பீ.ஜே. விளக்கம் வேண்டாம் என்று கூறும் மவுலவி அவர்களே!

தாங்கள் தந்த விளக்கங்களின் நிலை என்ன?


கண்ணியத்திற்குரிய  ------- ----- ----
 அவர்களே! தாங்கள் அரபுக் கல்லுாரியில் ஏழாண்டுகள் படித்து ஸனது பெற்றவர், அப்ஸலுல் உலமா மற்றும் டாக்டர் என ஏராளமான பட்டங்கள் பெற்றவர், அரபுக் கல்லுாரியில் பேராசிரியராகவும் இருப்பவர். நான்  படிக்காதவன்  ரெஸ்ட்ராரண்ட்  ஊழியன்.


தாங்கள்  தங்கள்  தாயாருடன் உம்ரா சென்று விட்டு துபை வந்திருந்தீர்கள். எனது துாக்கத்தை விட்டு விட்டு 67 கி.மீ. துாரம் தேடி வந்து பல முறை உங்களை சந்தித்தேன்.

 

பீ.ஜே. புகாரியில் இல்லாததை இருப்பதாகக் கூறியவர் என்று குற்றச்சாட்டுக் கூறி அது சம்பந்தமாக விளக்கம் வேறு தந்தீர்கள்.  ஆதாரம் தாருங்கள் பீ.ஜே.யை பின்னி,  கிழித்து எடுத்து விடுகிறேன் என்றேன்.  சி.டி. ஆதாரம் இருக்கிறது. ஊருக்குப்  போய்  தருகிறேன்  என்றீர்கள்.

 

ஊருக்குப் போன பின் பல முறை தொடர்பு கொண்டேன் சி.டி. ஆதாரம் தரவில்லை. கடைசியில், சொன்னவர் தொண்டி முஸ்தபா ரஷாதி தான் அவரிடம் வாங்கித் தருகிறேன் என்றீர்கள்.

 

ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. இதில் தொண்டி முஸ்தபா ரஷாதி உண்மையாளராக இருந்திருந்தால் அவர் சவால் விட்டுப் பேசி மேடைகள் தோறும் தன்னிடம் இருப்பதாகச் சொன்ன சி.டி. ஆதாரத்தை தங்களுக்கு அனுப்பி இருப்பார். தாங்களும் எனக்கு கிடைக்கச் செய்து பீ.ஜே.யை கிழித்து பின்னி எடுக்க வைத்து  இருப்பீர்கள்.  தொண்டி முஸ்தபா ரஷாதி சம்பந்தப்பட்ட சி.டி. ஆதாரம் நிலை இப்படி உள்ளது.


பீ.ஜே. தர்ஜமா பற்றி தாங்கள் என்னிடம் நேரில் விமர்சனங்கள் செய்து நிறைய குறைகள் இருப்பதாக கூறினீர்கள். 

ஏற்கனவே எட்டு மொழி பெயர்ப்புகள் இருக்க 9வது மொழி பெயர்ப்பு தேவையா? என்பதுதான் எல்லாருடைய கேள்வியும் என்றீர்கள்.

 

ஏற்கனவே ஏழு இருக்க எட்டாவது தேவையா? என்று ஏன் கேட்கவில்லை? அதுதான் இதற்கான பதில் என்றோம்.

 

அதன் பிறகு பீ.ஜே. ஒன்றும் புதிதாக மொழி பெயர்த்து விடவில்லை. எட்டு மொழி பெயர்ப்புகளையும் எடுத்துக் கொண்டு. அதில் அப்படி உள்ளதா இதில் வார்த்தைகளை இப்படி மாத்திப் போடு.

 

மற்றவர்கள் ஆனால் என்றால் இவர் ஆகவே என்றும். மற்றவர்கள் ஏனெனில் என்றால் இவர் எனவே என்றும் எழுதி உள்ளார். மொத்தத்தில் காப்பி பேஸ்ட் என்று விளக்கம் தந்தீர்கள்.


நீங்கள் கூறிய இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்  நான்  ஒப்பீடு  செய்து  பார்த்ததில் மற்றவை தான் காப்பி பேஸ்ட் என்ற உண்மையை அறிந்தேன்.  


அதே நேரத்தில் மொத்தத்தில் பீ.ஜே. மொழி பெயர்ப்பு காப்பி பேஸ்ட் என்று நீங்கள் சொன்னபோது.  நிறைய குறைகள் இருப்பதாக சொல்கிறீர்கள்? உங்கள் வாதப்படி 9வதான இந்த காப்பி பேஸ்ட் நிறைய குறைகள் உடையது என்றால் முந்தைய எட்டும் நீங்கள் சொல்லும் நிறைய குறைகளுக்கு  உரியவைதானே  என்றேன்.

 

உடனே, நான் விமர்சித்து இருந்த இன்ன, அன்ன, நிச்சயமாக சம்பந்தமானதை ஆதாரமாகச் சுட்டிக் காட்டினீர்கள். இது போன்று லாகின், வலாகின், வ(வாவு) போன்ற துணைச் சொற்களுக்கும் மொழி பெயர்க்காமல் விட்டுள்ளதாக குற்றச்சாட்டுக் கூறினீர்கள். மேலும் அவற்றை தொகுத்து விளக்கங்கள் அனுப்பித்  தருவதாகவும் சொன்னீர்கள். ஆனால் தரவில்லை.

 

இன்ன, அன்ன என்பதற்கு நிச்சயமாக என்றும் வாவுக்கு  இன்னும் என்றும் கண்டிப்பாக  மொழி பெயர்க்க வேண்டும்.  பீ.ஜே. தர்ஜமா தவிர யாருமே எந்த தர்ஜமாவிலும் மொழி பெயர்க்காமல் விட்டதில்லை என்று அறுதி இட்டு உறுதியாகக்  கூறினீர்கள்.

 

நீங்கள் கூறிய விளக்கங்கள் பற்றித்தான் உம்மாவுடன் உம்ரா சென்ற உலமா சபையைச் சார்ந்த ஒருவர் துபை வந்தார். அவரை அடிக்கடி  சந்தித்தோம். சந்தித்தபோதெல்லாம்.  நிச்சயமாகப் பற்றி நாம் எழுதியதைச் சிலாகித்துப் பேசிய  அவர்  நம்மைப் பாராட்டினார். 

 

பீ.ஜே. தர்ஜுமாவில்  தஃகீத் வார்த்தைகளை தமிழாக்கம் செய்யாமல் விட்டது   யாருமே செய்யாத மெகா மோசடி என்றார். 

 

அல்லாமா உடையது ஆகச் சிறந்தது. குல்லாமா உடையது கூடச் சிறந்தது என்று ஏற்கனவே வெளியான மொழி பெயர்ப்புகளையெல்லாம் புகழ்ந்து தள்ளினார். எல்லா மவுலவிகளையும் போல் இவரும்,  தஃகீத் சொற்களை  எந்த மொழி பெயர்ப்பாளர்களும் மொழி பெயர்க்காமல் விட்டதில்லை என்று அடித்துக் கூறினார். என்று கீழ்காணும் லிங்குகளில் குறிப்பிட்டு எழுதி உங்கள் பார்வைக்கும் அனுப்பி வைத்துள்ளேன்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/02/blog-post.html 

https://mdfazlulilahi.blogspot.com/2020/05/239.html

உங்கள் வாக்கின் மீதும் விளக்கங்களின் மீதும் நம்பிக்கை வைத்து நானும் எழுதினேன். ----- யாகிய தாங்கள் அனைத்து தர்ஜமாக்களையும்  பார்த்து விட்டுத்தான் விளக்கங்கள் கூறுகிறீர்கள் என்று நம்பினேன். கடைசியில் உங்கள் விளக்கங்களின்  நிலை என்ன ஆயிற்று?

 

எந்த மொழி பெயர்ப்பாளர்களும் தஃகீத் சொற்களுக்கு  மொழி பெயர்க்காமல் விட்டதில்லை என்று நீங்கள் அடித்துக் கூறி விளக்கம் அளித்த  அனைத்து மொழி பெயர்ப்பாளர்களும் பல இடங்களில் மொழி பெயர்க்காமல் தான் விட்டுள்ளார்கள்.

 

நான் எடுத்துக் காட்டிய பகராவின்  95 வசனங்களில் மட்டுமே 154  தஃகீத் சொற்களை  மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார்கள்  

அதுவும் இன்ன அன்ன என்ற வார்த்தைக்கு மட்டும் தான். இது அல்லாத நீங்கள் சொன்ன தஃகீத் சொற்கள். லாகின், வாவு என்று பாருங்கள். 

எத்தனை ஆயிரம் வார்த்தைகளை குர்ஆனில் மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார்கள் என்பதை புரிவீர்கள். உங்கள் குற்றச்சாட்டின் தன்மையை உணர்வீர்கள்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/02/blog-post.html

 

இன்ன, அன்ன என்ற சொல்லுக்கும் அது போன்ற சொற்களுக்கும் மொழி பெயர்க்காமல்  விட்டதற்கான காரணங்களை விளக்கமாகக் கூறிய P.J.யை யூதக் கைக் கூலி என்று நீங்களும் விமர்சித்தீர்கள்.

நீங்கள் சிலாகித்துக் கூறிய மொழி பெயர்ப்பாளர்கள் அனைவரும் எவ்வித விளக்கமும் கூறாமல் ஆயிரக் கணக்கில் வார்த்தைகளை மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார்களே அவர்கள் பற்றி உங்கள் நிலை என்ன?

 

நீங்கள்  எனக்கு அளித்த விளக்கங்கள் எல்லாம் உண்மை இல்லை என்று நீங்கள் கூறிய மற்றவர்களின் தர்ஜமாக்களில் இருந்து எப்படி ஆதாரப்பூர்வமாக அறிந்தேனோ. அது போல்தான் போலிகள்  கூறிய மற்ற குற்றச்சாட்டுக்கள் எல்லாம் காசுக்காகக் என்று அறிந்தேன். அவர்களை அடையாளம் காட்டினேன்.



 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.