2:53 லஃஅல்ல என்பதை மொழி பெயர்க்காமல் விட்டது ஏன்?

என்ன அர்த்தம்? நீங்கள் குறிப்பிடும்  வார்த்தைக்கு வார்த்தை என்பதற்கு?  வார்த்தைக்கு வார்த்தை என்பதுதானே இதன் தலைப்பு. முந்தைய வசனத்தில்  லஃஅல்லகும் தஷ்குரூ(ன)ன் என்பதற்கு  லஃஅல்ல - கும்- தஷ்குரூ(ன)ன் ஆகியவற்றுக்கு வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்காமல் லஃஅல்லகும் தஷ்குரூ(ன)ன் - நீங்கள் நன்றி செலுத்துவதற்காக என்று மொத்தமாக மொழி பெயர்த்துள்ளீர்கள்.  இதுதான் தர்ஜமாக்களில் உள்ளதே. என்று ஒரு சகோதரர் கேட்டுள்ளார்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/253.html

لَعَلَّ - 
லஃல்ல என்பது 
انஇன்ன, 

ان -அன்ன,

كان க அன்ன,

ليت லைத்த, 

ليسலைஸ

மாதிரி தான். இவை யாவும் தஃக்கீதுக்கு - உறுதிபாட்டிற்கு வரும் துணை  சொற்களாகும். இவற்றை வார்த்தைக்கு வார்த்தையாக மொழி பெயர்க்க இயலாது. 

இவற்றை 2:21, 2:39 ஆகிய வசனங்களில் சுட்டிக் காட்டி உள்ளோம். 2:21 வசனத்தின் இறுதியில் இடம் பெற்றுள்ள லஃல்லகும் தத்தஃகூ(ன)ன் என்பதின் மொழி பெயர்ப்பில் உள்ள ஆகலாம் - முடியும் - கொள்வீர்கள்  - உடையோராகளாம் போன்றவற்றை ஹை லைட் செய்து காட்டி உள்ளோம். அவற்றை பிளாக்கரில் காணலாம்.

இந்த 2:53 இறுதியில் உள்ள லஃஅல்லகும் தஹ்ததுா(ன)ன் - என்பதற்கு. நீங்கள் நேர்வழி பெறலாம்- (பெறக் கூடும் பெறுவதற்காக - பெறும் பொருட்டு) என்று மொழி பெயர்த்து உள்ளார்கள். 

இவற்றில் உள்ள  லாம், கூடும், காக, பொருட்டு என்ற பொருள்கள் எங்கு இருந்து வருகிறது? லஅல்ல என்ற வார்த்தையில் இருந்து தான் வருகிறது. 

லஅல்ல என்பதற்கு லாம், கூடும், காக, பொருட்டு என மொழி பெயர்த்தால். இவை  தனியாக பொருள் தருமா? பொருள் சொல்ல முடியுமா? என்றால் முடியாது. லஅல்ல என்பது துணை எழுத்து என்பதை 2:21, 2:39 ஆகிய வசனங்களில் விளக்கி விட்டோம். 

அதனால் அதை திரும்பவும் விளக்கத் தேவை இல்லை என்றும் வார்த்தைக்கு வார்த்தையாக பிரித்து காட்டத் தேவை இல்லை என்றே விட்டோம். 


وَإِذْவஇ(ர்)து 
போது -சமயம் - நேரம் 

 آتَيْنَا -ஆதய்னா

கொடுத்தோம்

إِذْ آتَيْنَا (ர்)து ஆதய்னா
நாம் கொடுத்தபோது

مُوسَى -  மூஸா 
மூஸா

الْكِتَابَ அல் கிதாப 
வேதம்

وَالْفُرْقَانَ வல்Fபுர்ஃகான 
பிரித்துக் காட்டும் பிரித்துக்காட்டக் கூடியது - கூரறிவு -பகுத்தறிவு

لَعَلَّ -லஃஅல்ல
ஒருவேளை - (இருக்க)லாம் - (ஆக)லாம் -(ஆகக்) கூடும், பொருட்டு

كُمْ- கும்
நீங்கள்

تَهْتَدُونَ -தஹ்ததுா(ன)ன்.

நீங்கள் நேர்வழி  பெறுவீர்கள்

لَعَلَّكُمْ تَهْتَدُونَ - லஃஅல்லகும் தஹ்ததுா(ன)ன்.
நீங்கள் நேர்வழி பெறுவதற்காக - நீங்கள் நேர்வழி பெறலாம்(பெறக் கூடும் - பெறும் பொருட்டு)

وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ‎ 

வஇ(ர்)து  ஆதய்னா மூஸல்கிதாப  வல்Fபுர்ஃகான லஃஅல்லகும் தஹ்ததுா(ன)ன்.
தமிழ் மொழியாக்கங்கள்:


நீங்கள் நேர்வழி பெறுவதற்காக நாம் மூஸாவுக்கு (தவ்ராத் என்ற) இறைமறையையும் "ஃபுர்க்கான்" என்ற கூரறிவுத் திறனையும் அளித்தோம் என்பதையும் நினைத்துப் பாருங்கள். - (அதிரை ஜமீல்)


நீங்கள் நேர்வழி பெறுவதற்காக வேதத்தையும், (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் மூஸாவுக்கு நாம் வழங்கியதை எண்ணிப் பாருங்கள்! - (PJதொண்டி)

53.இன்னும்நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து) அறிவிக்கக்கூடியதையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்) - (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)


இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).- டாக்டர். முஹம்மது ஜான்
நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு (தவ்றாத் என்னும்) வேதத்தையும், பிரித்து அறிவிக்கக்கூடிய (சட்ட திட்டத்)தையும் நாம் கொடுத்தோம். - ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)
(நீங்கள் இவ்வாறு அக்கிரமம் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில்) நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும், ‘ஃபுர்கானை’*யும் அருளியதை நினைவுகூருங்கள்.- (IFT)

மேலும் நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு ஒரு வேதத்தையும், (நன்மை தீமைகளை) பிரித்து அறிவிக்கக் கூடிய சட்டத்தையும் நாம் கொடுத்தோம் என்பதையும் (நினைவு கூறுங்கள்). (அல்-மதீனா அல்-முனவ்வரா)



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு