உலவியின் தந்தை 85 வயதான மூத்த குடிமகன் மரணம்



துபை இஸ்லாமிய எழுச்சிய மையம் I.A.C.யின் அல் முபீன் (முன்னாள் புரட்சி மின்னல் இந்நாள் ஏகத்துவம்) மாத இதழின் ஆசிரியராக இருந்தவர்.  1988ல் JAQH அமைப்பாளராகவும் 1995ல் முஸ்லிம் பேரவை கன்வீனராகவும் இருந்தவர். த.மு.மு.க.வில் பயணித்தவர். ம.ஜ.க. மாநில இணைப் பொதுச் செயலாளரா இருந்தவர். இப்பொழுது அ.இ.அ.தி.மு.க.வில் உள்ளார். பன்னுால் ஆசிரியர். இவர் எழுதிய பெண்ணுரிமை பேணிய இஸ்லாம் குமுதம் இதழின் பாராட்டைப் பெற்றது.
ஆயிரம் உலவிகள் இருந்தாலும் தவ்ஹீது வட்டத்தில் உலவி என்றால் நினைவுக்கு வருபவர். உலவி என்று அழைக்கப்பட்டவர் மைதீன் உலவி. நல்லுார் மைதீன், மதுரை மைதீன் என்றும் அறியப்பட்டவர் நண்பர் K.M. முஹம்மது முஹ்யித்தீன் உலவி.  

அவரது  தந்தை 85 வயதான மூத்த குடிமகன் மீர் இஸ்மாயில் அவர்கள் இன்று (22.1.2020) இறந்து விட்டார்கள். நாளை 23.1.2020 மதியம் 1 மணிக்கு நல்லூர் (மதுரை விமான நிலையம் அருகே) கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அவரது இழப்பை ஈடு செய்வானாக ஆமீன். அவரது குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு