காபிர் பத்வாவில் இருந்து தப்பிய கட்சியினர் யார்? மூனா ஆனா சேனா தான் தப்பினாரா? யார் அகதி?


இறை இல்லமான பாபரி மஸ்ஜிது  இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டது. அந்த இறை இல்லம் இனி அந்த இடத்தில் இல்லை என்று தீர்ப்பு ஆனது. அப்போதெல்லாம் இல்லாத> ஏற்படாத தன்  எழுச்சி தங்கள் இணை (கணவர் கட்டிய)  இல்லம் தங்களுக்கு இல்லை என்று ஆகி விடுமோ என்றதும் ஏற்பட்டு உள்ளது.   இன்றைய இந்திய சூழலில் எதிர்ப்பாளர்களை குறைத்து ஆதரவாளர்களை பெருக்க வேண்டும். எல்லா தரப்பு ஆதரவுகளையும் பெற வேண்டும்.  
அது குஜராத் விஷயத்தில் மோடி ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணக் கூடாது என்று சொன்ன கட்சி. முத்தலாக், என்.ஐ.ஏ.க்கள் வெற்றி பெற துணை நின்ற கட்சி என்று சொல்லி பகையை கூட்டக் கூடாது.  எதிராளிகளை குறைக்க வேண்டும் என்று அறிவுள்ளவர்கள் உபதேசம் செய்துள்ளார்கள். 


அந்த அறிவாளிகள் அறிவுரையை அவர்களது எதிரிகளும்  ஏற்று விட்டார்கள். அதனால் தான்  நேற்று வரை அவன் மேடையில் நான் ஏற மாட்டேன். என் மேடையில் அவனை ஏற்ற மாட்டேன், ஏற விட மாட்டேன் என்றவர்கள் எல்லாம் அவர்களின்  இந்தக் கொள்கைகளை விட்டு விட்டார்கள். 

ஆனால் காலம் காலமாக காபிர் பத்வா கொடுத்து வரும் கூட்டம் மட்டுமே அவர்களின் இந்த தொழிலை விடவில்லை.  அறிஞர்கள் போர்வையில் உள்ள அறியாமைக்காரர்கள் பத்வாவை பரப்பி மகிழ்ச்சி அடைபவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். 

அந்த சகோதரர்களுக்கு ஒரு கேள்வி நீங்கள் இருக்கும் இயக்கத்தின் புகழ்பாடித் திரியும் அடிமட்ட தொண்டர்களாகிய நீங்கள். அந்த இயக்கத்தின்   மூலம் தனிப்பட்ட உங்கள் முயற்சியால்  சமுதாயத்திற்கு  என்ன நன்மையை பெற்றுக் கொடுத்தீர்கள்?  இஸ்தப்ஸி கல்பக என்ற நபி மொழி படி உங்கள் உள்ளங்களை கேளுங்கள். 

லோடு மேனாக இருந்து மூட்டை தூக்கி சம்பாதித்த MGR ரசிகர் புலவர் ஷாகுல் ஹமீதுக்கும் ஒரு காலத்தில் (1977ல் )  காபிர் பத்வா கொடுத்தார்கள்.  அந்த நேரத்தில் தான். அவர் மூலம்  எனது தெருவில் இருந்த இரண்டு விதவைகளின் வீடுகளுக்கு வீட்டு தீர்வை இல்லை என்று ஆகியது.  எங்கள் பகுதியில் முனிசிபாலிட்டி மூலம்  அடிபம்புகள் வைத்துக் கொடுத்தார். இது எனக்குத் தெரிந்த சேவை. இது மாதிரி நிறைய செய்து இருக்கிறார்.

1960களில் காபிர் பத்வா கொடுக்கப் பட்டு பத்திரிகைகளிலும் இழிவாக எழுதப்பட்டவர் .மூனா ஆனா சேனா. அ.தி.மு.க. ஹயாத் கூட அந்த மாதிரி பத்திரிக்கைகளிளெல்லாம் இழிவாக எழுதப்படவில்லை. யார் அந்த மூனா ஆனா சேனா என்பதை பிறகு பார்ப்போம். அதற்கு முன் அகதிகள் பற்றிய ஒரு வரலாற்று நிகழ்ச்சியை பாருங்கள்

சமீபத்தில் ஒரு  முஸ்லிம் பெண் தனது எதிரியான முன்னாள் கணவரை விமர்சிக்கும் போது.  நீயே ஒரு பர்மா அகதி என்றார். இதில் நமக்கு உடன்பாடு இல்லை.  மற்ற விமர்சனங்களை நாம்  குறை கூற மாட்டோம்.  1960களில்  பர்மா அகதிகளுக்கு அரசு வேலை அல்லது தொழில் செய்ய பணம் என்று இந்திய அரசு அறிவித்தது. 

அரசு வேலைக்கும்  பணத்திற்கும்  பலர் மனு கொடுத்தார்கள். மேலப்பாளையத்தைச் சார்ந்த ஒருவர் மட்டும் மனு கொடுக்க மறுத்து மனு கொடுத்தவர்களிடம் சண்டை போட்டார்.  பர்மா அகதி என்று போட்டு நம்மிடம் கையெழுத்து வாங்குகிறான்  நாம் என்ன பர்மா அகதியா?

நாம் இந்தியர்கள்.  பர்மாக்காரன் பல்லாயிரக்கணக்கான நமது சொத்துக்களை பிடுங்கி விட்டு அடித்து விரட்டி விட்டான்.  அதைவிட கொடுமை நம்மை பர்மா அகதிகள் என அறிவித்து.  அதை உறுதி படுத்த நமக்கு உதவுதல் போல் கையெழுத்து வாங்குவது என்று கத்தினார். 

பார்மாவில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவி.  பர்மாவில் சொத்தை இழந்த இந்திய குடிமக்களுக்கு உதவும் திட்டம் என்று போட சொல்லுங்கள் என்றார். அவர் யார்? புதுமனை நடுத்தெருக்காரர். இன்று அது காயிதே மில்லத் தெரு 

அவரது அந்த பேச்சு செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது.  நாம அகதிதானே ஓய் என்று சிலர்.  என்ன பெயரில் தந்தால் என்ன என்று சிலர். ஆக எல்லாரும் மனுச் செய்து வாங்கி விட்டார்கள்.  கடைசியில் அவரும் பணம் வாங்கி பலசரக்கு கடை வைத்தார். 

1974ல்  எல்லாருக்கும் நோட்டீஸ் வந்தது. வாங்கிய கடனை திருப்பி கட்டுங்கள் என்று.  பணம் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் இது கடனாக தந்தது தான் என்று அப்போது தான் புரிகின்றார்கள். நோட்டீஸுக்கு பிறகு நோட்டீஸ் வரவே . இனி ஜப்தி நடவடிக்கை வந்து விடும் என்ற நிலை ஆனது.

மேலப்பாளையம் தொகுதி (இன்று பாளை)  முஸ்லிம் லீக் MLA கோதர் மைதீன் இடமோ, நெல்லை தொகுதி கம்யூனிஸ்ட்  எம். பி. முருகானந்தம் இடமோ போய் பிரயோஜனம் இல்லை என்று முடிவுக்கு வந்தவர்கள் கடைசியில் 1960களில் காபிர் பட்டம் கொடுக்கப்பட்ட மூனா ஆனா சேனாவிடம் போனார்கள். 

M.A.S. (மு.அ.செ) அபுபக்கர் ஸாஹிப் அவர்களைத்தான் அக்கால மக்கள் (மு.அ.செ) மூனா ஆனா சேனா என்று சொல்வார்கள். முஸ்லிம்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டை ஒழித்த காங்கிரஸ் கட்சியில் இருக்கக் கூடாது.  வெளியேறு என்று காபிர் பத்வா கொடுக்கப் பட்டு பத்திரிகைகளிலும் இழிவாக எழுதப்பட்டவர் M.A.S. அபுபக்கர் ஸாஹிப். அவர்கள்தான்.  இந்திய அளவில் இந்தக் கடனை தள்ளுபடி செய்ய வழி வகுத்தவர்களில் ஒருவர். 

சொந்த செலவில் டெல்லி வரை ஆட்களை அனுப்பி வைத்து காரியம் ஆற்றினார். அவர் காபிர் பத்வாவுக்கு பயந்து காங்ரஸை விட்டு போகாமல்  இருந்ததால்தான் அதை செய்து கொடுக்க முடிந்தது. 


காபிர் பத்வா கொடுப்பவர்கள் அந்த தொழிலை செய்து கொண்டேதான் இருப்பார்கள். நீங்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும். அதன் மூலம் சமுதாயத்திற்கு நீங்கள் என்ன சேவை செய்தீர்கள். அதுதான் அல்லாஹ்விடம் நன்மை பெற்றுத் தரும். 

ஒவ்வொரு இயக்கத்திலும் அடிமட்ட தொண்டர்களாக இருந்து கொண்டு தலைவர்  புகழ்பாடித் திரிபவர்களே! எதிரணியினரை இகழ்ந்து மகிழ்பவர்களே! அந்த இயக்கத்தின்   மூலம் தனிப்பட்ட உங்கள் முயற்சியால்  சமுதாயத்திற்கு  என்ன நன்மையை பெற்றுக் கொடுத்தீர்கள்?  


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு