2:24. வசனத்தின் வார்த்தைக்கு வார்த்தை



அகங்காரம் என்ற தலைப்பிலான குர்ஆன் இண்டக்ஸ் 7ல்   இதை படிப்பவர்களில் தமிழ் அறிஞர்களுக்கு ஒரு சவால். புரியும் தமிழில் பதில் சொல்லுங்கள்.  நமது  பிளாக்கரில்  வந்து புரியும் தமிழில் பதில் சொல்லுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு என்று எழுதி இருந்தோம்.  பலர் வாட்ஸப்பில் தந்துள்ள பதில்கள் தவறாகவே உள்ளன.  மீண்டும் அந்த தலைப்பை  நன்றாகப் படித்து விட்டு கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு தமிழர்களுக்கு புரியும்  தமிழில் பதில் தாருங்கள். 



இனி  2:24. வசனத்தின் வார்த்தைக்கு வார்த்தை பாருங்கள்


فَإِن لَّمْ تَفْعَلُوا - Fபஇன் லம் தFப்ஃஅலுா

நீங்கள் செய்யாவிட்டால்

وَ لَن تَفْعَلُوا- வ லன் தFப்ஃஅலுா
நீங்கள் திண்ணமாக (உறுதியாக - நிச்சயமாக) செய்ய மாட்டீர்கள்

فَاتَّقُوا-Fபத்தஃககூ


النَّارَ- ன்னார 

நெருப்பு

الَّتِ- ல்லதீ
அது எத்தகையதென்றால்


وَقُودُ- வகூது 
எரிபொருள்

هَا-ஹா 
அதனுடைய

النَّاسُ-ன்னாஸு
மனிதர்கள்

وَالْحِجَارَةُ -வ ல்ஃஹிஜாரதுன்


கற்களும்

أُعِدَّتْ-உஃஇத்தத் 
தயாரிக்கப்பட்டுள்ளது- ஆயத்தப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.  சித்தப்படுத்தப்பட்டுள்ளது

لِلْكَافِرِينَ- லில் காFபிரீ(ன)ன்.

மறுப்போருக்கு -காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு

சொல்லுக்கு சொல் பார்த்தோம் இனி  வரிசைப்படி படிப்போம்

فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوْا النَّارَ الَّتِىْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ  ۖۚ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ‏

Fபஇன் லம் தFப்ஃஅலுா  வ லன் தFப்ஃஅலுா Fபத்தஃககூ ன்னார ல்லதீ வகூது ஹா ன்னாஸு வ ல்ஃஹிஜார(துன்)  உஃஇத்தத் லில் காFபிரீ(ன)ன்.


தமிழாக்கங்கள்.

2:24. உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும்கற்களுமே அதன் எரிபொருட்கள். (ஏகஇறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.(P.J)


நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால் -அவ்வாறு செய்து(கொண்டு வந்து)விட உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்(சிலை)களையும் எரிபொருளாகக் கொள்கின்ற, இறை மறுப்பாளர்களுக்காக ஆயத்தப் படுத்தி வைக்கப் பட்டிருக்கும் நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அதிரை ஜமீல்)


 (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாதுநரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். அதனுடைய எரிபொருள் மனிதர்களும் கற்களும்  ஆகும்அது (அந்த நெருப்பு) காஃபிர்களுக்காகவே சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (KSR)


(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாதுமனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்புஇறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (டாக்டர். முஹம்மது ஜான்)





நீங்கள் அவ்விதம் (கொண்டுவர) இயலாதுபோனால் - உங்களால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது - மனிதர்களும் கற்களும் இரையாகின்ற (நரக) நெருப்புக்குப் பயந்துகொள்ளுங்கள். அது நிராகரிப்பவர்களுக்கென தயார் செய்யப்பட்டுள்ளது. (அப்துல் ஹமீது பாகவி)


நீங்கள் அப்படிச் செய்யாவிட்டால், நிச்சயமாக உங்களால் ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாதுமனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்டதும், (சத்தியத்தை) நிராகரிப்பவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டதுமான நரக நெருப்புக்கு அஞ்சுங்கள்! (IFT)



நீங்கள் (அவ்வாறு) செய்யவில்லையாயின்_நீங்கள் ஒருபோதும் (அவ்வாறு) செய்யவேமாட்டீர்கள்; ஆகவே மனிதர்களும்கல்லும் தனக்கு எரிபொருளாக்கப்படுகின்ற (நரக) நெருப்பைப் பயந்து கொள்ளுங்கள். (இந்த நெருப்பு) நிரகாரித்துக் கொண்டிருப்போருக்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (சவூதி)

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு