முடிச்சுகளில் ஊதும் பெண்கள் -நேரடி பொருள் சரியா?

இந்த அத்தியாயத்தின் 4ஆவது  வசனத்தில் உள்ள    முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பதற்கு பெரும்பலானவா்கள் நேரடி பொருள் கொடுத்துள்ளார்கள். அதனால்  சூனியக்காரிகள்  சூனியக்காரர்கள்  என்று பலா் விளங்கியுள்ளார்கள். அந்த  அடிப்படையில்தான்   ஆண் என்பதையும்  இந்த  வசனத்தின்  மொழி பெயர்ப்பில் I.F.Tகுர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை ஆகியவா்கள் அடைப்புக்குறிக்குள் சேர்த்துள்ளார்கள். 
 பொறாமையின் காரணமாக மதீனாவில் உள்ள யூதா்கள்  இறைத்துாதர் முஹம்மது நபி(ஸல்) அவா்களுக்கு சூனியம் வைத்ததார்கள். அதனை முறியடிக்க அல் பலக் அந்நாஸ் ஆகிய அத்தியாயங்கள் அருளப்பட்டதாக எழுதியுள்ளார்கள். இப்படி விளக்கம் எழுதியவா்களில் அதிகமானோர் அந்த இரு அத்தியாயங்களும்  மக்கீ (மக்காவில் அருளப்பட்டது ) என்றும் எழுதியுள்ளார்கள்.  

பி.ஜெ. அவர்களும் அதே கருத்தில் இருந்தவா்தான். புகாரியில் உள்ள ஹதீ்ஸ்களை ஆதாரமாக் கொண்டு பேசியவா்தான்.  குர்ஆன் மொழி பெயா்ப்புக்காக பல அரபி நுால்களை ஆய்வு செய்ததின் பயனாக சரியான விளக்கம் பெற்றுள்ளார். அந்த விளக்கத்தை விரிவாக எழுதியுள்ளார். அதுதான்  சரியானது.

எல்லாவற்றுக்கும்  மேலாக  இறைத்துாதர் முஹம்மது நபி(ஸல்) அவா்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறுபவா்கள் பற்றி  அல்லாஹ் இரண்டே வசனங்களில் (17:47,25:8 الظّٰلِمُوۡنَ என்று )கூறி விட்டான்.அவா்கள்  அநியாயக்காரா்கள்- அக்கிரமக்காரர்கள் - வழிகேடர்கள். அநீதி இழைத்தோர். .அல்லாஹ் நம்மைக் காப்பானாக.

அல் Fபலக்-அதிகாலை-விடியற்காலை-வைகறை.
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ﴿١
113:1. (நபியே! நீங்கள் பிரார்த்தனை செய்து) கூறுங்கள் அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.  (ஆ.கா.அ.)

113:1 சொல்லுக! விடியற்காலையின் எஜமானனிடம் நான் காவல் தேடுகிறேன்.     (அன்வாருல் குா்ஆன்)

113:1.  (நபியே!) நீா் கூறுவீராக! அதிகாலையுடைய  ரப்பிடம். நான் காவல் தேடுகிறேன்.  (பஷாரத்)   

113:1.  (நபியே!) நீா் கூறுவீராக! அதிகாலையின்  இறைவனிடம் நான் (பாது) காவல் தேடுகிறேன்.  (திரீயெம்)

113:1. (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். (ஜான்)

113:1 கூறுவீராக! வைகறையின் அதிபதியிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்; (I.F.T)

مِن شَرِّ مَا خَلَقَ ﴿٢
113:2. அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும். (ஆ.கா.அ.)
113:2. அவன் படைத்தவற்றினுடைய  தீங்கிலிருந்தும்.(அன்வாருல் குா்ஆன்)
113:2 அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- ( பஷாரத், திரீயெம், ஜான்)

113:2 அவன் படைத்துள்ள ஒவ்வொன்றின் தீங்கிலிருந்தும்! (I.F.T)


وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣
113:3. (அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும். (ஆ.கா.அ.)
113:3  இருள் பரவும் போது ஏற்படும் (இரவில்) தீங்கிலிருந்தும்.(அன்வாருல் குா்ஆன்)
113:3. இருளின் தீங்கை விட்டும், அது பரவிடும்போது.(பஷாரத்)

113:3. இரவின் தீங்கை விட்டும், (அதில்) இருள் படரும்போது-(திரீயெம்)

113:3 இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-(ஜான்)

113:3 இரவுடைய இருளின் தீங்கிலிருந்தும்! அந்த இருள் படரும்போது! (I.F.T) 


وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ﴿٤
113:4. முடிச்சுப் போட்டு  ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கை விட்டும்.(ஆ.கா.அ.)
113:4 முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கிலிருந்தும். (அன்வாருல் குா்ஆன்)

113:4.முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதிடும் பெண்களின் தீங்கை விட்டும்.(பஷாரத்)

113:4முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதுகின்ற பெண்களின் தீங்கை விட்டும். (திரீயெம்)

113:4 இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,(ஜான்)

113:4 முடிச்சுகளில் ஊதுகின்ற (ஆண்) பெண்களின் தீங்கிலிருந்தும் (I.F.T)


وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥
113:5 பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும்.(பாதுகாக்கக் கோருகிறேன்.) (ஆ.கா.அ.)

113:5பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரரின் தீங்கிலிருந்தும். ( நான் காவல்தேடுகிறேன்). (அன்வாருல் குா்ஆன்)

113:5.  பொறாமை கொள்ளும் பொழுது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும்   ( நான் காவல்தேடுகிறேன்). (பஷாரத்)

113:5. பொறாமைக்காரனின்  தீங்கை விட்டும் - அவன் பொறாமை கொள்ளும்போது  ( நான் காவல்தேடுகிறேன்). (திரீயெம்)

113:5 பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல்தேடுகிறேன்).  (ஜான்)
  
113:5 மேலும், பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்தும், அவர்கள் பொறாமை கொள்ளும்போது (பாதுகாப்புத் தேடுகின்றேன்).(I.F.T)


வைகரையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், சூரியன் மறையும் போது ஏற்படும் இருளின் தீங்கிலிருந்தும், முடிச்சுக்களில் ஊதும் (ஆண்) பெண்களின் தீங்கிலிருந்தும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் தீங்கிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று (நபியே) நீர் கூறும்.(http://tamilquranwordbyword.blogspot.com/2013/01/2-113-5.html)


அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!  (P.J)



கீழுள்ளவை யாவும் ஜான் ட்ரஸ்ட் மொழி பெயா்ப்புகளாகவே நமக்குத் தெரிகிறது. 


Comments

Ibn-Maseeh said…
முடிச்சுகளில் ஊதும் பெண்களது தீங்கிலிருந்தும் எனப்படுவது "வேதனை தரும் பழைய பிரச்சினைகளை நினைவில் வைத்திருந்து இரவானதும் ஒவ்வொன்றாக அவிள்த்து கணவருக்கு தொந்தரவு கொடுக்கும் பெண்களது தீங்கிலிருந்தும்" எனக்கூறப்படுவது பற்றி உங்களது கருத்தை பனிவுடன் எதிபார்க்கிறேன்.

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.