மேலப்பாளையத்தாருக்கு வேட்டு வைக்க துணை போன மேலப்பாளையத்தார்.
இன்று முதல்வரின் எல்லா புரோகிராமும் கேன்சல். முஸ்லிம் ஜமாஅத் சந்திப்பு மட்டுமே உண்டு என்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து MKM கபீர் அவர்களுக்கு தகவல் வந்த பிறகும் போகாதது ஏன்? பதில் சொல்வார்களா? மேலப்பாளையத்துக்கு கிடைத்த முக்கியத்துவத்தை கெடுத்த கெடுதல் காரன் யார்?
முதல்வர் சந்திப்பு என்பது பொய். குள்ள நரி கூட்டம் போட்ட
நாடகம். ஏமாற்று வேலை. என்று சொன்னார்கள். குள்ளநரி கூட்டம் எது? ஏமாற்று
வேலை செய்தவர்கள் யார்? பொய்யர்கள் யார் என்பதை அடையாளம் காட்டி
விட்டோம்.
அ.தி.மு.க. ஹயாத் நம்மிடம் சத்தியம் செய்தபடி போஸ்ட்டர் அடித்து விட்டார். https://mdfazlulilahi.blogspot.com/2020/01/blog-post_8.html
அ.தி.மு.க. ஹயாத் நம்மிடம் சத்தியம் செய்தபடி போஸ்ட்டர் அடித்து விட்டார். https://mdfazlulilahi.blogspot.com/2020/01/blog-post_8.html
மேலப்பாளையத்துக் காரர்களை வைத்து காலம் காலமாக பயன் பெற்று
வரும் கூட்டத்தினர் சுற்று வட்டாரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மேலப்பாளையத்து
காரனுக்கு நல்ல பெயர் ஏற்படவும் நல்ல பொறுப்புகள் கிடைக்கவும் விட மாட்டார்கள். அந்த சதி செயலுக்கும் சூழ்ச்சிக்கும் மேலப்பாளையத்துக் காரர்களையே பயன்படுத்திக் கொள்வார்கள்.
இதுதான் வரலாறு.
1988ல் மு.லீக் லத்தீப் அணி உருவானதும். கொட்டும் மழையில் பேரணியையும் பொதுக்
கூட்டத்தையும் முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் சேனாதிபதி மொன்னி மைதீன் பிச்சை.
1989, 1991 பொது
தேர்தல்களின் போது தி.மு.க. வேட்பாளர்கள்
இவரிடம் தான் லத்தீப் அணி சார்பான பரிந்துரை கடிதம் பெற்றார்கள்.
1996 சட்டமன்ற தேர்தலில் லத்தீப் அணிக்கு பாளையங்கோட்டை
தொகுதி கிடைத்தது. உடனே மேலப்பாளையம் மொன்னி குடும்பத்தைச் சார்ந்த சேனாதிபதி மைதீன் பிச்சைக்கு சீட் கொடுங்கள் என்று லத்தீப் சாகிபிடம் அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.
அன்று வரை சமது அணியில் இருந்தவர்கள். கட்சி மாறி ஸ்பெஷல்
தொப்பிகளை போட்டுக் கொண்டு போய் பேட்டைக்காரருக்கு மீண்டும் சீட் பெற்று கொடுத்த
பெருமகனார்கள் தான் மேலப்பாளையத்துக் காரர்கள்.
1984 சட்டமன்ற தேர்தலில் சென்னையில் செட்டில் ஆகி
இருந்தவருக்கு சமது ஸாஹிபு மு.லீக்கில் சீட் கொடுத்தார். மேலப்பாளையத்தில் இருக்கும் ஷம்சுல்
ஆலத்திற்கு சீட் கொடுக்கா விட்டால் நாங்கள்
தேர்தல் வேலை செய்ய மாட்டோம் என்று நெருக்கடி கொடுத்த அன்றைய மு.லீக்
இளைஞரணி சிங்கங்களில் ஒருவர்தான் சேனாதிபதி மொன்னி மைதீன்
பிச்சை.
சீட் பெற போன இடத்தில் உங்கள் V.S.T. குடும்பத்தில் எல்லா
கட்சியிலும் ஆளுக்கொருவர் என்று இருப்பீர்களாமே? இப்படி ஷம்சுல் ஆலத்தைப் பார்த்து கேட்ட சமது
சாகிபை எதிர்த்து பேசி கண்டனத்தை பதிந்தவர்கள் செ.கா.மு.
யூசுபும், மொன்னி மைதீன் பிச்சையும் தான்.
V.S.T. என்றால் வடகரை ஷம்சுதாசின் தரகனார் என்பதுதான் ஷம்சுல் ஆலம் பூர்வீகம்
வடகரை தான். அவர் மேலப்பாளையம் இல்லை. சாந்து காஜா மைதீன் சென்னை
செட்டில்டு என்றாலும் பூர்வீகம் மேலப்பாளையம்தான் என்றார்கள். சாந்து காஜா மைதீன் Ex M.P. ஆதரவு மு.லீக்காரர்கள்.
எங்களுக்கு செட்டில்டு தேவை இல்லை. ஸ்டில் தான் தேவை என V.S.T. ஷம்சுல் ஆலத்திற்கு சீட்
கிடைக்க ஆதரவாக நின்றவர்களில் ஒருவர் மேலப்பாளையம் மொன்னி மைதீன்
பிச்சை.
அந்த மேலப்பாளையம் மொன்னி மைதீன்
பிச்சைக்கு எதிராகப் போய் பேட்டைக்காரருக்கு சீட் கொடுங்கள் என்று தொப்பி போட்டு கட்சி
மாறி போனவர்களில் ஷம்சுல் ஆலமும் ஒருவர்.
பாளை குஞ்சிதபாதம், ரவணசமுத்திரம் பீர்முஹம்மது, பேட்டை
கோதர் மைதீன். செவல் தர்மலிங்கம், நாஞ்சில் மனோகரன் என்று வெளியூர்காரர்கள் M.L.A. ஆகலாம் மேலப்பாளையத்துக்காரன்
ஆகக் கூடாது என்பதற்கு ஒவ்வொரு காலத்திலும் பயன்படுத்தப்பட்டவர்கள் மேலப்பாளையத்துக்காரர்கள் தான்.
முதல்வர் சந்திப்புக்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை
முயற்சி செய்து கிடைக்கவில்லை.
தமிழக
அளவிலான ஜமாஅத்களின் முதல்வர் சந்திப்புக்கு அன்வர் ராஜா மூலம்
முயற்சி நடந்து வந்தது. அன்று வரை அணுமதி கிடைக்கவில்லை.
மேலப்பாளையத்துக்காரன்
அ.தி.மு.க. ஹயாத் மூலமான முயற்சியில் அணுமதி
கிடைத்து விட்டது. பொறுக்குமா? பொச்சரிப்புக்காரர்களான சுற்று வட்டார கூட்டதுக்கு? மேலப்பாளையத்துக்கு கிடைத்த முக்கியத்துவத்தை ஜீரணிப்பார்களா?
அதுவும்
P.A. காஜா
முயீனுத்தீன் பாகவி மேலப்பாளையம்
AKY
பாலி டெக்னிக்
ஹாஜியார் மேலப்பாளையம்
5பூ பீடி
அப்துல் ஹமீது மேலப்பாளையம்
Er செய்யது அஹமது மேலப்பாளையம்
T.S.M.O.
மஜீத் அல்லது L.K.S. மீரான் மைதீன் மேலப்பாளையம்
இப்படி 11ல் 6 பேர் மேலப்பாளையம் என்றால் கொட கொதிப்பு
தாங்குமா? இது எனது அனுபவ நிலைப்பாடு.
வி.ஐ.பி. போன் போட்டு கூப்பிட்டும். இன்று முதல்வரின் எல்லா புரோகிராமும் கேன்சல் (மேலப்பாளையம்) ஜமாஅத் சந்திப்பு மட்டுமே உண்டு என்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து MKM கபீர் அவர்களுக்கு கூறிய பிறகும்போகாதது ஏன்? சம்பந்தப்பட்டவர்கள் அத்தனை பேரும் சமுதாயத்துக்கு குறிப்பாக மேலப்பாளையம் மக்களுக்கு விளக்கம் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் விளக்கம் சொல்லவில்லை என்றால் யா அல்லாஹ் எனக்கு எதிராக கேட்கப்பட்ட சாபங்களை அப்படியே இவர்கள் பக்கம் திருப்பி விடுவாயாக ஆமீன். உனது பிடியை கடுமையான இறுக்கு பிடியாக இறுக்கி பிடிப்பாயாக ஆமீன்.
இது அ.தி.மு.க. ஹயாத்துக்கு நடந்ததாக நான் எண்ணவில்லை. ஒரு மேலப்பாளையத்துக்காரனுக்கு நடந்ததாகவே கருதுகிறேன். மற்ற கட்சியில் உள்ளவர்களுக்கும் சொல்கிறேன். இது அ.தி.மு.க. ஹயாத்துக்கு நடந்ததாக எண்ணாதீர்கள். மற்ற கட்சியில் காலம் காலமாக அடிமட்டத்தில் கிடந்து சாவும் அனைவருக்கும் இது தான் நடக்கும்.
இது அ.தி.மு.க. ஹயாத்துக்கு நடந்ததாக நான் எண்ணவில்லை. ஒரு மேலப்பாளையத்துக்காரனுக்கு நடந்ததாகவே கருதுகிறேன். மற்ற கட்சியில் உள்ளவர்களுக்கும் சொல்கிறேன். இது அ.தி.மு.க. ஹயாத்துக்கு நடந்ததாக எண்ணாதீர்கள். மற்ற கட்சியில் காலம் காலமாக அடிமட்டத்தில் கிடந்து சாவும் அனைவருக்கும் இது தான் நடக்கும்.
இன்ஷாஅல்லாஹ் அ.தி.முக. மாநில சிறுபான்மை பிரிவு செயலாளரும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் வக்ஃபு வாரிய தலைவருமான அன்வர் ராஜா அவர்கள் முயற்சியில் 10-01-2020 வெள்ளி அன்று அனைத்து ஜமாஅத் தலைவர்களும் முதல்வரை சந்தித்து குடியுரிமை சட்ட திருத்தம் சம்பந்தமாக சந்திக்க உள்ளார்கள்.
மேலப்பாளையத்துக்கு கிடைத்த முக்கியத்துவத்தை கெடுத்த கெடுதல் காரன்கள் இதையும் கெடுத்து குட்டிச் சுவராக ஆக்காமல் இருந்தால் சரி.
Comments