ஜ.உ.சாவின் தலைவர் P.A.K. அவர்களே உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்குங்கள்.


காவலர் வில்சன் கொலைக்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா தலைவரும் மேலப்பாளையம் உஸ்மானியா  அரபிக் கல்லூரி  பேராசிரியரும், மேலப்பாளையம் பெரிய கொத்பா பள்ளி தலைமை இமாமுமான P.A. காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜரத் அவர்களே! 

காவலர் வில்சன் கொலைக்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை.  பீ.ஜே.பி.யின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னார் தான் என தி.மு.க. முன்னாள் ச.ம.உ. அப்பாவு தெளிவாக அறிக்கை விட்டுள்ளார். 



ஆனால் முஸ்லிம்கள் இருவர் கைது என செய்திகள் கூறுகின்றன.  ஆகவே இந்த விஷயத்தில் ஜ.உ.சாவின் மாநில தலைவரான P.A.K. அவர்களே உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்குங்கள். ஷமீம், தவ்பீக் ஆகிய முஸ்லிம் இளைஞர்களை காப்பாற்றுங்கள்.


மேலப்பாளையத்தவர் தலைமையில் மாநகர அளவிலான முஸ்லிம்  ஜமாத்தவர்கள்  முதல்வரை சந்திப்பதை விட. மாநில அளவிலான அமைப்புகள் மாநில தலைவரான தங்கள் தலைமையில் சந்திப்பதே சிறந்ததது என்ற உங்கள் முடிவால் தான். அ.தி.மு.க. ஹயாத் ஏற்பாடு செய்த சந்திப்புக்கு மற்றவர்களும் போகவில்லை என்கிறார்கள்.  

மாநகரை விட மாநில சந்திப்பே வலுவானது என்ற உங்கள் கருத்து வரவேற்க தக்கதே .450 கோடிக்கு சொந்தக்காரர் மீதான NIA வழக்குகளை தாங்களே வக்கீல் வைத்து நடத்துவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தீர்கள். 

உங்கள் வீரதீரமான இந்த அறிக்கையை அறியாத மேலப்பாளையம் ஏழை மக்கள் நகரில் NIA விசாரணைக்கு வந்து விட்டால் மாநில அளவிலான தலைவர் தாங்கள் இருப்பதை மறந்து விடுகிறார்கள். நகர அளவிலான கட்சி நிர்வாகிகளை போய் பார்த்து உதவி கேட்கிறார்கள். 

மேலப்பாளையம்  நகருக்குள் NIA விசாரணைக்கு வந்து விட்டால் தங்களை அணுக வசதியாக உடனடியாக ஒரு அலுவலகத்தை மேலப்பாளையத்தில் திறக்குமாறு வேண்டுகிறேன்.

ஷமீம், தவ்பீக் ஆகிய முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை விஷயமாகவும் முன்னாள் ச.ம.உ. அப்பாவு அறிக்கை ஆதார அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பொன்னாரை வில்சன் கொலை வழக்கில் கைது செய்ய வேண்டி உடனடியாக மாநில அளவில் களத்தில் இறங்க வேண்டுகிறேன்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு