2:64 குற்றம் என குறை கூறியது மரபு ரீதியாகவா? தெளிவாக ஆய்ந்து அறிந்து தெரிந்தா?

பின்னர்  பின்  பின்னும் - பிறகு என்று மொழி பெயர்க்கப்படக் கூடிய சொற்கள் இந்த வசனத்திலும்  இடம் பெற்றுள்ளன. இது சம்பந்தமாக 2:56 ல் விளக்கம் எழுதி உள்ளோம்.  பின், பின்பு, பின்னர், பிறகு, பின்னும்  இவை யாவும் ஒரே பொருள் தரக் கூடிவைதான்.


https://mdfazlulilahi.blogspot.com/2020/09/264.html


து(ஸு)ம்ம என்பது  தனிச் சொல் அல்ல. அது ஒரு எழுத்து (ஹர்பு). இணைச் சொல் என்பார்கள். இதை தனியாக  பிறகு என்று மட்டும்  மொழி பெயர்க்க முடியாது. முன் பின் வார்த்தைகள் இன்றி வெறுமனே  பிறகு, பிறகு  என்று மட்டும்  சொன்னால் ஏதாவது பொருள் தருமா? ஒரு பொருளும் தராது.  இந்த வசனத்தில்.  

பின்னர் அதற்கு அப்பால்,

பின்னர் அதற்குப் பிறகு, 

பிறகு அதன் பின்னர்,

பின்னர், நீங்கள் அதற்குப் பின்னும் இப்படியாக மொழி பெயர்த்தவர்களும் இருக்கிறார்கள்.  இணைப்புகளை பார்த்துக் கொள்ளுங்கள்.

இது அரபு மொழியில்  சிறந்த நடை.  ஆனால் தமிழ் மொழியில் இவ்வாறு குறிப்பிட்டால் அது சிறந்த நடை இல்லை என்று இந்த வசன மொழி பெயர்ப்பில் உணர்ந்து அறிந்த 

ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,

தென்காசி  E.M. அப்துர் ரஹ்மான், நூரிய்யி, பாஜில் பாகவி,
அதிரை ஜமீல்,

ஜான் டிரஸ்ட் ,

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT,

பஷாரத்,

தாருஸ்ஸலாம், ரியாத்,

றஹ்மத் அறக்கட்டளை

ஆகியவர்களின் பதிப்புகளில் இந்த வசனத்தில் கூறியது கூறல் இல்லை. ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்டு வந்தால்.  தமிழுக்கு தக்கவாறு சிலவற்றை இந்த மாதிரி எல்லாருமே ஆங்காங்கே மொழி பெயர்க்காமல் விட்டுத்தான் இருக்கிறார்கள். 


இது தர்ஜமா வெளியிட்ட இவர்களிடம் மட்டுமல்ல மேடைகளில் பேசக் கூடிய எல்லா மவுலவிகளும் இப்படித்தான் குர்ஆன் வசனங்களுக்கு கூறியது கூறல் இல்லாமல் விட்டு விட்டுத்தான் மொழி பெயர்த்து பேசினார்கள், பேசுகிறார்கள்.


ஆனால் P. ஜைனுல் ஆபிதீன் மட்டும்தான் இப்படி  இணைச் சொற்களை மொழி பெயர்க்காமல் விட்டது போல் விமர்சனம் செய்தார்கள், செய்கிறார்கள்.  காரணம்  காழ்ப்புணர்ச்சி என்றுதான் எண்ணத் தோன்றும்.  


காழ்ப்புணர்ச்சி  அல்ல, மரபு ரீதியாகவும்  கவனக் குறைவாகவும் தான்  விமர்சனம் செய்தார்கள், செய்கிறார்கள் என்பது எனது அனுபவம்.


இணைச் சொல்லை மொழி பெயர்க்காமல் விட்டது பற்றி சமீப காலங்களில் நம்மிடம் நேரில் விமர்சித்த மவுலவிகளிடம்    5:12,   20:97,   12:32,   2:74,   29:3,    39:65,  3:155,    30:58, 12:41, 2:130, 6:109, 7:134, 11:10, 14:7,  15:24, 16:103, 23:30 போன்ற வசனங்களைக் கூறி மொழி பெயர்க்கச் சொன்னோம். 


எல்லாருமே இந்த வசனங்களில் உள்ள இணைச் சொற்களுக்கு முழுமையாக மொழி பெயர்க்கவில்லை. ஆக நீங்கள் குற்றம் பிடித்து குறை கூறியது மரபு ரீதியாகத்தானே தவிர, தெளிவாக ஆய்ந்து அறிந்து தெரிந்து உணர்ந்து விமர்சிக்கவில்லை என்பதை அவர்களிடமே அவரவர்கள் மொழி பெயர்ப்புகளைக் கொண்டே நிரூபித்தேன்.


இதே நிலை தான் எல்லா தர்ஜமாக்களிலும் உள்ளன என்பதையும் 14 தர்ஜமாக்களை எடுத்துக் காட்டி விளக்கினோம். 


அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டுகிறானோ அவர்கள் மட்டுமே நேர் வழி பெற்று  உண்மையை பேசுவார்கள். 

-----------------

இனி வார்த்தைக்கு வார்த்தை 


ثُمَّ - து(ஸு)ம்ம 
பின்னர் பின்பு  பின்னும் - பிறகு

تَوَلَّيْتُم - தவல்லைதும்
புறக்கணித்தீர்கள் -திரும்பி விட்டீர்கள் -  மாறி விட்டீர்கள்.

مِنْ بَعْدِ   -  மி(ன்)ம் பஃஹ்தி
பின் - பின்னர் – பிறகு - மீண்டும்

ذَٰلِكَ - தா(ரா)லிf 

இதன் -அதன் - அது - இது - இந்த 


فَلَوْلَا Fபலவ்லா
 இல்லாதிருந்தால் - இல்லையென்றால் -  இல்லாவிட்டால்

فَضْلُ - Fபழ்லு
அருள்

اللَّـهِ அல்லாஹி 
அல்லாஹ்வுடைய

عَلَيْكُمْ அலைகும் 
உங்கள் மீது

وَرَحْمَتُهُ வரஹ்மதுஹு 
 கருணையும்



لَكُنتُم - லகுன்தும் 
ஆகியிருப்பீர்கள்

 مِنَ الْخَاسِرِينَِ     - மினல் ஃகாஸிரீன
நஷ்டவாளிகளில் - இழந்தவர்களில் - நஷ்டமடைந்தவர்களில்

ثُمَّ تَوَلَّيْتُم مِّن بَعْدِ ذَٰلِكَ ۖ فَلَوْلَا فَضْلُ اللَّـهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنتُم مِّنَ الْخَاسِرِينَ

மொழிப்பெயர்ப்பு கள்:


அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி)விட்டீர்கள். உங்கள் மீது அல்லாஹ்வின் (தொடர்ந்த) கனிவும் அருளும் இல்லாதிருந்திருந்தால் நீங்கள் பேரிழப்புக்கு ஆளாகியிருப்பீர்கள். - (அதிரை ஜமீல்)

 

இதன் பின்னரும் புறக்கணித்தீர்கள். அல்லாஹ்வின் அருளும், கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால் நட்டமடைந் திருப்பீர்கள்! (PJதொண்டி)



பிறகு அதன் பின்னர் ( வாக்கிலிருந்து புறக்கணித்து) திரும்பிவிட்டீர்கள். உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனின் கருணையும் இல்லை யென்றால் நீங்கள் நஷ்டவாளிகளில்  ஆகியிருப்பீர்கள். -(K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)


அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள். ஜான் டிரஸ்ட் 


இதற்குப் பின்னும் நீங்கள் (வாக்கு) மாறிவிட்டீர்கள். ஆனால், உங்கள் மீது அல்லாஹ்வின் கிருபையும் அன்பும் இல்லாதிருந்தால் நீங்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில் ஆகியிருப்பீர்கள். -
(
 ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

 

(எனினும்) அதன் பின்னர் நீங்கள் (உங்கள் வாக்குறுதியிலிருந்து) மாறிவிட்டீர்கள். (அப்படி இருந்தும்) அல்லாஹ்வின் அருளும் அவனது கருணையும் உங்களைக் கைவிடவில்லை; அவ்வாறு கைவிட்டிருந்தால், நீங்கள் நிச்சயம் எப்பொழுதோ பேரிழப்பிற்கு ஆளாகியிருப்பீர்கள். - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

பின்னர், நீங்கள் அதற்குப் பின்னும் (வாக்குறுதியை) புறக்கணித்து விட்டீர்கள். ஆகவே, உங்கள் மீது அல்லாஹ்வின் பேரருளும் அவனின் கிருபையும் இல்லாதிருந்தால் நீங்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில் ஆகியிருப்பீர்கள்.

(அல்-மதீனா அல்-முனவ்வரா)









Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.