மேலப்பாளையம் தி.மு.க. மேயர் அப்துல் காதர் மரணம்
மேயர் என்றால் வாழ்நாளில் எப்படியும் முன்னாள் மேயராக ஆகி விடுவார். அல்லது இறந்ததும் முன்னாள் மேயராக ஆகி விடுவார்.
மேலப்பாளையம் மேயர் அப்துல் காதர் அவர்கள் அப்படி அல்ல. அவர் எந்நாளும் மேயர் தான். வாழ்நாள் முழுவதும் மேயர் அப்துல் காதராகவே வாழ்ந்தார். இறந்த பிறகும் அவர் மேயர் அப்துல் காதர்தான்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post_26.html
ஏனெனில் அப்துல் காதர் என்பதற்கு முன் உள்ள மேயர் என்பது காரணப் பெயர் அல்ல. இடு குறிப் பெயர். ஆம் பெற்றோர்கள் இட்டப் பெயரே மேயர் அப்துல் காதர் என்பதுதான். இந்தப் பெயருக்கு ஒரு வரலாறு இருக்கிறது.
மேலப்பாளையம் மேயர் அப்துல் காதர் அவர்கள் அப்படி அல்ல. அவர் எந்நாளும் மேயர் தான். வாழ்நாள் முழுவதும் மேயர் அப்துல் காதராகவே வாழ்ந்தார். இறந்த பிறகும் அவர் மேயர் அப்துல் காதர்தான்.
ஏனெனில் அப்துல் காதர் என்பதற்கு முன் உள்ள மேயர் என்பது காரணப் பெயர் அல்ல. இடு குறிப் பெயர். ஆம் பெற்றோர்கள் இட்டப் பெயரே மேயர் அப்துல் காதர் என்பதுதான். இந்தப் பெயருக்கு ஒரு வரலாறு இருக்கிறது.
இவரது தந்தை செ.காமு. யூசுப் அவர்கள். பெரும்பாலான மேலப்பாளையம் அரசியல்வாதிகளால் அரசியல் ஆசான் என்று அழைக்கப்பட்டவர்.
35 ஆண்டுகள் தி.மு.க. நகர செயலாளராக இருந்தவர். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். என மூன்று முதல்வர்களுடனும் நெருக்கமாக இருந்தவர்.

மாநகராட்சி தேர்தலில் முதல் முறையாக தி.மு.க. அபார வெற்றி பெற்றது. 1959ல் சென்னை மாநகராட்சிக்கு தி.மு.க. சார்பில் முதல் மேயராக 28 வயதே ஆன இளைஞர் மேயராக ஆனார்.
தி.மு.க. சார்பில் முதன் முதலில் மேயராக ஆனவர் பெயர் அப்துல் காதர். தி.மு.க. மீது உள்ள பாசத்தால், பற்றால் 1959ல் பிறந்த தனது மூத்த மகனுக்கு மேயர் அப்துல் காதர் என்று பெயர் சூட்டினார்.

மேயர் அப்துல் காதர் என்னுடன் படித்த மாணவ பருவத்திலும் துபை ETA கம்பெனியில் வேலை செய்த வாலிப பருவத்திலும் நண்பராக இருந்தார்.
எனது திருமணத்திற்குப் பிறகு அவரது தந்தை செ.கா.மு யூசுப் அவர்கள் உடனான அரசியல் பணிகளால் மேயர் அப்துல் காதர் தொடர்பு குறைந்தது.
அவரது பெயரில் அரசியல் இருந்தாலும் அவரது தந்தை போல் அரசியலில் ஈடுபாடு உடையவராக மேயர் அப்துல் காதர் இருக்கவில்லை.

அவரது மரணச் செய்தி நேற்று (26-07-2020) வந்தது. அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தைக் கொடுப்பானாக ஆமீன்.
தி.மு.க.வின் முதல் மேயராக அப்துல் காதர் ஆன நேரம். இந்தீ எதிர்ப்பு போராட்டம் காட்டுத் தீயாக பரவி இருந்தது.
ஜனாதிபதிக்கும் கறுப்புக் கொடி காட்டுவோம் என அண்ணா அறிவித்தார். ஒரு மேயரே கறுப்புக் கொடி காட்டப் போகிறார் என்ற சூழல்.

குப்பை வண்டிகள் பிரச்சனை ஆடு, மாடுகளை அறுத்து சைக்கிளில் கொண்டு சென்ற பிரச்சைனகளை எப்படி சரி செய்தார்.
Comments