மேலப்பாளையத்துக்கே ஹல்வா அனுப்பிய மேல் பட்டாம்பாக்கம். நிச்சயமாக விஷயத்தில் பீ.ஜே. யூதக் கைக் கூலியா?
மேலப்பாளையம் தக்வா இனாயதுல்லாவுக்கும் பீ.ஜே.க்கும் நிர்வாகப் பிரச்சனையா
கொள்கைப் பிரச்சனையா?
மேலப்பாளையம் தக்வா பள்ளி இமாம் படித்துக் காட்டிய
தர்ஜுமாவிலுள்ள தமிழ்
யாருக்குத்தான் புரிந்தது?
அஹ்லே ஹதீஸ் ஜமாஅத்தைச் சார்ந்த மேல் பட்டாம்பாக்கம் ஷாஜஹான்
அவர்களே! குர்ஆனில் "இன்ன" "அன்ன" என்று அல்லாஹ் வால் உறுதி செய்யப்பட்ட
வார்த்தைக்கு என்ன மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது என்பதை விளக்க முடியுமா? இதுவும் உங்கள் கேள்விகளில் ஒன்று.
அல் குர்ஆன் இண்டக்ஸ் மற்றும் வார்த்தைக்கு வார்த்தை எழுதி
வரும் நாம். படிப்பவர்கள் சிந்திப்பதற்காக முடிந்தவரை 10 பதிப்புகளிலிருந்து மொழி பெயர்ப்புகளை தந்து வருகிறோம். பல குறிப்புகளை கொடுத்து வருகிறோம்.
திரு குர்ஆன் 2:25.க்கு வார்த்தைக்கு வார்த்தை எழுதும்போது தஃஹ்திஹா என்பதற்கு நாமறிந்தவரை 5 அறிஞர்கள் மொழி பெயர்ப்பு செய்யாமல் விட்டுள்ளார்கள் என்பதையும் சிந்திப்பதற்காக குறிப்பிட்டிருந்தோம்.
இதற்கு பதில் அளிக்க வந்த நீங்கள் உங்களைப் பொறுத்தவரை பீ.ஜே. யூதக்
கைக் கூலி என்றீர்கள். யார் யூதக் கைக் கூலிகளாக
இருந்தாலும் அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக ஆமீன்.
பீ.ஜே. தர்ஜுமாவில் விடப்பட்டுள்ள இன்ன அன்ன பற்றி எமக்கே
பாடம் நடத்தி இருந்தீர்கள். திருநெல்வேலிக்கே
ஹல்வா அனுப்பி இருந்தீர்கள்.
நிச்சயமாக என்ற வார்த்தை பீ.ஜே. தர்ஜுமாவில் விடப்பட்டுள்ளது
பற்றி எந்த மவுலவிகளும் பேசவில்லை. முதன் முதலில்
2003லேயே விமர்சனம் செய்தவன் நான் தான்.
எனது
விமர்சனத்தைப் பாராட்டியவர்களில் சுன்னத் ஜமாஅத் மவுலவிகளும் தவ்ஹீது மவுலவிகளும் ஏராளம் ஏராளம்.
குறிப்பாக இஸ்மாயில் நாஜி, K.S. ரஹ்மதுல்லாஹ் இம்தாதி
போன்றவர்கள் என் வீட்டுக்கு வந்த போதும் பாராட்டிச் சென்று இருக்கிறார்கள்.
இன்ன
அன்ன ஏன் பொருள் செய்யவில்லை? என்று பீ.ஜே. தர்ஜுமாவில் விளக்கம் அளித்து
இருந்தார்கள். தஃஹ்திஹா என்பதற்கு ஏன் மொழி பெயர்க்காமல் விட்டார்கள் என்பதற்கு
சம்பந்தப்பட்ட அறிஞர்கள் யாருமே
எந்த விளக்கமும் சொல்லவில்லை. இது தான் கவனிக்க வேண்டிய விஷயம். இது சம்பந்தமாக
பல விமர்சனங்கள் இருந்தாலும். அந்த விமர்சனங்களை நாம் எழுதவில்லை.
நிச்சயமாக போன்ற பல விமர்சனங்களை செய்த அந்த நேரத்திலும். இருக்கும்
தர்ஜுமாக்களில் சிறந்தது பீ.ஜே. தர்ஜுமாவே
என்பது தான் எனது நிலைப்பாடு.
புலவன்
இனாயதுல்லாஹ் அவர்களை தலைவராகக்
கொண்ட மேலப்பாளையம் தக்வா பள்ளியில் பஜ்ருக்குப்
பிறகு தர்ஜுமா வாசிப்பார்கள். ஒரு முறை நாம் சென்ற அன்று
இமாம் படித்துக் காட்டிய
தர்ஜுமா தமிழ் எனக்குப்
புரியவே இல்லை.
வெளியில் வந்து அங்கு நின்ற ஒரு ஆலிம்ஸாவிடம் கேட்டேன். அவரும் அந்தத் தமிழ் புரியவே
இல்லை என்றார். பிறகு வெளியில் வந்த பள்ளி பொருளாளர் வாலன் (A.M.S)
அன்வர் அவர்களிடம் கேட்டேன். அவரும் தெரியவில்லை
என்றார்.
த.மு.மு.க.வின் அன்றைய மாவட்ட தலைவராக இருந்த தக்வா
கமிட்டி மெம்பர் அப்பாஸ் ஹில்மி என இப்படி பலரிடமும் கேட்டோம். யாருக்கும் தெரியவில்லை. கடைசியாக படித்துக் காட்டிய
இளம் இமாமே வந்தார், அவரிடமே கேட்டோம். அவரும் அந்த தமிழ் தெரியவில்லை புரியவில்லை என்றார்.
படித்துக் காட்டிய பேஷ் இமாமாகிய உங்களுக்கும் படிப்பதைக் கேட்ட
மாமூம்களுக்கும் தெரியாத, புரியாத அந்த தர்ஜுமாவை ஏன் படிக்கிறீர்கள் என்று கேட்டேன். தலைவரிடம் சொல்லுங்கள் என்றார். அன்று இனாயதுல்லாஹ் வரவில்லை.
எனவே மாலையில் இனாயதுல்லாஹ் மரக்கடை சென்று சொன்னேன். யாருக்கும் தெரியாத,
புரியாத அந்த தர்ஜுமாவை படிப்பதை விட நீங்களும் சேர்ந்து புகழ்ந்து பாராட்டி
வெளியிட்ட பீ.ஜே. தர்ஜுமா படித்தால் என்ன
என்று கேட்டேன்.
இல்லை ஷெய்கு முடியாது என்று சிரித்தார். உங்களுக்கும் பீ.ஜே.க்கும் இடையில் ஏற்பட்டது நிர்வாகப் பிரச்சனையா கொள்கைப்
பிரச்சனையா? என்றேன். அதில் பிழை இருக்கிறது
என்றார். என்ன பிழை என்று கேட்டேன். எல்லாரும்
சொல்கிறார்கள் என்றார்
அப்படியானால் உங்கள் செல் போனில் ஏன் பீ.ஜே. தர்ஜுமாவை
டவுண்லோடு செய்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். பதில்
சொல்லாமல் சிரித்தார். சரி பீ.ஜெ.
தர்ஜுமாவை நான் தருகிறேன். பள்ளியில் படிக்கச்
செய்யுங்கள் என்றேன். வேண்டாம் வேறு தர்ஜுமா தாருங்கள் என்றார்.
பின்னர் ஒரு முறை போன் செய்த தக்வா தலைவர் இனாயதுல்லாஹ். பாக்கர் வருகிறார்.
அவர் நிகழ்ச்சியில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு தா்ஜுமா கொடுக்கணும்.
பத்து, பதினைந்து தா்ஜுமா தாருங்கள் என்றார். P.J. தர்ஜுமாதான் தருவேன் என்றேன். பாக்கரிடம் கேட்டு
விட்டு சொல்கிறேன் என்றார். பிறகு பாக்கர் P.J. தர்ஜுமா வேண்டாம்
என்றதாகக் கூறினார்.
பாக்கர்தானே முஸ்லிம் அல்லாதவர்கள் புரிந்திடும்
எளிய தமிழில் என்று அவரது குரலிலேயே விளம்பரம் செய்தார். இப்ப
என்ன ஆயிற்று? பாக்கர் போனதும் புரிந்திடும் எளிய தமிழும்
போய் விட்டதா? புரிந்திடும் எளிய தமிழ் புரியாத தமிழாக ஆகி விட்டதா? டைரக்டர் டி.ராஜேந்தரே பார்த்து பாராட்டிய
சிறந்த தமிழ் தர்ஜுமா என்று 10-06-2005 தேதிய
ஜும்ஆவில் பாக்கர்தானே சொன்னார் என்றேன்.
ஜான் டிரஸ்ட் தாருங்கள் காசும் கம்மியாக இருக்கும் என்றார் இனாயதுல்லாஹ். காசு கூடுதலாக இருந்தாலும்
தந்தால் பீ.ஜே. தர்ஜுமாதான் தருவேன் என்றேன்.
வேண்டாம் என்றார். இந்த மாதிரி எத்தனையோ சம்பவங்கள்.
அத்தனையும் எப்பொழுது?
பொய் சத்தியம் செய்து பொய் சாட்சியம் சொன்னவர்கள் சொல்லையும்
காசடிப்பதற்காக பல மோசடிகள் செய்தவர்களையும் நம்பி. பீ.ஜே.யை கடுமையாக விமர்சனம் செய்து எதிர்த்து நின்ற காலம். நீங்களெல்லாம் இப்பொழுது தனித்து விடப்பட்ட பீ.ஜே. என்கிறீர்கள்.
நாம் எதிர்த்து நின்றது பட்டாக் கத்தி பைரவன்களும் கத்திக் குத்து கார் மேகங்களும் அவரை சூழ்ந்து நின்ற காலம். அப்பொழுதுதான் பீ.ஜே.யை எப்படியாவது உள்ளே தள்ளி விட வேண்டும் என்று வெறி
கொண்டு செயல்பட்டேன். அந்தக் காலங்களில் நடந்தவை தான் மேலே சொன்னவை.
எல்லாருமே பீ.ஜே. தர்ஜுமாவுக்கு நீங்கள் ஏன் சிபாரிசு செய்கிறீர்கள்
என்பார்கள். பீ.ஜே. தர்ஜுமா என்று சொல்லாதீர்கள். இலாஹி தர்ஜுமா என்று சொல்லுங்கள்.
இந்த மாதிரி நடைமுறைத் தமிழில் தர்ஜுமா வர வேண்டும் என்று பாடுபட்டவன் நான் என்பேன். கட்ட
வண்டிக்காரனிடம் கூட பேசும்போதெல்லாம் இப்படி அடிக்கடி சொல்லிக் காட்டி இருக்கிறேன்.
மேலும்
நெஞ்சங்களில், இ(ரு)தயங்களில் என்றுள்ள மொழி பெயா்ப்புகள் சரிதானா?
அல் பாத்திஹா அத்தியாயத்தின் மொழி பெயா்ப்புகள்.
முடிச்சுகளில் ஊதும் பெண்கள் -நேரடி பொருள் சரியா?
இதயம், நெஞ்சம்.உள்ளம், மனது,அறிவு,மூளை எது சரி
போன்ற தலைப்புகளை
படித்துப் பார்த்தால் காழ்ப்புணர்வில் காரித் துப்புவன் நான் அல்ல என்பதை அறிவீர்கள், புரிவீர்கள்.
நிச்சயமாக என்ற வார்த்தை விடப்பட்டுள்ளது சம்பந்தமாக நாம்
எழுதிய விமர்சனங்கள். 20 அறிஞர்கள் குழு சேர்ந்து பீ.ஜே. தர்ஜுமாவில் இடம் பெறச் செய்ததாக உள்ள குறிப்புகள் அடிப்படையில் தான். விமர்சனங்கள்
செய்து இருந்தோம்.
ஆய்வுகளும் மொழி பெயர்ப்புகளும் காலத்திற்கு காலம் அறிவு வளர்ச்சியின் அடிப்படையிலும் பேச்சு வழக்கிலும் மாறுபடும். ஆகவே ஆய்வு
செய்தல் அனைவருக்கும் பொதுவானது, சொந்தமானது.
நாமத்தால் என்பதை மாற்றி நடைமுறைத் தமிழில் மொழி பெயர்ப்பை முதன் முதலில் தந்தவர் ஆ.கா. அப்துல்
ஹமீது பாகவி. அவருக்கும் காபிர் பட்டம் அளித்து மகிழ்ந்தவர்கள் தான் நமது
சமுதாயத்தவர்கள்.
தொடரும் உங்கள் கேள்விககுக்கான பதில் இன்ஷாஅல்லாஹ்
தொடரும் உங்கள் கேள்விககுக்கான பதில் இன்ஷாஅல்லாஹ்
Comments