சமுதாயமோ, சமுதாய உதவியோ தேவை இல்லை என்று மனிதனால் தனித்து வாழ முடியுமா?
மனிதனுக்குத் தான் விஞ்ஞான முன்னேற்றத்தின் நவீன கண்டு பிடிப்புகள் தேவை.
அவற்றில் அத்தியாவசிய தேவையான வாகனங்கள் போன்றவை தேவை.
அது மட்டுமல்ல டெலிபோன், ரேடியோ, டேப் ரிக்கார்டர், டி.வி, வீடியோ, கம்யூட்டர், லேப்டப், டேப்லெட், கேஸட், சி.டி,
பென் டிரைவ் என விஞ்ஞான வளர்ச்சியின் புதிய புதிய கண்டுபிடிப்புகள் பயனுள்ளவைகளாக வருகின்றன. அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்தாமல் பொழுது போக்காக பயன்படுத்த அத்தனையும் தேவை என உள்ளான்.
மிக மிக அடிமட்டத்தில் உள்ள ஏழையாக
இருந்தால் குறைந்த பட்சம் ஆடை தேவை என்ற நிலையில்
உள்ளான்.
மற்ற உயிரினங்களுக்கு ஆடை தேவையா? ஆடை அணிந்து கொண்டுதான் அவைகள் நடமாட வேண்டுமா? என்றால். இல்லை தேவையும் இல்லை. அந்த ஆடை அணியும் கலை நுட்பம் அவைகளுக்குத் தெரியவும் செய்யாது.
மற்ற உயிரினங்களுக்கு ஆடை தேவையா? ஆடை அணிந்து கொண்டுதான் அவைகள் நடமாட வேண்டுமா? என்றால். இல்லை தேவையும் இல்லை. அந்த ஆடை அணியும் கலை நுட்பம் அவைகளுக்குத் தெரியவும் செய்யாது.
அடிமட்டத்தில் உள்ள ஏழைக்கு மானத்தை
மறைக்க ஒரு சாதரண ஆடை கிடைத்தால் போதும் என்ற தேவையில் உள்ளான்.
வசதியுள்ளவர்களுக்கு அந்த ஆடையிலும் நவீன கண்டு பிடிப்புகள் தேவை. அந்த
தேவைகளை ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் அவர்களாகவே நிறைவேற்றி கொள்ள முடியுமா? முடியாது.
ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனின் (சமுதாயத்தின்) உதவி என்பது புயல், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் மட்டும் தான் தேவை என்ற நிலை கிடையாது. ஒவ்வொரு மனிதனுக்கும் சமுதாய உதவி என்பது எல்லாக் காலத்திலும் தேவை. எல்லா நிலைகளிலும் தேவை.
எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனின் உதவி இல்லாமல் வாழவே முடியாது. மற்ற உயிரினங்களாக இருந்தால் ஒன்றின் உதவி இன்னொன்றுக்கு தேவைப்படாது. மனிதனால் அடுத்தவர்கள் அதாவது சமுதாயம் தேவை இல்லை என்று வாழ முடியாது.
மனிதனுக்கு கட்டாய தேவைகள் மூன்று. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம்.
ஒவ்வொரு மனிதனும் தானே விவசாயம் செய்து எல்லா உணவையும் பெற முடியுமா? சமைத்து உண்ண முடியுமா? முடியாது.
ஒவ்வொரு மனிதனும் தானே விவசாயம் செய்து எல்லா உணவையும் பெற முடியுமா? சமைத்து உண்ண முடியுமா?
தானே பருத்தியை விதைத்து, பஞ்சாக்கி, நுாலாக்கி பாவாக்கி, தறியில் நெய்து, ஆடையாக தைத்து அணிய முடியுமா? முடியாது.
பறவைகள் தங்களுக்குத் தேவையான வீட்டை (கூட்டை) தானே கட்டிக் கொள்ள முடியும். மிகச் சிறிய எறும்புகள் கூட தனது வீட்டை தானே துளை போட்டு அமைத்துக் கொள்ளும்.
மனிதன் சமுதாய உதவி இன்றி வீடு கட்ட முடியுமா? சமுதாய உதவி இல்லாமல் தானே முயற்சித்தால்? வீடு கட்டி முடிவதற்குள். அவன் வாழ்நாள் முடிந்து விடும். ஆக எதையும் அனுபவிக்காமல் வாழ் நாள் முடிந்து செத்து விடுவான்.
மனிதன் சமுதாய உதவி இன்றி வீடு கட்ட முடியுமா? சமுதாய உதவி இல்லாமல் தானே முயற்சித்தால்? வீடு கட்டி முடிவதற்குள். அவன் வாழ்நாள் முடிந்து விடும். ஆக எதையும் அனுபவிக்காமல் வாழ் நாள் முடிந்து செத்து விடுவான்.
மனிதனால் தனித்து வாழ முடியாது. இயற்கையாக அல்லாமல் செயற்கையாகவும் பல தேவைகள் உள்ளவன் மனிதன். சமுதாய ஒத்துழைப்பு இன்றி இந்த தேவைகளை பெறவே முடியாது.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவர் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் மூலம் இன்னொருவர் பயன் பெற வேண்டும். இந்த மாதிரி பரஸ்பர ஒத்துழைப்புடன்தான் மனிதன் தேவைகளை அடைய முடியும்.
அதனால் மனிதனுக்கு சமுதாயம் என்று ஒன்று தேவை. சமுதாயம் இன்றி தனித்து வாழவே முடியாது. சமுதாயம் வேண்டாம் என பிரிந்து போக முடியாது. தனித்து போக முடியாது. தனித்து வாழ முடியாது.
http://mdfazlulilahi.blogspot.ae/2017/11/blog-post_30.html
http://mdfazlulilahi.blogspot.ae/2017/11/blog-post_30.html
Comments