள். நெஞ்சில் கட்டும் உள்ளாடைக்கும் கச்சை என்று சொல்வது உண்டு.

வான் மழை (பிரதேச) மக்களே! அவர் ஹாஜர்தான் உங்களின் தாயார். என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார். 

அடிமைத்தனத்தை வெளிப்படுத்தியவரின் மக்களே அகம்பாவம் கொள்ளாதீர்கள் என்பதே இதற்கு அர்த்தம்


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு