1985 ஷாபானு வழக்கை ஒட்டி நடந்த ஷரீஅத் பாதுகாப்பு பேரணி மாதிரியே இன்றைய 25-01-2020 பேரணி

ஷய்த்தானின் பார்வையில் அது கெடுதல் என்றாலும் அவருக்கு நடந்தது  நல்லது தானே - நன்மைதானே.  

இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சனை இந்தியர்களை ஒன்றிணைத்துள்ளது.

L.K.S. மீரான் மைதீன் மறந்திருக்க மாட்டார். நன்றாகப் புரிவார். ஷா பானு வழக்கில் அன்று இந்தியர்கள்  எப்படி ஒன்றிணைக்கப்பட்டார்களோ  அதே மாதிரியான இந்தியர்கள் ஒன்றிணைப்பு தான் இன்றும் நடந்துள்ளது.

https://mdfazlulilahi.blogspot.com/2020/01/1985-25-01-2020.html

திருநெல்வேலி டவுண் மேலரத வீதியில் காலையில் ஆரம்பித்த பேரணி இரவாகியும் முடியவில்லை. பேரணி சென்ற வழியில் முஸ்லிம்களுக்கு அன்று தண்ணீர் சப்ளை செய்தவர்கள். டவுணிலிருந்த பார்ப்பணர்கள்தான். பேரணி நிறைவு இடமான  அனாதை இல்ல வளாகத்தில் நடந்த மாநாட்டில் ஆற்றிய  தலைவர்களில் ஒருவர் உரை.


ஒருவர் மீது சுவர் இடிந்து விழப் போனது. சுவர் இடிந்து அவர் மீது விழுந்து விடாமல் இருக்க ஷைத்தான் போய் தடுத்தானாம்.  நீ  ஷய்தான்  ஆயிற்றே எப்படி  நல்ல காரியம் செய்தாய் என்று கேட்டார் அவர். 

அதற்கு ஷய்த்தான் சொன்னான்.  நீ  சுவர் இடிந்து விழுந்து செத்தால் ஷஹீது ஆகி விடுவாய். நேரடி சொர்க்கம் கிடைத்து விடும். இந்த நல்லது நடக்க நான் விடுவேனா?  அதனால் தடுத்தேன் என்றானாம். 

ஷய்த்தானின் பார்வையில் அது கெடுதல் என்றாலும் அவருக்கு நடந்தது  நல்லது தானே - நன்மைதானே.  

ஷாபானு வழக்கில் முஸ்லிம்களுக்கு  ஷரீஅத்துக்கு பாதகமான தீர்ப்பு என்று அவர்கள் நினைத்தாலும். முஸ்லிம்களை இப்படி ஒன்றிணைய வைத்ததால் இது சமுதாயத்துக்கு சாதகமான தீர்ப்பு. ஷரீஅத் என்றால் என்ன என முஸ்லிம் அல்லாதவர்களையும் விளங்க வைத்த தீர்ப்பு என்று.  அன்று மு.லீக் இளைஞர் அணி மாநில தலைவராக இருந்தவர் பாளை அனாதை இல்ல வளாக மாநட்டில் பேசினார். 

அன்று  L.K.S. மீரான் மைதீன் மு.லீக் மாணவரணி தலைவராக இருந்தார்.  இன்று மு.லீக் மாவட்ட தலைவராக இருக்கிறார்.  அன்று  மு.லீக் இளைஞர் அணி மாநில தலைவராக இருந்தவர். இன்று மு.லீக் அகில இந்திய தலைவராக இருக்கிறார் பேராசிரியர் காதர் மைதீன். அன்றைய பிரச்சனை.













1979ல் ஷா பானுவுக்கு மாதா மாதம் 25 ரூபாய் ஜீவனாம்சமாக  வழங்கவேண்டும் என இந்தூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மாத ஜீவனாம்சம் 25 ரூபாய் தனக்கு போதாது என்று கூறி, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை, ஷா பானு தாக்கல் செய்தார். மறு ஆய்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஷா பானுவின் ஜீவனாம்சத்தை ரூபாய் 25 லிருந்து ரூபாய் 179.20 ஆக உயர்த்தியது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த முகமது அகமது கான், இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியே என்று கூறி முகமது அகமது கானின் அப்பீல் மனுவை  1985  ஏப்ரல் 23 அன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது 

இந்த தீர்ப்பு தான் முஸ்லிம் அமைப்புகளை இந்திய அளவில் அன்று ஒன்றிணைத்தது.  அதன் பிறகு பாபரி மஸ்ஜித் இடிப்பு. பாபரி மஸ்ஜித் முஸ்லிம்களுக்கு இல்லை என்று ஆன தீர்ப்பு  முஸ்லிம்களை ஒன்றிணைக்கவில்லை. 

இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சனை இன்று இந்தியர்களை ஒன்றிணைத்துள்ளது.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு