முரண்பாட்டின் மொத்த உருவம். பொய்யின் ஊற்று யார் தெரியுமா?ஜாக்கிலிருந்து இதைச் செய்ய ரெடியா?
த.மு.மு.க ஆரம்பித்தது 1995
ஆகஸ்டில். நான் (பி.ஜே) ஜாக்குக்கு ராஜினாமா கடிதம் கொடுத்தது 1994 நவம்பரில். த.மு.மு.க ஆரம்பிப்பதற்கு
ஒரு வருஷத்திற்கு முன்னாடியே ஜாக்கிலிருந்து ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டேன்.
ஜாக் நடவடிக்கை சரி இல்லை என்பதற்காகத்தான் ராஜினாமா கடிதம் கொடுத்தேன் என்பது போல பி.ஜே. கேமரா முன் பேசி பதிந்தார்.. அதை அவர் 2002ல் வீடியோவாகவும் சி.டி.க்களாகவும் வெளியிட்டார் பார்த்து இருப்பீர்கள். இன்றும் யுடியூப்களில் இருக்கிறது.
கேமரா முன் பேசி இப்படி பேசிய பி.ஜே. 2004 டிசம்பரில் யு.ஏ.இ. வந்தார். அப்பொழுது ஒரு
ரூமில் கூடி இருந்தவர்களிடம் என்ன சொல்லி உள்ளார் தெரியுமா?
நல்லா கவனிக்கனும் இந்த இயக்கம் (த.மு.மு.க) ஆரம்பித்த நேரத்தில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். த.மு.மு.க. ஆரம்பிக்கப்படுகிறது. அப்ப நம்மலோடு இருந்த தவ்ஹீது சகோதரர்களெல்லாம்
முதல் போராட்டத்தில் கலந்துக்கிட்டாங்க.
கலந்த பிறகு என்ட என்ன வற்புறுத்றாங்கன்னா? 2 தலைமை ஆவுதே. ஜாக்குண்டு தவ்ஹீதுக்கு ஒரு தலைமை இருக்கிறது. இப்ப நீங்க த.மு.மு.க.ன்னு வர்றீங்கன்னா 2 தலைமையா இந்த சமுதாயத்தை கூறு போடுகிறோமே ஒரு தலைமையில் இதைச் செஞ்சா என்ன?
அப்படீன்டு என்ட வந்து வற்புறுத்றாங்க. இது (த.மு.மு.க.)
வேணாங்குறாங்க. போராட்டத்துலே என்னுடைய இத மதிச்சு கலந்து கொண்டாங்க. என் மீதுள்ள அபிமானத்தில்தான் கலந்து கொண்டார்கள் சகோதரர்கள்.
அவங்களெல்லாம் கெஞ்சுகிறார்கள். தயவு செய்து வேணாம் இந்த இயக்கம். இந்த போராட்டத்தை விட்டுடுங்க தயவு செய்து. நமக்குன்னு தவ்ஹீதுக்குன்னு ஒரு இயக்கம் இருக்கிறது. அதிலேயே இதைச் செய்யுங்க அப்படீங்கிறாங்க.
நான் சொன்னேன். இப்ப சொல்கிறேன் எல்லாரும் வாங்க கமாலுத்தீன் மதனிகிட்ட போவோம். இந்த வேலையும் சேர்த்து செய்ய அவர் தயார் என்று சொன்னால் இந்த அமைப்புக்கு (த.மு.மு.க) கமாலுத்தீன் மதனியை தலைவராக நாங்கள் ஏற்றுக் கொள்ள தயார். நான் மட்டும் சொல்லவில்லை. இருக்கிற எல்லாரும் சொன்னார்கள்.
ஒத்துக் கொண்டு நாங்க போறோம். கமாலுத்தீன் இடம் பேசுறதுக்கு போறோம். என்னை அழைத்து செல்கிறார்கள். புதுப் பேட்டையில் உள்ள மர்க்கஸுக்கு போகிறேன்.
நீங்களே தலைமை ஏற்றுக் கொள்ளுங்கள் 2 தலைமை வேணாம். குணங்குடி ஹனீபாவும் உங்களை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்.. அவர் சொன்னார். இன்னைக்கு இந்தக் காரியம் நடக்கணும். நான் இந்தப் பதவியை விட்டுத் தர தயார் என்று தலைவர் பதவியை..
அப்ப ஜாக்கில் உள்ள நீங்களே தலைவராக இருங்கள். இந்த வேலையும் செய்தால் ஜாக்கு பெயரிலேயே வேண்டுமானாலும் செய்யுங்க. த.மு.மு.க. பெயரிலேயே வேண்டுமானாலும் செய்யுங்க. நாங்க அதற்கு உடன்படுகிறோம் என்று சொல்லி அத்தனை நிர்வாகிகளும் சம்மதித்து ஜாக்குக்கு இந்த தலைமை பொறுப்பை கொடுக்க முன் வந்தார்கள்.
கமாலுத்தீன் மதனிகிட்ட போறோம் மறுத்து விட்டார் 2 க்கும் மறுத்து விட்டார். ஒண்ணு இந்த த.மு.மு.க. உடைய தலைமைய நீனே ஏத்துக்கோ என்கிறோம் மாட்டேன் என்றார். சரி ஜாக்கிலிருந்து இதைச் செய்ய ரெடியா இனிமே?
இனிமேல் பிரச்சனை வந்தால் போராட்டம் அறிவிப்பீங்களா? அதைச் செய்ய தயாரா? நாங்க எல்லாம் விட்டுத் தர்ரோம். குணங்குடி ஹனீபா வரைக்கும் உங்களுடைய தலைமையை ஏத்துக் கொள்ள தயாராக
இருக்கிறார்கள்
சொல்றோம். அதையும் மறுத்து விட்டார். என்று ரூமுக்குள் இருந்தவர்களிடம் சொல்லி உள்ளார். இதை அல்லாஹ்வின் மீது ஆணை இட்டு கூறுகிறேன்.
த.மு.மு.க ஆரம்பிப்பதற்கு ஒரு வருஷத்திற்கு முன்னாடியே ஜாக் நடவடிக்கை சரி இல்லை ராஜினாமா கடிதம் கொடுத்தது உண்மையானால் கமாலுத்தீன் மதனியைப் பார்த்து த.மு.மு.க. உடைய தலைமயை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருப்பார்களா? ஜாக்குக்கு இந்த தலைமை பொறுப்பை கொடுக்க முன் வந்திருப்பார்களா? புதுப் பேட்டையில் உள்ள மர்க்கஸுக்கு போய் இருப்பாரா?
முரண்பாட்டின் மொத்த உருவம் யார்? பொய்யின் ஊற்று யார் தெரிகிறதா?
இது (த.மு.மு.க.) தவ்ஹீதுக்கு ஆரம்பிக்கப்பட்டது இல்லை என்கிறார்களேஅப்படி இருக்குமேயானால் கமாலுத்தீன் மதனிக்கு தலைமை பொறுப்பு கொடுக்க ஏன் ஒத்துக் கொண்டார்கள். அப்படியானால் என்ன அர்த்தம்? ஏன் அப்படி சொன்னார்கள். பேஸ் அதாகத்தான் இருந்தது.
அன்றைக்கு பேஸ் தவ்ஹீதுதான் எல்லாரும் தெரிந்தது. தவ்ஹீதுக்குத்தான் வேறு எந்த சந்தேகமும் கிடையாது. …… என்றும் ரூமுக்குள் இருந்தவர்களிடம் சொல்லி உள்ளார். அதாவது த.மு.மு.க. என்பது தவ்ஹீது அமைப்புதான் என்று சொல்லி உள்ளார்.
அதே பி.ஜே.யின் வாய்தான் த.மு.மு.க.வில் குடிகாரன் இருப்பான் த.மு.மு.க.வில் சூதாட்டம் பண்ணுறவன் இருப்பான் என்று 2000த்தில் மதுரையில் பேசினார். அதை 2002லும் உறுதி படுத்தினார். அதே ரூமிலேயே சொல்றாரு தவ்ஹீதுக்கு ஜாக்குண்டு ஒரு தலைமை இருக்கிறது என்று.
கமாலுத்தீன் மதனியை இழிவுபடுத்த ஜவாஹிருல்லாஹ்வை புகழ்ந்தார்
ஜவாஹிருல்லாஹ்வை இழிவுபடுத்த கமாலுத்தீன் மதனியை புகழ்ந்தார்
மேலும் என்ன சொல்லி உள்ளார் தெரியுமா? கமாலுத்தீன் மதனி மறுத்தது மாதிரம் இல்லை. ஒண்ணு சொன்னார். நீ தேவை இல்லாத வேலையில் ஈடுபடுகிறே. எங்கிட்ட சொல்றாரு ஒரு நாளைக்கு விளங்குவே என்று
நீ தேவை இல்லாத வேலையில் ஈடுபடுகிறே என்றுகமாலுத்தீன் மதனி சொன்னது. கொலை குண்டு வெடிப்பு போன்ற செயல்களைப் பற்றியது தான். பிரச்சனை வந்தால் போராட்டம் செய்வது பற்றியோ தவ்ஹீது பற்றியோ அல்ல.
ஜாக்கிலிருந்து இதைச் செய்ய ரெடியா? என பி.ஜே. கேட்டதும் கமாலுத்தீன் மதனி பயந்து மறுத்தது. போராட்டம் பற்றி அல்ல. குண்டு வைக்க போகிறேன் என்று ரகசியமாக சொல்லி ராஜினாமா செய்தவன் நம்மள குண்டு வைக்க கூப்பிடுகிறானே என்றுதான் மறுத்து விட்டார். .
ஜாக்கிலிருந்து இதைச் செய்ய ரெடியா? என பி.ஜே. கேட்டதும் கமாலுத்தீன் மதனி பயந்து மறுத்தது. போராட்டம் பற்றி அல்ல. குண்டு வைக்க போகிறேன் என்று ரகசியமாக சொல்லி ராஜினாமா செய்தவன் நம்மள குண்டு வைக்க கூப்பிடுகிறானே என்றுதான் மறுத்து விட்டார். .
இந்தியாவிலேயே தடா எதிர்ப்பு பேரணியை வெற்றிகரமாக நடத்திய ஒரே அமைப்பு ஜாக்தான். பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூட தடா எதிர்ப்பு பேரணி நடத்த முடியாமல் வேட்டியை உருவி ஓட ஓட அடித்து சிறையில் தள்ளப்பட்டார். அதே 1995ல்தான் மேலப்பாளையத்தில் ஜாக் சார்பாக தடா எதிர்ப்பு பேரணி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஜாக்லிருந்து பி.ஜே. விலகியது குண்டு வெடிப்பு, கொலை போன்ற தீவிர செயல்களில் ஈடுபடத்தான் விலகினார். ஜிஹாது பெயரால் இளைஞர்கள் வாழ்வை சீரழித்தவர்கள். கைவிட்டு விட்டு பொய் கூறித் திரியும் சண்டாளப் பாவிகள். சமுதாய துரோகிகள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக. http://mdfazlulilahi.blogspot.ae/2017/11/blog-post_6.html
Comments