அல்லாஹ் அளித்த சிறந்ததற்கு பகரமாக தாழ்ந்ததை மட்டமானதை மாற்றிக் கேட்டவன் யார்?
பசி வந்து விட்டது மனிதன் சாப்பிட வேண்டும் என எண்ணுகிறான். உடனே சாப்பிட முடியாது. அடுப்புகளை அமைத்து பாத்திரங்களை கொண்டு வந்து சமைத்துதான் சாப்பிட வேண்டும்.
வித விதமான உணவு வேண்டும். வித்தியாசமான உணவு வேண்டும். பர்கர் வேண்டும். படைத்த இறைவனான அல்லாஹ்வே சாப்பிட தயாராக உள்ள உயர் தரமான உணவை தந்தாலும் வேறு விதமான உணவு வேண்டும் என்று கேட்டான் மனிதன்.
…. ஒரே விதமான உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். ஒரே வகையான உணவைக் கொண்டு பொறுமையாய்
இருக்க முடியாது ...
.. பூமி
விளைவிக்கின்ற பூமியில் முளைக்கக்கூடிய கீரை(வகை)கள், வெள்ளரிக்காய், கோதுமை, பூண்டு, பருப்பு, வெங்காயம்... ஆகியவை வேண்டும்.
இப்படி அல்லாஹ் அளித்த சிறந்த உணவுக்கு பகரமாக மிகத் தாழ்ந்ததை மட்டமானதை மாற்றிக் கேட்டான் மனிதன்.
இதை திரு குர்ஆன் 2: 57, 61, 7:160, 20:80) ஆகிய வசனங்களில் காணலாம். அல்லாஹ் அளித்த மிகச் சிறந்த உணவான அந்த உணவையே விமர்சித்தான் மனிதன்.
அல்லாஹ் அளித்த மிகச் சிறந்த உணவை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். சகித்துக் கொள்ள மாட்டோம்.
பொறுத்துக் கொள்ள முடியாது என்ற பொருள்பட லன்னஸ்பிற அலா தஆமின் என்றான்.
காரணம் நன்றாக இல்லை ருசி
இல்லை என்பதா கிடையாது. ஒரே வகையானது என்பதுதான்.
வித்தியாசமானது தேவை. புதுமை தேவை.
மாற்றம் தேவை. அணி மாற்றம் தேவை இப்படி என்ன மாற்றம் தேவை என்றாலும் மிகச் சிறந்ததற்கு பதிலாக மனிதன் மிகத் தாழ்ந்ததை கேட்பான், தேர்வு செய்வான் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே மிகச் சிறந்த உதாரணமாகும்.
அந்த வித்தியாசமான உணவும் நவீனமான முறையில் தேவை. அதற்கு தகுந்தால் போல் வித விதமான அடுப்புகளும் வித்தியாசமான நவீன அடுப்புகளும் தேவை. அதன் பிறகுதான் சாப்பிட முடியும்.
மற்ற உயிரினங்களுக்கு அந்த நிலை கிடையாது. பசி வந்து விட்டது சாப்பிட வேண்டும் என எண்ணுகிறது என்றால் என்ன செய்யும்? எதுவும் செய்யாது.
ஆதம் (அலை) காலத்திலிருந்து ஒரே நிலைதான். என்ன கிடைக்கிறதோ அதனை அப்படியே பச்சையாக இயற்கையாக சாப்பிடும். . என்ன என்ன இயற்கையாக இருக்கின்றதோ அவற்றையெல்லாம் அவைகள் சாப்பிட்டு விடும்.
கீழக்கரை ஜமீல் காகா சொல்கிற மாதிரி அவை அன்றிலிருந்து இன்று வரை பேலியோவில்தான் உள்ளன. மனிதன் தான் போலிகளில் வீழ்ந்து போலிகளை நம்பி ஏமாறுகிறான்.
மற்ற உயிரினங்களுக்கு உள்ளூர் வெளியூர் வித்தியாசம் கிடையாது. துாக்கம் வந்தால் இயற்கையான இடத்தில் துாங்கி விடும்.
உணவில் வித்தியாசங்களையும் நவீனங்களையும் விரும்பும் மனிதன் உறங்குவதற்கும் வித்தியாசங்களையும் நவீனங்களையும் தகுதிக்கு தக்கவாறு தேவை உடையவனாக இருக்கிறான்.
தொட்டிலில் இருந்து கட்டில் வரை பல் வேறு மாறுபாடுகள் வேறுபாடுகள் தேவை. மெத்தையிலும் வித்தியாசங்கள் தேவை. அதனால் மெடிக்கல் பெட் என்றும் ஏமாறுகிறான். அவன்தான் மனிதன்.
Comments