PJ பற்றி வெளியிட்ட அனைத்தையும் அழித்து விடுகிறோம்.
மார்க்கத்தை மட்டும் சொல்லுங்கள் மற்றவர்கள் சொன்ன பொய்களை அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை
என்கிறார்கள். இப்படி சொல்கின்றவர்கள் யார்? 1980களிலிருந்து இதைச் செய்து கொண்டிருந்தவர்கள்தான். மற்றவர்கள் பற்றி அவதுாறுகளையே பரப்பிக் கொண்டிருந்தவர்கள்தான் சொல்கின்றார்கள். ஏன்?
80களிலிருந்து அவர்கள்
சொல்லி வந்த அவதுாறுகளை முன்னுக்குப் பின் முரணானவற்றை ஆதாரத்துடன் அடையாளம் காட்டி வருகிறோம்.
அதனால் சொல்கின்றார்கள்.
இன்னவர் சொல்லி உள்ளது பொய் என்பதை அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சத்தியம்
செய்து மறுத்தும் பொய்
சொன்வர்களுக்கு எதிராக பிரார்த்தித்தும் வருகிறோம். இதுவெல்லாம் இஸ்லாமா? என்று
கேட்கிறார்கள். நபி வழியில் இது தவறு என்கிறார்கள். இப்படிச் சொல்கின்றவர்களைப் பார்த்து கடந்த காலங்களில் இதுவெல்லாம் நீங்கள் செய்ததுதானே அப்பொழுதெல்லாம் இது இஸ்லாம் இல்லை
என்று தெரியாதா என கேட்க முடியும். ஆனால் கேட்க மாட்டோம்.
பொய்களை அடையாளம்
காட்டுவது இஸ்லாம்
இல்லை, நபி வழி இல்லை என்றால் நாம் இன்றே விட்டு விடுகிறோம். PJ பற்றி வெளியிட்ட அனைத்தையும் அழித்து விடுகிறோம்.
அல்லாஹ்வின் துாதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் வணக்க வழிபாடுகளை மட்டும்தான் மக்களிடம் எடுத்துச் சொன்னார்களா? பொய்களையும் இட்டுக் கட்டப்பட்ட கட்டுக் கதைகளையும் இனம் காட்டி பகிரங்கப்படுத்தினார்களா?
எது பொய்யோ, எது இல்லாததோ எது இட்டுக் கட்டப்பட்டதோ அவற்றைத்தான்
முதலில் இல்லை என்றும் அவை பொய்கள் என்றும் அடையாளம் காட்டினார்கள்.
லா –
இல்லை,
இலாஹ்- இறைவன்.
இல்லா – தவிர,
அல்லாஹ்.
லாஇலாஹ - கடவுள்களே
இல்லை.
இல்லல்லாஹ் – அல்லாஹ்வைத் தவிர.
எத்தனை பொய்க் கடவுள்கள் இருந்தனவோ
அத்தனையும் பொய் இல்லாதவை இட்டுக்கட்டப்பட்டவை என்பதைத்தான் முதலில் அடையாளம் காட்டுகிறது இஸ்லாம் .
மக்காவை வெற்றி கொண்ட அல்லாஹ்வின் துாதர் முஹம்மது (ஸல்)
அவர்கள் கஃபாவின் உள்ளே நுழையும் முன் செய்த முதல் வேலை பொய்களையும் பொய்யர்களையும் தோலுரித்து காட்டியதுதான்.
கஃபாவில் இப்ராஹீம்(அலை) இஸ்மாயில்(அலை) ஆகியவர்கள் உருவங்களை கையில் குறி பார்க்கும் அம்புகளுடன்
நிற்பது போல் வரைந்து வைத்திருந்தார்கள். அதைப் பார்த்த உடனே அல்லாஹ்வின் துாதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சபித்தார்கள் எப்படி?
'அல்லாஹ் இ(தைச்
செய்த)வர்களை தன் கருணையைவிட்டு அப்பாற்படுத்துவானாக! என்று சபித்தார்கள்.
அல்லாஹ்வின்
மீது ஆணையாக! இவ்விருவரும் அம்புகளின் மூலம்
குறிபார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இ(தைச் செய்த)வர்கள் அறிந்தே
வைத்திருக்கிறார்கள்' என்று
சத்தியமிட்டுக் கூறினார்கள். பிறகு(தான்), கஅபாவில் நுழைந்தார்கள்.
பொய்களை அடையாளம் காட்டி நாம் செய்த சத்தியங்களையும் அவர்கள்
தரப்பை உண்மைப்படுத்த நாம் செய்யச் சொல்லும் சத்தியங்களையும் நக்கல் செய்பவர்கள். நம்மை நக்கல் செய்யவில்லை.
நபி வழியைத்தான் நக்கல் செய்துள்ளார்கள்.
இப்ராஹீம்(அலை) இஸ்மாயில்(அலை) ஆகியவர்கள் அம்புகளின் மூலம் குறிபார்ப்பவர்களாக இருந்தார்கள் என்று அன்றைய சமுதாயத்தில் இருந்த பொய்யை
அடையாளம் காட்டினார்கள். இ(தைச் செய்த)வர்கள் அறிந்தே
வைத்திருக்கிறார்கள் என்பதன் மூலம் அவர்கள் பொய்யர்கள் என்பதையும் அடையாளம் காட்டி உள்ளார்கள்.
கொள்கைகளை கோட்பாடுகளை
சொல்வது மட்டும் அல்ல இஸ்லாம். அந்தந்த காலத்தில் வாழும் பொய்யர்களையும் அவர்களின்
பொய்களையும் அடையளாம் காட்டுவதும் தான் இஸ்லாம்.
ஒவ்வொரு காலத்திலும் அந்தந்த
காலத்தில் அன்றைய சமுதாயத்தில் நுழைக்கப்படும் பொய்ச் செய்திகளை, இட்டுக் கட்டி
கூறப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுக்களை, கட்டுக் கதைகளை அடையாளம் காட்டி களை எடுக்க வேண்டும்.
இல்லை என்றால் அந்தப் பொய்களை உண்மை என்று நம்பும் முஸ்லிம்கள் பரப்புவார்கள்.
அதனால் அந்த முஸ்லிம்கள் செய்த அமல்கள் வீணாகி மறுமையில் முப்லிஸாக ஆகி
விடுவார்கள்.
எனவே மறுமையில் முஸ்லிம்கள் முப்லிஸாக ஆகி விடாமல் தடுப்பதும் தஃவா தான்-
இஸ்லாமிய பிரச்சாரம்தான். இதை திருமறைக் குர்ஆனிலும் திருநபி வழிகாட்டுதலிலும்
ஏராளமாகக் காணலாம். இவற்றை மனதில் கொண்டு. இஸ்லாமிய ஆட்சி பற்றி அண்ணன் அன்று சொன்னதையும் இன்று சொல்வதையும் பாருங்கள். இதில் எது பொய் எது உண்மை என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
Comments