ஜெயலலிதாவே செட்டப் வழக்கு என்றதை உண்மை என்றது யார்?

முஸ்லிம்கள் மீதான வெடிக்காத குண்டு வழக்கில் தண்டனை வாங்கி கொடுத்தது யார்?

காட்டிக்  கொடுத்தது யார்?  காப்பாற்றி விட்டது யார்?

முஸ்லிம் சிறைவாசிகளுக்கு உண்மையில் உதவியது யார்? 

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post_3.html


பீ.ஜே.பி.யின் பினாமி என்று விமர்சிக்கப்பட்டவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார். அவர்களே செட்டப் வழக்கு என்றதை உண்மையான வழக்கு என்றது யார்?

நம்பிக்கைத் துரோகம் செய்து, மாட்டி விட்டு  தண்டனை வாங்கி கொடுத்த துரோகி யார்?

தானாக போனால்  மற்றவர்கள் மீதான  குற்றச்சாட்டும்  உறுதியாகி விடும் என்பது கூட தெரியாத தற்குறியா இவர்?




நான் பயந்து சாவதாக ராயபுரம் முஹம்மது சாதிக் என்பவருக்கு காமில் பேசி அனுப்பி  உள்ளார்.   பயந்தவன் நான் அல்ல. அதுவும் கள்ள ஜிகாதிகளுக்கா?

பயந்தவன் என்றால் ஆடியோ காசுக்காக வெளியிடப்பட்டது. கள்ள ஜிகாதிகளால் தான் வெளியிடப்பட்டது. என்னிடம் மட்டும் அல்லாமல் பல பேரிடம் பணம் வாங்கி இருக்கிறார்கள்.  என்ற உண்மையை போட்டு உடைத்து  இருப்பேனா?

ஆடியோக்கள் வெளியிட இலாஹி தவிர  மற்றவர்களிடம் பணம் வாங்கி இருந்தால், காமில் மீதும் அவரை ஆதரிப்பவர்கள் மீதும், காமில் பின்னால் உள்ள  கள்ள ஜிகாதிகள் மீதும்  யா அல்லாஹ்  உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன் என்று துஆ கேட்டு எழுதி இருப்பேனா? 

காமில் பயந்தாங்கொள்ளி என்பதால்தான்  என்னிடம் பேசியதை முழுமையாக வெளியிடாமல் வெட்டி ஒட்டி வெளியிடுகிறார்.  சிறைவாசிகள் பற்றி நீ சொன்னதை வெளியிடுவேன் என்று மிரட்டினார். வெளியிடுங்கள் என்றேன். வெளியிட்டாரா?


காமில் தனது முதல் வழக்கான விஸா மோசடி வழக்கு  பற்றி இன்னும் வாய் திறக்கவே இல்லை. ஏன் மூச் கூட விடவே இல்லை.

1997 மார்ச்சில் காமில் தன்  கைகளால் தேடிக் கொண்டது கொடுங்கையூர் வழக்கு.  அது பற்றித்தான் கூறி  வருகிறார்.   அந்த வழக்கில் 23 ஆண்டுகள் கழித்து  2019ல் தான் தீர்ப்பு ஆனது என்பார்.

இந்த கொடுங்கையூர் வழக்கில் 1997லேயே ஜாமீன் பெற்று காமில்  விடுதலை ஆகி விட்டார்.

2019ல் தீர்ப்பு கூறிய  கோர்ட் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரில் 8 பேருக்கு   5 ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கியது.  காமிலை மட்டும்  விடுதலை செய்தது.


காமிலின்  மூன்றாவது வழக்கு 1999ல் போடப்பட்ட  வெடிக்காத குண்டு வழக்கு.

இந்த பொய் வழக்கில் அநியாயமாக பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் உதவி கேட்டார்கள். முன்பு பண உதவி செய்து பாதிக்கப்பட்டதால் இனி பண உதவி செய்ய மாட்டேன். வேண்டுமானால் சிறைவாசி குடும்பத்திற்கு விஸா கொடுத்து உதவுவேன்  என்று செயல்பட்டேன்.

அப்படி விஸா எடுத்து கொடுக்கப்பட்டவர்களில்  காமிலின் வெடிக்காத குண்டு வழக்கில் பாதிக்கப்பட்டவர்களும் உண்டு. ஒரு சிறைவாசி சிபாரிசு செய்தார். TNTJ யைச் சார்ந்த அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி உறவினரான அவரை விஸிட்  விஸாவில் கொண்டு வந்து சிபாரிசு மூலம் செக்யூரிட்டி வேலை வாங்கி கொடுத்தேன்.

அது போல் கொடுங்கையூர் வழக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கும் விஸா கொடுத்து உதவினேன். அது பற்றிய ஆடியோக்களையும் காட்டி கொடுத்து மாட்டி விடும் காமில் வெளியிடட்டும்.

சிறைவாசிகள் பெயரால் வசூலித்து திண்பதையே தொழிலாக ஆக்கிக் கொண்ட கள்ள ஜிகாதிகள்தான் காமிலுடன் கை கோர்த்து என்னை எதிர்ப்பார்கள்.

1999ல் சென்னை, திருச்சி, கோவை என சுமார் ஆறு இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் ஒரு இடத்தில் கூட வெடிக்கவில்லையாம்.  வெடிப்பதற்கு முன் போலீஸ் கண்டு  பிடித்து விட்டதாம்.

இதை, ஜெயலலிதா அம்மையார் உட்பட  எல்லா  அரசியல் கட்சியினரும் கண்டித்துப் பேசினார்கள்.  இது போலீஸே வைத்து  விட்டு எடுத்தது. முஸ்லிம்களை  பழி வாங்க  செய்துள்ள சதி.  செட்டப் வழக்கு என்றார்கள்.

எந்த அடிப்படையில் செட்டப் வழக்கு என்று சொன்னீர்கள்? அப்படி என்றால் வழக்கை பற்றி நீங்கள் அறிந்த விஷயத்தை சொல்லுங்கள். என ஐ.ஜி துக்கையாண்டி தலைமையில் ஒரு விசாரணை டீம் அம்மா அவர்களை விசாரிக்க போயஸ் சென்றது. 



இப்படி முன்னாள் முதல்வர் உட்பட எல்லாராலும் சந்தேகம் எழுப்பப்பட்டது வெடிக்காத குண்டு வழக்கு. அந்த வழக்கில்  தானா ஒப்புக் கொண்டு சாதனை நிகழ்த்தியது யார்?

அதோடு மட்டுமில்லாமல். இவர்கள் மீது போடப்பட்ட  வழக்கு பொய் என அறிக்கை விட்ட முன்னாள் முதல்வர் ஜெ. உட்பட எல்லார் முகத்திலும் ஒட்டு மொத்தமாக கரியை பூசியது யார்?

இப்போது வழக்கு உயர் நீதிமன்றத்திலும் உறுதியாகி விட்ட நிலையில் தண்டனையானவர்களின் விடுதலை கேள்விக்குரியாகி விட்டதே இதற்கு காரணம் யார்?

சிறைபட்டவர்களில் கோர்ட்டில் வழக்கை ஒப்புக் கொள்கிறவர்கள்.  மூன்று வகையில் இருக்கிறார்கள்.

1, நான் தான் செய்தேன் நான் செய்தவற்றில் உறுதியா இருக்கேன்.  தீர்ப்பு செய்யப் போகிறது இந்த உலகத்தில் தான். என்னைத் தண்டித்தாலும் வரலாறு என்னை விடுதலை செய்யும். குறைந்த பட்சமல்ல அதிகபட்ச தண்டனையே கொடு என நெஞ்சுரமாக நிற்பது. 

 2, சிறையில் இருந்து மீள சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தண்டனையில் இருந்து தப்புவது. பின்னர் குற்ற உணர்ச்சியில். வாழ்க்கையை கழிக்காமல் இந்திய குற்றவியல் சட்டம் என்ன சொல்கிறதோ. அதன்படி சான்று ஆவணங்களும் சாட்சியங்களும் சாதகமா இருந்த நிலையிலும் கூட குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை காலத்தை ஏற்றுக்கொள்வது.


3, சிறை கஸ்டங்களை தாங்கிக்க முடியாதவர்கள், இழப்புகளுக்கு பயப்படுகிறவர்கள், தான் விடுதலையானால் போதும். தன்னோடு சிறைபட்டவர்களின் எதிர்காலம் என்ன ஆனாலும் பரவாயில்லை. சகோதரர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.  என அதிகாரிகளை அந்தரங்கத்தில் வரவழைத்து பேசுவது. இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள் என பேரம் பேசி குறைந்த பட்ச தண்டனையுடன் வழக்கில் இருந்து விடுதலையாவது.

இதில்  காமில் எந்த ரகம்? காமில் எழுத்தில் இருந்தே புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு வழக்கு அதுவும் மதம் சார்ந்த வழக்கு.  விடுதலையானால் வழக்கின் விசாரணை அதிகாரிக்கு மேல் மட்டத்தில் இருந்து என்னய்யா கேஸ் நடத்துனே என  ஏச்சும் பேச்சும்தான் கிடைக்கும்

ஒரு முன்னாள் முதல்வரே செட்டப் எனக் கூறி விசாரணையை சந்தித்த வழக்கு. அந்த வழக்கை உறுதி  பண்ணுவதற்கும் வழக்கில் வெற்றி பெறுவதற்கும் ஒருவன் உதவுகிறான் என்றால் விசாரணை முகமை அதை பயன்படுத்திக் கொள்ளத்தான் செய்யும்.

எந்த பைத்தியக்காரனாவது தனக்கு விடுதலை கிடைத்து விடும். தன் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியாது என்று தெரிந்தும் அந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை வாங்குவானா? 

எவன் வாங்குவான்? எவனுக்கு சமுதாயம் எல்லாம் முக்கியம் இல்லை. தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. தன்னோடு வழக்கில் உள்ள எதிரிக்கு இரண்டு கண் போக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவன் தான் இதைச் செய்வான்.

காட்டி கொடுத்தது யார்? காப்பாற்றிவிட்டது யார்? என்பதை தெளிவாகச் சொல்லி விட்டோம். நியாய உணர்வு உள்ளவர்களுக்கு புரிந்துகொள்ள இது போதும்.



காமில் சொன்னது போல சினிமாவில கூட இப்படி நடந்திருக்காது என்றாரே அது இந்த வெடிக்காத குண்டு வழக்குதான்.   எங்கு   இருந்து  மேற்கோள் காட்டுறார்? என்கிறீர்களா?   

ஜிப்பா, தொப்பி, தாடியுடன் கூடிய இவருக்கு சினிமாவில்  இருந்து  தான்  மேற்கோள்  கிடைக்கிறது.  

பொய் வழக்கில்    உள்ள   மற்றவர்களுக்கு     எந்த   பாதிப்பும்  வரக் கூடாது என்ற நல்ல  எண்ணத்தில். மற்றவர்கள் மீதான  குற்றசாட்டையும் தானே ஏற்று இவர்  தண்டனைய ஏற்று இருந்தால்  இவரை முஸ்லிம்,  முஃக்லிஸ் என பாராட்டலாம்.

ஆனால்  காமில் செய்தது என்ன?  வலிய போய் வாண்டட்டா வண்டியில்  ஏறி நான் குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன் என்று  சொல்லி தண்டனை வாங்கினார்

இப்படி இவர் தானாக போனால்  மற்றவர்கள் மீதான  குற்றச்சாட்டும்  உறுதியாகி விடும் என்பது கூட தெரியாத கை நாட்டா காமில்?

காட்டிக் கொடுத்தார்கள் மாட்டி விட்டார்கள் என்று பீ.ஜே, தமுமுக பற்றி 1997ல் இருந்து நோட்டீஸ் போட்டது இந்த காமில் தான்.

இந்தக் காமில் தான், பொய் வழக்கான வெடிக்காத   குண்டு   வழக்கில்      தானும்  தண்டனை வாங்கி கூட   இருந்தவர்களுக்கும்   தண்டனை    வாங்கி   கொடுத்து விட்டுத்தான் விடுதலையானார்.

செட்டப் ரிலீஸ் என்பார்களே அது போல. அதிகாரிகள் மட்டத்தில் பேசி. இருந்த காலத்தோடு முடித்து விடுங்கள்.  என்னை எப்படியாவது விடுதலை பண்ணி விடுங்கள். இப்படி  விடுதலை வாங்குவது.  அதாவது காலில் விழுந்து சரண்டர் ஆகின்ற மாதிரிதான். 


இருந்த காலத்தை தண்டனை காலமாகக் கருதி விடுதலை பண்ணுங்கள் என்று கேட்டு மன்றாடி வெளியாவது போன்றதுதான். இதில் என்ன பெருமையும் வீரமும் இருக்கிறது? 

 7 ஆண்டுகள் தண்டனை எனக் கூறி இருந்த காலத்தை கழித்து மேற்கொண்டு தண்டனை அனுபவிக்க வேண்டியது இல்லை என காமிலை கோர்ட் விடுதலை செய்தது. 

காமிலால் தண்டனையான அந்த வழக்கால், இப்பொழுதும்  அந்த தண்டனை தீர்ப்பே  மற்றவர்கள்  விடுதலைக்கு தடையாக இருக்கிறது.  காரணம் யாரு? காமில் தானே?

வெடிக்காத குண்டுக்கு தண்டனை வாங்கி கொடுத்த இந்தக் காமில் தான் மற்றவர்களை  காட்டிக் கொடுத்தார்கள். மாட்டி விட்டார்கள் என்று 1997ல் இருந்து நோட்டீஸ்  போட்டு வந்துள்ளார். 1997ல் இருந்து 2004 வரை அவர் போட்ட நோட்டீஸ்களை இப்பொழுது வெளியிடுவாரா? மாவீரர் காமில்? 

அந்த (வெடிக்காத குண்டு) வழக்கில் என் மீது குற்றம் நிரூபிக்க முடியாது என்ற நிலையிலும், நான் நீதிமன்றத்தில் வழக்கில் என் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன் என பகிரங்கமாக கூறினேன்  என்று  காமில் எழுதி இருந்தார்.

அதை ராயரம் முஹம்மது சாதிக் அவர்கள் எனக்கு அனுப்பி இருந்தார். அதில் “உன்மையாக தொடர்பில் இருப்பவர்கள் வழக்கை நடத்தவிடாமலும்”, என்றும் குறிப்பிட்டு எழுதி இருந்தார். இணைப்பில் உள்ள பைலை பாருங்கள்.  அப்படியானால் காமில் யார்?


 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் உட்பட  எல்லா  அரசியல் கட்சியினரும் பொய் வழக்கு, செட்டப் என்று கூறிய இந்த வெடிக்காத குண்டு வழக்கில் தான் உன்மையாக தொடர்பில் இருப்பவர்கள் வழக்கை நடத்தவிடாமலும், என்று எழுதி உள்ளார். 

இனியாவது துஆச் செய்வீர்களா?

யா அல்லாஹ் 1980களிலிருந்து  இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டும் காட்டிக் கொடுத்தும் மாட்டி விட்டும் பொய் சாட்சியம் சொல்லியும் முஸ்லிம் சமுதாயத்திற்கு கேடு விளைவித்த ஒவ்வொரு பாவிகள் மீதும் அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். 

இளைஞர்களின் உணர்ச்சிகளை துாண்டி விட்டு காசு பார்ப்பதை தொழிலாக ஆக்கிக் கொண்டவனின் கூட்டத்தார் மீதும்ஏவி விட்டு காட்டிக் கொடுத்து காசு பார்த்தவனின் கூட்டத்தார் மீதும்காசுக்காக காட்டிக் கொடுப்பதையே தொழிலாக ஆக்கிக் கொண்டவனின் மீதும்அவனது கூட்டத்தார் மீதும் அவர்களை ஆதரிப்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

காசுக்காக உளவுத்துறையின் கைக் கூலியாக இருந்தவர்கள் மீதும் இருப்பவர்கள் மீதும் அநியாயமாக அப்பாவிகளை மாட்டி விட்டு காசு பார்த்தவர்கள் மீதும்  அநியாயமாக மாட்டி விட்டவனுக்கு பதவி  கொடுத்த கட்சியில் உள்ள அனைவர் மீதும் குறிப்பாக மாநில தலைவர் மற்றும் ஒவ்வொரு நிர்வாகிகள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன். இவர்கள் அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன்

ஹை கோர்ட்டும் சுப்ரீம் கோர்ட்டும் விடுதலை செய்ய உத்தரவிட்ட பிறகும் யாருடைய செயல்பாடுகளால் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை தடையாக உள்ளதோ அவர்கள் அத்தனை பேர் மீதும் அவர்களது ஆதரவாளர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். துஆ செய்யுங்கள்

சம்பந்தம் இல்லாதவர்களை அநியாயமாக மாட்டி விட்ட அந்தக் கூட்டத்தைச் சார்ந்த கூட்டணியினர் மீதும் அவர்களை ஆதரித்து நிற்கும் ஒவ்வாருவர் மீதும் யா உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். 





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு