ராமர் பிறந்த இடம் பற்றி 2004ல் PJ கூறியதை 2020ல் நேபாளம் கூறி உள்ளது

⚖️🌹8:11 நிமிட வீடியோ சுருக்கம்:

ராமரைப் பற்றி விவரிக்கும் ராமாயணத்தை அன்று வடமொழியில்  எழுதிய வால்மீகி முனிவரால் சொல்லப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு ராமர் எங்கு தான் பிறந்தார் என்பது பற்றி 2004-இல் பேசப்பட்ட விளக்கமாகும் இது...

அரசியல் பின்னணியில் இதனை எவரும் அணுகாமல், 

எதார்த்தத்தில் ராமர் எங்குதான் பிறந்தார் ❓என்பது பற்றி முடிவு செய்ய, 
நமது தொப்புள்கொடி உறவான இந்து சகோதர சகோதரிகள் ! அனைவரும் இதனை முழுமையாக கேட்டுவிட்டு, 
அவரவர் இதயத்துடன் தொடர்புடைய மனசாட்சிப்படி முடிவு செய்து கொள்ளலாம்...
💯👍🏼🌹

ராமர் பிறந்த அயோத்தி நேபாளில் தான் உள்ளது. 2020ல் நேபாள பிரதமர் கூறி உள்ளார். இதை 2004லேயே பீ.ஜே. சொல்லி விட்டார்.  வால்மீகி ராமாயணத்தில் சொல்லி உள்ள அயோத்தி இந்தியாவின் உ.பி.யில் உள்ளது அல்ல. நேபாளில் தான் உள்ளது. ராமாயண ஆதாரத்துடன் தெளிவாக விளக்கி உள்ளார். 
 




நேபாளி ராமர்: ஷர்மா ஒலி அரசியல் ரீதியா சொல்ல வில்லையாம்!
ராமர் பற்றி நேபாள பிரதமர் ஷர்மா ஒலி கூறியது அரசியல் ரீதியான கருத்து அல்ல என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

   
ராமர் இந்தியரே இல்லை எனவும், அவர் நேபாளத்தை சேர்ந்தவர் எனவும், உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் இருக்கிறது எனவும் அந்நாட்டு பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “கலாச்சார ரீதியாக நாம் ஒடுக்கப்பட்டிருக்கிறோம். பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. இந்திய இளவரசன் ராமருக்கு நாம் சீதையை கொடுத்ததாக இன்னும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நாம் அயோத்தியை சேர்ந்த இளவரசனுக்குதான் சீதையை கொடுத்தோமே தவிர இந்தியாவுக்கு கொடுக்கவில்லை. அயோத்தி என்பது பிர்குஞ் பகுதிக்கு மேற்கில் இருக்கும் சிறிய கிராமம். இப்போது உருவாக்கி வைத்திருக்கிறார்களே அந்த அயோத்தி அல்ல” என்று தெரிவித்தார்.

இந்திய எல்லையில் இருக்கும் லிபுலேக், கலாபனி ஆகிய பகுதிகள் நேபாள எல்லைக்கு உட்பட்டதாக அந்நாட்டு அரசு அண்மையில் உரிமைகோரி வருகிறது. இதற்காக அப்பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தையும் அந்நாடு வெளியிட்டுள்ளது.

தூக்கி எறிந்த காங்கிரஸ்; ரெடியாகும் பாஜக- சச்சின் பைலட் அப்படியென்ன ஸ்பெஷல்?

இதனால், இந்தியா -
 நேபாளம் உரவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஷர்மா ஒலியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஷர்மா ஒலியின் கருத்து பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ராமர் பற்றி
 ஷர்மா ஒலி கூறியது அரசியல் ரீதியான கருத்து அல்ல. அயோத்தியின் மாண்பை குறைக்கும் வகையில் அவர் அந்த கருத்தை தெரிவிக்கவில்லை என்று நேபாள வெளியுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.
--------------------------

காத்மாண்டு: ராமர் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் இருக்கிறது; ராமர் ஒரு நேபாளி என நேபாள பிரதமர் ஷர்மா ஒளி (ஒலி) பேசிய கருத்தில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடம் குறித்த நீண்டகால வழக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் முடிவுக்கு வந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேபாள பிரதமர் ஷர்மா ஒளி, ராமர் பிறந்த அயோத்தி, நேபாளத்தில்தான் இருக்கிறது. ராமர் ஒரு நேபாளி என கூறியிருந்தார். ஷர்மா ஒளியின் இந்த கருத்து மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது.
ஏற்கனவே இந்திய நிலப்பகுதிகளை நேபாளத்துக்கு சொந்தம் கொண்டாடி இருநாடுகளிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியவர் ஷர்மா ஒளி. இதனாலேயே அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ராமர் குறித்த ஷர்மா ஒளியின் கருத்துக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இதனையடுத்து நேபாள வெளியுறவுத்துற அமைச்சகம் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ராமர் குறித்த பிரதமர் ஷர்மா ஒளியின் கருத்தில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் அவர் கருத்துகளைத் தெரிவிக்கவில்லை.
இந்தியாவில் உள்ள அயோத்தியின் கலாசார மாண்பை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த கருத்து வெளியிடப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு