உங்கள் எதிரிகள் உங்களை அழித்துவிடும் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பதனால்

ஈமான் கொண்ட முஃமின்கள் அனைவருமே ஒட்டு மொத்தமாக (தங்கள் ஊரைவிட்டு) வெளிப்பட்டு (போருக்கு) புறப்பட்டுச் செல்லலாகாது. அப்படி செல்வது  எப்பொழுதுமே  தகாது.   தேவையில்லை ,  கூடாது.


மார்க்க விஷயங்களை அறிந்துகொள்ள(க் கருதினாலும் அதற்காக) உங்களில் ஒவ்வொரு கட்சியில்  (அணியில்  - கூட்டத்தில்) இருந்தும் ஒரு தொகையினர் (சிலர்) மாத்திரம் புறப்பட்டால் போதாதா


அவர்கள் வாழும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு சிலர் மட்டும் புறப்படலாமே! ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார். (அவர்கள் மார்க்க விஷயத்தைக் கற்று) தங்கள் மக்களிடம் திரும்பி வந்து அவர்களுக்கு(த் தாங்கள் கற்றதைக் கூறி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வார்கள். 


(ஊரில் இருப்பவர்கள்) எச்சரிக்கையாக இருந்து (தங்கள் மக்களைக் காத்துக்) கொள்வார்கள். இதன் வாயிலாக (இஸ்லாத்திற்கு மாற்றமான போக்கை) அவர்கள் தவிர்த்துக் கொள்ளக்கூடும்!


இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள். (அதன் மூலம்) அவர்கள் (தீயவைகளை) தவிர்த்துக் கொள்ளலாம்.

9வது அத்தியாயமான சூரத்துத் தவ்பா என்ற அத்தியாயத்தின் 122வது வசனத்திற்குரிய மொழி பெயர்ப்பை பல தர்ஜுமாக்களிலிருந்து கலந்து தந்து இருக்கிறோம். 
https://mdfazlulilahi.blogspot.com/2020/01/blog-post_4.html இந்த வசனத்தில் உள்ள  فِرْقَةٍ  Fபிர்ஃக  என்பதற்கு கட்சி, அணி, கூட்டம், வர்க்கம், சமூகத்தார் என பல  பொருள் இருக்கிறது.

இது அல் குர்ஆனின் அழகிய பாடம். நபிகள் காலத்து மக்களைப் பார்த்து அன்று பேசிய அல் குர்ஆனின் அதே வசனங்கள் தான். இன்று நம்மைப் பார்த்தும் பேசிக் கொண்டிருக்கிறது. 

உங்கள் எதிரிகள் உங்களை அழித்துவிடும் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பதனால் என்ற தலைப்பை ஆ.கா.அ. அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்ப்பிலிருந்து தேர்வு செய்தோம். 


















Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு