ஆட்டோ ஓட்டுனரால் துவங்கப்பட்ட த.மு.மு.க.

நண்பர் மவுலவி J.S. ரிபாஈ  ரஷாதி அவர்களுடைய இன்றைய நிலைப் பாட்டை ஒட்டி நான் விமர்சிக்கப்படுகிறேன். மஸ்ஜிதுர் ரையான் பள்ளிப் பிரச்சனைதான் முக்கிய காரணம். 

அதை  த.மு.மு.க. டிரஸ்ட் பெயரால் பதியக் கூடாது என்று நான் சொன்னதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுதான் பெரும்பாலானவர்கள் என் மீது கூறும் குற்றச்சாட்டு.  இந்தக் குற்றச்சாட்டுக்கு நாம் கூறும் ஒரே பதில் மேலப்பாளையம் கிளையில் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்பதுதான்.

இனி J.S.R. அவர்களுடன் உங்கள் நிலை என்ன? இதுவும் பெரும்பாலானவர்களின் கேள்வியாக உள்ளது. ஐ. உஸ்மான்கான் அவர்கள் த.மு.மு.க.வை விட்டு விலகி சில காலம் வேறு அணியில் இருந்தார்கள். அப்பொழுதும்   நண்பர் என்ற முறையில் இஸ்லாமிய அடிப்படையில் குடும்பத்துடன்  பேட்டைக்கே  சென்று பார்த்து  தொடர்புடன் இருந்து வந்தோம்.  இன்று அவர்  நெல்லை கிழக்கு மாவட்ட த.மு.மு.க. தலைவராக உள்ளார்.

ம.த.மு.மு.க. என்ற அமைப்பு கண்ட மேலப்பாளையம் ரசூல் அவர்களுடனும்  இஸ்லாமிய சகோதரர் என்ற அடிப்படையில் தொடர்புடன்தான்  இருந்தோம். இன்று அவர்   த.மு.மு.க.வில் இணைந்து விட்டார். ரசூல் எங்கு இருந்த போதும் த.மு.மு.க. ரசூல் என்றுதான் பொது மக்களால் அடையாளம் சொல்லப்பட்டார். .

... இவையெல்லாம் கால(த்தின் மாற்ற)ங்கள் ஆகும். இவற்றை மக்களிடையே நாம் மாறிமாறி வரச் செய்கின்றோம்... என்று எக்காலத்துக்கும் பொருந்தும் அல்குர்ஆனில் 3:140 அல்லாஹ் கூறி உள்ளான்.


யார் தங்களை நரகத்துக்காக  தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ அவர்களைத் தவிர, மற்ற எல்லாருடனும் நட்பாகத்தான் இருந்து வந்துள்ளோம். யார் ஷய்தானை தலைவனாக ஏற்று அவன் வழியை கட்டியாகப் பிடித்து நிற்கிறார்களோ அவர்கள் மட்டும்தான்  மற்றவர்களுடன் பேச மாட்டார்கள்.

ம.த.மு.மு.க. புதிதாக துவங்கப்பட்ட அந்த கால கட்டத்தில். மேலப்பாளையம் வந்த மாநில நிர்வாகிகள் என் இல்லத்திற்கு வந்திருந்தார்கள். பேசிக் கொண்டிருந்தபொழுது நீங்கள் கூறும் குறைகள் களையப்பட்டால் மீண்டும் த.மு.மு.க. வில் இணைந்து விடுவீர்களா? என்று கேட்டேன்.

வழக்கறிஞர் ஜெய்னுல் ஆபிதீன்,   யூசுப் எஸ்.பி. ஆகிய இருவரும் வேகமாக பதில் சொன்னார்கள். நாங்க என்ன அங்கே போய் இணைவது. அவர்கள் தான் எங்களிடம் வந்து இணைய வேண்டும் என்றார்கள். அவர்கள்தான் முதலில் வேகமாகப்  போய் மீண்டும்  த.மு.மு.க. வில் இணைந்தார்கள்.

அல்லாஹ் சொல்கிறான்,  அல்லாஹ்வின் வாக்குகள் மாறக்கூடியவையல்ல!   10:64.  அவனது கட்டளைகளை  வாக்குகளை மாற்றுபவன் எவனும் இல்லை 6:115  எனவே   மனிதர்களின் வாக்குகளில் மாற்றங்கள் வரத்தான் செய்யும். அல்லாஹ்வுடைய வாக்குகளில் மட்டும்தான் மாற்றங்கள் வராது. ஆகவே அப்படிச் சொன்னீர்களே இப்படி நடந்து விட்டீர்களே என்று கேட்க  முடியாது.

குணங்குடி ஹனீபாதான் த.மு.மு.க.வை நிறுவியவர். அவரும் அரசியல் நிலைப்பாட்டால் அவர் துவங்கிய த.மு.மு.க. விட்டுப் போனார்.  ஜிஹாத் கமிட்டி தலைவராக ஆனார்.  அதனால் சிறைவாசியாகவும் ஆனார்.



மூத்த மகனுக்கு திருமணம் வந்தது. அப்பொழுது அவரது மனச் சூழல் வேறாக இருந்தது. எனவே அவரது மனச் சூழல்படி திருமண ஏற்பாடுகள் செய்தார். திருமணம் நடத்த  இருந்த இடம் வேறு ஒரு மர்க்கஸ்ஸாக இருந்தது. அதில் கலந்து கொள்ள இருந்த தலைவர்கள் பெயர்களும் வேறு. அவற்றை  அவர் கைப்பட எழுதி அனுப்பி இருந்தார்.

அந்த முடிவை மாற்றி திருமணத்தை த.மு.மு.க. தலைமை அலுவலகத்தில் நடத்த வைத்தோம். த.மு.மு.க. தலைவர் தலைமையிலும் நடத்தினோம்.


அவரது மனதை அல்லாஹ் மாற்றினான். ஜிஹாது கமிட்டி தலைவராக சிறை சென்றவர் த.மு.மு.க. தொண்டராக விடுதலை ஆனார்.

தடுக்கி விழுந்தால் தர்காவில்தான் விழ வேண்டும். அந்த அளவுக்கு அவ்லியாக்கள் வாழ்ந்த நாடு என்றார்கள் அன்று. தடுக்கி விழுந்தால் தலைவர்கள் வீட்டு வாசலில்தான் விழ வேண்டும் என்கிறார்கள் இன்று. அந்த அளவுக்கு   நாட்டில்  அமைப்புகள் பெருகி விட்டன. எந்த அமைப்பை எடுத்துக் கொண்டாலும். ஏதாவது ஒரு அமைப்பிலிருந்து பிரிந்து வந்ததாகத்தான் இருக்கும்.

காங்ரஸிலிருந்து பிரிந்து வந்தது மு.லீக், தி.க, தி.மு.க, அ.திமு.க. இப்படி எதைப் பார்த்தாலும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து வந்ததாகத்தான் இருக்கும். காந்தியை ரயிலிலிருந்து தள்ளி விட்டதால் அவர் அமைப்பு கண்டார். இப்படி யாராவது ஒருவர் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டால் அமைப்பு காண்பார்கள். பிரிவினை இன்றி, தனி மனித பாதிப்பு இன்றி, சுயநலமின்றி சமுதாய உணர்வுடன் துவங்கப்பட்ட ஒரே அமைப்பு  த.மு.மு.க.தான்.

பா.ம.க.விலிருந்த குணங்குடி ஹனீபா த.மு.மு.க. என்ற லட்டர் பேடு இயக்கம் வைத்திருந்தார் என்பார்கள். உண்மை அது அல்ல. ஆட்டோ ஓட்டுனராக இருந்த குணங்குடி ஹனீபா அவர்களால் 1984 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதுதான். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். 

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி 1986ல் அவர் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். குணங்குடி ஹனீபா அவர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். ஹனீபாவின் செயல்பாடுகளைக் கண்ட டாக்டர் ராமதாஸ் ஹனீபாவை பா.ம.க.வில் இணைத்து மாநில பொருளாளர் பொறுப்பு கொடுத்தார். ஹனீபா பா.ம.க. பொருளாளராக இருந்தபோது வட்டம், மாவட்டம், நகரம் என எல்லாக் கிளைகளிலும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பொறுப்புகளில் ஒன்று முஸ்லிம் சமுதாயத்திற்கு என்று பா.ம.க.வில் நடைமுறைபடுத்தினார். 


அந்த ஹனீபாவுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்று தெரியாது. எந்த அளவுக்கு? லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரசூலுல்லாஹ் என்பதை எழுதி கொடுத்தால் கூட சரியாக படிக்கத் தெரியாதவராகத்தான் இருந்தார். இஸ்லாம் தெரியாவிட்டாலும். சமுதாய உணர்வு அவரிடம் இருந்தது. நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன (புகாரி) இந்த ஹதீஸ்படி அவரது எண்ணம் போல் சமுதாய அமைப்பாக த.மு.மு.க. ஆனது.

த.மு.மு.க. பற்றி உள்ளது உள்ளபடி புகழ்கிறோம்.  சுயநலமிகள் பதவிக்கு அடிபோடுவதாக எழுதுவார்கள். நான் மிகப் பெரிய ஷய்த்தானை எதிர்த்து நிற்கிறேன். அவனும் அவனது அடி வருடிகளும் அவனைப் புகழ்ந்து வரலாறு என்ற பெயரால் பொய்யை புனைந்து எழுதி வைத்துள்ளனர்.  அவனது முகத் திரையை கிழித்து சமுதாயத்திற்கு அடையாளம் காட்டும் பணியினை செய்து வருகிறேன்.  அதனால் எதிலுமே   பதவி வேண்டாம் என்ற நிலையில் உள்ளேன்.

1995ல் த.மு.மு.க. புணர் நிர்மானம் செய்யப்பட்டது.  இது அடிக்கடி பேசப்படும்.. இப்பாழுதும் பேசப்படுகிறது. அவர் பாடுபட்டார் தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி வந்தார் என்றும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு புகழ் பா பாடப்படுகிறது.

ஏன் புணர் நிர்மானம் செய்யப்பட்டது? முஸ்லிம் சமுாதாயம் ஒரு இக்கட்டான  சூழ்நிலையில்  இருந்தது  என்பார்கள். உண்மை  அது அல்ல. வட்டம் சுருங்கி விட்டது அண்ணனை நெருங்கி விட்டது துஆச் செய்யுங்கள்  இது நமது வார்த்தை அல்ல.  லுஹா எழுதியது. பெயர் குழப்பத்தால் கைது செய்யப்பட்ட பாக்கரைப் போல் பி.ஜே.யை கைது செய்து விடக் கூடாது என்பதற்காக குணங்குடி ஹனீபாவை தேடி ஓடினார்கள். 

பி.ஜே. ஆலிம்ஸா அது மாதிரி எல்லாம் இல்லையே என்று குணங்குடி ஹனீபா கேட்டு விட்டு பீல்டில் இறங்கினார். அன்று அவர்தான் ஹீரோ, அரசியல் பாடம் நடத்திய குரு.  பா.ம.க. என்ற பலமான அமைப்பின் மாநில பொருளாளர்.

பெயர் குழப்பத்தால் பாக்கர் கைது செய்யப்பட்டதும் போராட்டக் களத்தில் குதித்ததாக சொல்லும் திருவாளர் பி.ஜே.  அதற்கு முன் கோவையில் 1993ஆண்டு கைது செய்யப்பட்டவர்களுக்காக போராடவில்லை.  94ல் போராடவில்லை. சீனி நைனா முஹம்மதுக்காக போராட்டக் களம் கண்டாரா? போராடவில்லை. பாக்கர் கைதுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட யாருக்காவது போராடி இருக்கிறாரா? போராடவில்லை.

பாக்கரைப் போல் இவரை எளிதில் கைது செய்து விடக் கூடாது என்பதற்காக பி.ஜே.க்கு அமைப்பாளர் பொறுப்பும் போடப்பட்டது. அவரை காத்துக் கொள்வதற்காக அலைந்தார். அவரைக் காத்துக் கொள்ள அன்று அவருக்கு த.மு.மு.க. தேவைப்பட்டது.

நானும் ஹாமீத் பக்ரியும் மதுரையில் உள்ள அண்ணா பஸ்ட்டாண்ட்டில் உள்ள பள்ளிவாசலில் வைத்து .. பல காரண காரியங்கள் சொல்லும் போது.... ஏன்னா அது ஒரு ஆபத்தான வேலை நாங்க எடுத்துக் கொண்ட அந்த வேலை இருக்குதே ஆரம்ப கட்டத்துலே ஆபத்தான வேலை.

38 மவுலவிகள் சாட்சியாக பி.ஜே. கொடுத்துள்ள மேற்கண்ட வாக்கு  மூலப்படி செய்த ஆபத்தான வேலையால் கைதாக இருந்த அவரைக் காத்துக் கொள்ள பாடுபட்டார். இவர் ஒரு தீவிரவாதி என்பது ஜவாஹிருல்லாஹ், Er அப்துஸ்ஸமது, நிஸார்,  ஹைதர் அலி, பாக்கர் போன்றவர்களுக்குத் தெரியாது. லுஹா போன்றவர்களுக்குத் தெரியும்.  அரங்கத்தில் சமுதாய பாதுகாப்பு.

அந்தரங்கப்படி பிஜே என்ற ஒரு தனி மனிதரைக் காக்க உருவான தற்காப்பு அமைப்புதான் த.மு.மு.க. சமுதாயத்திற்காக உருவானது அல்ல. சமுதாயத்திற்கு என்று உருவாகி இருந்தால் அதில் பி.ஜே.யின் சந்தர்ப்ப வாதங்கள் இருந்திருக்காது.

சீனி நைனா முஹம்மது கைது செய்யப்பட்டப்பொழுது அவரை ஜாக் தலைவர் என்று பத்திக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள் அப்பொழுது சீனி நைனா முஹம்மது ஜாக் தலைவராக இல்லை நான் தான் ஜாக் தலைவர் தீவிரவாதிதத்திற்கும் ஜாக்குக்கும் சம்பந்தமே மில்லை என கமாலுத்தீன் மதனி பெயரால் பத்திரிக்கையில் அறிக்கை வந்தது.

சீனி நைனா முஹம்மது பற்றி இப்படி அறிக்கை வந்துள்ளதைக் கண்டித்து வானுக்கும் பூமிக்குமா குதித்து எதிர்ப்புத் தெரிவித்தார் திருவாளர் மகா கனம் பி.ஜே. 

அமைப்பில் உள்ளவன்; கைது செய்யப்பட்டதும் அவனுக்காக உதவி செய்யாமல் சம்பந்தமில்லை என அறிக்கைவிட்டால் எவன் அமைப்பில் இருப்பான்? 

சமுதாயத்திற்காக இயக்கமா? இயக்கத்திற்காக சமுதாயமா? என்று பல இடங்களில் சொல்லிக் காட்டி உள்ளார். 

குறிப்பாக சமாதானக் கூட்டங்களில் இதை அதிகம் அதிகம் சொல்லிக் காட்டினார்.  அப்படிப்பட்ட மண்டைக் கனம் பி.ஜே. 

சீனி நைனா முஹம்மது பற்றிய அறிக்கையில் உள்ள உண்மை நிலை என்ன தெரியுமா? 

கமாலுத்தீன் மதனி அவர்கள் இடம் இப்படி ஒரு அறிக்கை வாங்கி பத்திரிக்கைகையில் கொடுக்கச் சொன்னவரே சமுதாயத் துரோகி பி.ஜே.தான் 
அண்ணன் உத்தரவுப்படி மேலப்பாளையத்தில் இருந்து நானும் லுஹாவும் கார் எடுத்துக் கொண்டு கோட்டாறுக்குப் போனோம். அண்ணனின் ஆணைப்படி  கமாலுத்தீன் மதனி இடம் அறிக்கை எழுதி வாங்கினோம். 

நாங்களே பத்திரிக்கை அலுவகங்களுக்குக் கொண்டு போய்க் கொடுத்தோம். இணைப்பாக அதே பொருள்பட லுஹா பெயராலும் ஒரு கொசுறு அறிக்கையும் கொடுத்தோம். 

சினிமாவில் வரும் இரட்டை வேடங்களை விமர்சித்து விலாவாரியாக விமர்சிக்கும் பி.ஜே. தன் இமேஜைக் கூட்ட சீனி நைனா முஹம்மது பற்றிய அறிக்கையில் இரட்டை நிலைகளை மேற்கொண்டார். இது மாதிரிதான் பல விஷயங்களில் பல சமயங்களில் இரட்டை நிலைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த மாதிரி சமுதாய துரோகியான.இவரது சமுதாய துரோகங்களை மறைத்து, இவரை சமுதாய தியாகி போல் பொய்களை  இவரது ஆன்லைனில் வரலாறு என எழுதி வைத்துள்ளார்கள். 

பொய் முகங்களை தெளிவாக அடையாளம் காட்டினால்தான். உண்மை  பளிச்சென்று தெரியும். ஆகவே பொய்யர்களின் முகத்திரையை கிழித் தெறிவோம். 

http://mdfazlulilahi.blogspot.ae/2017/11/blog-post_13.html 




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு