ஈட்டி முனையில் நிறுத்திய போதும் ஈமானை இழக்க மாட்டோம். காட்டி கொடுக்கும் கயவர் தம்மை கனவிலும் விட மாட்டோம்.


அ.தி.மு.க. மேலப்பாளையம் பகுதிச் செயலாளர் S.S, ஹயாத் அவர்கள் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அது  பற்றி கடுமையான விமர்சனங்களுடன் நேற்றிலிருந்து பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன.

இதை ஒட்டி S.S, ஹயாத், அப்துல் ரஸாக், காசியான் அலி மற்றும் பல அ.தி.மு.க.வினருடன் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக  நாங்கள் இஸ்லாத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். ஈமானை இழக்க மாட்டோம். 

அ.தி.மு.க.வில் இருந்து கொண்டு எந்த அளவு சமுதாயப் பணிகள் செய்ய முடியுமோ அந்த அளவு சமுதாய பணிகள் செய்து வருகிறோம். என்று சொன்னார்கள். 





1995ல் நடந்த தடா எதிர்ப்பு பேரணியின் போது அப்பொழுது அ.தி.மு.க. நகர செயலாளராக இருந்தவர் எதிர்த்து வேலை செய்தார். அ.தி.மு.க.விலிருந்த  த.மு.சா, ஓவியர் மைதீன், ஷாஜஹான், காசியான் அலி, காயங்கட்டி சேக், ஸ்டார் இப்றாஹீம், P.J.கரீம் போன்ற அ.தி.மு.க.வினர்  பேரணி வெற்றி முழு ஒத்துழைப்பு செய்தார்கள்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மறைமுக ஒத்துழைப்பு செய்த அன்றைய பாளைத் தொகுதி M.L.A. தர்மலிங்கம் அவர்களை அழைத்து J.A.Q.H தவ்ஹீது ஜமாஅத் சார்பில் காசியான் ஹாஜியார் வீட்டில் வைத்து இப்தார் விருந்து அளித்தீர்கள் என்பதை நினைவு கூர்ந்தார்கள்.

இஸ்லாமிய உணர்வும் சமுதாய பற்றும் இருப்பதால்தான் பல பொறுப்புகளை இழந்து இருக்கிறோம் என்று சொல்லிக் காட்டினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக டாஸ்மாக் பாரில் S.S, ஹயாத் அவர்களுக்கு தொடர்பு இல்லை என்றார்கள்.

பொது வாழ்வுக்கு வந்து விட்டால் விமர்சனங்கள் வராமல் இருக்காது. அதனால் தளர்ந்து விடாதீர்கள். எங்கு இருந்தாலும் சமுதாய சேவை மனப்பான்மையுடன் இருங்கள். உங்கள் மூலம் சமுதாயத்திற்கு என்ன என்ன நன்மை செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள்.

02-07-2017 அன்று நடந்த எங்கள் இல்லத் திருமணத்தை அரசியல்வாதிகளாக இருந்து கொண்டு சமுதாய சேவைகள் செய்தவர்களை பாராட்டி அவர்களை கவுரவிக்கும் விதமான நிகழ்ச்சியாக அமைத்து இருந்தோம். 

அதில் .தி.மு.க. மேலப்பாளையம் பகுதிச் செயலாளர் S.S, ஹயாத்  அவர்களையும் அழைத்து அவர்களின் சமுதாய சேவையைப் பாராட்டி அவருக்கும் ஆடை அணிவித்து கவுரவித்தோம் என்பதை நினைவு கூர்ந்தோம்.

நான் த.மு.மு.க.வின் ஆதரவாளனாக இருந்த போதிலும் பொதுப் பிரச்சனை என்று வந்து விட்டால் யாரை அணுகினால் நடக்குமோ அவர்களை அணுகி செய்து கொடுப்பேன். 28-12-2019 அன்று கூட மதுரையில் உள்ள ஒரு  அ.தி.மு.க. பிரமுகரை தொடர்பு கொண்டு ஒருவர் விஷயமாகப் பேசினேன்.

அவரிடமும் விமர்சனங்கள் வராமல் இருக்காது. அதனால் தளர்ந்து விடாதீர்கள். எங்கு இருந்தாலும் சமுதாய சேவை மனப்பான்மையுடன் இருங்கள். உங்கள் மூலம் சமுதாயத்திற்கு என்ன என்ன நன்மை செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள் என்றே சொன்னேன்.  

5 ஆம் தேதி முதல்வரை சந்தித்து குடியுரிமை சம்பந்தமாக கோரிக்கை வைக்க உள்ளதாக .தி.மு.க. மேலப்பாளையம் பகுதிச் செயலாளர் S.S, ஹயாத் அவர்களும் மேலப்பாளையம் .தி.மு.க.வினரும்  கூறினார்கள். அல்லாஹ் அனைவரது ஈமானையும் பலமுள்ளதாக ஆக்கி வைப்பானாக ஆமீன்.


அனைவரின் முயற்சியாலும்  இந்திய  குடியுரிமை பிரச்சனை நீங்கட்டுமாக ஆமீன்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு