ஹலாலை வலியுறுத்தும் போது ஹராமையும் தடுக்க வேண்டுமா?
மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய வித்தியாசமான மூளையைக் கொண்டு நல்லதுக்கும் பயன்படுத்தலாம். கெட்டதுக்கும் பயன்படுத்தலாம்.
இப்படி இரண்டு விதமாக பயன்படுத்தக் கூடிய நேரத்திலே கெட்டதுக்கு பயன்படுத்தினால், ஒருவனுடைய சொத்தை அபகரிக்க முயன்றால் அவனை யாராவது தடுத்து நிறுத்த முடியும்.
தடுத்து நிறுத்த வேண்டும். தடுத்து நிறுத்தா விட்டால் அநியாயத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறாயே நீ ஒரு மனிதனா? என்ற கேள்வி வரும். மற்ற உயிரினங்களில் இந்த நிலை கிடையாது.
நன்மையை ஏவி, தீமையைத்
தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
அவர்களே வெற்றி பெற்றவர்கள் (3:104) என்கிறான் அல்லாஹ்
"உங்களில் ஒருவர் ஒரு தீமை நடக்கக் கண்டால் அதை அவர் தன்
கையால் தடுக்க வேண்டும்,
அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் தன் இதயத்தால்
(வெறுக்கட்டும்) இது இறை நம்பிக்கையில் மிக பலவீனமானதாகும். (
அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) : முஸ்லீம்)
இந்த ஹதீஸை சொல்லாத இயக்கங்களே கிடையாது. மக்களில் சிறந்தவர் யார்? என்று அல்லாஹ்வின் துாதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள் சொன்ன பதிலில் ... அதிகமாக நன்மையை ஏவி,
தீமையைத் தடுத்து ..... வாழ்பவருமே சிறந்தவர்
ஆவார் என்றும் இருந்தது. (கன்ரா பின் அபீலஹப்(ரலி) : முஸ்னத் அஹ்மத்.)
நன்மையை
ஏவி தீமையை தடுப்பது என்பது இரட்டைப் பிள்ளைகள். இரண்டும் சேர்ந்தே ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.. ஓரிடத்தில்
ஹலாலை வலியுறுத்தும் போது ஹராமையும் தடுக்க வேண்டும். அதுதான் இஸ்லாம்.
ஒரு மிருகத்துடைய சொத்தை இன்னொரு மிருகம் அபகரித்து விட்டது என சொல்ல முடியுமா?
ஏதோ கிடைத்ததை சாப்பிடும். படுக்க வேண்டி நேரத்தில் படுக்கும். அல்லது துாக்கம் வந்தால் துாங்கும். பசி வந்தால் சாப்பிடும். அதுதான் அவற்றின் வாழ்க்கை. மனிதனுடைய வாழ்க்கை அப்படி அல்ல. மனிதன் அப்படி வாழ முடியாது.
அதனால் மனித இனத்துக்கு ஒரு கூட்டு அமைப்பு, கூட்டு வாழ்க்கை, கூட்டணி என்பது வேண்டியது இருக்கிறது. ஒரு கூட்டமாகச் சேர்ந்து ஒருவரின் உரிமையை பறித்து விடலாம். பொருளை திருடி விடலாம். ஒருவரின் சொத்தை அல்லது ஒரு சாராரின் சொத்தை, டிரஸ்ட்டை மோசடி செய்து விடலாம்.
இப்படி ஒவ்வொருத்தரும்
தனித் தனியாகவோ அணி அணியாகவோ
அமைப்பாகவோ ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுவார்கள். பாதிக்கப்படுகிறார்கள்.
அதனால் யாராலும் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் ஒரு ஏற்பாடு செய்து கொள்வோம். அதற்கான சட்ட திட்டங்களை உருவாக்கிக் கொள்வோம். ஒரு கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வோம். இந்த அடிப்படையில்தான் சமுதாய அமைப்பு, ஜமாஅத், இயக்கம் என்பது தேவைப்படுகிறது.
மனிதனுக்கு வித்தியாசமான அறிவு இருக்கிறதாலே
இயற்கையானதைக்
கொண்டு போதுமாக்கிக் கொள்ள முடியாது. மனிதனுக்கு செயற்கையான கண்டு பிடிப்புகளும் தேவை. வித்தியாசமான அறிவான அல்லமஹுல் பயான் (அல் குர்ஆன் 55:4) இருக்கின்றதாலே தான்
விஞ்ஞானம் என்ற செயற்கையான
கண்டு பிடிப்புகளை
கண்டு பிடிக்கிறான்.
Comments