மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து வித்தியாசப்பட்டு எந்த விஷயத்தில் உயர்ந்து நிற்கிறான்?

மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரய்யானில் நாம் ஆற்றிய உரையின் தொடர்.

மனிதனைப் படைத்தான் என்று சொல்லும் அல்லாஹ் அடுத்து சொல்கிறான் அல்லமஹுல் பயான் (அல் குர்ஆன் 55:4) என்று. இந்த வசனத்திற்கு

1. அவனுக்கு(ப் பேச்சையும்) விளக்கத்தை(யும்) கற்றுக் கொடுத்தான்

2. அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்

3. அவனே மனிதனுக்குப் பேசவும் கற்பித்தான்

4. விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.  
      
இப்படி மொழி பெயர்ப்புகள் பல விதமாக உள்ளன. மொத்தத்தில் அல்லாஹ்தான் மனிதனுக்கு விளக்கும்  திறனை கற்றுக் கொடுத்தான் இந்த வசனம்.


மார்க்க விளக்கக் கூட்டம். இதை அரபி கலந்து சொல்லும்போது மார்க்க பயான் என்போம். அல்லமஹுல் பயான். பயான்(விளக்கம்) செய்வதை அல்லாஹ் கற்றுக் கொடுத்தான் என்று அரபி கலந்த மொழி பெயர்ப்பு இன்னும் நமக்கு நன்றாகப் புரிய வைக்கும்.


தான் அறிந்து விளங்கியதை மற்றவர்களுக்கும் அறியும்படி விளக்கி சொல்லுதல் என்பதும் தான் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுத்தல் என்பதும். மனிதனால் மட்டுமே முடியும்.   

இதில்தான் மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து வித்தியாசப்பட்டு உயர்ந்து நிற்கிறான்.

அதுதான் விஞ்ஞான முன்னேற்றத்துக்கு காரணமாக இருக்கிறது. நடந்து சென்ற மனிதன் வாகனத்தை கண்டு பிடித்தான்.

ஒரு மனிதன் தான் கண்டு பிடித்ததை பிறருக்கு விளக்குகிறான். அவனிடம் இருந்து விளங்கியவன் அதே போல் தயாரிக்கிறான்.

அடுத்த மனிதன் அதை விட முன்னேற்றமானதை தயாரிக்கிறான். அதுதான் மாட்டு வண்டி போன்றவைகளிலிருந்து சைக்கிள்களாக ஆகி ராகெட் வரை போய் நிற்கிறது.

ஆம்ஸ்ட்ராங் நிலவில் போய் இறங்கினான். அப்துல் கலாம் ஏவுகணைகளை ஏவி விட்டார். 


மற்ற உயிரினங்கள் படைக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அப்படியேதான் உள்ளன. மனிதனின் நிலையோ மொத்தத்தில் எல்லா வகையிலும் விஞ்ஞான  முன்னேற்றம், வளர்ச்சி. 

காரணம் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய வித்தியாசமான அறிவான அல்லமஹுல் பயான் தான். 


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு