விஸா கொடுப்பது நல்லவர்களாகப் பார்த்தா தறுதலைகளுக்கா? எதில் பெருமை இருக்கிறது.

ரகசிய கூலி வாங்கிக் கொண்டு சமுதாய துரோக வேலையில் ஈடுபட்டு சமுதாயத்தை கூறு போட்டுத் திரியும் சமுதாய துரோகிகளை நீண்ட நெடுங்காலமாக அடையாளம் காட்டி வருகிறோம். ஆத்திரம் அடைந்த காசுக்காக காட்சிகளை மாற்றி கட்சி மாறும் கைக் கூலிகள் தறுதலைகளைக் கொண்டு மொட்டைக் கடிதங்கள், மொட்டை மெயில்கள் அனுப்பினார்கள். 

இப்பொழுது முக நுாலில், பெயரே முக நுால் அதில் கூட முகத்தைக் காட்ட முடியாதவர்களாக வந்து அவதுாறுகளை அள்ளி வீசி உள்ளார்கள். அவர்களுக்கு எதிராக மொட்டைகள் பெட்டைகள், பேடிகள் என்று எழுத மாட்டோம். ஆனால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் நழுவக் கூடியவர்கள் இப்படிச் சொல்லியும் நழுவுவார்கள். குற்றச்சாட்டை நேருக்கு நேராக என் முகத்துக்கு நேராக கூறனும் என்று வீரமாகப் பேசியும் நழுவுவார்கள். ஆனால் அவர்கள் மட்டும் பொய்யான குற்றச்சாட்டுக்களை நோட்டீஸ்கள் ஆடியோ, வீடியோக்கள் என எல்லா வகையிலும் பரப்பி ஏமாற்றுவார்கள். நாம் அப்படி அல்ல. பதில் சொல்வோம்.

விஸா எடுத்தது பற்றி அல்லாஹ்வின் சாபத்துக்குரிய தறுதலைகள் முன்னுக்குப் பின் முரணாக எழுதி இருந்தார்கள். கடைசியாக லுஹா வீட்டுக்கு பக்கத்து வீட்டார் இரண்டாவது முறையாக வந்தவர்கள் என்று தறுதலைகள் எழுதி உள்ளன. முதலில் வேலைக் கஷ்டம் கொடுமைப்படுத்துகிறான். சம்பளம் கம்மி என்று எழுதி இருந்தார்கள். அது உண்மையானால் 2 டாவதாக எப்படி வந்தார்கள்?

100க்கு 100 மார்க் வாங்கும் மாணவர்களை சலக்ட் பண்ணி சேர்த்து எனது ஸ்கூல் முதலிடம் என்று சொல்வதில் பெருமை இல்லை. அது போல் நல்லவர்களாகப் பார்த்து விஸா கொடுப்பதில் பெருமை இல்லை. வீட்டுக்கு உதவாத தறுதலைகளை குடும்பத்தார் பிடித்து தரும்போது அவர்களுக்கு விஸா கொடுத்து கட்டி மாரடிப்பது சாதாரண விஷயம் அல்ல. லுஹா வீட்டுக்கு பக்கத்து வீட்டார்களில் ஒருவர் ஷாகுல் ஹமீது பாதுஷா. அவரது அக்காள், மற்றும் நண்பனி்ன் சிபாரிசில் வந்தார். அவரது நண்பன் மஸ்ஊது எலே செவிடன் என்றுதான் கூப்பிடுவார்.

டேபிள் வேலைக்கு என்று வந்தவர் யு.ஏ.இ.க்கு வந்த பின்தான் காது மந்தம் என்று எனக்குத் தெரிந்தது. கிராக்கி ஒன்று சொல்ல இவர் ஒன்று கொடுக்க என்ன செய்ய. சரி கிச்சனில் போட்டு ஒப்பேத்தினோம். என்னை மதுரையிலே கேட்டாக என்ற கதையாக கேன்சல் செய்து போனார். பல இடங்களில் முயற்சி செய்து கிடைக்கவில்லை. கத்தார் போய் திரும்பினார்.

எனக்கு போன் போட்டு மீண்டும் விஸா கேட்டார். நான் வேண்டாம் வேறு இடம் பார் என்றேன். இன்ன இன்ன இடத்தில் ஆள் தேவை உள்ளது அங்கே விஸா எடுக்கவா என்று கேட்டேன். இல்லை உங்களிடம் தான் வருவேன் என்றான். நானும் அவனிடம் அங்கே போ 2000, இங்கே போ 3000 என்றேன். திடீரென ஒரு நாள் இரவு என் வீட்டில் கொண்டு போய் பாஸ்போர்ட்டை கொடுத்துள்ளார். எங்க வீட்டில் வாங்க மறுத்துள்ளார்கள். நான் தரச் சொன்னதாக சொல்லி கொடுத்துள்ளான்.

அதன் பிறகு பலர் சிபாரிசு செய்ததால் விஸா எடுக்க அப்ளை பண்ணினேன். இவன் பெயர் பிளாக் லிஸ்டில் இருந்தது. இவனது நல்ல நஸீபு என்னிடம் வந்தான். வேறு இடத்தில் கொடுத்து இருந்தால் யு.ஏ.இ.க்கே வர முடியாதவனாக ஆகி இருப்பான். ஷார்ஜா இமிக்கிரேஷனில் சொன்னார்கள். அபுதாபி போனாலும் இந்த ஆளை பிளாக் லிஸ்டிலிருந்து நீக்க முடியாது என்று. டைப் ரைட்டர்கள் இவணை ஒளிவாக்கி வேறு ஆளை எடு என்றார்கள். பிரச்னையை எதிர் கொண்டு போராடுவது என்பது எனக்கே உரிய இயல்பு. அல்லாஹ்வின் அருளால் ஒன்றுக்கு பல முறை அலைந்து பிளாக் லிஸ்டிலிருந்து நீக்கி விஸா எடுத்தேன். அதற்காக கூடுதலாக செலவான பணம் 1800திர்ஹங்கள். இது போக மேல் செலவுகள். அந்தச் செலவை யார் கையில் இருந்து போட்டார் என்று பேஸ்புக்கில் எழுதிய தறுதலைகள் அவனிடம்  கேட்டு வெளியிடட்டும்.

அவனுக்கு 2 முறையும் சிபாரிசு செய்த அவனது நண்பன் கேஷியர் மஸுதிடமிருக்கும் கடைப் பணத்தை திருட வேண்டும் என்று திட்டம் தீட்டி  பேசியவர்களில் இவனும் ஒருவன். போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என்று ஆன போதுதான் அவனது அக்காள் மசூதிடம் சொல்கிறார். அவனுக்கு தலையில் ஒரு நரம்பு கட் ஆகி இருக்கு என்று. என்ன செய்ய இரக்கம் காட்டி விட்டு விட்டேன். இரண்டாவதாக வந்தவர்களில் ஒருவர் நிலையை எழுதி விட்டேன். வேறு யாரைப் பற்றிய விபரம் வேண்டும். பெயர் குறிப்பிட்டு கேளுங்கள். கால் ஊனமா? கைப் பிரச்சனையா, யாரையெல்லாம் வைத்து ஒப்பேத்துகிறோம் என்ன மாதிரி கிரிமினல்கள் விபரம் தருகிறோம்.


இந்த மாதரி உடல் ஊனமுற்றவர்களையெல்லாம் வைத்து ஒப்பேத்துகிறேன். வீட்டை வட்டிக்கு வைத்து விஸாவுக்கென மற்றவர்களிடம் பணம் கொடுத்து  ஏமாந்தவர்களுக்கு விஸா கொடுத்து வீட்டை மீட்டுக் கொடுத்து விஸாவும் கொடுத்திருக்கிறோம் அதே லுஹா தெருக்காரர்களுக்கு.

தாய் தந்தையை காப்பாற்றாத தறுதலைகளை, பிள்ளைகள பெற்று போட்டு விட்டு மனைவி மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாத தறுதலைகளைத்தான் அவர்களது தாய், தந்தை, மனைவி என்னை அணுகி இவன் ஊரிலிருந்தால் தறுதலைகளுடன் தான் சேர்ந்து அலைவான் நீ விஸா கொடுத்து குடும்ப கஷ்டத்தை நீக்கு என்றார்கள்.

எப்படியாவது ஊர் போய் தறுதலைகளுடன் சேர்ந்து அலைய வேண்டும் என்று தன் கையை வேண்டும் என்றே புண்ணாக்கி அந்தக் கையைக் காட் மெடிக்கலை பெயிலாக்கி வந்தவனும் இருக்கிறான். நான் எப்படி ஆள் அவன் குடும்ப கஷ்டத்தை எண்ணி அதை பாஸாக்கி வந்து விட்டேன். உழையாத் தண்ணிகளான இந்த தறுதலைகளுக்கு இந்த மாதிரியெல்லாம் மூளை வேலை செய்யும். 

ஸ்கூலில் படிக்கும் எனது மகளைக் கண்ட  ஒருவரது மகள் ஜெஸாக்கல்லாஹு கைரன் என்று கூறி இருக்கிறது. என்ன விஷயம் என்று கேட்டதற்கு என் வாப்பா பண்ணின தப்புக்கு உன் வாப்பா எங்கே கேன்சல் பண்ணி அனுப்பி விடுவோரோ என்று பயந்தேன். அதற்குத்தான் நன்றி சொன்னேன் என்று கூறி இருக்கிறது. இதுதான் நிலை.

ரகசிய கூலிக்கு மாரடித்து அரசியல் கட்சிக்கு ஆள் பிடித்தும் சீட் வாங்கி கொடுத்தும் அரசியல் புரோக்கர்களாக ஆகி விட்டவர்களின் ரசிகர்களே திருந்துங்கள். http://mdfazlulilahi.blogspot.ae/2018/01/blog-post_23.html 





Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.