யார் குத்தி அரிசியானாலும் சரி. எப்படி குத்தி அரிசியானாலும் சரி என்ற நிலையில் உள்ளோமா? என்ன நிலையில் உள்ளோம்?
அல்லாஹ்வுக்காக
ஒன்று சேர்ந்துள்ளோமா?. அவரவருக்காக ஒன்று சேர்ந்துள்ளோமா?
அல்லாஹ்வுக்காக ஒன்றுபடுங்கள் ஒற்றுமையாக இருங்கள் என்று கதறியபொழுதெல்லாம் ஒன்றுபடாதவர்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்திய சோதனையா?
அவர்கள் அழுத்தத்தை நாம் விமர்சித்தோமா? அவர்களால் இயன்ற அழுத்தம் அது என்று இருந்தோமா?.
அவர்கள் அழுத்தத்தை நாம் விமர்சித்தோமா? அவர்களால் இயன்ற அழுத்தம் அது என்று இருந்தோமா?.
எதிர்ப்பாளர்களை குறைத்து ஆதாரவாளர்களை கூட்ட வேண்டிய சூழலில்
உள்ளோம். இதை உணராதவர்கள் உணர்ச்சிகளுக்கும் இயக்க வெறிகளுக்கும் அடிமையாகி எதிர் தரப்புக்கு
ஆட்களை சேர்த்து விடும் வேலையை கன கச்சிதமாக செய்து வருகிறார்கள்.
ரசூலுல்லாஹ் காலத்தில் இருந்த முனாபிக்குகள் அல்லாஹ்வையும் முஹம்மது(ஸல்)
அவர்களையும் ஏற்று ஈமான் கொள்ளாதவர்கள். அந்த முனாபிக்குகளைக் கூட ரசூலுல்லாஹ் ஒதுக்கவில்லை
என்று ஊருக்கு உபதேசம் செய்கிறோம்.
ஆனால் ஒரு கட்சியின் மீது
உள்ள பாசத்தால் இயக்க வெறியால் இன்னொரு கட்சியில் உள்ளவர்களுக்கு காபிர் பத்வா கொடுப்பது என்பது காலம் காலமாக
நடந்து வருகின்றது. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.
அழுத்தம் கொடுப்பது சம்பந்தமாக இன்றைய சூழலில் யாரையும் விமர்சிக்க கூடாது என்று
இருக்கிறோம். அழுத்தம் கொடுப்பது அவரவர் தகுதி அடிப்படையில் உள்ளது.
ஓரணி, பேரணி, ஆர்ப்பாட்டம், மறியல், முற்றுகை, கெரோ, பந்த் என எல்லாரும் செய்வதில்லை.
குறிப்பாக ஜாக்,
மு.லீக் போன்ற தலைமைகள் இதை செய்வது இல்லை. தமிழக அளவில் பல உலமா சபைகள் இதை செய்து
வழக்கு வாங்கி உள்ளன. சில ஊர்களில் உள்ள உலமா சபைகள் இதை செய்து வழக்கு வாங்கவில்லை.
சிற்றுார்
பேரூர்களில் ஓரணிக்கு வரும் மு.லீக்கின் தலைமை மாநில அளவில் முஸ்லிம்களின் கூட்டமைப்பு
என்ற பெயரில் கூடினாலும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் என்ற பெயரில் கூடினாலும் அந்த கூட்டங்களுக்கு மு.லீக்கின் மாநில தலைமை வருவதில்லை இதுதான் வரலாறு.
அதற்காக அதை நாம் விமர்சிப்பதில்லை. அது அவர்கள் நிலைப்பாடு.
1994ல் காயல் மஹ்பூப் சிறையில் இருந்தபொழுது அவரது விடுதலைக்காகவும் சேர்த்து நடந்த பேரணியில் மு.லீக் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் அன்றைய முதல்வர் புரட்சித் தலைவி என்றழைக்கப்பட்பட ஜெயலலிதா அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைப்போம் என்றார்கள். அதை நாம் விமர்சிக்கவில்லை.
பேரணி, ஆர்ப்பாட்டம், மறியல், முற்றுகை, கெரோ, பந்த் என்று மு.லீக் களம் இறங்காமல் மாநாடு, பொதுக்கூட்டம்
என்ற மு.லீக் மாநில தலைமையின் அழுத்தத்தை நாம் விமர்சித்தோமா? அவர்களால் இயன்ற அழுத்தம் அது என்று இருந்தோமா?.
அல்லாஹ்வுக்காக
வர மாட்டார்களா? அல்லாஹ்வுக்காக ஒன்று சேர மாட்டார்களா? என்று கேட்கிறார்கள். அல்லாஹ்வுக்காக
ஒன்று சேருவது என்றால் பாபரி மஸ்ஜித் மீட்புக்கு ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்.
ஒரே
கோரிக்கை ஒன்பதாயிரம் கூட்டம் என்றுதான் பாபரி மஸ்ஜித் விஷயத்தில் செயல்பட்டார்கள்.
இன்று யாரும் அல்லாஹ்வுக்காக ஒன்று சேரவில்லை. அவரவர் குடியுரிமை பிரச்சனைக்காக ஒன்று சேர்ந்து இருக்கிறோம்.
கூட்டுத்
துஆவினர் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்றவர்கள். கூட்டுத் துஆ கூட்டத்தையே
தலைமையாக ஏற்று செயல்படுகிறார்கள்.
தொப்பி போடாதவன் பின்னால் போக மாட்டோம் என்றவர்கள்.
தொப்பி போடாதவர்கள் பின்னால் பேரணியாகப் போனார்கள். யாருக்காக?
அவரவருக்காக அவரவர் குடியுரிமை பிரச்சனைக்காக. அல்லாஹ்வுக்காக
ஒன்று கூடி இருந்தால் பாபரி மஸ்ஜிதை என்றோ மீட்டு இருப்போம்.
அல்லாஹ்வுக்காக
ஒன்றுபடுங்கள் ஒற்றுமையாக இருங்கள் என்று கதறியபொழுதெல்லாம் ஒன்றுபடாதவர்களுக்கு அல்லாஹ்
ஏற்படுத்திய சோதனை இது.
கடந்த
18-12-19 அன்று கீழே உள்ள மாதிரி ஆங்கில செய்தி வந்தது.
It is learnt that
three MF concerned in a sensational murder of a Hindu leader are conspicuously
found missing. They were found moving around in a silver colour Quanto(number
mot known) or a Maruti omni (colour and number not known). Their names are as follows:
Abdul Sameem,
Syed Ali Navas and Kaja Moideen.
There is a possibility
that one Abdul Samad of Parangipettai is also accompanying them.
Hence, please alert
all the checkpost and look for the above mentioned persons.
In the meanwhile,
please strengthen the security of vital installations/VVIPs/leaders of
religious org/places of worship/ tourist places with huge footfall etc.
The photos are being
sent in the trailing msg.
அடுத்தடுத்த நாட்களில் 19, 20, 21 ஆகிய தேதிகளில் தினமும் தமிழ் பத்திரிக்கைகளில் இது பற்றி செய்திகள் வித
விதமாக வந்த வண்ணம் இருந்தன. அந்த செய்திகளை பிளாக்கரில் இணைத்துள்ளோம் கிளிக் செய்து பார்த்து கொள்ளுங்கள்.
ரயிலில் சோதனை முதல்வர் வீட்டுக்கு பாதுகாப்பு. கேரளாவில்
கைது என்று. இந்த பரபரப்பான செய்திகளை பத்திரிக்கைளில் படித்து ரசித்த எத்தனை முஸ்லிம்கள் இதில் தலையிட்டீர்கள்? இதன் உண்மைத் தன்மையை அறிய முயன்றீர்கள்?
காவல்
துறை கஸ்டடியில் இருந்த சகோதரர் ஒருவர் அவர் இருந்த கட்சித் தலைவருக்கு போன் போட்டுள்ளார்.
தலைவர் போனை எடுக்கவில்லை. பத்திரிக்கைளில் . NIA விசாரணை என பரபரப்பாக செய்தி வந்த பின் யார் தான் அவர்
போனை எடுப்பார்கள்.
அ.தி.மு.க
ஹயாத் பற்றி வாதம் செய்த அந்த கட்சிக்காரருக்கு. போலீஸ் கஸ்டடியில் இருந்த அவரது கட்சி சகோதரர், தலைவர்
போனை எடுக்கவில்லை என்று சொன்ன. ஆதாரத்தையும் அனுப்பி உள்ளேன்.
அந்த சகோதரன் இருந்த முஸ்லிம்
கட்சித் தலைவரே தலையிடாத இந்த விஷயத்தில் யார் தலையிட்டார்கள் தெரியுமா?
யாருக்கு இந்த சமுதாயம் காபிர், முனாபிக்
பத்வா கொடுத்து மகிழ்ந்ததோ அவர்தான் இதில் தலையிட்டு மீட்டார்.
கேரளாவில் கைது செய்யப்பட்டதாக வந்த செய்திகள்
அனைத்தும் பொய்யானவை.
விசாரணைக்காக என்றுதான் காவல்துறை அழைத்து போயுள்ளது. NIA விசாரணை என்று
பத்திரிக்கைகளில் வந்தவை பொய் என அறிய வைத்தார்.
இதே
சகோதரன் மீது ஓராண்டுக்கு முன் ஒரு பொய் வழக்கு பாய்ந்தது. வழக்கறிஞர் ஜின்னாஹ்
அவருக்காக ஆஜரனார். அந்த சகோதரர் ஏழ்மை அறிந்து வழக்கு செலவை அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் ஏற்றார்கள்.
அந்த
சகோதரர் யார் என்று அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களுக்குத் தெரியாது. உதவிய அல்லாஹ்வின்
அருளுக்குரியவர்கள் யார் என்று இந்த சம்பவத்திலிருந்து வெளி வரும் வரை அந்த
சகோதரருக்கும் தெரியாது. இதுதான் அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களின் உண்மை நிலை.
ஆகவே இயக்க வெறியினால் வரம்பு மீறி விமர்சனம் செய்து அல்லாஹ்விடம் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
Comments